CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, January 21, 2013

சென்னை புக் ஃபேர் - 3


                                                                     தோள்+நூல் கொடுப்பான் தகப்பன்

வார இறுதியின் இறுதி நாள் என்பதால் நேற்று 'ஆத்தாடியோவ்' கூட்டம். சாதாரணமாகவே விழி பிதுங்கி வீறிடும் நந்தனம் ஞாயிறு அன்றுதான் ரெஸ்ட்டில் இருக்கும். ஆனால் நேற்று 'புத்தகம் வாங்கியே தீர/தீர்க்க வேண்டும்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு நந்தனம் நோக்கி நண்டு, நசுக்கான் முதல் இந்தியன் தாத்தாக்கள் வரை ஹை ஸ்பீடில் ஜாக்கிங் செய்து பிரம்மாண்ட பேரணி எபெக்டை உண்டாக்கினர். கண்ணா இது காசு குடுத்து வீணா சேத்த கூட்டம் இல்லை. காசை செலவு செய்ய தானா சேந்த கூட்டம். கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குன்னு ஆடுச்சாம். வலது கால் எடுத்து வைத்து இடது பக்கம் திரும்பி பார்த்தால் வாசலில் அலெக்ஸ். லெக்ஸ் தெறிக்க ஓட்டம் பிடிக்கலாமா என்று  அனைவரையும் நிலை தடுமாற வைத்தது எது? கீழே பார்க்க:

                                       'வாங்க மச்சான் வாங்க. எங்க படத்த பாத்துட்டு(ஒரேடியா) போங்க'                        

காலை கடைகள் திறந்த உடனேயே ஸ்பாட்டை அடைந்தேன். ஆங்காங்கே இருபுறமும் துடைப்பத்தால் பெருக்கி தூசிமாரி பொழிந்து வரவேற்றனர் அக்காக்கள். 'இதுவரைக்கும் வாங்குனதை படிக்கவே வக்கில்லை. வந்துட்டான் இன்னும் வாங்கறதுக்கு எருமைக்கடா' என்று துதிபாடி அவர்கள் அழைத்தது போல ஹெவியாக ஃபீல் செய்தேன். முதலில் சற்று வித்யாசமான ஸ்டால்களை லுக்கடிக்க முடிவு கட்டினேன். முதலில் தென்பட்டது சிக்ஸ்த் சென்ஸ் - ஸ்டால் 229. மொத்த கண்காட்சியிலும் கண்களை கவரும் காட்சியாக புத்தகங்கள் அழகுற அடுக்கி வைக்கப்பட்ட ஸ்டால் இதுதான்:


ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகளுக்கான ஸ்டால்கள் பக்கம் சென்று குறுகுறுவென நோக்குவது வழக்கம். சென்ற வருடம் என்னை கவர்ந்த ஸ்டால் அபிராமி & மேஜிக் புக் அனிமேஷன்ஸ்(233). இம்முறையும் அங்கே ஆஜர். பெரிய எல்.சி.டி. டி.வி.யில் அவர்கள் போடும் சிறார் பாடல்களை கேட்பதன் சுகமே அலாதி. இம்முறை கேட்ட பாடல்களில் ஒன்று 'யான வருது யான வருது பாக்க வாருங்கோ'. நீங்களும் பாருங்கோ:       


                                                              
என் மழலைப்பருவம் முடிந்து மாதங்கள் மூன்றே ஆனாலும் பழசை மறப்பது நன்றல்லவே?

முன்பை விட இம்முறை சிறுவர்களுக்கான கடைகள் அதிகம். பெரும்பாலான பெற்றோர்கள் தத்தம் 'தவமாய் தவமிருந்து' சுட்டிகளை கையில் பிடித்தவாறு குறுக்க மறுக்க நடந்து கொண்டிருந்தனர். கூட்ட நெரிசலைக்கண்டு வெறுத்த சோக ரேகைகள் பல வாண்டுகள் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. போன பதிவில் குறிப்பிட்ட குறும்பட இயக்குனர் தமிழ் ராஜாவை மீண்டும் சந்தித்து 'ரணகளமாக' சிறிது நேரம் உரையாடினேன். அதன் பின் நடைப்பயணம் தொடர்ந்தது. குமுதம் ஸ்டாலில் ப்ரியா கல்யாணராமன் எழுதிய 'மாண்புமிகு மகான்கள்' புத்தகம் வாங்கச்சொல்லி உறவினர் ஆர்டர் போட்டார். இந்த குட்டி சைஸ் புத்தகத்தின்  விலை ரூ.180. அராஜகம். இந்துப்பெண்களிடம் இத்தகு ஆன்மீகம் வெகு எளிதில்  விற்பனை ஆவது ஆச்சர்யமா என்ன?

வழக்கம்போல வாசலோர ஸ்டாலை ரிசர்வ் செய்து கடை விரித்து இருந்தார் பிரபல இயக்குனர் முக்தா ஸ்ரீனிவாசன். க்ராஸ் செய்யும் அனைவரையும் 'உள்ள வாங்க. வந்துருங்க' என்று கையசைத்து வலை போட்டார். நானும் சிக்கினேன். அனைத்தும் ஆதி காலத்தில் அவரெழுதிய புத்தகங்கள். 'கமலுக்கும் உங்களுக்கும் சமீபத்துல நடந்த சம்பவம்..'என்று ஆரம்பித்தேன். 'என்ன செய்யறது தம்பி. நடக்கணும்னு இருக்கு' என்று பெருமூச்சு விட்டார். 'தி.நகர்ல இருக்குற என் வீட்டுக்கு ஒருநாள் வாங்க. நிறைய பேசுவோம்' என்று முகவரி தந்து வழியனுப்பினார்.

'அம்புலி 3D' பட இயக்குனரும், அவ்வப்போது 'ஹாய்' போடும் நண்பருமாகிய ஹரீஸ் அனுப்பிய எஸ்.எம்.எஸ். கண்டு குறிப்பிட்ட இடத்தை அடைந்தேன். அமரர் கல்கியின் 'மோகினித்தீவு' ஒலிப்புத்தகம் குறுந்தகடாக வெளிவந்து உள்ளது. மொத்தம் 10 அத்யாயங்கள். குரல் தந்திருப்பது ஹரீஷ். கிரியேட்டிவ் ஹெட்டாக ஹரி ஷங்கர் பணியாற்றி உள்ளார். எப்போதும் வித்யாசமான முயற்சிகளை மேற்கொள்ளும் ஹரி-ஹரீஷ் இணையின் மற்றொரு படைப்பிது.

அரை ட்ரவுசருடன் பிலாசபி வேறொரு பக்கம் உலாத்திக்கொண்டு இருக்க ஜிக் ஜாக் ஆக ஸ்டால்களை கடந்து வந்துகொண்டு இருந்தேன். மாலை தொட்டதும் டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் நானும், ஆரூர் முனாவும் ஆஜர். பதிவர் பாலகணேஷ் எழுதிய சரிதாயணம் புத்தகம் ஒன்றை வாங்கினேன். பயங்கர பிஸியில் இருந்த கடை ஓனர் வேடியப்பன் 'வந்துட்டானுங்களா?' என்று ஓரக்கண்ணால் பார்த்து பார்க்காதது போல பகுமானமாக பில் போட்டுக்கொண்டு இருந்தார். அங்கிருந்து விடைபெற்று திக்கித்திணறிய வாகன  நெருக்'கடியை' தாண்டி தேனாம்பேட்டை காமராஜ் அரங்கில் 'கிரேசி கிஷ்கிந்தா' நாடகம் பார்க்க சென்றேன் ஆரூர் முனா செந்திலுடன்.

நேற்று வாங்கி(க்கட்டி)யவை:

பாரதியார் கதைக்களஞ்சியம் - நல்லி குப்புசாமி ரூ.350

தாயார் சன்னதி - சுகா ரூ.180

மூங்கில் மூச்சு - சுகா ரூ.95

காற்றில் தவழும் கண்ணதாசன் - இராமலிங்கம் ரூ.125

சரிதாயணம் - பால(!)கணேஷ் - ரூ.60

மோகினித்தீவு சி.டி. -  ஹரீஷ் - ஹரி ரூ.99

தமிழ்த்திரை தயாரிப்பாளர்கள் - முக்தா ஸ்ரீனிவாசன் ரூ.100

கூவம் நதிக்கரையினிலே 3 பாகங்கள்  - சோ ரூ. 295

காட்சிப்பிழை மாத இதழ்கள் 3 - ரூ.30

                                                       சரிதாயணம் ரிலீஸ்: பாலகணேஷ் - கேபிள் சங்கர்          

தெரிந்தவர்களின் திருமணம் உள்ளிட்ட சிறப்பு(?)தினங்களில் ஏழேழு தலைமுறை தொட்டு  சுவர் கடிகாரம், டின்னர் செட் போன்றவற்றை அன்பளிப்பாக தரும் உன்னத செயலை செய்வதை விட புத்தகங்கள் வழங்குவதையே பழக்கமாக கொண்டுள்ளேன். படித்து 'தேங்க்ஸ்' சொன்னவர்கள் கணிசமாக உண்டு. இந்த அல்டிமேட் டச்சுடன் இப்பதிவு சுபம்.
..................................................................


All Images: Madrasbhavan.com

புக் ஃபேர் சுவாரஸ்யங்கள் தொடரும்..

முந்தைய பதிவு

சென்னை புக் ஃபேர் - 2
........................................................................      

11 comments:

பால கணேஷ் said...

எலேய்... மழலைப் பருவம் முடிஞ்சு மூணே(!) மாதங்கள் ஆன நீயி எனக்கு பால(?) கேள்விக்குறி போடறது உனக்கே கொஞ்சம் ஓவராப் படலை? உனக்குத் தனியாப் பொங்க வெச்சிர வேண்டியது தான்டி...

Philosophy Prabhakaran said...

// இந்துப்பெண்களிடம் இத்தகு ஆன்மீகம் வெகு எளிதில் விற்பனை ஆவது ஆச்சர்யமா என்ன? //

உச்சக்கட்ட காமெடி... கிழக்கு புத்தகங்கள் சூறாவளி டிஸ்கவுண்டில் கிடைத்தபோது பாதிக்கு பாதி ஆன்மிக நூல்களும், பாலியல் நூல்களுமே ஆக்கிரமித்திருந்தன... நம்ம ஆட்களுக்கு பாலியல் நூல்களை பப்ளிக்கா வாங்குவதில் கூச்சம்... டிஸ்கவுண்டில் வாழ்க்கை வரலாறு, நகைச்சுவை ஏன் பாலியல் உட்பட பல தலைப்புக்கள் காணாமல் போனாலும் கூட ஆன்மிக நூல்கள் அப்படியே தான் இருந்தன...

Philosophy Prabhakaran said...

தாயார் சந்நிதி, மூங்கில் மூச்சு... ம்ம்ம் நடத்துங்க... உங்க கிராப் ஏறுது...

Philosophy Prabhakaran said...

// படித்து 'தேங்க்ஸ்' சொன்னவர்கள் கணிசமாக உண்டு. //

உங்களுக்கு லக்கு தான்... நான் சிலருக்கு கொடுத்திருக்கிறேன்... வாங்கிவிட்டு எங்காவது மூலையில் தூக்கி கடாசிவிடுவார்கள்... தெரியாத்தனமா படிச்சியா டான்னு கேட்டா அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்குன்னு அலுத்துப்பாங்க...

சீனு said...

என்னுடைய இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் இன்று

MANO நாஞ்சில் மனோ said...

புத்தகம் வழங்குவது ஒரு நல்ல பழக்கம்ய்யா....

அண்ணன் வரும்போது நிறைய புத்தகம் கிடைக்கும்னு நினைக்கிறேன் ஹி ஹி நன்றி...

சமீரா said...

புத்தகம் பரிசா தருவது எனக்கு மிகவும் பிடிக்கும்.. ஒரு கஷ்டம் என்னோட செட்-ல புக்கா?? கேட்டு முகம் சுளிகரவங்க தான் அதிகம்!!

அந்த குழந்தைங்க cd போனவருடம் நானும் வாங்கினேன்..
உங்களமாதிரி வீடு பக்கமா இருந்தா, புக் வாங்கறேனோ இல்லையோ(?) தினமும் ஒரு விசிட் அடிப்பேன்....

arasan said...

நடத்துங்க .. மூன்றே மாதம் தான் ஆவுதா ?

வெங்கட் நாகராஜ் said...

அண்ணே.... யானை வருது பாட்டு நல்லா இருந்தது...

புத்தகங்கள் லிஸ்ட்.... தில்லில ஒரே புகை மயம்!

Tamilthotil said...

நண்பரே உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.சிவக்குமார் இரண்டு முறை சந்தித்தும் இரண்டு முறையும் என் பெயரை தமிழ்ராஜன் என்றே எழுதியிருக்கிறீர்கள். தமிழ்ராஜா...இனி இப்படியே குறிப்பிடுங்கள் நண்பரே...
எந்தப் புத்தகம் யாருக்கு பரிசாகப் போகிறதோ ... படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் உங்கள் எண்ணத்துக்கு பாராட்டுக்கள்.

! சிவகுமார் ! said...

கருத்திட்ட அனைவருக்கும் நன்றி!!

Related Posts Plugin for WordPress, Blogger...