CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, December 21, 2012

மெட்ராஸ்பவன் திரைவிரு(ந்)து 2012 - 2இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தமிழ் சினிமா  காதலை பிடித்து தொங்கப்போகிறது என்பதற்கு விடையில்லை. வித்யாசமான களத்தை தேர்ந்து எடுக்க எண்ணும் சகலவிதமான கலைஞர்களும்(வழக்கு எண் 18/9, கும்கி  முதல் எந்திரன் வரை) காதலை மையமாக வைத்து கதை சொல்லியே தீருவோம் என்று அடம்பிடிக்கிறார்கள். இதைத்தாண்டி சிந்திக்காத வரை 'நாங்களும் உலக சினிமா எடுத்துள்ளோம்' என்று மார் தட்டுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. ஹிந்தி மற்றும் மலையாள சினிமாக்கள் காதலை தவிர்த்து  மற்ற படைப்புகளை தந்து வருவதைக்கண்டு கோடம்பாக்கம் சுதாரிக்க வேண்டும். இல்லாவிட்டால் 2013 முதல் இன்னும் சில பல ஆண்டுகளுக்கு சாபவிமோசனம் கிடைக்க வாய்ப்புகள் வெகு குறைவு. 

தொடர்வது: இரண்டாம் பாகம்...


பிடித்த ஸ்டன்ட் மாஸ்டர்: 
அனல் அரசு - தடையற தாக்க 

   
மக்கள் நடமாட்டம் பெரிதும் இல்லா சந்தினுள் கிரிக்கெட் ஆடும் வில்லனை அருண் விஜய் தாக்கும் காட்சி, இரவு நேரத்தில் வில்லன்கள் ஹீரோ, ஹீரோயினை துரத்தும் பரபரப்பான காட்சி என அனல் பரத்தி இருக்கும் அனல் அரசுதான் 2012 ஆம் ஆண்டிற்கான எனது ஹாட் சாய்ஸ்.  

பிடித்த வசனகர்த்தா:
பாலாஜி மோகன் - காதலில் சொதப்புவது எப்படி

                                                                  
உலக சினிமா அரங்கில் காதலை பல்வேறு கோணங்களில் சளைக்காமல் அடிமட்டும் வரை சென்று அலசுவதில் தமிழ் இயக்குனர்களுக்கு இணை எவருமில்லை. காதலை மையப்படுத்தி மூச்சு முட்ட வந்துகொண்டிருக்கும் படங்களைக்கண்டு திகட்டல்தான் மிஞ்சுகிறது. ஆனால் அதையும் தாண்டி வெகுசில படங்கள் ரசிக்க வைக்கவே செய்கின்றன. 'உன்னாலே உன்னாலே' விற்கு பிறகு என்னைக்கவர்ந்த முழுநீள காதல் படைப்பு (ரோம்-காம்) பாலாஜியின் காதலில் சொதப்புவது எப்படி. 

பிடித்த பாடகர்:
கானா பாலா - அட்ட கத்தி     

                                                             
இரைச்சலான இசைக்கு இரையாகும் பாடகர்களின் குரல்களும், மேற்கத்திய தாக்கத்தால் கழிப்பறைக்கு ஓடுவதற்கு சில நொடிகளுக்கு முன்னால் முனகுவது போல நவீன தலைமுறை இளைஞர்கள் பாடிக்கொல்வதும் அதிகரித்து வரும் வேளையில் 'நம்ம ஏரியா' பாடகர் கானா பாலாவின் ஆடி போனா ஆவணி இவ்வாண்டு பெரும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி. 2012 இல் அதிக முறை கேட்ட பாடல்.
                       
    


பிடித்த பாடலாசிரியர்:
நா.முத்துகுமார் - மெரினா 
'வணக்கம் வாழ வைக்கும் சென்னை'

                                          
செல்வராகவன் - யுவன் கூட்டணியில் தனது வெற்றிப்பயணத்தை துவங்கிய நாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பாடல்களை எழுதுவதில் என்னைப்பொருத்தவரை முத்துகுமார் முன்னணியில் இருக்கிறார். வைரமுத்து போல இலக்கிய/அறிவியல் சார்ந்த கடினமான சொற்களை தவிர்த்து சராசரி ரசிகன் மனதில் நிற்கும் வரிகளையே பெரும்பாலும் உபயோகித்து தரமான பாடல்களை தந்துவரும் பாடலாசிரியர். மதன் கார்க்கி இவ்வாண்டு விஸ்வரூபம் எடுத்தாலும் இந்த ஒற்றைப்பாடலால் மனதை கவர்ந்தவர் இவர். சென்னை பற்றி மணிக்கணக்கில் பேசுவது, பக்கம் பக்கமாக புத்தகம் எழுதுவது என்று பலர் தொடர்ந்து மெனக்கெட்டாலும் சாமான்யனுக்கு புரியும் வண்ணம் 5 நிமிட பாடல் மூலம் சென்னை பற்றி சொன்ன இப்பாடலே இவ்வாண்டு எனது பேவரிட்.                                                          


            
பிடித்த இசையமைப்பாளர்:
இமான் - கும்கி                 
 
                                                                 
'ஒவ்வொரு மனுஷக்கும் ஒரு ப்ரேக்கிங் பாய்ன்ட் இருக்கும்' - கமலஹாசன் குருதிப்புனலில் சொன்னது போல கும்கி மூலம் பட்டத்து யானையாக இமான் இவ்வருடம் பவனி வந்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. ரீமிக்ஸ் பாடல்கள் உட்பட சுமாரான பாடல்கள் மூலம் பெரிய வெளிச்சத்திற்கு வராமல் இருந்த கோடம்பாக்க அரண்மனைக்கதவை மதம் கொண்டு அகலத்திறந்து தனக்கான சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். அதற்கு சாட்சி நான் தியேட்டரில் கும்கி பார்க்கையில் ஒவ்வொரு பாடலும் திரையில் தோன்றும் சில நொடிகளுக்கு முன்பு ரசிகர்கள் செவி பிளக்க கோஷம் எழுப்பி வரவேற்றதை சொல்லலாம். ராக் ஆன் இமான்!!

பிடித்த ஒளிப்பதிவாளர்:
கோபி அமர்நாத் - பீட்சா

ஒற்றை டார்ச் ஒளியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அரங்கில் திகிலுடன் அமரவைத்த புண்ணியவான். எப்போது இடைவேளை வருமென ஆங்காங்கே கதறல் சத்தங்கள். இடைவேளை போட்டதும் நிம்மதி பெருமூச்சு விட்டபடி ரெஸ்ட் ரூமுக்கு படையெடுத்தனர் கணிசமானோர். சிறந்த படைப்புகளை கைதட்டி வரவேற்கும் சத்யம் தியேட்டரின் ஆஸ்தான ரசிகர்கள் எனது அனுபவத்தில் முதன் முறை இடைவேளை போட்டதும் கைதட்டியது பீட்சாவிற்கு மட்டுமே. கும்கியில் சுகுமாரின் கேமரா அற்புதம் என்றாலும் இயற்கை அவருக்கு பாதிபலம் தந்தது. ஆனால் நான்கு சுவர்கள், ஒரு டார்ச் பின்னணியுடன் நாயகனுடன் அவ்வீட்டை பலமுறை சுற்றி நம்மை திகிலில் ஆழ்த்திய கோபிதான் இவ்வாண்டின் பெஸ்ட்.


பிடித்த துணை நடிகர்(கள்):
ராஜ், பக்ஸ் மற்றும் விக்னேஷ் 
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
அர்ஜுன், விக்னேஷ்  
காதலில் சொதப்புவது எப்படி
 
 
துணை நடிகர்கள் என்பதை விட படத்தின் ஹீரோக்கள் என்று சொல்வதே சாலப்பொருந்தும். அட்டாகாசமான புதுவரவுகள். அப்பாவியாக பஜ்ஜி, விவரம் தெரிந்தவர் போல காட்டிக்கொள்ளும் பக்ஸ், நட்பின் பிடியில் மாட்டித்தவிக்கும் சரஸ் ஆக விக்னேஷ் என மூவரும் பின்னி பெடல் எடுத்ததை நான் சொல்லியா தெரிய வேண்டும்? அதேபோல மொக்கை காதல் ஐடியாவை சொல்லும் அர்ஜுன் மற்றும் அதை அசடாக பின் பற்றும் விக்னேஷ்(காதலில் சொதப்புவது எப்படி) ஆகியோரின் நடிப்பும் சளைத்ததல்ல. இந்த ஐவரும் தி பெஸ்ட்.                                                     
  
   
FIND OF THE YEAR: 
கார்த்திக் சுப்பராஜ் - பீட்சா

                                                           
ஆள் தம்பி பார்க்க அமுல் பேபி போல இருந்தாலும் 2012 இல் வசூல் பேயாட்டம் ஆடி இந்திய திரையுலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார். எவரிடமும் துணை இயக்குனராக பணியாற்றாமல் சினிமா மீதுள்ள காதலால் சட்டென சுயம்புவாக வளர்ந்து நிற்கிறார். பீட்சா வெளியான மறுநாள் தொலைபேசியில் இவருடன் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. நல்ல ரிசல்ட் வரும் வரை சில நாட்கள் தூங்காமல் தவித்தவர், ரிலீசுக்கு பின்பு தியேட்டரில் அனைவரையும் ஒரு நொடி கூட தூங்க விடாமல் செய்த ஜித்தர். கங்க்ராட்ஸ் கார்த்திக்!!

தொடரும்...........   
......................................................................


6 comments:

”தளிர் சுரேஷ்” said...

அனைவரும் சிறந்தவர்கள் என்பதில் ஐயம் இல்லை! சிறப்பான தேர்வு! வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் said...

படம் பார்த்தால்தானே ஏதாவது கருத்துச் சொல்ல முடியும்?!நான் ஜீரோ!

Unknown said...

சூப்பர்

Yoga.S. said...

உங்கள் தேர்வுகள் அத்தனையும் சரி!'பிட்சா" இன்னமும் பார்க்கவில்லை,பாத்துடுவோம்!

arasan said...

தேர்வுகள் ஒவ்வொன்றும் சரியானாதாக உள்ளது அண்ணே //

Dino LA said...

நல்லபகிர்வு...

Related Posts Plugin for WordPress, Blogger...