இவ்வாண்டு வெளியான தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் சில ஆங்கிலப்படங்கள் பற்றிய அலசலிது. சிறந்த படங்கள், சிறந்த நடிகர் என்று ஆஸ்கர், பிலிம்பேர் ரேஞ்சுக்கு எவரிதிங் ஏகாம்பரம் போல விருது தருவதற்கு என்று சரியான தகுதி வேண்டும். சினிமா ஆர்வம் மட்டுமே 'சிறந்த' விருது தருவதற்கான தகுதியை தந்து விடாது எனது கருத்து. கிட்டத்தட்ட வெளியான அனைத்து படங்களையும் பார்த்தவர்கள் அதேசமயம் சினிமா பற்றிய தெளிவான புரிதல், தொழில்நுட்ப அறிவு கொண்டவர்கள் தரும் விருது என்றுமே ஒஸ்தி தான். ஆதலால் 'சிறந்த' வகையறா விருது தராமால் நான் பார்த்த படங்களில் 'எனக்கு பிடித்த/பிடிக்காத படங்கள், பாடல்கள், நடிகர்கள் எது, எவர் என்பதை மட்டுமே மையமாக கொண்டு கனகெம்பீரமாக வழங்கப்படுகிறது இந்த திரை விரு(ந்)து - 2012. முதலில் தமிழ்ப்படங்களில் இருந்து தொடங்குகிறேன். இவ்வாண்டு குப்புற கவிழந்த, குபீரென நிமிர்ந்த கோடம்பாக்க படைப்புகள் பற்றிய எனது பார்வை வரும் பதிவில். இப்பதிவில் நேரடியாக விருதுப்படலம் நோக்கியே லைட்ஸ் ஆன்!!
பிடித்த நகைச்சுவை நடிகர்:
சந்தானம் - ஒரு கல் ஒரு கண்ணாடி, நான் ஈ
'அம்மா இவன் கோவத்துல கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மாதிரியே சிரிக்கறாம்மா' - என்ன ஒரு டைமிங். உதயநிதி, ஹன்சிகா போன்ற இரண்டு உலகமகா கலைஞர்களை வைத்துக்கொண்டு சூப்பர் இயக்குனர் ராஜேஷ் ஒரு ஹிட் படத்தை தர எண்ணியது மிகப்பெரிய விஷப்பரிட்சைக்கு சமம். ஆனாலென்ன? 'யாமிருக்க பயமேன்' என்று ஒற்றை ஆளாக அரங்கை அதிர வைத்தார் சந்தானம். நான் ஈ திரைப்படம் முடிந்துவிட்டதென தியேட்டரை விட்டு அனைவரும் வெளியேற ஆரம்பித்த சமயம் திருந்திய பூட்டு கோவிந்தனாக சந்தானம் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவரை நோட்டம் விடும் நபரை பார்த்து சந்தானம் சொல்லும் வசனம் ' ஜூல நீர் யானைய சுத்தி பாக்குற மாதிரியே பாக்குறானே'. இந்த வருடமும் நீர்தான் டாப் பார்த்தா!!
பிடித்த வில்லன்:
சுதீப் - நான் ஈ
தமிழ் சினிமா பார்த்திராத முகம். கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்பின் வரவு 'நான் சிங்கம்' என கர்ஜனை செய்யும் அளவிற்கு ஆக்ரோஷமாகவே இருந்தது. ஆறடி உயரம்,கெத்தான குரல், ஈயைக்கண்டு கண்களில் காட்டும் மிரட்சி என அசத்திய மனிதர். செலெப்ரிடி கிரிக்கெட் லீக் போட்டிகளில் தொடர்ந்து சென்னையிடம் தோற்று கடுப்பில் இருந்த இந்த கன்னடத்து கேப்டன் நான் ஈக்கு நம் மக்கள் தந்த வரவேற்பைக்கண்டு மெய் சிலிர்த்து நிற்கிறார். கண்டிப்பாக 2013 ஆம் ஆண்டும் தமிழ்ப்படங்களில் வலம் வருவார் என நம்பலாம்.
பிடித்த நாயகன்:
தினேஷ் - அட்டகத்தி
சென்னைபுறநகரில் வசிக்கும் கல்லூரி மாணவனுக்கே உரித்தான அனைத்து அம்சங்களையும் தாங்கி புட்போர்ட் அடித்து மனதைக்கவ்விய ரூட்டு தல. விளையாட்டாக காதலை எதிர்கொள்ளும் வாலிபனாக ஆரம்பத்திலும், பிறகு ரூட்டு தலையாக உருவெடுத்து உள்ளம் கவர்ந்த கூத்துப்பட்டறைக்காரர். கதாபாத்திரம் வேண்டுமானால் அட்டகத்தி என பெயரெடுத்து இருக்கலாம். நடிப்பில் திப்பு சுல்தானின் வீரவாள் என்பதில் சந்தேகமில்லை.
பிடித்த நாயகி:
லட்சுமி மேனன் - சுந்தரபாண்டியன்
சிம்ரன், ஜோதிகா, ப்ரியாமணி அளவிற்கு ஸ்கோர் செய்ய வாய்ப்பு அமையாவிடினும் இரண்டாம் படமான சுந்தரபாண்டியனில் பல்வேறு ரியாக்சன்களால் கலக்கி எடுத்தவர் லக்ஷ்மி. இனிகோ, சசியைக்கண்டு கோபப்பார்வை பார்ப்பது, பின்பு காதலில் விழுவது என கேரளப்பைங்கிளி பலே பேஷ். 'நெஞ்சுக்குள்ள'(சுந்தர பாண்டியன்) பாடலில் சந்தோஷம் பொங்க இவர் ஆடும் காட்சிகளும் அருமை.என் மனம் தமன்னாவை மறந்து இவரைக்கண்டு ஒரு கணம் உருகிப்போக வழி வகுத்ததே இந்தப்பாடல் என்பது சிறப்பு செய்தி :)
பிடித்த இயக்குனர்:
ராஜமௌலி - நான் ஈ
வசூல் ரீதியாக தோல்வியை தராத இயக்குனர். ஆந்திர தேசத்து மனிதர். கன்னட நடிகர் சுதீப்பையும், கிராபிக்ஸ் ஈயையும் மட்டுமே பிரதானமாக வைத்து தமிழக பாக்ஸ் ஆபீசை அதிர வைப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆந்திர கலைஞர்கள் படைப்பில் வெளிவந்த இதுதான்டா போலீஸ், அம்மன் போன்ற படங்களுக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடிய படம் இதுவாகத்தான் இருக்கும். ஆந்திராவின் முன்னணி நாயகன் ஒருவர் இவர் படத்தில் நடிக்க அது பெரும் வெற்றி பெற்றது. 'என்னால்தான் அப்படம் வென்றது' என அந்த ஹீரோ தம்பட்டம் அடித்து கொண்டாராம். 'என் படத்திற்கு ஹீரோ தேவையில்லை. ஈ, கொசுவை வைத்து கூட ஹிட் தர முடியும்' என்று சவால் விட்டு சாதித்து காட்டியவர் ராஜமௌலி. (ஆளே ஹீரோ போலத்தான் இருக்கிறார்).
பிடித்த திரைப்படம்:
தோனி
கிரிக்கெட் மீதான ஆர்வத்தில் சரியாக படிக்காமல் இருக்கும் மகனையும், அவனது தந்தையையும் மையமாக கொண்டு வெளிவந்த படைப்பு. பிரகாஷ் ராஜின் கதை, திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு மற்றும் நடிப்பு என பன்முகத்திறமை பளிச்சிட்ட படம். வலுக்கட்டாயமாக பிள்ளைகளை ட்யூசனில் சேர்க்கும் பெற்றோர், 100% பாஸ் காட்ட பள்ளிகள் செய்யும் கெடுபிடிகள் உள்ளிட்ட பல பிரச்னைகளை யதார்த்தமாகவும், நியாயமாகவும் அலசி இருக்கிறார் பிரகாஷ்ராஜ். தோனி செய்ததை சாட்டை செய்யத்தவறி விட்டது என சொல்லலாம். 'நீயா நானா' நிகழ்ச்சியில் பிரகாஷ்ராஜ் உணர்ச்சி பொங்க பேசும் வசனம் மற்றும் நடிப்பு வெகு பிரமாதம். என்னை மிகவும் கவர்ந்த நடிகர் பட்டியலில் அட்டகத்தி தினேசுக்கு பிறகு தோனி பிரகாஷ் ராஜூக்குதான் இரண்டாமிடம். வழக்கம்போல சிறந்த படைப்பை தந்த டூயட் மூவிஸ் நிறுவனத்திற்கு ஹாட்ஸ் ஆப்!!
திரை விரு(ந்)து தொடரும்....
.............................................................................
10 comments:
உங்கள் வார்த்தைகள் வரிகளில் பதிவு விரு(ந்)து அமோகம் தலைவரே
தோணி அட்டகத்தி இன்னும் பார்க்கவில்லை
சிவா, உடனடியாக ப்ளாக்கர்களுக்கு ஒரு கவுண்ட்டவுன் போடுமய்யா. அவனவனுக்கு தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டும். பல்ப்பு வாங்கியதிலிருந்து போன் போட்டு மொக்க போட்டது வரை கவனத்தில் எடுத்துக் கொள்ளவும். நேயர் விருப்பம்.
அட்டக்கத்திய பீட்ஸா முந்திருச்சு..!
என் கணிப்பு..!:))
நான் ஈ தி காக்ரோச் என்ற படத்தின் காபியாமே ,அப்படியா ?
அருமையான அலசல்! நல்ல பகிர்வு!
வணக்கம் அண்ணாத்தே ...
தோணி என்னை கவர்ந்த படம் ... அப்புறம் "பார்த்தா" சொல்லவே வேணாம் ..தொடரட்டும்
எலேய் அப்போ வேலை சோலிக்கு எல்லாம் போறதில்லையா, ஒரே சினிமா பார்ப்புதானா?
இருந்தாலும் அவதானிப்புகள் அருமையா இருக்குய்யா...!
///இந்த வருடமும் நீர்தான் டாப் பார்த்தா!! ///
பாஸ், அடுத்த வருசமும் பாஸ்...
நல்லாத்தாம்யா இருக்கு......
யார் யாருக்கு விருதுன்னு மட்டும் தான் பார்க்க முடிந்தது முழுசா படிக்க முடியலை டூர் ! வந்து 2 பதிவும் படிக்கிறேன் உங்கள் டேஸ்ட் நிச்சயம் நல்லாருக்கும் !
எனது லிஸ்ட் பாதி ரெடி; ஓரிருவர் மட்டுமே ஒத்து போகும்
Post a Comment