CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, January 5, 2013

ஸ்பெஷல் மீல்ஸ் (05/01/2013)மாயாபஜார்: 

                                                                         Image:madrasbhavan.com             

இந்தியாவின் புகழ்பெற்ற ஜெமினி சர்க்கஸ் கடந்த மாதம் 22 ஆம் தேதியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு பின்புறம் இருக்கும் SIAA திடலில்  மையம் கொண்டுள்ளது. டிக்கெட் விலை 50 முதல் 250 வரை. நலிந்து வரும் சர்க்கஸ் தொழிலில் மிஞ்சி இருப்பது இவர்கள் போன்ற ஓரிரு க்ரூப் மட்டுமே. விலங்கின ஆர்வலர்களின் போராட்டத்தால் யானை, புலி, சிங்கம் போன்றவற்றின் அணிவகுப்பு இம்முறை இல்லாதது குறைதான். இளைத்துப்போன ஒட்டகங்கள் மட்டுமே சிறப்பு வரவுகள். 

ஆப்ரிக்கன் நடனம், ஆஸ்திரேலிய கிளிகள் மற்றும் வட இந்திய நபர்களின் வித்தைகள் சிறப்பாக இருப்பினும் குறைகள் இல்லாமல் இல்லை. ஜக்லிங் செய்கையில் பந்த தவற விடுதல் போல ஆங்காங்கே 'ஜஸ்ட் மிஸ்'கள். 1951 ஆம் ஆண்டு குஜராத்தில் தனது முதல் ஷோவை தொடங்கி இன்றுவரை தேசம் முழுக்க வலம் வருகிறது இந்த பிரம்மாண்ட குழு. மக்களின் வரவேற்பை பொறுத்து சென்னை நிகழ்ச்சி இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம்.
...............................................................

ஸ்ரீ:
ஸ்பென்சர் பிளாசா  ஃபேஸ்-3 இல் கே.எப்.சி.க்கு எதிரில் உள்ளது ஸ்ரீ மிதாய் எனும் வட நாட்டவர் கடை. நண்பனின் வற்புறுத்தலின் பேரின் பாதாம் பால் சாப்பிட உள்ளே நுழைந்தேன்.  ஃப்ரெஷ் ஆக கிடைக்குமென எதிர்பார்த்தால் ஏற்கனவே பேக் செய்யப்பட பிளாஸ்டிக் டம்ளரில் பாதாம் பாலை கொண்டு வந்து வைத்தார் bhaiயா. விலை 55. ஆனால் ருசியில் குறையில்லை. ஏகப்பட்ட பாதாம் பருப்புகளை பெரிய சைஸில் வெட்டி மிதக்க விட்டிருந்தனர். மற்ற கடைகளில் செய்வது போல பாதாமை அரைத்து பெயருக்கு மிகக்கொஞ்சம் போட்டு ஏமாற்றவில்லை. ஏக் பார் டெஸ்ட் கர்தோனா!!
..................................................................

THE HOBBIT:        
தானைத்தலைவன் பீட்டர் ஜாக்சனின் இப்படத்தை சத்யம் தியேட்டர் பெரிய திரையில் பார்த்தேன். உலகிலேயே HFR(high frame rate)  எனும் 3D டெக்னிக்கை நிறுவிய இரண்டாவது தியேட்டர் என விளம்பரம் செய்திருந்தனர். சாதா 3D எபெக்டில் 24 ப்ரேம்ஸ்/செகன்ட் என காட்சிகள் தெரிந்தால் இதில் 48 ஆம். சொன்னது போல துல்லியத்தின் உச்சமாகவே இருந்தது. ஆனால் முந்தைய LOTR அளவிற்கு ஹாப்பிட் மனதை கவரவில்லை. பெரிய பட்ஜெட் ஆங்கில சீரியல் பார்த்த உணர்வு.
..................................................................

சேட்டை: 

                                                                         Image: madrasbhavan.com   

எக்ஸ்ப்ரஸ் அவின்யூவின் மூன்றாம் தளத்தில் உள்ளது பிக்ஸ் 5D. இந்த மினி தியேட்டர் பற்றி முன்பே கேள்விப்பட்டு இருந்தாலும் ஒருமுறை கூட உள்ளே சென்று பார்த்ததில்லை. இம்முறை நாளைய மாப்பிள்ளை பதிவரும், நானும் சென்றே தீர்வது என தீர்மானித்து டிக்கட் எடுத்தோம். 11 நிமிட ஷோவிற்கு டிக்கட் விலை 150. எனது இருக்கையில் மட்டும் சீட் பெல்ட் வேலை செய்யாததால் திகில் கலந்த பேயறைந்த உணர்வுடன் 'பாஸ் சீட் பெல்ட்' என்றதற்கு 'குழந்தைங்களுக்குதான் சீட் பெல்ட்' என்று இமேஜை இத்தாலிக்கு கப்பல் ஏற்றினார்.

பிஸ்கோத்து கிராபிக்ஸில் மொத்தம் இரண்டு மினி படங்கள். திரையில் பனி பெய்தால் நம் தலைக்கு மேலே பஞ்சை தூவுவது, மழைக்கு முன் சீட்டில் இருந்து நீரை பீய்ச்சி அடிப்பது என ஏகத்துக்கும் குதூகலிக்க வைத்தனர். மெகா சைஸ் நண்டு ஒன்று கொடுக்குடன் வரும்போது சீட்டின் இருபுறமும் இருந்து இடுப்பை குத்துகிறது ஒரு குச்சி(!). 'யாரோ என் இடுப்பை கிள்றாங்க' என்று பதறினார் மாப்பிள்ளை. ஒருவழியாக கன்னிப்பையனை கற்போடு வீட்டுக்கு அனுப்பி வைத்த பின்பே பெருமூச்சு விட்டேன். 
......................................................................

எதிர்பாராதது: 
க்ரிக்கெட் ரசிகர்கள் பலருக்கு பிடித்த டி.வி. வர்ணனையாளர் டோனி க்ரெய்க் காலமான செய்தி படித்தேன். ஒருநாள் போட்டிகளை வர்ணனை செய்வதில் இவருக்கு நிகர் என்னைப்பொருத்தவரை எவருமில்லை. குறிப்பாக இந்தியாவில் இந்திய அணி ஆடும் போட்டிகளில் அரங்கில் இருக்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் டோனியின் கம்பீரக்குரல் டி.வி.யில் ஒலித்தால் அதகளம்தான். ஏகத்துக்கும் க்ரிக்கெட் அறிவை முன்னிருத்தாமலும், மொக்கை போடாமலும் சாமான்ய ரசிகனின் மனதில் பதியும் வண்ணம் வர்ணனை செய்த டோனிக்கு குட் பை.
.....................................................................

வெளுத்துக்கட்டு:

                                                                          Image: madrasbhavan.com

எல்.ஐ.சி.பின்புறம் உள்ள வுட்ஸ் சாலையில்(மணிக்கூண்டு அருகே) உள்ளது இந்த அலுவலர்கள் வெளுப்பகம். உங்கள் அலுவலகத்தில் இருக்கும் எதிரிகளை நேக்காக பேசி சோக்காக அழைத்து வாருங்கள். வெகுவாக வெளுக்கலாம்.
...........................................................................

வாய்க்கொழுப்பு:
டெல்லி கற்பழிப்பு சம்பவத்திற்கு பிறகு பெண்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாள்தோறும் அறிவுரைகளை வழங்கி வருகின்றனர் அந்தக்கால அரசியல்வாதிகள். 'குட்டைப்பாவாடை போடக்கூடாது', 'நகரங்களை விட கிராமங்களில் கற்பழிப்புகள் குறைவு', 'பெண்கள் கற்புடன் இருக்க எண்ணினால் லக்ஷ்மண  ரேகையை தாண்டக்கூடாது. இல்லாவிடில் ராவணன் வரத்தான் செய்வான்'. இப்படி இன்னும் பல. ஒருவர் கூட ஆண்கள் எல்லை மீறக்கூடாது என்று சொல்லவில்லை. அட்வைஸ் மழை பொழிவதில் இப்போதைக்கு முன்னணியில் இருப்பது ஆர்.எஸ்.எஸ் ட்ரவுசர் தா(த்)தாக்களும், பா.ஜ.க 'பெரிய'வர்களும்தான். ஆ வூனா காவிக்கொடிய தூக்கிட்டு ஆரவாரமா கெளம்பிடறாங்க தம்பி.  
...........................................................................

கண்ணா (40) லட்டு தின்ன ஆசையா?
மேடமின் முக்கியமான பலம் மற்றும் பலவீனங்களில் ஒன்று எந்த ஒரு விஷயத்திலும் தனது நிலைப்பாட்டை சட்டு புட்டென அறிவித்து விடுவது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுக்க விறுவிறுவென நடவடிக்கை எடுத்து இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதே சமயம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி தனித்தே நிற்கும் என்று தடாலடியாக அறிவித்ததில் பீதியாகி நிற்கின்றன இரண்டாம் மட்ட கட்சிகள். மேடம் சோலோவாக போலோ சாப்பிட முடிவு செய்து விட்டார். ஆனால் ஒரு கவளம் சோற்றை பிசைந்து அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் எத்தனை பருக்கைகளை பகிர்வது எனும் டென்ஷன் கருணாநிதிக்கு. ராமதாஸ், வைகோ போன்றவர்கள் டப்பா எப்படி டான்ஸ் ஆடப்போகிறதோ?

அப்பறம் காங்கிரஸ், பா.ஜ.க.கதி??? இதுதான்....

'எலே நீங்க உக்காந்து இருக்கீகளா? எந்திரிச்சி நில்லுங்க பாப்போம்'

 'ஐயோ..... நாங்க நிக்கறோம். நிக்கறோம்'
.........................................................................

புதிய மன்னர்கள்: 
லோ பட்ஜெட்/புதுவரவுகள் சென்ற ஆண்டு கலக்கியதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் அது போன்ற படங்களின் வரவு அதிகம் இருக்குமென தாராள மாக நம்பலாம். அவ்வரிசையில் தற்போதைக்கு பரபரப்பை கிளப்பி இருக்கும் ட்ரெயிலர்தான் 'யாருடா மகேஷ்':  


....................................................................


24 comments:

சீனு said...

எக்ஸ்பிரஸ் அவென்யு 5d ரொம்பவே எனக்கும் பிடித்து இருந்தது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சர்க்கஸ்ல கலக்கல் டான்ஸ் ஒண்ணு போட்டிருப்பாங்களே, அத சொல்லல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது நண்டு இடுப்புல குத்திருச்சா? மாப்பிள்ளையாக போறவர ஏன்யா இப்படி வில்லங்கமான எடத்துக்குலாம் கூட்டிட்டு போறீங்க?

! சிவகுமார் ! said...

@ சீனு

நம் போன்ற குழந்தைகள் மனம் பூப்போல. போகப்போக தெரியும். இந்த பூக்களின் வாசம் புரியும்.

! சிவகுமார் ! said...//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சர்க்கஸ்ல கலக்கல் டான்ஸ் ஒண்ணு போட்டிருப்பாங்களே, அத சொல்லல?//

அப்படி எதுவும் இல்லையே? ஏமாத்திட்டாங்களா? ஆனால் செக்க செவேல் அழகிகள் அனைவரும் கிளு கிளு உடையில் வந்தனர். எனக்கு வெக்க வெக்கமாக வந்தது. கூட வந்த கே.ஆர்.பி.அண்ணன் மட்டும் அவர்களை குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தார்.

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது நண்டு இடுப்புல குத்திருச்சா? மாப்பிள்ளையாக போறவர ஏன்யா இப்படி வில்லங்கமான எடத்துக்குலாம் கூட்டிட்டு போறீங்க?//

அந்த பயபுள்ள நம்மைவிட டபுள் ஸ்பீட். ராஸ்கோல்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
சர்க்கஸ்ல கலக்கல் டான்ஸ் ஒண்ணு போட்டிருப்பாங்களே, அத சொல்லல?//

அப்படி எதுவும் இல்லையே? ஏமாத்திட்டாங்களா? ஆனால் செக்க செவேல் அழகிகள் அனைவரும் கிளு கிளு உடையில் வந்தனர். எனக்கு வெக்க வெக்கமாக வந்தது. கூட வந்த கே.ஆர்.பி.அண்ணன் மட்டும் அவர்களை குறுகுறுவென பார்த்துக்கொண்டு இருந்தார்.//////

போச்சு போச்சு..... அந்த செக்க செவேல்ஸ் எல்லாம் கிளுகிளுன்னு சூப்பரா கும்மாங்குத்து ஆட்டம் போட்டாங்க நாங்க பார்க்கும் போது.... அதுக்காகவே மறுக்கா மறுக்கா போனோம்.....!

! சிவகுமார் ! said...

ஜெமினி சர்க்கஸ் ஓனர் மீது சீட்டிங் வழக்கு போட முடிவு செய்து விட்டேன்.

! சிவகுமார் ! said...


ஆப்ரிக்க அழகிகள் ரெண்டு பேரும் வயித்த கலக்கற மாதிரி ஆடுனாங்க. ஒரு தடியான ஆன்ட்டி ஆடிக்கிட்டே கத்தி பயமுறுத்திச்சி. கூட ஆடுன அவங்க நாட்டு பசங்க எல்லாம் சிக்ஸ் பேக்ஸ் வச்சி இருந்தானுங்க. செவ செவா ஆட்டம் நடக்கவே இல்லையே??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ! சிவகுமார் ! said...

ஆப்ரிக்க அழகிகள் ரெண்டு பேரும் வயித்த கலக்கற மாதிரி ஆடுனாங்க. ஒரு தடியான ஆன்ட்டி ஆடிக்கிட்டே கத்தி பயமுறுத்திச்சி. கூட ஆடுன அவங்க நாட்டு பசங்க எல்லாம் சிக்ஸ் பேக்ஸ் வச்சி இருந்தானுங்க. செவ செவா ஆட்டம் நடக்கவே இல்லையே??///////

இது வேற மாதிரி ஆட்டமாவுல தெரியுது....? ஒருவேள செவசெவாவுக்கு சட்டம் தன் கடமைய செஞ்சிடுச்சோ?

! சிவகுமார் ! said...


எது எப்படியோ முன் வரிசையில் இருந்ததால் 10 நிமிடத்திற்கு ஒரு தரம் பாவ் பஜ்ஜி அழகிகள் நாங்கள் இருந்த பக்கம் பார்த்து பறக்கும் முத்தம் தந்தவாறு இருந்தது போற்றத்தக்கது. கே.ஆர்.பி.அண்ணன் மொபைலில் அப்படங்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பாவ்பாஜிகளைப் பற்றி விரிவாக ஒரு கட்டுரை சமைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இதுவே எங்கள் அண்ணன் காடுதிரும்பலாக இருந்திருந்தால், பாவ்பாஜிகளை வைத்தே அவரை ஒரு போட்டோவும் எடுத்துக் கொள்வது மட்டுமில்லாமல், அவர்களை ஒரு பேட்டியும் எடுத்து வந்திருப்பார்......

! சிவகுமார் ! said...


இப்ப நாடு இருக்கிற நெலமைக்கு அப்படி கட்டுரை போட்டா அச்சடிச்ச சோறு, அவுன்ஸ் கிளாஸ்ல மோருதான். ஏற்கனவே எசுகுபெசகா பிலாசபி ஒரு ஸ்டில்லை போட்டுருக்கான். அதுக்கே சாட்சி சொல்ல எப்ப என்னை கூப்புடுவாங்கன்னு தெரியல. சத்த சும்மா இருங்கோண்ணா. நேக்கு படப்பிடிப்பா...சாரி படபடப்பா இருக்கு ஓய்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் பற்றி ஏதாவது கருத்து சொல்ற பேனர் ஒண்ணை எடுத்து கைல தாயத்து கட்டுற மாதிரி ப்ளாக்ல போட்டு வைங்கோ... எந்த காத்து கருப்பும் அண்டாது....!

Yoga.S. said...

அருமையான தொகுப்பு!அந்த 'மாப்பிள்ளை' பத்தி......................நான் எதுவுமே படிக்கல!ஹி!ஹி!ஹி!!!

பட்டிகாட்டான் Jey said...

வாவ்வ்வ்.. வாவ்வ்வ்...

காக்டெயில் கலக்கல்..... கண்டிநூ...கண்டிநூ... :-)))

பட்டிகாட்டான் Jey said...

அப்ப பிரபாப் பயபுள்ளையைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்குறது நீதானா மெட்ராசூ :-))))

அவம்பாவம் பச்சப்புள்ளையா கெடுத்துடாதே...:-)))

”தளிர் சுரேஷ்” said...

சுவையான மீல்ஸ்!

Philosophy Prabhakaran said...

// மெகா சைஸ் நண்டு ஒன்று கொடுக்குடன் வரும்போது சீட்டின் இருபுறமும் இருந்து இடுப்பை குத்துகிறது ஒரு குச்சி(!). 'யாரோ என் இடுப்பை கிள்றாங்க' என்று பதறினார் மாப்பிள்ளை. //

பின்வரிசையில் இருந்து பருவச்சிட்டு தான் இந்த அப்பாவி பட்டதாரி வாலிபனிடம் சில்மிஷம் செய்கிறதோ என்று நினைத்து பதறிவிட்டேன்...

டோனி க்ரெய்க் மரணச்செய்தி இப்போது தான் கேள்விப்படுகிறேன்... இரங்கல்கள்...

// அதே சமயம் 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சி தனித்தே நிற்கும் என்று தடாலடியாக அறிவித்ததில் பீதியாகி நிற்கின்றன இரண்டாம் மட்ட கட்சிகள். //

மேடமுக்கு ஒரே தமாசு... மேடம் அதுவும் இடைத்தேர்தலுன்னு நினைச்சிட்டாங்க போல... இப்ப இருக்குற நிலை தொடர்ந்தால் நாற்பது தொகுதிகளிலும் ரிவட் அடிக்கப்படும்... நெம்பியெல்லாம் எடுக்க முடியாது...

Unknown said...

அருமையான மீல்ஸ்

CS. Mohan Kumar said...

150 ரூவாக்கு 5 D வொர்தா ? நான் குடும்பத்தை வேற கூட்டி போகணும் ! அதான் யோசிக்கிறேன் !

பெண்கள் மீதான வன்முறைக்கு பெண்களையே குறை சொல்வோரை கண்டு எனக்கும் கோபம் வந்தது. இணையத்தில் சண்டை வேண்டாம் என பேசாமல் இருந்து விட்டேன் (வெளி ஆணிகள் அதிகம்; சண்டைக்கு நேரமில்லை)

Manimaran said...

//அலுவலர்கள் வெளுப்பகம்.// ஹா...ஹா..

டெல்லி சம்பவத்திற்கு தினமணி போட்ட தலையங்கம் இன்னும் கொடுமை பாஸ்.பெண்கள் 9 மணிக்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியவே வரக்கூடாது என்ற ரீதியில் அவர்கள் எழுதியது அந்த சம்பவத்தைவிட மிகக் கொடூரம்.வெளிநாடுகளில் மிட்நைட்ல பெண்கள் டாக்ஸி ஓட்றாங்க.ஒரு தப்பான பார்வை பார்த்தாலே போதும்.நொங்கெடுத்துடுவாணுக.நம்மநாட்டில் அப்படியெல்லாம் நடப்பதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும்.

Theepan said...

Thanks for your great post.

Check out our site:

NumUlagam.com

Related Posts Plugin for WordPress, Blogger...