CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, November 7, 2012

அப்துல்லாவும், 40 எம்.பி.க்களும்                                                                நாளைய ஜனா அப்து அண்ணனே!

ஆர்டிஸ்ட்(கலைஞர்) அவர்களுக்கு,

ப்ரேவ் ஹார்ட்டின் சன் நான் ஸ்டாப் ரன்னில் இருக்கையில் இந்தக்கடிதம் எழுதுவது முறையில்லைதான். ஆனால் அசப்பில் அஜித்தின் டூப் போலவே இருக்கும் அப்து அண்ணன் இணையத்தில் செய்யும் லார்ஜ் ஸ்கேல் அமர்க்களம் விண்ணைத்தாண்டி விஸ்வரூபம் எடுப்பதால் மனதில் இருக்கும் மசமசப்புகளை 13 ஆம் நம்பர் பஸ் ஏற்றி கோ(பால)புரத்திற்கு தூதனுப்புகிறேன்.    

சென்ற சனியன்று வந்த ஜூ.வி.அட்டை வாசகம்:  'ஜெ வலையில் ஜனா. வருத்தத்தில் கருணா'. ஆசியாவின் மூத்த பெரியவாள்  பெரிய வாள் ஆகிய உங்களையும், ப்ரணாப்பையும் மரியாதை இன்றி விளித்த ஜூ.வி.யை கண்டித்து இருக்கிறார் அப்து. இந்தியா போன்ற நாடுகளில் செயல்ரீதியாக ஜனங்களின் அதிபதியாக  பிரதமரே பெரும்பாலும் இருப்பதாலும், ஜனாதிபதியும் ஜனங்களில் ஒருவர் என்பதாலும் 'திபதி'யை லபக்கிவிட்டு 'ஜனா' போட்டது அவ்வளவு பெரிய தவறா? வடக்கத்தி ஆங்கில செய்தி சேனல்களில் கூட President என்பதை Pres என்று எப்போதோ கூற ஆரம்பித்தது விட்டார்கள். 'நமது' கலைஞர் செய்திகளை மட்டுமே பார்க்க வைத்து அப்து அண்ணனை 'வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவான்' லெவலுக்கு போக விடாமல் தடுத்தது யார் குற்றம்?  

இருக்கையில்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கையில் நிதிப்பற்றாக்குறை ஏற்படுவது சனநாயகத்தில் ஜகமம் தானே? எனவே 'நிதியை' க்ளோஸ் செய்துவிட்டு 'கருணா' போட்டது எவ்விதத்தில் தவறு? இல்ல..தெரியாமத்தான் கேக்கறேன்?   

'எதுக்குய்யா எப்ப பாத்தாலும் என் தலைவனையே திட்டறீங்க?' என்று கொந்தளிக்க வேறு செய்கிறார்.அதைப்பற்றி நீங்களே அங்கலாய்க்கவில்லையே? இவ்வளவு பேசுபவர் உங்கள் கண்ணில் பட்டால் இந்தக்கேள்வியை மட்டும் முன் வையுங்கள் தலைவா:

'ஏம்பா அப்து..என் மேல கொள்ள பாசமா இருக்கியே? ஆனா மண்ணின் மைந்தன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை, பெண் சிங்கம் இதையெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பாத்து இருக்கியா? 'மனசாட்சிய' தொட்டு சொல்லு. ரஜினி, கமல் எல்லாம் மேடைல 'பராஷக்தி..என்ன வசனம்..' ன்னு பாராட்டி தள்ளிட்டு பக்கத்துல உக்காந்ததும் நான் 'நீங்க யாராவது ஒருத்தர் என் வசனத்துல ஒரு படம் பண்ண முடியுமா?' அப்படின்னு கேட்டா போதும் 'பீட்சா' பாத்தா பச்ச புள்ளைங்க மாதிரி முகத்துல என்ன கலவரம்? 'வெவரம்' தெரிஞ்ச உள்ளூர் ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட பதறி, செதறி ஓடறானுங்க. பேரன்களே என் வசனத்துல படம் பண்ண பம்மும்போது அவங்கள சொல்லி என்ன செய்ய? அவங்களை விடு. பெரிய்ய்ய பட்ஜெட்ல நீயே ஒரு படம் தயாரிச்சி ஹீரோவா நடிச்சா என்ன? ஒரு ஹால்ப் அஜித், மறு ஹால்ப் மகேஷ் பாபு மாதிரி இருக்கறதால ரெண்டு ஸ்டேட்லயும் பிச்சிக்கும். நான் வசனம் எழுதறேன். என்னப்பா சொல்ற? 

 'ரி..'

'முழுசா சொல்லுப்பா'

'ச.....................................ரி'

பார்த்தீர்களா தலைவா எப்படி டரியல் ஆகிறார் என? ஏற்கனவே கண்மணிகள் தந்த வீர வாள்கள் எல்லாம் (ஈழம்..உச்ச கட்ட போர்) சமயத்துக்கு சாணை பிடிக்கப்படாமல் அரண்மனை குடோனில் குமிந்தது போதாதென்று தளபதிக்கு வகை வகையாக வாள் தருகிறார்கள். இதற்கு இவரும் உடந்தை. ஒன்று கவனித்தீர்களா லைவ் லைவ் வள்ளுவரே..சமீபத்தில் தன்னை 'பெரியம்மா' செல்லம் என்று G + இல் பறை சாற்றி இருக்கிறார். கவனத்தில் கொள்க. 

இதுபோக இன்னொரு ப்ளஸ்ஸில்:

'---பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் போட வேண்டிய ஒரு உத்தரவை ஒரு சி.எம். போடுறாங்க. அதுல நான் இதைச் செஞ்சேன்னு பெருமை வேற!  # தன் பணி எது என்பதுகூட தெரியாத முதல்வர்--- ' என்று கூறி இருக்கிறார் அண்ணன் அப்து. இதெல்லாம் ஒரு குத்தமா தலைவா? நம்ம பவர்ல இருக்கும்போது மக்கள் தொண்டை பரணில் போட்டு விட்டு பாராட்டு விழாவில் பங்கேற்பதையே 24/7 செய்ததை விடவா? அப்போது மட்டும் 'மக்கள் சேவை செய்ய விடாம புளிக்க புளிக்க தலைவனை ஏன்யா பாராட்டறீங்க?' என்று அப்து அண்ணன் துண்டு பிரசுர போராட்டம் செய்திருந்தால்...அது தர்மம். 

'சென்னை நகரம் மழையில் மூழ்கிய போதெல்லாம் கென்டக்கி கர்னல்-கம்- தளபதி அவர்கள் முழங்கால் நீரில் நின்றவண்ணம் போஸ் தந்ததை நாளிதழ்களில் கண்டோம். இந்த ஆட்சியில் அப்படி எவருமில்லையே' என்று வருத்தம் வேறு பட்டுக்கொள்கிறார் பிரதர் அப்து. அப்து அண்ணன் பங்கேறும் நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் நச்சு நச்சென்று போட்டோ எடுத்து தரும் அந்த புகைப்பட  'கலைஞரின்' வெலாசம் மட்டும் தர மாட்டேன் என்கிறார். ப்ளெக்ஸ் பேனரில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவிற்கு கூட பெரியம்மா தடை போட்ட சோகத்தில் ப்ளட்டின் ப்ளட்டுகள் குமுறும் வேளையில் 'அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் அம்மாவின் ஆக்ரோஷ முகம் தெரிகிறது' என்று போஸ் தரச்சொல்லி கட்டுக்கோப்பான ஆளுங்கட்சி ஆட்களை உசுப்பி விடுவது கழக தர்மமா? அஞ்சி அவர் அடிச்சிட்டு அரை அவர் மட்டும் ரெஸ்ட் எடுக்க சொல்ற 'பெரியம்மா'  கட்சில இருந்து பார்த்தால் தெரியும் அவன் அவன் வலி. என்ன சொல்றீங்க வாழும் பெரியாரே?

எது எப்படி இருந்தாலும் இணையத்தில் உங்கள் புகழை பரபரப்பாக பரப்பும் அப்து அண்ணன் உங்கள் கட்சியின் கருவூலம் என்பது மிகையல்ல. கென்டக்கி கர்னலுக்கு முன்பாகவே நியூயார்க் சென்று வந்த உண்மைத்தொண்டர் ஆயிற்றே 'புது' கை அப்து. ஆகவே வரும் எம்.பி.தேர்தலில் சக்கர வியூகம் வகுக்கும் குழுவில் அண்ணனுக்கு முக்கிய பொறுப்பு அளித்தால் மட்டுமே இந்த புராதன வசனத்திற்கு மதிப்பு:

'நாளை நமதே. நாற்பதும் நமதே'.

தங்களின் நாளைய அறிக்கைக்கு இந்த குசேலன் தரும் பிட் பேப்பர்: 

'2016-இல் புது கோட்டையில் நமது கழகம் அரியணை ஏறும் நாள் வரை புதுக்கோட்டை அப்துல்லா வழி நடபோம். வீர வாள்கள் போதுமான அளவு ஸ்டாக் இருக்கிறது. தற்போதைய அவசர தேவை புல்லட் ப்ரூப் கேடயங்களே. போர்...ஆமாம் போர். விளிம்பு நிலை உடன்பிறப்பே, ரோட்டோர இட்லிக்கடை மூடியை ரீ மாடலிங் செய்து கேடயமாக்கி அணிவகுத்து வா. நான் உண்டு. தளபதி உண்டு. தலதளபதி அப்து அண்ணனும் உண்டு. வாரே வா!'
 
பெஸ்ட் HALF லக் தலைவா.

குறிப்பு: கருணா நிதிப்பற்றாக்குறையில் இருப்பதால் போரில் பங்கேற்றதற்கான ஆதாரத்தை இணையத்தில் வெளியிட விரும்புவோர் தத்தம் காசிலேயே புகைப்பட கலைஞரை அழைத்து வருவது உத்தமம்.
...............................................................................

'பை பையாய் கொண்டுள்ளோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி. குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி.

நட்ட நடு சென்டர் ஆனாலும் (காசு) இல்லாதவரை நாடு மதிக்காது.
குதம்பாய் நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப்பணமடியே. குதம்பாய் வெள்ளிப்பணமடியே.

'திராவிட கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே.
ஆட்சிக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே.

முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே.
சில முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே.
காசு நம்பர் ஒன் மந்திரி ஆக்குதடா தாண்டவக்கோனே.

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே.
ஏழை ஜனத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே.
ஓட்டு பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே.  

'திராவிட கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.
...............................................................................  
                                                           

19 comments:

ஜோதிஜி said...

FOLLOW UPS

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா........ பைதி பை..... நாராய்ணா ஒரு காப்பி சொல்லு, நான் போன் பண்ணிக்கிறேன்.....!

அஞ்சா சிங்கம் said...

அப்துல்லா அண்ணே இந்த பையன் மேல ஒரு மான நஷ்ட வழக்கு ஒன்னு போடுங்க . பாருங்க உங்க படத்தை மார்பிங் பண்ணி மண்ணு மோகன் கூட போட்டு உங்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்காரு .

! சிவகுமார் ! said...

@ ஜோதிஜி

Lets follow the ups.

! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி ராமசாமி

யாருக்கு?

! சிவகுமார் ! said...

@ அஞ்சா சிங்கம்

அண்ணனை ஆசியத்தலைவரா வச்சி அழகு பாக்க விட மாட்டீங்களா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
@ பன்னிக்குட்டி ராமசாமி

யாருக்கு?//////

போட்டோவுல இருக்கறவருக்குத்தான்.....

Unknown said...

பங்கேற்பதையே 24/7 செய்ததை விடவா
/////////////////
திருத்தவும்...3.4285714285714285714 நாட்கள் என்று தவறான விடை வருகின்றது 24 X 7 என்பதே சரி..!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அப்து அண்ணன்..அப்து அண்ணன்..
பிளீஸ்...!பிளீஸ்.......!
கண்ணாடிய கழட்டாதிங்க.....!
கண்ணாடிய கழட்டாதிங்க.....!
சிவக்குமார் ப்பாவம் அப்து அண்ணன்!

பட்டிகாட்டான் Jey said...

மெட்ராசூ...உனக்கு அப்து அண்ணேனோட அரசியல் வளர்ச்சியில பொறாமை.... அதான் இப்படி பொங்குறே....

சரி சரி விடு மக்கா.... கட்சியில சேர்க்கலைனு இப்படியா கோவப்படுறது.

#கலைஞர் வாழ்க.

பட்டிகாட்டான் Jey said...

// Comment deleted
This comment has been removed by the author. //

எந்த பயபுள்ளையோ கேவலமா கமெண்ட் போட்டுட்டு சைபர்க் கிரைமுக்கு பயந்து டிலீட் பண்ணிட்டு போயிருக்கு...:-)))

வெளங்காதவன்™ said...

கலீன்ஜர் வாழ்க!

#டிஸ்க்ளைமர்:- முன்பொரு காலத்தில் நானே போட்ட கமண்ட்..

வெளங்காதவன்™ said...

//This blog does not allow anonymous comments. ///

நன்றி

புதுகை.அப்துல்லா said...

ஏன்ணே, என்னைய வாழ்த்துறியா? திட்டுறியா? # பொலம்பவுட்டானுவளே!
:)))

! சிவகுமார் ! said...


@ வீடு சுரேஸ்குமார்

அப்ப NDTV 24/7 சேனல் பேரை மாத்த சொல்லணும்

! சிவகுமார் ! said...


@ பட்டிக்காட்டான்

ஒருவேளை அப்து அண்ணன் 'மறு மறுமலர்ச்சி தி.மு.க.' ஆரம்பிச்சா செய்தான் கொ.ப.செ.

! சிவகுமார் ! said...//வெளங்காதவன்™ said...
//This blog does not allow anonymous comments. ///

நன்றி //

வெலாசம்...வெலாசம் இருக்கோணும்.

! சிவகுமார் ! said...


//புதுகை.அப்துல்லா said...
ஏன்ணே, என்னைய வாழ்த்துறியா? திட்டுறியா? # பொலம்பவுட்டானுவளே!//

திட்ட வட்டமா வாழ்த்துனேன் தல!!

Related Posts Plugin for WordPress, Blogger...