நேற்று மதியம் இரண்டு மணி வாக்கில் நான், பிலாசபி, அஞ்சாசிங்கம், ஆரூர் முனா மற்றும் பட்டிக்காட்டான் அனைவரும் ஒன்றாக அரங்கினுள் நுழைந்து இரவு 8 மணிவரை இணைபிரியாமல் ஸ்டால்களை முற்றுகை இட்டோம். பொதுவாக பதிவர்கள் கண்ணில் பட்டால் டிஸ்கவரி புக் ஸ்டாலில் மீட்டிங் போட்டு பொழுதை போக்குவது தொன்று தொட்ட மரபாகிப்போவதால் அனைத்து ஸ்டால்களையும் விசிட் செய்ய முடியாமல் திரும்புவது வழக்கம். அதேபோல கூட ஒரு நண்பர் வந்தால் கூட சற்று நேரத்தில் அவரை பிரிந்து எனக்கு பிடித்த ஸ்டாலுக்குல் நுழைந்து விடுவேன். இவ்விரு மாதிரியும் இன்றி முதன் முறையாக ('குகனோடு சேர்ந்து ஐவரானோம்' என ராமன் சொன்னது போல பட்டிக்காட்டானையும் சேர்த்து) குழுவாக புத்தக வேட்டையில் ஈடுபட்டது இதுவே முதன் முறை. சென்ற வாரம் பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த வெளியூர் ஆட்கள் ரிட்டர்ன் ஆகிவிட்டதால் நேற்று ஏகப்பட்ட கூட்டம்.
கடந்த சனி, ஞாயிறு அன்று சந்தித்த பபாஷா, பட்டர்ப்ளை சூர்யா, புதுகை அப்துல்லா, மோகன்குமார், மணிஜி, ஓ.ஆர்.பி. ராஜா ஆகியோர் இம்முறை கண்ணில் படவில்லை. கே.ஆர்.பி.செந்தில் தாமதமாக வந்தார். ஒரு சில 'ஒளிவட்ட' ட்ரங்க் பெட்டிகளை பார்த்து சிதறி ஓட வேண்டியும் இருந்தது. இம்முறை நாங்கள் சந்தித்த பதிவர்கள்: கேபிள் சங்கர், முரளிதரன், பாலகணேஷ், மதுமதி, புலவர் ராமானுஜம், கவியாழி கண்ணதாசன், சசிகலா, சமீரா, பத்மஜா மற்றும் சிலர்(பெயர் விடுபட்டிருப்பின் மா ஃப் கீஜியே). சத்ரியனின் நூல் வெளியீடு டிஸ்கவரியில் நடைபெற்றது. அப்போது தமிழ் ராஜன் எனும் குறும்பட இயக்குனரை சந்தித்து அளவளாவினேன். 'ரணகளம்' எனும் குறும்படமொன்றை எடுத்திருப்பதாகவும் வரும் 25 ஆம் தேதி யூ ட்யூபில் வெளியிட உள்ளதாகவும் கூறினார். தஞ்சையின் பாரம்பரிய விளையாட்டான போர்க்காயை மையமாகக்கொண்டு வெளிவரவுள்ள படைப்பு. ட்ரெயிலர் பார்க்க க்ளிக் செய்க: ரணகளம். அவருடன் பேசி முடித்த பின்பு பேருலாவை தொடங்கலானோம்.
ஸ்டால் 277 - 'குட் வொர்க் புக் புது தில்லி' யில் குர் ஆனை இலவசமாக தரும் செய்தி கேள்விப்பட்டு ஆளுக்கொரு புத்தகத்தை வாங்கினோம். திராவிடர் கழக ஸ்டால் எண். 277 இல் நாங்கள் நுழைந்ததும் எம்மை அழைத்து பெரியார் கொள்கைகள் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார் தி.க.வின் துணைப்பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் அவர்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்பதால் நிகழ்வை வேடிக்கை மட்டும் பார்த்தேன். கடவுள் மறுப்பாளர்களான பிலாசபி மற்றும் அஞ்சாசிங்கம் அதிக நேரம் உரையாடினர். இன்று மீண்டும் அவரை சந்திக்க உள்ளோம். நேற்று அதிக புத்தகங்கள் வாங்கியது ஆரூர் முனாதான். ஒவ்வொரு முறையும் சில ஆயிரங்களுக்கு புத்தகங்கள் வாங்காமல் இருந்ததே இல்லை மனிதர்.
நேற்றுவரை நான் வாங்கிய புத்தகங்கள்:
கணிதமேதை ராமானுஜன் - ரகமி ரூ.120
பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேதநாயகம் பிள்ளை - ரூ.150
தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - ரூ.250
வட்டியும் முதலும் - ராஜூ முருகன் - ரூ.215
(தோழர்) ஜீவா சில நினைவுகள் - பாலசுப்ரமணியன் - ரூ.200
வாத்யார் (எம்.ஜி.ஆர்) - ரூ.160
அரவாணிகள் - மகாராசன் - ரூ.210
மயக்கம் என்ன - சஞ்சீவிகுமார் - ரூ.110
உணவின் வரலாறு - பா. ராகவன் ரூ.160
மீனாட்சி புத்தக ஸ்டாலில் சுஜாதாவின் புத்தகங்கள் ஒவ்வோர் ஆண்டும் மிக மலிவான விலையில் கிடைக்குமென்றும், விற்பனைக்கு வந்த ஓரிரு மணி நேரத்தில் பதிவர்கள் அனைத்தையும் அள்ளி விடுவார்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. இம்முறை எதேச்சையாக அந்த ஸ்டால் கண்ணில் பட உள்ளே நுழைந்தோம். எங்கள் அதிர்ஷ்டம் போல. அப்போதுதான் ஏகப்பட்ட ஸ்டாக் இறங்கி இருந்தது. 'அள்ளு அள்ளென' கூட சேர்ந்து அள்ளியவர்கள் ஆரூர் முனாவும், பிலாசபியும். நான் அள்ளியவை:
ஓலைப்பட்டாசு - ரூ.30
24 ரூபாய் தீவு - ரூ.26
கமிஷனருக்கு கடிதம் - ரூ.19
21 ஆம் விளிம்பு - ரூ.43
படிப்பது எப்படி - ரூ.42
ஒரு நடுப்பகல் மரணம் - ரூ.55
உயிராசை - ரூ.33
ப்ரியா - ரூ.44
சில வித்தியாசங்கள் - ரூ.33
விழுந்த நட்சத்திரம் - ரூ.22
கலைந்த பொய்கள் - ரூ.17
60 அமெரிக்க நாட்கள் - ரூ.24
வடிவங்கள் - ரூ.22
குமரி பதிப்பக வெளியீடான இவ்வனைத்து சுஜாதா படைப்புகளுக்கும் 10% தள்ளுபடியும் உண்டு. சிறுகதை, இலக்கியம், நாவல் பக்கம் எட்டிப்பார்க்காத நான் 'சுஜாதா' எனும் பெயருக்காக மட்டும் வாங்கிய படைப்புகள் இவை. விகடன் சுஜாதா மலர் வெளியான தகவல் அறிந்து விகடன் ஸ்டாலை அடைந்தோம். நூலின் விலை ரூ.165. பிரித்து பார்த்தபோது உள்ளே இருந்த சமாச்சாரங்கள் புத்தகம் வாங்கும் ஆவலை தூண்டவில்லை. பில் போடும் இடத்தில் பெரியவர் ஒருவரை பார்த்து விகடன் ஊழியர் எரிந்து விழ அருகில் இருந்த சக ஊழியர் 'கூல்' என்று ஆஃப் செய்தார். மிக அதிகம் பேர் விசிட் செய்து வரும் ஸ்டால் என்பதால் பணி நெருக்கடியில் சூடாகி விட்டார் போல மனிதர். அதற்காக மூத்த வாசகரிடம் பொறுமை இழப்பது சரியல்ல. அப்பெரியவர் பணம் தந்துதான் புத்தகம் வாங்கினார். 'டைம் பாஸ்' செய்யவில்லையே!!
வெகுநேர நடைப்பயண களைப்பை தீர்க்க மேடை அருகே அமர்ந்தோம். மாலை சுமார் ஏழு மணி வாக்கில் 'நடைப்பயண' புகழ் வைகோ சிம்மாசனத்தை அலங்கரித்தார். அவரது பேச்சை கேட்க பெருந்திரளாக மக்கள் கூடி இருந்தனர். எனது காது பட உள்ளூர் இளைஞர் தனது தோழருடன் சொன்ன வார்த்தைகள் இவை: 'வைகோ பேஜாரா பேசுவாப்ல'. ஆயிரம் சான்றோர்கள், விருதுகள் தரும் பாராட்டுக்களை விட இம்மாதிரி சாமான்ய மனிதர்கள் அதுவும் இளைஞர்கள் ஒரு இந்திய அரசியல்வாதிக்கு தரும் ஒற்றை வரி பாராட்டிற்கு இணையில்லை. வைகோ உமக்கு நேரம் கனியாமல் போகாது!
இறுதியாக இன்று இன்னொரு சுற்று கண்காட்சிக்கு செல்கிறேன். அனுபவங்கள் ஓரிரு நாட்களில் பதிவாக.
முந்தைய பதிவு:
...................................................
17 comments:
கலக்குங்க....
ஆங்குன புக்ஸை எல்லாம் செல்ஃப்ல வச்சி அழகு பார்க்காம, தூக்கி பரண்லையும் போடாமே எல்லாத்தையும் படிச்சி அடுத்த புக்ஃபேர்-க்குள்ளார எல்லாத்துக்கும் புத்தக விமர்சனம் எழுதுறே.....
இல்லைனா மரண கலாய்த்தல் இருக்கும்டியோவ்வ்வ்வ் :-)))
பொறவு *வைகோ ஜோரா பேசுவாப்லனுதான் அங்கே கூடியிருந்த கூட்டம்ஸ் சொன்னாங்க* பேஜாரா அப்படினு சொல்லலை...
எழுத்துப்பிழை இல்லாம எப்பதான் எழுதிப் பழகப்போறீங்களோ??
என்கிட்ட சகவாசம் வச்சிகிட்டும் இப்படி தப்பும் தறுமா எழுத்துப்பி ழையோட எழுதினா என்னை என்ன நினைப்பாங்க.... பார்த்துப்பா. :-))
இன்னிக்குத்தான் நான் புக்ஸ் வாங்கலாம்னு இருக்கேன். எனக்கு சிவான்னு யாரையும் பழக்கம் இல்லப்பா... யாரு அவரு? ஹி... ஹி...
சிவா நீங்க நடத்துங்கையா....
அந்த பட்டிக்ஸ்ஐ கலாய்த்தலை லைவ் பண்ண முடியாதா???????
கரந்தை ஜெயகுமார் என்பவர் கணிதமேதை ராமானுஜம் வரலாற்றை அழகாக எழுதி வருகிறார்.நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்
கணிதமேதை அத்தியாயம்15
@ ஸ்கூல் பையன்
கலக்கறோம். தமிழ்நாட்டையே கலக்கறோம்.
//பட்டிக்காட்டான் well said....
ஆங்குன புக்ஸை எல்லாம் செல்ஃப்ல வச்சி அழகு பார்க்காம, தூக்கி பரண்லையும் போடாமே எல்லாத்தையும் படிச்சி அடுத்த புக்ஃபேர்-க்குள்ளார எல்லாத்துக்கும் புத்தக விமர்சனம் எழுதுறே.....//
ண்ணா... சரீங்ணா!! அப்பறம் அது என்ன 'ஆங்குன' புக்ஸு??
//பட்டிக்காட்டான் well said....
//இல்லைனா மரண கலாய்த்தல் இருக்கும்டியோவ்வ்வ்வ் :-)))//
ஆதித்யா டி.வி.ல வேலை கெடச்சிருக்கு போல.
//பட்டிக்காட்டான் well said....
//பொறவு *வைகோ ஜோரா பேசுவாப்லனுதான் அங்கே கூடியிருந்த கூட்டம்ஸ் சொன்னாங்க* பேஜாரா அப்படினு சொல்லலை...//
நல்லவரே நீங்கள் பைக் வைத்த இடத்தை மறந்து விட்டு எகிறி ஓடிய பின்பு நான் கேட்ட விஷயத்தை எழுதி உள்ளேன்.
//பால கணேஷ் said...
இன்னிக்குத்தான் நான் புக்ஸ் வாங்கலாம்னு இருக்கேன். எனக்கு சிவான்னு யாரையும் பழக்கம் இல்லப்பா... யாரு அவரு? ஹி... ஹி...//
கமன்ட் போட்ட இந்த பதிவர் யாரோ???
//நாய் நக்ஸ் said...
சிவா நீங்க நடத்துங்கையா....
அந்த பட்டிக்ஸ்ஐ கலாய்த்தலை லைவ் பண்ண முடியாதா???????//
ஆமா. அவரு இந்திய கிரிக்கெட் டீம் கேப்டன். லைவ் மட்டும்தான் கொறச்சல்!!
// T.N.MURALIDHARAN said...
கரந்தை ஜெயகுமார் என்பவர் கணிதமேதை ராமானுஜம் வரலாற்றை அழகாக எழுதி வருகிறார்.நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்
கணிதமேதை அத்தியாயம்15//
நன்றி. படிக்கிறேன் சார். உங்க கரு கரு ஹேர் ஸ்டைல் பொறாமை கொள்ள வைக்கிறது. கூந்தலின் ரகசியம் என்னவோ?
வாசிச்சேன் :-) நல்ல அனுபவம்
(வந்துட்டு போனதுக்கு எதாவது தடயம் விட்டுட்டு போகணுமாம்...சொல்லிக்கிட்டாக... நானும் கமென்ட் தடயத்த விட்டுட்டு போறேன் :-)
நண்பரே உங்களை மீண்டும் இன்று புத்தக கண்காட்சியில் சந்தித்ததில் மகிழ்ச்சி.
அப்படியே என்னுடைய குறும்படம் பற்றிய தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றிகள்.
புத்தகங்களை வாசித்துவிட்டு எப்படியிருக்கிறது என்று எழுதவும்
// இவ்விரு மாதிரியும் இன்றி முதன் முறையாக ('குகனோடு சேர்ந்து ஐவரானோம்' என ராமன் சொன்னது போல பட்டிக்காட்டானையும் சேர்த்து) குழுவாக புத்தக வேட்டையில் ஈடுபட்டது இதுவே முதன் முறை. //
என்னது புத்தக வேட்டையா ? நானெல்லாம் சும்மா தான்யா நடந்து வந்தேன்... நான் புத்தக வேட்டை செய்யும் சமயங்களில் யாரையும் துணைக்கு சேர்ப்பதில்லை...
// கடவுள் நம்பிக்கை உள்ளவன் என்பதால் நிகழ்வை வேடிக்கை மட்டும் பார்த்தேன். கடவுள் மறுப்பாளர்களான பிலாசபி மற்றும் அஞ்சாசிங்கம் அதிக நேரம் உரையாடினர். //
நம்பிக்கை மறுப்பு எல்லாம் எங்கிருந்து வந்தது... அவர் நாமெல்லாம் பதிவர்கள் என்று தெரிந்ததும், பெரியாரின் பெண் விடுதலை, சாதி ஒழிப்பு குறித்த சிந்தனைகளை சமகால இளைஞர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்...
// மீனாட்சி புத்தக ஸ்டாலில் சுஜாதாவின் புத்தகங்கள் ஒவ்வோர் ஆண்டும் மிக மலிவான விலையில் கிடைக்குமென்றும், விற்பனைக்கு வந்த ஓரிரு மணி நேரத்தில் பதிவர்கள் அனைத்தையும் அள்ளி விடுவார்கள் என்றும் கேள்விப்படுவதுண்டு. //
சிவா, இம்முறையும் நமக்கு கிடைத்தது ஒளிவட்டங்கள் கடித்துப்போட்ட எலும்புத்துண்டு தான்... பெட்டி வந்ததும் நானே ஒப்பன் செய்கிறேன் என்று வலிய வந்து பதிவர்கள் உதவினார்கள் என்று கடையில் இருந்த பெரியவர் சொன்னார்...
Post a Comment