தேசத்தில் பல்வேறு பிரச்னைகள் இருக்க ஒட்டுமொத்த மீடியாவும் கமல் 'இயக்கிய'படம் பற்றியே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக விவாதித்துக்கொண்டு இருக்கின்றன. பொதுவாக வடநாட்டு சேனல்கள் மற்றும் பத்திரிக்கைகள் தென்னிந்திய(குறிப்பாக தமிழ்) சினிமா குறித்த செய்திகளை பெரிதும் கண்டு கொண்டதே இல்லை. அதெல்லாம் எந்திரனுக்கு முன்பு வரை. 'ஜெயா டிவி ரைட்ஸ் தர மறுத்ததால் கமலை மேடம் பழி வாங்குகிறார்' என்று NDTV தொடர்ந்து செய்திகளை போட்ட வண்ணம் இருக்க, கூடங்குளம், டெங்கு போன்ற பிரச்னைகளுக்கு கூட ஊடகங்களை சந்தித்து பெரிய அளவில் விளக்கம் தராத முதல்வர் வேறு வழியின்றி இப்படம் பற்றிய சர்ச்சைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகிவிட்டார்.
இத்திரைப்படம் குறித்து ஒரு சில பேஸ்புக் ஸ்டேட்டஸ் மற்றும் ஷேர்கள் போட்டதோடு வேறெந்த சமூக டீயும் ஆத்தவில்லை நான். காரணம் சிம்பிள். மெத்தப்படித்த சான்றோர் பெருமக்களை விட இணையத்தில் ஆளாளுக்கு இந்த வழக்கை வாதம், பிரதிவாதம் செய்து தீர்ப்பு சொல்லி பட்டையை கிளப்புவதால் ஆலமரத்தடி பஞ்சாயத்தில் ஓரமாக துண்டை அக்குளில் சொருகியபடி வேடிக்கை மட்டுமே பார்க்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆகிப்போனேன். ஒரு சில பதிவர்கள் மட்டுமே சினிமா சார்ந்த விமர்சனம் எழுதி இருந்தனர். மற்றவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப கமலுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வித வித மேக் அப் போட்டுக்காட்டி அசதி ஆகிப்போயினர். தற்போது ஹாசன் மற்றும் இஸ்லாம் நண்பர்கள் தமக்கு பின்னே எப்பேற்பட்ட 'விலையில்லா' அரசியல் தனது ஜித்து வேலையை காட்டி உள்ளது என்பதை அறிந்திருப்பர்.
குழம்பிய கோடம்பாக்க குட்டையில் மீன் பிடிப்பது ராமதாஸ் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரின் ஸ்டைல். ஆனால் சற்றே கலங்கிய கடலில் திமிங்கிலம் பிடிப்பது சன் தாத்தாவின் ஸ்டைல். கடந்த சில ஆண்டுகளாக ஓட்டை வலையுடன் கடலுக்குள் இறங்க முயற்சித்து அடிக்கடி சுண்ணாம்பு தடவிக்கொள்கிறார் பாவம். நாலு நெத்திலி மீனை பிள்ளைகளுக்கு பகிர்ந்து தரவே தாவு தீர்ந்து போகும் காலத்தில் கமலுக்கு பிஷ் ப்ரை போட கிளம்பிவிட்டார் லொள்ளு தாத்தா.
'தமிழன் மேல கை வச்சா கர்நாடகா, கேரளா, பூட்டான், சோமாலியா எல்லாம் அதிரும்டா. அடிங்கு' என்று நெஞ்சு நிமிர்த்தி நரம்பு முறுக்கி வீராவேச வசனம் பேசிய சீமான், சத்யராஜ் போன்ற மாவீரர்கள் கமல் எனும் கலைஞனுக்கு புரட்சி முழக்கம் இடுவார்கள் என்று பார்த்தால் கண்ணிலேயே படவில்லை. அண்ணன்களே..உங்கள் பேச்சைக்கேட்டு சோல்டர் திமிறிய இளித்த வாயர்களில் நானும் ஒருவன் ஆகிப்போனேனே அன்று. ஆனால் இன்றோ ...நன்று. நன்று.
இதற்கு நேர்மறையாக நானும் பேசுகிறேன் பேர்வழி என்று ஜைனுல் அபிதீன் என்பவர் தந்தை மகள் உறவை கொச்சைப்படுத்தி தன்னை அசிங்கப்படுத்திக்கொண்டார். 'தங்கள் சமூகத்திற்கு நல்ல விஷயங்கள் செய்தவர். அன்று மட்டும் ஏனோ அப்படி பேசிவிட்டார்' என்று வருத்தம் தெரிவித்தும், வக்காலத்து வாங்கியும் இஸ்லாம் நண்பர்கள் எழுதி இருந்தனர். கற்பனையாக திரையில் வரும் காட்சிகள் மனதை புண்படுத்துகிறது என்று போராட்டம் செய்யும் சில அமைப்புகள், நிஜத்தில் பலர் முன்னிலையில் பொறுப்புள்ள(!) பிரதிநிதி ஒருவர் இப்படி பேசியதற்கு அதே அளவு போராட்டம் செய்து அவரை கண்டிக்காதது வருத்தமே(தயவு செய்து பதிவுகளை மேற்கோள் கட்ட வேண்டாம். படித்து விட்டேன்). பி.ஜே.வையும் காமடி பீஸ் ஆகவே இந்த சந்தர்ப்பத்தில் நான் பார்க்கிறேன்.
இப்படம் குறித்த சர்ச்சையில் குதூகலம் ஆகி வேறுபாட்டை ஊக்குவிப்போர் என இந்துத்வா இடியட்கள், போலி பகுத்தறிவாளர்கள், அரைவேக்காடு இஸ்லாம் பிரதிநிதிகள், குள்ளநரி அரசியல்வாதிகள் போன்றோரை சொல்லலாம். இத்திரைப்படம் மற்றும் அதன் சர்ச்சை பற்றிய அடிப்படை புரிதல் கூட இல்லாமல் இணையத்தில் ஹிட்ஸ் அடிக்க ஓடி வரும் மொக்கைகள் இம்சை இன்னும் கொடுமை.
முல்லைப்பெரியாறு பிரச்னை வந்தபோது 'கேரளாக்காரன் இனி என் ஜென்ம விரோதி' என்று திடீர் ஆவேசம் கொண்டு இணையத்தில் பொத்தாம் பொதுவாக எழுதினர் சிலர். 'அரசியல்வாதிகள் ஏவிவிட்டு கைக்கூலிகள் செய்யும் செயலுக்கும், தமிழனை கேவலமாக பார்க்கும் கேரள மக்களுக்கும் எதிர்ப்பு தெரிவிப்பதும், அவர்களை புறக்கணிப்பதும் அவரவர் உரிமை. ஆனால் ஒட்டுமொத்த மலையாளிகளும் ஒரே மனப்பான்மை கொண்டவர்கள் எனக்கருதுவதும், அவர்களை கண்டபடி வசைபாடுவதும் பிற்போக்கு தனத்தின் உச்சம். அதுதான் தற்போது இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்துகொண்டு இருக்கிறது.
போராட்டம் செய்யும் சில/பல அமைப்புகளின் போக்கை கண்டித்து நேர்மையான முறையில் தனது எண்ணங்களை பகிராமல் விஷ விதைகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக தூவுவதை கடுமையாக கண்டிக்கிறேன். இங்கு நான் பேசுவது நேர்மையான இந்திய முஸ்லீம்களை பற்றி மட்டுமே. கள்ளநோட்டு, தீவிரவாதம், திருட்டி டி.வி.டி. விற்பனை செய்பவர் எந்த மத த்தை சேர்ந்தவராக இருப்பினும் தவறு தவறுதான். தற்போது கமல் பட சர்ச்சைக்கு முஸ்லிம் பதிவர்கள் போடும் பதிவுகளின் எண்ணிக்கை மலாலாவை தாலிபான்கள் சுட்டபோது எத்தனை இருந்தது? கமலை கண்டிக்கும் அளவில் பாதியேனும் தாலிபான்களை கண்டிக்காமல் இருந்தது ஏன்? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்???
மேற்கண்ட எழுத்துகள் கமலின் படம்(கக்கா போகும்போது கரப்பான் பூச்சி கூட அப்பட டைட்டிலை உச்சரிப்பதால்....முடியல) பற்றிய எனது எண்ணங்களின் ஓட்டம் என்றாலும் இறுதியாக இதயத்தில் இருந்து ஒரு முக்கிய விஷயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.
பெரும்பான்மை சமூகத்தில் இருக்கிறோம் என்கிற இறுமாப்பில் அவ்வப்போது இஸ்லாம் நண்பர்களை 'பாகிஸ்தானுக்கு போயேன்' என்று சொல்லுவதும், 'இவன் கூட பார்த்து பழகு. வீட்ல குண்டு வச்சிருப்பான்' என்று விளையாட்டாக(??) பகடி செய்வதும்..கேடுகெட்ட செயல். இவ்வார்த்தைகள் மூலம் செய்யாத தவறுக்கு குற்ற உணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் நமது முஸ்லீம் தோழர்கள் மனநிலையை சற்று எண்ணிப்பார்த்தால் என்ன? எந்த தவறும் செய்யாத பால்ய வயதில் 'குடிகாரன் மகன் போறான் பார்' என்று எகத்தாளம் செய்த சமூகத்தில் வாழ்ந்த என் போன்றோருக்கே அந்த வலி தெரியும். ஆனால் அதைவிட நூறுமடங்கு ரணத்தை அப்பாவி இஸ்லாமியர்கள் மனதில் ஏற்படுத்திக்கொண்டு இருப்பது மிகவும் மானங்கெட்ட செயல் என்பதை திட்டவட்டமாக பதிவு செய்கிறேன்.
கமலுக்கு எதிராக பிரச்னை செய்யும் நபர்களின் செயலில் தவறுகள் இருந்தால் அதை மட்டும் வாதத்திற்கு உட்படுத்தி நாகரீகமாக வெளி இடங்கள் மற்றும் இணையத்தில் விவாதிக்கலாமே? எதற்கு இந்த Sensational காட்டமும், இந்துத்வா கொழுப்பும்???
ஆறாம் வகுப்பு சேர்ந்த நாளில் தோழன் ஆன முசாதிக் நசீருடன் இன்றுவரை அதே நட்புடன் கரம்பற்றி வாழும் எனக்கு இது போன்ற பிரிவினை பேச்சுகள் பெரும் கசப்பையே உண்டாக்குகின்றன. தற்காலிக விளம்பரம், பெரும்பான்மை மதவெறி, மட்டரக அரசியலுக்காக இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் நபர்களின் கேவலமான எண்ணங்கள் மீது காறி உமிழ்கிறேன்.
................................................................................
19 comments:
நல்ல அலசல்.....
மொத்த திரையுலகமும் எங்களை இழிவுபடுத்தி விட்டனர் என்று பிரமாண்டமான போராட்டங்கள் நடத்தினர்.
>>>>>> Click to Read
விபச்சார வழக்கில் ஒரு கைதும்- ஊடகங்களின் கருத்து சுதந்திர விபசாரங்களும்.
.
சிவா...
மிக ஆழமான அலசல்... நீதியில் நிலைத்து எழுதப்பட்ட போஸ்ட்... இது போன்ற போஸ்டுகளை படிக்கும் பொழுது தான் பதிவுலகின் மீது நம்பிக்கை வருகிறது...
வாழ்த்துக்கள்...
முதிர்ச்சியான இடுகை.
நன்றி தலைவா. எங்கள் மன குமுறலை வெளிபடுத்தியது போல இருக்கிறது.
அருமையான அலசல்! உங்கள் கருத்துக்கள் நியாயமானது! நன்றி!
Sir thank u so much for ur concern .....gud one to cherish...
வழிமொழிகிறேன்
well said siva....
நல்ல அருமையான பதிவு... உங்கள் எண்ணமும் வருத்தமும் புரிகிறது... நன்றி சகோதரா...
சினிமாவே தவறு என்று கூறிக்கொண்டிருக்கும் சில மதவாதிகள் இப்போது சினிமாவில் தவறை கண்டுபிடிக்கின்றனர். நல்ல காமெடி சிவா!
எல்லோருக்கும் ஒரு மேடை தேவைப்படுகிறது, தங்களை நிலைநிறுத்திக்கொள்ள.
நடந்தவை அனைத்தும் விஷமத்தனமானது மட்டுமல்ல, வேலையற்றவர்களின் குள்ளநரித்தனமும்கூட.
அதுபோக, மலாலாவின் விஷயம்...
பள்ளிப்பேருந்தில் ஏறி மலாலா யாரென்று கேட்டு ஐந்தடி தூரத்திலிருந்து சுட்டது மலாலாவின் கழுத்துக்கு அருகிலிருந்து காயப்படுத்திவிட்டு சென்றது என்பது, ஈராக்கில் chemical bomb இருப்பதாக கூறி அன்னாட்டு அதிபரையும் மக்களையும் கொன்றுகுவித்த "தீவிரவாத"த்துக்கு என்னிடம் பதிலில்லை.
எனக்கு புரியலை, நேர்மையான முஸ்லீம் என்று நேர்மையான மனிதனாவான்?
Nandri thozhare...
//ஆரூர் மூனா செந்தில் said...
எனக்கு புரியலை, நேர்மையான முஸ்லீம் என்று நேர்மையான மனிதனாவான்?//
நேர்மையான முஸ்லிம் என்றாலே அது நேர்மையான மனிதனைத்தானே குறிக்கும்? இதில் என்ன வித்யாசம்??
லைக்
ஆரூர் மூனா செந்தில்.அவர் ப்ளாகை படித்த வகையில்
முற்போக்கு எண்ணம் கொண்டவராகவே தெரிகிறார்.
என் ஹீரோ சே குவேராவின் படம் அதை உறுதி செய்தது.
ஆனால் ஏன் இப்படி ஒரு கமெண்ட்?
வருத்தமாக இருக்கிறது.
கேடு கெட்ட தீவிரவாதத்தை எந்த நல்ல முஸ்லீமும்
நியாயபடுத்த முடியாது.
சமீப கால விஸ்வரூபம் பிரச்னை நிறைய பேரை
தடம் மாற்றி விட்டதோ என்று அச்சமாக உளது.
நல்ல பதிவு! திருட்டு வி.சி.டி., - குறைந்த தண்டனையில் திருத்தமுடியும் குற்றம்! கள்ளநோட்டு - சற்றே அதிக தண்டனையில் திருத்த முடியும் தேசதுரோகம்!
தீவிரவாதம் - திருத்தவே முடியாத மரணதண்டனையால் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய உச்சபட்ச குற்றம்! மூன்றையும் ஒரே தட்டில் வைக்காதீர்கள் நண்பரே!
முஸ்லிம் ஆகா இருந்த வீடு இல்லன்னு சொல்றாங்க அதை பத்தி கொஞ்சம் எழுதுங்க தலைவா.
Post a Comment