CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா, சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு                                       
சரித்திர நாயகன் பவர் நடிப்பில் நான் பார்க்கும் முதல் படம். லத்திகா பார்க்காத பாவத்திற்கு விமோசனம் கிடைத்தது இன்று. இன்று போய் நாளை வா படத்தை கிட்டத்தட்ட ஜெராக்ஸ் அடித்து எடுத்துள்ளனர். பாக்யராஜிடம் பஞ்சாயத்து முடிந்ததால் டைட்டிலில் அவருக்கு நன்றி போட்டனர். சேது மற்றும் சந்தானம் இன்ட்ரோவிற்கு பிறகு மாஸ் ஹீரோ போல மஞ்சள் பைக்கில் புகை மூட்டத்தை தாண்டி பவர் வரும் சீனுக்கு க்ளாப்ஸ் எகிறுகிறது.     

சேதுவின் வீட்டிற்கு எதிரே குடிவருகிறது நாயகியின் குடும்பம். கல்யாணம் முதல் கருமாதிரி வரை சர்வீஸ் செய்வதால் சந்தானத்தின் பெயர் கே.கே. பவர் பெயர் படத்திலும் பவர்தான். வி.டி.வி. கணேசன், கோவை சரளா, தேவதர்ஷினி என நகைச்சுவை பட்டாளம் நன்றாக நடித்துள்ளனர். சந்தானத்தின் சரவெடி காமடி அருமை. 'என்னடா அப்பளக்கூடை தூள் மைசூர் பாக் வாங்க வந்தியா', 'குரங்கு மாதிரி ஏண்டா கோரசா கத்தறீங்க, 'ஆடிய பாதமும், அலாவுதீன் பூதமும் சேந்துருச்சி' என நக்கல் மழை. சேது மற்றும் நாயகியின் நடிப்பு சுமார். 'காபி குடிச்சிட்டு போ தம்பி' என்று கோவை சரளா கூற அதனை ஆமோதிக்கிறார் சேது. 'அதுக்கு காபி பொடி, சக்கரை வாங்க கடைக்கு போயிட்டு வா' என்று சரளா சொல்லுமிடம் பட்டாசு.

எங்கே பவரை ஓரம் கட்டி சந்தானம் டேக் ஓவர் செய்வாரோ என்று பார்த்தால், சொந்தப்படத்தில் பவருக்கு நிறைய வாய்ப்பு தந்து ப்ரொபசனலிசத்தை காட்டி உள்ள சந்தானத்தை பாராட்டலாம். பவரின் நடனம், ரொமான்ஸ், சோகம் என பல அதிரடி காட்சிகளில் விசில் பறக்கிறது. படத்தின் ஹீரோ சந்தேகம் இன்றி நம்ம தலைவர்தான். பாடல்கள் அனைத்தும் ஒருமுறை கேட்கும்படி உள்ளன. அலெக்ஸ் பாண்டியன் பார்த்து நொந்து நூலானவர்களுக்கு தெய்வீக லட்டாக வந்து சேர்ந்துள்ளது இப்படம். பண்டிகைக்கு வந்துள்ள கிளீன் காமடி பிலிம் என்பதில் சந்தேகமில்லை. சென்ற ஆண்டு மாஸ் ஹீரோக்கள் வாங்கிய உதையும், தற்போது அலெக்ஸ் வாங்கிய தர்ம அடியும் பவர் போன்ற நடிகர்களை எவ்வளவோ மேல் என்று போற்றவே சொல்கின்றன. அவரது நடிப்பு மிக சுமார் என்றாலும். பவருக்கான சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்ட படைப்பாக இதை தாராளமாக சொல்லலாம்.

 கண்ணா லட்டு தின்ன ஆசையா - பவர் ப்ளே!! 

..................................................................... 
  
சீதம்மா வாகிட்லோ சிரிமல்லி செட்டு:

                                                                   
முதல்முறையாக தெலுங்கில் நான் பார்க்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். மகேஷ் பாபு, வெங்கடேஷ், அஞ்சலி, பிரகாஷ்ராஜ், சமந்தா என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்துள்ள பீல் குட் பேமிலி பிலிம். தாய், தந்தை இல்லாத அஞ்சலி(சீதா) உறவினர் பிரகாஷ்ராஜ் அரவணைப்பில் வளர்கிறார். பிரகாஷ்ராஜின் மகன்களாக இரு ஹீரோக்களும். வேலை சரியாக அமையாத இருவரையும் நக்கல் விடும் பணக்கார உறவினருக்கு மத்தியில் இவர்கள் எப்படி நற்பெயர் சம்பாதிக்கின்றனர் என்பதே கதை.

தெலுங்கில் படம் பார்ப்போருக்காக ஏகப்பட்ட மொக்கை மசாலா சேர்த்து அலெக்ஸ் ரிலீசான நேரம் பார்த்து அதற்கு ஆப்பு அடித்து உள்ளது இப்படம். ஹீரோக்கள் இருவருக்கும் சண்டைக்காட்சிகள், பஞ்ச் வசனங்கள் எதுவுமில்லை. இரண்டே ரொமான்ஸ் பாடல்கள். மற்றபடி அண்ணன், தம்பி இருவருக்குமான சின்ன சின்ன மனஸ்தாபங்களை யதார்த்தமாக பிரதிபலித்து காட்சிகளை அமைத்து இருக்கும் இயக்குனருக்கு கை குலுக்கலாம். எந்த கேரக்டரும் ஓவர் ஆக்டிங் செய்யாதது தெலுங்கு சினிமா பார்த்திராத அதிசயம். நெஞ்சை பிழியும் சென்டிமென்ட் வசனங்களை ஓரம்கட்டி இயல்பான படைப்பை தந்துள்ளனர். 

மகேஷ்பாபுவின் ஒன்லைன் காமடிகள் சிறப்பு. ஆனால் கூகிள் நிறுவனத்தில் இவரின் சிரிப்பு சரியில்லை என்று இண்டர்வியூ செய்பவர்கள் கிண்டல் செய்வது அபத்தம். மற்றபடி பெரிய குறைகள் எதுவுமில்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம். சீதம்மா வாசலில் சிரிமல்லி செடி எனும் தலைப்பிற்கும், கதைக்கும் சம்மந்தம் எதுவுமில்லை. பிரகாஷ்ராஜ் வீட்டில் பல ஆண்டுகளாக மல்லிகளை தந்து வரும் புனித செடி என்று மட்டும் சொல்கிறார்கள். ஆனால் தலைப்பு கவிதை. தெலுங்கு மக்களின் ரசனை இப்படத்தின் வெற்றியிலும், அலெக்சிற்கு வைக்கப்படும் ஆப்பிலும் நிற்கிறது. அநேகமாக இப்படமே வெற்றி வாகை சூடும் என நம்பலாம்.

............................................................................

             

10 comments:

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நேற்றைய ஜெனரேட்டரே...
இன்றைய இன்வர்ட்டரே....
நாளைய கூடங்குளமே....... வாழ்க.....!

Unknown said...

பவர் ஆட்டம் ஆரம்பம் ஆயிருசுலே

Yoga.S. said...

வணக்கம்,சிவா!///லட்டு திங்கலாம்னு சொல்லுறீங்க,துன்னுடுவோம்!

M (Real Santhanam Fanz) said...

:-) ethirpaarthathuthaane!

ராம்குமார் - அமுதன் said...

ரெண்டுமே பாக்கனும்... பவருக்காக முன்னது... அஞ்சலிக்காக பின்னது :)

Unknown said...

Thanks and post Nayak review also

ராஜ் said...

ஆந்திரா மக்கள் நல்ல படத்தை என்றுமே கை விட்டது இல்லை. கண்டிப்பாய் "சீதம்மா" பெரிய வெற்றியடையும் ..

Yoga.S. said...

ராம்குமார் - அமுதன் said...
ரெண்டுமே பாக்கனும்... பவருக்காக முன்னது... அஞ்சலிக்காக பின்னது :)////?!?!?!?!):):):):):)

Yoga.S. said...

Real Santhanam Fanz (General) said...
:-) ethirpaarthathuthaane!/////சார் இன்னும் டீ வரல!!!

பால கணேஷ் said...

காரம் (கொஞ்சம் ஓவராவே) மணம் குணம் நிறைந்த மசாலாக்களுக்கு உறைவிடமே தெலுகு தேசம்தான். இந்த அலெக்ஸ் மசாலாவை தள்ளிவிட்டுட்டு சீதம்மாவை ரசிக்கறாங்களா பாக்கலாம்... பவர்ப்ளேயைப் பாக்கணும்னு எனக்கும் ஆசை வந்துட்டுது. தாங்க்ஸ்ங்கோ.

Related Posts Plugin for WordPress, Blogger...