CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 29, 2012

டீக் ஹை?                                                       சிங்கப்பூரில் இறந்த அப்பெண்ணின் உடல்

கடந்த சில வாரங்களாக எந்த செய்தி சேனலை திருப்பினாலும் கேங்ரேப்/பாலியல் வன்முறை தாங்கிய செய்திகள்தான். குறிப்பாக இன்று இறந்த 23 வயது பெண்ணிற்கு இழைக்கப்பட்ட அநியாயம் குறித்து கணக்கிலடங்கா விவாதங்கள், போராட்டங்கள், காமுகர்களுக்கு என்ன தண்டனை தர வேண்டும் என ஆளாளுக்கு தரும் ஆலோசனைகள் என நீள்கிறது பட்டியல். இவ்விஷயத்தில் அரசு மற்றும் அதிகாரிகளின் ஒவ்வொரு அசைவிலும் மறைமுக அரசியல் ஒளிந்து இருப்பதை விஷயம் தெரிந்தவர்கள் நன்றாக அறிந்திருப்பர். இன்னும் சில நாட்களுக்கு மீடியா பல்வேறு தளங்களில் இதே தலைப்பை மையமாக வைத்து தொடர்ந்து விவாதிக்கத்தான் போகிறது. கோடிக்கணக்கான மக்கள் எத்தனை கூப்பாடு போட்டாலும் தான் நினைப்பதை மட்டுமே மத்திய மற்றும் டில்லி மாநில அரசுகள் 'சாதுர்யமாக' செய்யப்போகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு(26/11 குண்டு வெடிப்பையும் சேர்த்து) இப்படி ஒரு மக்கள் புரட்சியை இந்திய அரசு கண்டதில்லை. போராட்டத்தை அடக்க மாட்டாமல் அரசாங்கம் கையை பிசைந்து கொண்டு நிற்க அந்நேரம் பார்த்து முக்கிய(சாதகமான?) திருப்பமாக   அமைந்தது தோமர் எனும் காவலரின் மரணம். 'போராட்டம் வன்முறையாக மாறியதன் விளைவாகவே அவர் இறந்தார். மக்கள் வன்முறையில் இறங்கக்கூடாது' என்று சூட்டை தணிக்க பார்த்தது அரசும், தலைநகர காவல்துறையும். 'சற்று அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு விட்டோமோ' என்று போராடியவர்கள் குழம்பிய நேரம் அதிரடியாக டி.வி.க்களில் பேட்டி அளித்தார் பாலின் எனும் பெண்(கீழுள்ள படத்தில் இருப்பவர்). 'தோமர் உடலில் வெளிப்படையாக எந்த காயமும் இல்லை. ஓடிவந்ததில் மூச்சிரைத்து இறந்திருக்கலாம்' என்று அவர் அடித்து கூறியதோடு 'எங்கும் இதை சொல்லுவேன். யார் மிரட்டினாலும் பின்வாங்க மாட்டேன்' என்று துணிச்சலாக கூற அதிர்ந்தது காவல்துறை.

'பலமான உள்காயம் ஏற்பட்டு இறந்துவிட்டார்' என போஸ்ட்மார்ட்டம் நியாயமான(!) ரிப்போர்ட் வந்தது. இந்தியான பிறந்ததற்கு காலரை தூக்கி விட்டேன்.  
    
                                                            
மிகச்சிறந்த சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி அப்பெண்ணை சிங்கைக்கு அனுப்பியது அற்ப(புத)மான திருப்புமுனை. இந்தியனாக பிறந்ததற்கு மீண்டும் ஒரு முறை காலரை தூக்கி விட்டேன். இதனால் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் மக்களிடையே ஏற்படும் எழுச்சியை அளவுகோலாக வைத்து அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும் என்றா? கடந்த ஒரு வாரத்தில் கூட இந்தியா முழுக்க கற்பழிப்பு கொடூரங்கள் நின்றபாடில்லை என்பதற்கு பத்திரிக்கை செய்திகளே சாட்சி. அப்படி பாதிக்கப்பட்ட அனைத்து  பெண்களுக்கும் உலகின் சிறந்த multi organ transplant speciality மருத்துவமனையான சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்தில் (ரஜினி சிகிச்சை புகழ்) சிகிச்சை பெற ஆவன செய்யுமா மன்மோகன் அரசு?     

கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் அந்தப்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம் ஆனதும் சட்டென சிங்கப்பூர் அனுப்பியதன் காரணம் என்ன என்று பெரிய கேள்விக்குறி தொக்கி நிற்கிறது. 'அப்பெண் பிழைக்க வாய்ப்பு மிகக்குறைவு. 'டில்லி மருத்துவனமையில் அப்பெண் இறந்தால் மக்கள் மீண்டும் கொதித்து எழுவார்கள். சட்டம், ஒழுங்கு கெட்டு விடும்(ஓடும் பேருந்தில் கெட்டதை விடவா?). சிங்கப்பூர் அனுப்பிவிட்டால் நாம் நிம்மதி பெருமூச்சு விடலாம்' என மத்திய அரசு,மருத்துவர்கள் மற்றும் காவல்துறையும் இந்த முடிவை ஒருமனதாக எடுத்து இருக்கலாம் என்று தேசபக்தி இல்லாத முட்டாள்கள் கூறலாம். அய்யகோ!! தவறன்றோ. இத்தகு கற்பனை பெருந்தவறன்றோ. 

அனைத்திலும் உச்சகட்ட கொடுமையாக (வழக்கம்போல) ஒருவாரம் கழித்து வாயை திறந்தார் பிரதமர். டில்லி சம்பவம் குறித்து ஒரு சில நிமிடங்கள் டி.வி.யில் அறிக்கை வாசித்து முடித்ததும் 'டீக் ஹை?' என்று அவர் சொன்னதும் ஒளிபரப்பில் வெளியாக மீண்டும் வெடித்தது இன்னொரு சர்ச்சை: 'அப்படி எனில் அவர் மனதில் இருந்து எழுந்த சொற்கள் இல்லையா அவை? ஏதோ ஒப்பிக்க சொன்னதை செய்து முடித்தேன். சொன்னது சரியா?' என்று கேட்கிறாரே பிரதமர்' என்று பொங்கல் வைத்தனர் பொதுமக்கள். ஏன் நீங்கள் வாயே திறக்கவில்லை என்று நாம் தெரியாமல் கேட்டதற்கு இந்த பதில். அய்யா..நீங்க பேசாமலே இருந்து விடுங்கள். கோடி புண்ணியம்.
  
'இரண்டு வயது பெண்பிள்ளையை கூட கற்பழிக்கும் சம்பவங்கள் சகஜமாக நடந்தாலும் அதைக்கண்டு மத்திய, மாநில அரசுகள் கடுமையாக கண்டித்து வருத்தம் தெரிவிக்குமே அன்றி உணர்வு மற்றும் அறிவுபூர்வமாக யோசித்து மக்கள் நலம் பேணாது' எனும் மூடர்களை உதைப்போம். பாரத் மாதா கி ஜே!!
......................................................................................  

  

9 comments:

MANO நாஞ்சில் மனோ said...

நம்ம நாட்டுலதான்ய்யா இப்பிடி அநியாயம் நடக்குது, அரசாங்கத்தை மண்ணள்ளி கொட்டுய்யா...

சமீரா said...

இந்தியா பாவம் தான்.. இப்படிப்பட்ட அரசியவாதிகளால் சீரழிக்க பட்டு வருகிறது... இந்த நாடு திருந்தவே திருந்தாது!!!

சோனி மேடம் சொல்றத திருப்பி சொல்றதால தான் அவரை இவ்ளோ வருஷமா பிரதமர் எனும் நாற்காலில் உட்கார வச்சி இருக்காங்க!!! இன்னும் ஆறு மாசம் பொறுத்துக்க வேண்டியது தான்!!

rajamelaiyur said...

பொம்மையாய் ஒரு பிரதமர்
ஆட்டுவிக்க ஒரு இத்தாலி
ஆட்சி கவிழ கூடாது என சொல்லி இந்தியாவை விற்க கூட ஆதரவு தர தாத்தா
மக்கள் பிரச்சனையை தெரிந்து கொள்ளாத முதல்வர்

உலகமே அழிந்த்சாலும் என் சாதிதான் பெரிசு என கூவ ஒருவர்

...
..

இந்தியா வல்லரசு ஆகிடும் !!!!!!!!!!!

ஆமினா said...

//அப்படி பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்கும் உலகின் சிறந்த multi organ transplant speciality மருத்துவமனையான சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்தில் (ரஜினி சிகிச்சை புகழ்) சிகிச்சை பெற ஆவன செய்யுமா மன்மோகன் அரசு? //

மக்கள்புரட்சிக்கு அரசின் பயம் தான் காரணம். இதே அளவுகோளோட்டு மற்ற விஷயங்களிலும் நடக்க காணாமே... சமீபத்தில் தமிழ்நாட்டில் பள்ளி மாணவி பலாத்காரம்/கொலை முதல் துணூக்கு செய்தி போல் வந்த எந்த விஷயத்திலும் யாரும் கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. பாவம் மக்கள் குரல் இருந்தால் தான் அரசும் பதில் சொல்லும் போலும்!

நீங்க சொல்வது போல் என்னதான் கூப்பாடு போட்டாலும் அடுத்த கட்ட நடவடிக்கை என்பது அரசு தரப்பில் கேள்விக்குறியே... நாள் கடத்திவிட்டு வழக்கம் போல் அடுத்த வேலைகளில் இறங்கிடுவாங்க. இதே ஓட்டை சட்டத்தோடு மீண்டும் பேப்பர்களிலும், டீவி சேனல்களிலும் "பெண் கற்பழிப்பு" செய்திகளை எதிர்நோக்கி இருக்க வேண்டிய துரதிஷ்ட்டம் நமக்கு!!

Yoga.S. said...

சூட்டைத் தணிப்பதற்காக அல்ல,அந்த சகோதரி உயிர் பிழைக்க மாட்டார் என்று தெரிந்தே தான் சிங்கப்பூர் அனுப்பினார்கள்.ஒரு வகையில் சகோதரி இறந்ததும் நல்லது தான்!இருந்து 'அனுபவிப்பதை' விட.................ஹூம்!ஒன்று நிச்சயம்,இந்த அரசுகள் எல்லாம் எம்மை ஒன்றும் ரட்சிப்பதற்காக எம்மால்?!ஏற்படுத்தப்பட்டவை அல்ல!(மறு உலகிலாவது,சகோதரி நன்றாக வாழட்டும்)

கோகுல் said...

கூறுகெட்ட குக்கருனு பேர் வாங்கிட்டு ஆக்கபூர்வமா நடவடிக்கை எடுத்தா ஊர் உலகம் தப்ப பேசுமாம்.
//
இனிமே காலர் வைச்ச சட்டையே தைக்க கூடாது இந்தியாவுல.

mohamed salim said...

உயிரிழப்பு மிகவும் வருத்தத்திற்குரியது


கடுமையான சட்டம் போட்டாலும் பாலியல் வன்முறை கட்டுக்குள் வராது.. பெண்களுக்கு சிறு ஆயுதம் ஏந்தி போராடும் தற்காப்பு கலைகள் பள்ளியீல் படிக்கும் போதே கற்று தர வேண்டும்

Unknown said...

பொது மேடையில் தூக்கிலிட வேண்டும் இனி யாராக இருந்தாலும் சரியே

செங்கோவி said...

நல்ல சாட்டையடிப் பதிவு சிவா. நேரமின்மையால் இது பற்றிப் பதிவிட முடியவில்லை.

மற்ற கற்பழிப்புகளுக்குத் தரப்படாத கொந்தளிப்பு/முக்கியத்துவம் இதற்கு ஏன் என்ற கேள்வி பலரால் எழுப்பப்படுகிறது. டெல்லியில் வாழ்ந்தவன் என்ற முறையில் இதன் பின்புலத்தை என்னால் உணர முடிகிறது. டெல்லியில் சாமானிய மக்களின் வாழ்க்கைக்கும், ஒயிட்காலர் ஜாப் மக்களின் வாழ்க்கைக்கும் பெரும் இடைவெளி இருக்கிறது. இன்னும் மனித ரிக்சாக்கள் ஒழிக்கப்படாத பகுதி அது. (வட இந்திய ஆண்களே இருவகை தான், ஒன்று பான் எச்சில் வடியும் முகம்-இரன்டாவது அமீர்கான் முகம்.)

இரவு நேர டிஸ்கோதே லைப் என்பது ஒரு சாராருக்கு மன அழுத்ததை குறைக்கும் ஒன்றாகவும், மற்றொரு சாராருக்கு அருவறுக்கத்தக்க விஷயமாகவும் உள்ளது. எனவே இரவு நேரங்களில் பாய் ப்ரன்டுடன்/ஆணுடன் நடமாடும் எந்தவொரு பெண்ணையும் இழிவாகப் பார்க்கும், நடத்தும் ஆண்களே அதிகம்.

உண்மையில் வெளியில் சொல்லப்படாத கற்பழிப்புகள் அங்கு ஆயிரமாயிரம் உன்டு. எனது அலுவலக நண்பர்களே, கண்ணால் கண்ட காட்சிகளும் உன்டு.

இன்றைய டெல்லி படித்த தலைமுறையில் கோபத்திற்குக் காரணம், அவர்களும் இத்தகைய வன்முறையை பார்த்தவர்கள்/அனுபவித்தவர்கள் என்பதால்தான். இதுவரையும், இப்போதும் எத்தனையோ ஏழை/கிராமப் பெண்கள் கற்பழிக்கப்படும்போது வராத அறச்சீற்றம், இந்த ஒயிட் காலர் போராட்டவாதிகளுக்கு இப்போது வருவதன் ரகசியம் அதுவே.

எனினும், கற்பழிப்பு என்பது கொலையை விடவும் பாதகமான செயல். அதைச் செய்பவர் யாராக இருந்தாலும், தூக்குதன்டனை உடனே வழங்கப்பட வேன்டியது அவசியம். அது மட்டுமே இத்தகைய குற்றங்களைத் தவிர்க்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...