CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, November 23, 2012

ஓட்டை கேடயமும், உடைந்த வாளும் 
'செத்தான்டா அரக்கன். இப்படி செஞ்சாத்தான் நம்ம யாருன்னு ஒலகத்துக்கு தெரியும்' என்று கைத்தட்டலை பெற்று வருகிறது இந்திய அரசு. அஜ்மல் மரணம் அடைந்ததன் மூலம் தீவிரவாதிகள் மிரண்டு விடுவார்கள். இந்தியாவில் இது போன்ற செயல்கள் இனி வெகுவாக குறையும் என்று காலரை தூக்கி விடும் முன்பாக சுடும் நிஜங்களை அறிந்து கொள்ளே ஆக வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தேசம் அமைதிபூங்காவாக திகழ இரண்டு மாபெரும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் எவரும் நிம்மதி பெருமூச்சு விட முடியாது என்பதே நிதர்சனம். ஒன்று நமதுயிர் காக்க தன்னுயிரை பலி தரும் NSG கமாண்டோ உள்ளிட்ட போர் வீரர்களின் தியாகத்திற்கு அரசு காட்டும் அசட்டு மரியாதை. மற்றொன்று 26/11 மும்பை நிகழ்விற்கு பின்பும் தேச பாதுகாப்பில் பெரியளவில் முன்னேற்றம் இன்றி கிடக்கும் துர்பாக்கிய நிலை. 

26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு சில வாரங்கள் கழித்து சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்து பார்த்தது ஒரு ஆங்கில செய்தி சேனல். செயல்படாத சி.சி.டி.வி. உள்ளிட்ட சோதனைக்கருவிகள், எவரும் துப்பாக்கியுடன் எளிதில் ஊடுருவும் அளவிற்கு உஷார் நிலையில் இல்லாத செக்யூரிட்டி போன்ற குறைபாடுகளுடன் அவ்விடங்கள் இருந்ததாக ஆதாரத்துடன் செய்தி வெளியானது. தற்போதும் அந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளது இந்திய டுடேயின் ஆய்வு. பாகிஸ்தானில் தற்போதும் 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதாகவும், 750 நபர்கள் இந்தியாவில் ஊடுருவ காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தியன் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவன் தில்லியில் ஆறுமாதம் தங்கி இருந்து எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் என்று திட்டம் வகுத்து விட்டு சென்று இருக்கிறானாம். இது எப்படி இருக்கு?

கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை இன்டர்நெட் மற்றும் அலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் தீவிரவாதிகளை வலைபோட்டு பிடித்து வந்தது நமது உளவுத்துறை. தற்போதோ இந்திய உளவாளிகளுக்கு டேக்கா தந்து விட்டு சாட்டிலைட் போன் வழியாக கடினமான சங்கேத மொழியில் பேசி வருகின்றனர் அவர்கள். கூகிள் க்ராஷ் ஆனால் RAW பெரிய பின்னடைவை சந்திக்கும். அந்த அளவிற்கு அப்டேட் ஆகி இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டிங்கில் 'ட்விட்டர் மூலம் வன்செயல் குறித்த பரிமாற்றங்கள் டெர்ரர் க்ரூப் வாயிலாக நடந்து வருகிறது' என்று எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி சொல்ல 'ட்விட்டரா. அது என்னப்பா' ரீதியில் கேள்வி கேட்டனராம் பல அதிகாரிகள். அது சரி..அவர் என்ன சசி தரூரின் பால்லோயரா? இல்லை தமிழகத்தில் இருக்கும் சமூக வலைத்தள ஓனரா? பொறுமையாக தெரிந்து கொள்ளட்டும் பாவம்.

26/11 மூலம் இந்தியா பாடம் கற்றதோ இல்லையோ மற்ற தேசங்கள் இந்த நிகழ்வை பாடமாக வைத்து தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தி கொண்டன. 2010 ஆண்டே 'மல்டிப்ள் அசால்ட் கவுன்டர் டெர்ரரிஸம் ஆக்சன் கேபபிளிட்டி' எனும் வியூகத்தை நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது அமெரிக்கா. மும்பை சம்பவம் நடந்தபோது இந்தியா எப்படி கோட்டை விட்டது என்பதை ஆய்வு செய்து அது போன்ற ஒரு நிகழ்வு தனது தேசத்தில் நடக்காமல் இருக்க அமெரிக்கா எடுத்த முன்னெச்சரிக்கை முயற்சி இது. அது போல உடனே உஷார் ஆனது நம்ம தம்பி பங்களாதேஷ். தாக்காவில் தாக்குதல் நடந்தால் சமாளிக்க உடனே இரண்டு ஹெலிகாப்டர்களை வாங்கிப்போட்டு விட்டது. அதே சமயம் மும்பை போலீஸ் அரசிடம் 6,000 சி.சி.டி.வி. கேமராக்களை கேட்டு இன்னும் தேவுடு காத்து கிடக்கிறது.  

 இப்படி இன்னும் ஏராளமான ஓட்டைகள் நமது கோட்டையில். உச்சகட்ட கொடுமையாக ஆறு கோடி செலவு செய்து வீரர்களுக்கு வாங்கப்பட்ட 80 Bomb Suit எனப்படும் பாதுகாப்பு கவசத்தில் 44 உடைகள் சீனாவின் போலி தயாரிப்பாம். சப்ளையரை விசாரித்ததில் 'ஆறு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துவிட்டுதான் இத்தவறை செய்தேன்' என்று ஒப்புக்கொண்டு உள்ளான்.  
  
இதே நிலை நீடித்தால் பன்மோகனும், பாதுகாப்பு மந்திரி தந்தோனியும் இப்படித்தான் பேச வேண்டி வரும்:

எதிரி நாட்டான்: டேய்ய்ய்ய்ய்.....புலிகேசி....'

'ஐயோ..கேவலம் எறும்பு சைஸ் நிலப்பரப்பை ஆளும் இவன் விடும் சத்தத்தில் என் ரத்தமெல்லாம் சட்டென்று நிற்கிறதய்யா. யுத்தம் என்று ஒன்று வந்தால் என்ன ஆகும்...என்ன ஆகும். அமைச்சரே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது தானே'

'ஆம் மன்னா. என்னைப்போலவே தங்களுக்கும் காய்ச்சல் அடிக்கிறது'

'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். வாய் திறந்து கொட்டாவி கூட விட்டதில்லையே. அந்த லஸ்கர்-ஈ-தோய்பா கும்பல் தங்கள்  திருவிளையாடலை நம்மிடம்தான் காட்ட வேண்டுமா?'

போர்முனையில் பாதுகாப்பு உடையை சரிபார்க்கிறார் பன்மோகன்...

'என்னடா இது...ரங்கநாதன் தெரு பிளாட்பார்ம் ரெயின் கோட்டை விட மெல்லிதாக இருக்கிறது. எங்கே அந்த ட்ரெஸ் சப்ளையர்...'

சப்ளையர் வருகிறான்.

'என்னடா இது? ஆபத்தின் விளிம்பில் ஒரு மன்னன் தத்தளிக்கும்போது அனைத்து தற்காப்பு கவசங்களின் மீதும் மேட் இன் சைனா என்று போட்டுள்ளதே'

'எல்லாம் சரியாகத்தான் உள்ளது மன்னா. உங்களை ஏமாற்றத்தான் நேரம் கூடி வரவில்லை'

'அங்கே எதிரிகள் கூடிவிட்டார்களடா? அதற்கு என்ன செய்வது? தந்தோனி.. இந்த நயவஞ்சகனை ஒரு நாள் எனது சிம்மாசனத்தில் அமர வையுங்கள். மீடியா, எதிர்க்கட்சி, மக்கள் என அனைத்து தரப்பினரும் காரி துப்பினால் எப்படி வயிற்றை கலக்கி எடுக்கும் என்பதை பட்டுணரட்டும்.'

எதிரி நாட்டான்: என்ன கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி விட்டாயா? எனக்கு ஓலை அனுப்பாதது ஏனடா?

'குரியர் அனுப்பினால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கூட்டம் போஸ்ட்மேனை வழியிலேயே மடக்கி பிடுங்கி விடுவார்கள் என்பதால் FAX அனுப்பினேனே? அது கூடவா வரவில்லை?

'இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். போட்டு விடுவேன்'   

'மகாபிரபு கோவப்பட வேண்டாம். எனது தேசத்தின் பாதுகாப்பை 100% ஸ்ட்ராங் செய்யும் வரை வெள்ளைக்கொடி காட்டுவதை தவிர வழியில்லை எனக்கு'

காங்கிரஸ் அல்லக்ஸ்:

"ஆஹா...டெர்ரர் கும்பலுக்கே டெர்ரர் காட்டியதால் இன்று முதல் நீ 'இத்தாலி அன்னை கண்டெடுத்த புனுகுப்பூனை' என்று போற்றப்படுவாய்.

தொடரும்............. 
..............................................................

News Source: India Today Weekly Magazine.

10 comments:

உலக சினிமா ரசிகன் said...

தம்பி...
புழலுக்கு போக இவ்வளவு அவசரமா !

இப்ப இருக்குற நாட்டு நெலவரப்படி கருத்தே சொல்லக்கூடாது.
சூதானமா இருக்கணும்.

! சிவகுமார் ! said...


எனது தேசத்தை காக்கும் இராணுவ வீரர்களுக்கான பாதுகாப்பில் இருக்கும் அலட்சியத்தை கேள்வி கேட்ததற்காக சிறை செல்ல நேருமெனில் கிஞ்சித்தும் கவலையில்லை சாரே. அடுத்த பாகமும் வெளிவரும்.

வெளங்காதவன்™ said...

ஹி ஹி ஹி...

பர்ர்ர்ர்ர்ர்ர் னு சிரிச்சிட்டேன் வோய்!

கையாலாகாத அரசாங்கம்...மானங்கெட்ட மாக்கள்...

வெளங்கிடும்

வெளங்காதவன்™ said...

அப்புறம் மச்சீ?

புழல்ல ஏ.சி.யெல்லாம் கரீட்டா வொர்க் ஆவுதாம்.... போயிப் பாத்தூட்டு வரலாமாவோய்?

வெளங்காதவன்™ said...

//பர்ர்ர்ர்ர்ர்ர் னு சிரிச்சிட்டேன் வோய்!///

வாயில்தான் என்று சொல்லிக்கொள்கிறேன்

Unknown said...

நல்லா பாருங்கய்யா....நல்லா பாருங்க....!ஏகே47 டுப்பாக்கி பெவிக்கால் போட்டு அட்டையில செஞ்சி வச்சிருக்கப் போறாய்ங்கே..!

”தளிர் சுரேஷ்” said...

இறுதியில் சிரிக்க வைத்தாலும் சிந்திக்க வேண்டிய விசயம்! பகிர்வுக்கு நன்றி!

சீனு said...

சொல்லும் விஷயங்கள் அரசியல்வாதியின் விசமங்கள்... கொடிதினும் கொடிது இந்தியனாய் பிறந்ததது கொடிது

saidaiazeez.blogspot.in said...

வெறும் நாலு காசு கொடுத்துவிட்டால் போதும் இவர்களுக்கு, தாயைக்கூட...
வேண்டாம், சபை நாகரீகம் கருதி
த்த்தூ...
காரி துப்பியதோடு நிருத்திக்கொள்கிறேன்.

ஆமினா said...

உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சுருக்கேன்...

கலந்துக்கோங்க http://www.kuttisuvarkkam.com/2012/11/blog-post_25.html

Related Posts Plugin for WordPress, Blogger...