CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, November 27, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(27/11/12)நீங்களும் ஹீரோதான்: 

 
துப்பாக்கி ரிலீசின்போது சென்னையின் பிரதான சாலைகளை கலக்கிய போஸ்டர். அகில இந்திய சத்யன் ரசிகர் மன்றத்தின் அன்புத்தொண்டர்கள் தந்த அலப்பறையை பார்த்தால் படத்தில் அசல் ஹீரோ யார்? காமடியன் யார்? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
....................................................................

Life of Pi:
அவதாருக்கு பிறகு வந்த மிராக்ள் என்று சுய விளம்பரம் செய்து மக்களை தியேட்டருக்கு இழுத்த இப்படைப்பில் அனைவரும் சொல்வது போல் த்ரீ- டி மற்றும் விசுவல் எபெக்டுகள் சிறப்புதான். அழகான கதையையும் உள்ளடக்கியும் உள்ளது.ஆனால் ஏனோ இடைவேளைக்கு பின்பு மனதைத்தொட மறுக்கிறது. கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு முறை பார்க்கலாம்.
................................................................. 
  
காக்க காக்க: 
நேற்று இரவு பங்கு(ஷேர்) ஆட்டோவில் பயணித்தபோது நடந்த சம்பவம். அப்போது நேரம் 9.30 மணி. பாதி வழியில் ஒரு ட்ராபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி ஓட்டுனர் அருகில் அமர்ந்தார். 'அப்படியே நிறுத்து கொஞ்ச நேரம். 'வருதா'ன்னு பாப்போம்' என்று அவர் கட்டளையிட எங்களுக்கு 'அர்த்தம்' புரிந்தது. இரண்டு நிமிடம் பொறுமை காத்தோம் நானும், சக ஆண் பயணிகள் இருவரும். அருகில் இருந்த பெரியவர் அதன் பின் டென்ஷன் ஆகி பேச ஆரம்பித்தார்.

பயணி: 'லேட் ஆகும்னா வேற ஆட்டோல ஏறிக்கறேன்'

ஓட்டுனர்: 'ஏன் இவ்ளோ அவசரம்? போலாம்'

பயணி: 'மேடவாக்கம் போக 10 மணி பஸ் பிடிக்கணும்'.          

சட்டை செய்யாமல் போலீசும், ஓட்டுனரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

ஓட்டுனர்: ' 10 மணி பஸ் தான? போலாம் இருங்க?'

பயணி: 'இருங்களா? அந்த பஸ்ஸை விட்டா 11.30 மணி பஸ்தான்' என்று கோபப்பட வேறு வழியின்றி நகர ஆரம்பித்தது பங்கு ஆட்டோ.     

போலீஸ், ஆட்டோ ஓட்டுனர்களே. வாழ்க உங்கள் நட்பு. 
..............................................................

Jab Thak Hai Jaan: 
இரண்டு வாரங்களுக்கு முன்பே பார்த்த படம். யாஷ் சோப்ரா எனும் பிதாமகனின் கடைசி படைப்பு. பொங்கி வழியும் ரொமான்டிக் காவியங்கள் பலவற்றை நான் ரசித்ததில்லை. விதிவிலக்காக உன்னாலே உன்னாலே போன்றவற்றை சொல்லலாம். சோப்ராவின் படத்தில் பாடல்கள் மனதை கொள்ளை கொள்ளும். இந்த மினிமம் கியாரண்டியை நம்பி சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லண்டனில் தெருவோரம் கிதார் இசைத்து காசு சேர்க்கும் ஷாருக் கானை ரோல்ஸ் ராய்ஸ் காரில் வரும் காத்ரீனா கைப் காதல் செய்ய, காலப்போக்கில் காதல் முறிகிறது. தலைவர் இந்திய ராணுவத்தில் பாம்ப் ஸ்குவாட் அதிகாரி ஆக, காதலில் தோற்ற இவர் கதையை கேட்டு அனுஷ்கா ஷர்மா உருகி 'கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்' என்று சொல்ல, திடீரென மறதி வியாதியில் ஹீரோ பாதிக்கப்பட....ஆள விட்றா சாமி.
................................................................

ஏழை ஜாதி: 
'ஆம் ஆத்மி பார்ட்டி'யை கேஜ்ரிவால் துவங்கியதும் எப்போதும் இல்லாத அதிசயமாக ஏழைப்பாசம் காங்கிரஸில் பீறிட்டு அடிக்கிறது. 'ஆம் ஆத்மி' என்பது ஆண்டாண்டு காலமாய் காங்கிரஸ் கையாளும் வார்த்தை. அதை ஹைஜாக் செய்துள்ளார் கேஜ்ரி' என்கிறார்கள். அடங்கப்பா உசிதமணி!! காங்கிரஸ் கா ஹாத். ஆம் ஆத்மி கே சாத்' (எங்கள் கை உங்கள் கையுடன்) என்று சொல்லிக்கொண்டு ஜெயித்த கதர் கட்சி விலைவாசி ஏற்றம் போன்ற பல சுமைகளை நம் மேலேற்றி கதற வைத்ததுதான் மிச்சம். இந்த லட்சணத்தில் ஆம் ஆத்மி எங்கள் பிராண்ட் என்று கூக்குரல் வேறு. 
................................................................

தலைநகரம்: 
வார இறுதி நாட்களில் சென்னையின் முக்கிய வணிக வளாகங்களில் அடிக்கடி நான் காணும் காட்சி. எஸ்கலேட்டர்களில் கால் வைத்து ஏற பெண்கள் சிலர் தயங்கிக்கொண்டு இருக்க கணவர்/தந்தை அவர்களை வலுக்கட்டாயமாக கைப்பிடித்து இழுக்கின்றனர். பதற்றத்தில் பின் பக்கமாக சாய்ந்து விழப்போகும்போது அருகில் இருக்கில் கைப்பிடியை பிடித்து தப்பிக்கின்றனர். சற்று பிசகினாலும் விபத்தை தவிர்க்க இயலாது. தளத்தை அடைந்ததும் அந்த குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அப்பெண்ணை கிண்டல் செய்து கெக்கே பிக்கே என்று சிரிக்கும் கொடுமையும் நிகழ்கிறது. அட கொக்கனாங்கி பயலுகளா. லிப்ட், படி எங்க இருக்குன்னு செக்யூரிட்டி கிட்ட கேட்டுட்டு அதுல உங்க வீட்டு பொண்ணுங்கள கூட்டிட்டு போனா கிரீடம் கொறஞ்சிடுமாக்கும் வெண்ணைக்கு.
.......................................................................

பிடிச்சிருக்கு: 
ஒபாமா முதல் ஒட்டகப்பால் வரை விமர்சனம் செய்து எவரிதிங் ஏகாம்பரம் போல பதிவுலகில் பவனி வரும் போராளிகளுக்கு மத்தியில் தான் கற்ற கல்வி சார்ந்த விஷயத்தை அவ்வப்போது பதிவிட்டு வருபவர் நண்பர் செங்கோவி. அடிப்படை குழாயியல் குறித்து அவரிட்ட புதிய பதிவை படிக்க:

அடிப்படை குழாயியல்

நீதி: ஹிட்ஸ், ரேங்கிங் போன்ற கிரீடங்களுக்கு குழாயடி சண்டை போடும் குறு,பெரு நில மன்னர்கள், நாட்டாமைகள், பெஞ்ச் கோர்ட் டவாலிகள்  எப்போதாவது கொஞ்சம் உருப்படியாகவும் எழுதினால் புண்ணியமாய் போகும்.
.............................................................

சின்ன கவு'ன்'டர்: 
வீரபாண்டி ஆறுமுகம் மறைந்த நாளன்று செய்தி சேனல்களை பார்த்தபோது கேப்டன் செய்திகள் அதனை ஒளிபரப்பிய அழகைக்கண்டு வெறுப்புதான் மிஞ்சியது. செய்தி வாசிப்பவர் பின்னணியில் குரல் தர தி.மு.க. கூட்டம் ஒன்றில் வீ.ஆறுமுகம் கோபத்துடன் மேடையில் இருந்து தொண்டர்களை அமைதி காக்க சொல்லும் காட்சியை மீண்டும் மீண்டும் ரிபீட் செய்தனர். ஏன்  அவர் குறித்து வேறு வீடியோ காட்சிகளே கிடைக்கவில்லையா? அரசியல் பகையை தீர்க்க ஒரு மனிதரின் இறப்பை கூட இந்த அளவிற்கு ஏளனம் செய்ய முடியும் என்பதை கேப்டன் செய்திகள் நிகழ்த்தி காட்டி உள்ளது.
.......................................................................

சங்க(ம)ம்:
சில மாதங்களுக்கு முன்பு சென்னை பதிவர் சந்திப்பு முடிந்த உடனேயே கருத்து சுதந்திரத்தை காக்க சங்கம் அமைப்பது குறித்து பதிவர்கள் ஆலோசனை செய்தனர். அப்போது சில 'ஒளிவட்ட' பதிவர்கள் 'ஹே...ஹே...சங்கமாம் சங்கம்' என்று நையாண்டி செய்தனர். ஆனால் சமீபகாலமாக ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் சிலர் கைது செய்யப்படுவதை கண்ட பிறகு 'ஆமாய்யா. சங்கம் ஒன்னு தேவைதான்' என்று யோசிக்க ஆரம்பித்து உள்ளனராம். பிறர் முன்னெடுக்கும் காரியத்தை போகிற போக்கில் விமர்சிக்கும் மேதாவிகளே இனிமேலாவது உங்கள் புத்தியை சரியாக சாணை பிடிக்கவும்.
.......................................................................

தில்: 
டூப் மற்றும் கிராபிக்ஸ் உதவியுடன் எந்திரன் ரஜினி , குருவி விஜய் போன்ற அசகாய சூரர்கள் காட்டிய வித்தை எல்லாம் இந்த மும்பை தீரர்களின் அசல் அதிரடிக்கு முன்பு எம்மாத்திரம்:


...........................................................................


                                                          

12 comments:

CS. Mohan Kumar said...

சத்யனின் காமெடி போஸ்டர் நானும் பார்த்து சிரித்தேன்

பல வித விமர்சனங்களை எழுதுவதில் நானும் ஒருவன். என்னை பொருத்தவரை அவ்வப்போது துறை சார்ந்து - கைதானால் உரிமைகள்/ வாரன்ட்- பெயில், சொத்து குறித்த பிரச்சனைகள், சந்தேகங்கள் போன்று எழுதி கொண்டு தான் இருக்கிறேன்; படித்த நல்ல புத்தகங்களை பகிர்கிறேன். சட்ட விஷயங்கள்/ புத்தக விமர்சனம் போன்ற பதிவுகளை வாசிப்போர் மிக மிக குறைவு எனினும் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறேன். ப்ளாக் எழுதும்வரை இவற்றை நிச்சயம் தொடர்வேன்

! சிவகுமார் ! said...


'இது நானா சேத்த கூட்டம் இல்ல. தானா சேந்த கூட்டம்' என்று ரசிகர்களை சொல்வார் ரஜினி. நான் சொன்னது முதல் வகையினருக்கு மட்டுமே சார். சட்ட ஆலோசனை, விளிம்பு நிலை மனிதர்களின் பேட்டி போன்றவற்றை தொடர வாழ்த்துகள்.

செங்கோவி said...

நீங்க சொன்ன நீதி எல்லாம் ஓகே தான்..ஆனால் யாருமில்லாக் கடையில தனிய்ய்யா டீ ஆத்த, கொஞ்சம் பயமாத்தான் இருக்குய்யா.

! சிவகுமார் ! said...

கண்டிப்பாக இல்லை. ஒரு சிலருக்கு நிச்சயம் பயன்தரும்.

arasan said...

அந்த எஸ்கலேட்டர் ப்ராப்ளம் நிறைய பேருக்கு இருக்கு அண்ணே ..
நீங்க இன்னும் கூட திட்டி இருக்கலாம் ..

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர் செங்கோவி அவர்களின் சமீபத்திய பதிவுகள் (2) பல நண்பர்களுக்கு உதவுகிறது... படத்துடன் விளக்கமாக பகிர்ந்துள்ளார்... நண்பர்கள் பலரிடமும் பகிர்ந்துள்ளேன்...

கோவை நேரம் said...

வெள்ளி அன்று சத்யனின் போட்டோவை கோவை அவினாசி மேம்பாலத்தில் நிறைய ஒட்டி இருந்தனர்.திருப்பூரில் இருந்து ரிட்டர்ன் வரும் போது அதை போட்டோ எடுக்க நானும் வீடு மாம்ஸ் சுரேஷ் அவர்களும் ஆசையாக வந்து பார்த்த போது வெறும் கால் மட்டுமே இருந்தது.முகத்தின் மேலே ஒரு அரசியல் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போட்டோ வீடு மாம்ஸ் க்கு டெடிகேட் பண்ரேன்,

பட்டிகாட்டான் Jey said...

// ஷேர் ஆட்டோ.... ”வருதானு” பார்ப்ப்போம், பொன்னியும் புரியலை மெட்ராசூ.....

மின்னஞ்சல் அனுப்பியாவது விம் போட்டுடு... மண்டை காயிது....

வெள்ளந்தியா வளர்ந்தா இதான் பிரச்சினை போல :-)))

பட்டிகாட்டான் Jey said...

அப்படியே நல்ல “கச்சு செம்பு கிடைச்சா ஒன்னு வாங்கி பக்கத்து வச்சிக்கோ” உனக்கு தேவைப்படுமாட்ருக்கு :-)))

angusamy said...

இந்த எஸ்கலேடோர் அனுபவம் எனக்கும் நேர்ந்து இருக்கிறது
என் நண்பர்கள் வற்புறுத்தி இழுத்து போயிருக்கிராகள் என்னை
ஆனால் இப்பொழுதும் நான் விமான நிலையங்கள் அல்லது ஷாப்பிங் மால்கள் போனால் கூச்சபடாமல் ஸ்டெப்ஸ் எங்கே இருக்கிறது என கேட்டு அதில்தான் போவேன் .
தெரிஞ்சதை செய்கிறவன் புத்திசாலி
தெரியாததை செய்யாமல் இருக்கிறவன் அதி புத்திசாலி என்பது என் கருத்து

ஆமாம் ஏன் இப்பொழுதெல்லாம் ஸ்பெஷல் மீல்ஸ் ஆறி (லேட் ஆ?) வருகிறது?

angusamy said...

ஆறினாலும் சுவையாகத்தான் இருக்கிறது சிவகுமார் !!!!
(it was missing in previous comment)

M (Real Santhanam Fanz) said...

விட்டா சத்தியனையும் பவர்ஸ்டார் ஆக்கிடுவானுங்களோ...

Related Posts Plugin for WordPress, Blogger...