CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, November 12, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (12/11/12)


பன்னீர் புஷ்பங்கள்: 

                                         
கடைசியாக பன்னீர் சோடா குடித்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது நினைவில் இல்லை. சமீபத்தில் திருவான்மியூர் தியாகராஜா(S2) தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது அதன் இடதுபுறம் இருந்த பெட்டிக்கடையில் தென்பட்டது பன்னீர்(கோலி) சோடா. விலை ரூ. ஐந்து. அப்போதைய பன்னீர் சோடாக்களில் இருந்த கிக் இதில் சற்று குறைவுதான். 
..........................................................................     
     
பசங்க: 
தீபாவளி ட்ரெயிலர் டுமீல்கள் வெள்ளி அன்றே எங்கள் தெருவில் ஆரம்பித்து விட்டன. இண்டு, இடுக்ககளில் இருந்து எல்லாம் வெளிவந்து பகீரை கிளப்பி வாண்டுகள் பட்டாசு வெடிப்பதை கண்டால் எனக்கு கோபமும், பீதியும் கலந்தடிக்கும்.கார்கிலுக்கு தனியாக அனுப்பினால் பனிமலையை எரிமலையாக்கும்  ஆற்றலை என்னகத்தே கொண்டவன் என்பது மிகையில்லை என்பது ஊரறிந்த செய்தி என்றாலும், தெருவில் பட்டாசு வெடிக்கும் சுட்டிகளை கண்டால் ரத்தம் வர காதை திருகலாம் என்று இருக்கும். 

குருவி வெடியை காலருகே தூக்கி போட்டு விட்டு அது வெடிப்பதற்கு 0.01 நொடிக்கு முன்பாக 'அண்ணா பட்டாசு' என்று இந்த பயல்கள் அபாய சங்கு ஊதும்போது மனதில் ஏற்படும் கலவரத்தை அடக்க ஆர்மியே வந்தாலும் முடியாது. தீபாவளிக்கு முதல் நாளில் இருந்தே வீட்டடங்கு சட்டத்தை எனக்கு நானே போட்டுக்கொண்டு பம்மி விடுவேன். 
.....................................................................

பிடிச்சிருக்கு: 
பதிவு எழுதுவதில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர்களில் ஒருவர் சேட்டைக்காரன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நகைச்சுவை துள்ளலுடன் நயமாக தனது படைப்பை முன் வைக்கும் இவருடைய பதிவுகளில் சமீபத்தில் நான் ரசித்தவை:


....................................................................

ARGO:
ஹாலிவுட் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம். சென்ற வாரம் தவற விட்டு நேற்று பார்த்தேன். 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த ஆறு பேரை  எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே கதை. கொஞ்சமும் போரடிக்காமல் செல்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் விமான நிலைய சோதனைகளை தாண்டி ஏழு பேரும் ப்ளைட் ஏறும் காட்சி உச்சகட்ட படபடப்பு. அடுத்த ஆண்டு ஆஸ்கர் உறுதி என்று சொல்கிறார்கள் ஆர்கோ விமர்சகர்கள்.
.....................................................................

நாளை நமதே: 


                                                               
மேடமின் வளர்ப்பு மகன் 'சின்ன எம்.ஜி.ஆர்' சுதாகரனின் அண்ணன் பாஸ்(கரன்) ஹீரோ ஆகிட்டாரு டோய். நகரமெங்கும் 'தலைவன்' போஸ்டர்கள் தான். அதுவும் துப்பாக்கி போஸ்டருக்கு பக்கத்திலேயே ஒட்டி வைத்து இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்ல சொல்லி 'பாஸ்' போஸ்டர் மூலம் சொன்னதை இங்கு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. 'தயாரிப்பாளர் முதல் லைட்பாய் வரை எல்லாரும் வாழனும்' என்று சொன்ன பாஸ் வாழ்க. கலக்கறோம். தமிழ் நாட்டையே கலக்கறோம்!!
..............................................................................

ஆடும் கூத்து: 
பாராட்டு விழா நடத்துவதில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து உரியடிப்பதில் சூர்ய வம்சத்திற்கு ஈடேது. கனியக்கா ஜாமீனில் வந்ததற்கு விழா கொண்டாடியது அப்போது. இப்போது ஐ.நா.வில் ஈழத்தமிழர் பிரச்னையை பேசிவிட்டு வந்த காரணத்திற்கு கென்டக்கி கர்னல் ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு விமான நிலையத்தில் தடபுடல் வரவேற்பென்ன, அறிவாலயத்தில் பாராட்டு விழாவென்ன...ஒரே சிரிப்பொலிதான் போங்க.
..........................................................................

மாற்றான்: 
இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலகை ஆட்டிப்படைத்த லியாண்டர் - பூபதி பிரிவிற்கு பிறகு இந்திய டென்னிஸில் தற்போது மீண்டும் ஒரு வசந்தம். உலகின் முன்னணி ஜோடிகளான மார்க் நோயல்ஸ் - டேனியல் நெஸ்டர், பைரன் பிரதர்ஸ் ஆகியோரை வீழ்த்தி பூபதி - போபண்ணா வெற்றி பெற்று வருவது சிறப்பு. இவர்களாவது ஒற்றுமையுடன் இருந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு கிராண்ட் ஸ்லாம் போன்ற பெரிய வெற்றிகளை பெற்றால் நன்று.
.....................................................................

புகைப்படம்: 

                                                        
'நமது' கலைஞர் டி.வி.யின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. திரைப்படங்களில் பழைய பாடல்கள் சிறந்ததா? புதிய பாடல்களா? எனும் அபூர்வ தலைப்பை லியோனி தலைமையில் நடத்தினர். பாப்பையா பட்டிமன்ற நாயகன் ராஜா என்றால் லியோனிக்கு ராயபுரம் இனியவன். மேடையில் இவர் பெயரை அறிவித்தாலே கரகோஷம் காதை பிளக்கிறது. நிகழ்ச்சி முடிந்த பின்பு அவரை போட்டோ எடுத்த நபருக்கு பின்னே இருந்து நான் எடுத்த போட்டோ இது.
.................................................................

கல்யாண(சுந்தரத்தின்)பரிசு: 
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கல்யாணப்பரிசு படத்தில் ஒரு சோகப்பாட்டை எழுதச்சொல்லி பட்டுக்கோட்டையாரை கேட்டுக்கொண்டாராம். அப்போது 'தயவு செய்து கதாபாத்திரத்தின் பார்வையில் எழுதுங்கள். சமூகப்பார்வை வேண்டாம்' என்று கேஞ்சிக்கேட்க ஓக்கே சொல்லி இருக்கிறார் தலைவர் பட்டுக்கோட்டையார். பாடலும் முழுமை பெற்று விட்டது. தான் சொன்னபடி எழுதியதற்கு தலைவருக்கு நன்றி சொன்னாராம் ஸ்ரீதர். அப்போது சிரித்தபடியே தலைவர் சொன்ன பதில்: பாடலை மறுமுறை கவனித்து கேட்டுப்பாருங்கள். முழுக்கு முழுக்க சமூக சிந்தனையுடன் மட்டுமே எழுதி இருக்கிறேன்' என்று சொல்ல அதிர்ந்தார் ஸ்ரீதர்.

தீபாவளி கொண்டாட முடியாத ஏழை ஒருவன் இன்னொரு ஏழையை பார்த்து பாடுவதாக அமைந்த அப்பாடல்:

உன்னைக்கண்டு நான் வாட. என்னைக்கண்டு நீ வாட.
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி.

ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா. காணாத தூரமடா.

நெஞ்சமும் கனலாகி நீராகும்போது
நிம்மதி என் வாழ்வில் இனியேது.

காணொளி பார்க்க: உன்னைக்கண்டு
..........................................................................

இதுதான்டா போலீஸ்: 
வசூலில் சூறாவளியாக சுழற்றி அடித்த சல்மானின் 'தபங்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ். ஷாருக், சல்மான், அமீர் கான்களின் படங்கள் அடுத்தடுத்து வருவதால் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி இப்போதைக்கு முடிவதாய் இல்லை.


............................................................................

Images: madrasbhavan.com


11 comments:

அஞ்சா சிங்கம் said...

கிழிஞ்சிது இனிமேல் ஒஸ்தி 2 வரும் .....தமிழ்நாடு வாழிய வாழிய ......வாழியவே

rajamelaiyur said...

தீபாவளி வாழ்த்துக்கள் சிவா.

உலக சினிமா ரசிகன் said...

‘வெடிக்கு பயந்த சிங்கம்’ சிவாவுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Seeni said...

mmm....

nalla
thakavalkal...

ராஜி said...

பன்னீர் சோடா
>>
பழைய நினைவை மீட்டி சென்றது சகோ. தங்களும், தங்கள் குடும்பத்தாரும் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை இத்தீபத்திருநாளில் வேண்டிக்கொள்கிறேன் சகோ!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

பால கணேஷ் said...

திரைப்படத் தலைப்புகளை வைத்து பரிமாறிய ஸ்பெஷல் மீல்ஸ் நல்ல சுவை சிவா. சேட்டைக்காரனைப் பிடிக்காதவர் யார் இருக்க முடியும் வலையுலகில்? உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழத்துகள் சிவா.

”தளிர் சுரேஷ்” said...

பட்டுக்கோட்டை பாடல் பற்றிய தகவல் அருமை! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

Unknown said...

அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Unknown said...


உணவு சுவையாக உள்ளது!நன்றி!
மற்றும் த்ம்பி கசாலியின் பதிவுக்கு எழுதிய மறுமொழியையே இங்கு தருகிறேன் ஆவன செய்யுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்

தம்பி கசாலி , தம்பி சிவா, தொலைபேசி வாயிலாக எனக்கும் தகவல் சொன்னார் ஆனால் அன்று கோவையில் இருந்ததால் வர இயவில்லை! அடுத்த சந்திப்பை கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து வரும் சனி ஞாயிறு இல்லாமல் அடுத்து வரும் சனி ஞாயிறு வைத்து வலைவழி அனைவரும் அறிய அறிவிப்புக் கொடுத்தால் பலரும் கலந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என்பது என்கருத்து

உடன் தாங்களும் சிவாவும் இணைந்து ஓர் அழைப்பு (வலைவழி) விட வேண்டுகிறேன் அதனை மற்றவர்களும் போடுமாறு செய்யலாம் வருபவர்கள் இசைவினை தெரிவிக்க சொல்லலாம். மழைக்காலம் என்பதால் பூங்கா போன்ற இடங்கள் சரிப்பட்டு வராது நண்பர் வேடியப்பனையே கேட்கலாமே !
எல்லா வகையிலும் உங்களுக்கு உதவ எப்போதும் தயராக உள்ளேன் நன்றி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Happy deepavali

Related Posts Plugin for WordPress, Blogger...