CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, November 3, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(03/11/12)
மிரட்டல்: 
'இத ஜெயலலிதா கிட்ட கேளுங்க. நீ என்ன எனக்கு சம்பளமா தர்ற நாயி'..வாவ் கேப்டன் வாவ்.மேடமின் பிரதான எதிரிகளான தல தளபதி ஆர்டிஸ்ட்(கலைஞர்), ஸ்டாலின் கூட அம்மையார் என்று அழைக்கும்போது  நீங்க மட்டும் பேர் சொல்லி கூப்புடுற கெத்துக்கே ஒரு கண்டெயினர் பூங்கொத்து பார்சல் அனுப்பி பாராட்ட தோணுது. சாண்டி புயலையே ஒற்றை காலால் தாண்டி பாண்டி ஆடும் அளவுக்கு கப்பாகுட்டி(capacity) யாருக்கு வரும். அப்பறம்...'தொகுதி' பிரச்னைக்காக மேடமை பாக்க போறோம்னு சொல்ற உங்க கட்சி எம்.எல்.ஏ .க்களை முதல்ல தொகுதில நிஜமாவே என்ன பிரச்னை இருக்குன்னு மக்கள் கிட்ட கேட்டுட்டு போக சொல்லுங்க. என்னதான் மரியாதை நிமித்த சந்திப்புன்னு சொல்லிட்டு கேட் வரைக்கும் வீரமா போனாலும் மேடம் வர்றப்ப பம்மித்தான் ஆகணும். துணை தலைமை ஆசிரியர் பன்னீர் சார் கிட்ட கரக்டா கோச்சிங் எடுத்துக்கங்கப்பா.
....................................................................... 

அச்சமுண்டு அச்சமுண்டு:
கடந்த ஞாயிறு அன்று 'சக்கரவர்த்தி திருமகன்' பார்க்க தி.நகர் பேருந்து நிலையம் எதிரிலிருக்கும் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு இரவுக்காட்சி சென்றபோது நடந்த விஷயம் இது. படம் தொடங்கு விளக்குகளை அணைத்த ஐந்தாவது நிமிடம் எமக்கு முன் வரிசையில் இருந்த இளமாறன், அமுதன் இருவரும் அதி தீவிர அரவணைப்பை ஆரம்பித்தனர். சில நிமிடத்தில் சட்டைகளை கழற்றிவிட்டு தொண்டாற்ற தொடங்கினர். லீலை உச்ச கட்டத்தை எட்ட வேறு இருக்கையில் போய் அமர்ந்தோம். இடைவேளைக்கு பிறகு இன்னொரு ரகளை. குடிமகன் ஒருவன் இன்னொரு சோப்ளாங்கி இளைஞன் ஒருவனின் சீட்டில் மாறி அமர தகராறு முற்றி சட்டையை கிழித்து கொண்டார்கள். தியேட்டர் சார்பில் எவரும் எட்டிப்பார்க்க்கவில்லை. இரண்டு தாத்தாக்கள் மட்டுமே இன்சார்ஜ் அங்கே. கிருஷ்ணவேணி பக்கம் படம் பார்க்க (குறிப்பாக இரவுக்காட்சி) செல்பவர்கள் சாக்கிரதை.
..........................................................................

Ayaalum Njaanum Thammil: 
ப்ரித்விராஜ், நரேன், பிரதாப் போத்தன் நடித்திருக்கும் புதிய மலையாளப்படம். பெற்றோர்களின் அனுமதி இன்றி ஆபரேஷன் செய்வதால் டாக்டருக்கு ஏற்படும் விளைவுகளை அலசுகிறது கதை. ஆபரேஷன் செய்யவே வேண்டாம். ஒருவேளை குழந்தை இறக்க வாய்ப்பு உண்டு. மருந்து மட்டும் தாருங்கள் என்று சொல்லும் மக்களுக்கும், நோயாளியின் உறவினர் ஒப்புதல் இன்றி நல்லெண்ணத்துடன் சிகிச்சை செய்து அது தோல்வியில் முடிந்தால் சோதனைகளை சந்திக்கும் டாக்டர்களுக்குமான நல்ல படமாக அமைந்திருக்கிறது இது.

பயிற்சி மருத்துவர்களை பாஸ் செய்ய வைக்கும் உடான்ஸ் நோயாளியாக நகைச்சுவை நடிகர் சலீமின் நடிப்பு சபாஷ். தனது வியாதி குறித்து அறியாமல் அல்லாடும் ப்ரித்விக்கு நோயின் பெயரை சொல்லிவிட்டு 'ஸ்பெல்லிங் வேணுமா?' என்று சலீம் கேட்குமிடம் கலக்கல் கலாட்டா. பயிற்சி மருத்துவர்கள் வாழ்வின் பக்கங்களை புரட்டிப்பார்க்க விரும்புவோர் நிச்சயம் ஒரு முறை காணலாம்.
..........................................................................

ஜென்டில்மேன்:       
ஆரோகணம் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் 'நன்றி சுரேகா' என்பதை படித்ததும் 'அட' போட்டேன். இடைவேளைக்கு முன்பு 'வாங்க சார்' என்று எம்.எல்.ஏ.வை ஹோட்டலில் வரவேற்கிறார். அதன் பின்பு 'தப்பாட்டம்' பாடலில் நாயகி விஜி குறித்து ஒரு இளைஞர் (பதிவர்) சுரேகா காதில் கிசுகிசுக்க 'ஓ அப்படியா' என்பது போல் தலை அசைக்கிறார். இறுதியாக சொகுசு காரில் இருந்து இறங்கி 'கலெக்டர் வீட்டு செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சோம். கவலைப்படாதீங்க. உங்க அம்மா கெடச்சிருவாங்க' என்று சொல்கிறார். ஆக மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வந்து செல்கிறார். நேரில் பார்ப்பது போலவே படத்திலும் இன் பண்ணிய பார்மல் உடையுடன் திரையிலும்.

சும்மா லுங்கியை கட்டிக்கொண்டு 'டேய்.. நா கண்டி உள்ள வந்தேன். பேட்டா பாஞ்சி வந்து மூஞ்ச கீசிறுவேன்' பாணியில் மந்திரியை பார்த்து பெரிய வூடு கட்டாவிடினும் அட்லீஸ்ட் சின்ன வூடாச்சும் கட்டுற ரவுடியா சீக்கிரம் 'நடிங்க' தலைவா.     
.........................................................................

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு: 
பசும்பொன் தேவர் குருபூஜை என்பதால் அண்ணா சாலையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சில நாட்களுக்கு முன்பு காலை முதல் மாலை வரை பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது சென்னை. ஏற்கனவே 'நீலம்' செம காட்டு காட்டிக்கொண்டு இருக்க, தேவராபிமானிகள் வேறு அண்ணா சாலை நோக்கி படையெடுக்க ட்ராபிக் ஜாமில் விழி பிதுங்கியது சென்னையின் இதயம். இது போல பல திருவிழா காட்சிகளை தலை நகரவாசிகள் கண்டு களிக்க சென்னையின் பிரதான வீதிகளில் மேலும் பற்பல சிலைகளை நிறுவி நீங்காப்புகழ் பெறுமாறு 2098 ஆம் ஆண்டு முதல்வராக(ராமதாஸ்  ஐயா  சாரி..கீபோர்ட் உங்க பேரை  தானவே டைப் அடிக்குது) வரப்போகிறவர் வரை கேட்டுக்கொள்கிறோம். 
........................................................................

நான் ஆணையிட்டால்: 
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழக்கமாக தரப்படும் சத்துணவை(?) மாற்றி 13 வகை உணவுகளை தரச்சொல்லி உள்ள  ஜெக்கு ஒரு சபாஷ். நான் பள்ளி படித்த காலத்தில் குண்டு அரிசிச்சோற்றை கொஞ்சம் பருப்பு கலந்த சாம்பாருடன் சேர்த்து சுடச்சுட தட்டில் கொட்டுவார்கள். சமயங்களில் வீட்டு சாப்பாட்டை விட சத்துணவு ருசி நன்றாக இருந்ததும் உண்டு. தற்போது பல்வகை சாதங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் செய்தி மகிழ்ச்சி தந்தாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்கிற அச்சம் இருக்கத்தான் செய்யும். அவ்வப்போது தரப்பரிசோதனை செய்து உண்மையாகவே சத்துணவை தந்தால் சரி.
................................................................. 
 
நடிகன்:
சோ, வரதராஜன், கிரேசி மோகன், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோரின் மேடை நாடகங்கள் பெரும்பாலானவற்றை சென்னை சபாக்களில் பார்த்தாகிவிட்டது. தரமான புதிய நாடகங்கள் இவர்களிடம் வருவதும் அரிதாகிப்போனதன் பொருட்டு நாடகம் பார்ப்பதும் குறைந்து போனது. எனக்கு பல நாள் சந்தேகம் ஒன்று மனதில் நிழலாடுகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை? அவ்வாறு முயன்று ஏதேனும் காரணத்தால் பின்தள்ளப்பட்டனரா?அறியேன். அதற்கான முயற்சியில் முனைப்புடன் கலைஞர்கள் ஈடுபட்டால் இன்னும் சில ஆண்டுகளில் அது சாத்தியப்படலாம். காத்திருக்கிறேன்.
...................................................................       

அழகிய தமிழ் மகன்: 
'அமர்ந்து விட்டு செல்க' அதாவது 'சிட் டவுன். தென் கோ'.  இதில் ஏதோ ரசாயன தரக்குறைவு இருந்ததை பல்லாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த சென்னைத்தமிழன் புதிய பார்முலா ஒன்றை கண்டுபிடித்ததன் விளைவு:

'உக்காந்துட்டு போ'

'உக்காஞ்சிட்டு போ'   

'குந்திட்டு போ'

'வக்காரு. போலாம்'    
...........................................................................

திரும்பிப்பார்: 
கடந்த சில நாட்களாக சட்டசபை நிகழ்வுகளை ஜெயா மேடம் டி.வி.யில் பார்த்து வருகிறேன். மேடம் பேசும்போது சுற்றி நடக்கும் தமாசுகள்..அல்டிமேட்யா. வெகு சீரியசாக மின்வெட்டு குறித்து அவர் அறிக்கை தந்து கொண்டிருக்க சபா ஹீரோ தனபால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. கண்ணாடி டம்ளரை கையில் பிடித்து இடது ஓரம் திரும்பி குனிந்து, பம்மி தண்ணீர் பருகியது கண்கொள்ளா காட்சி. மேடம் இன்னும் கொஞ்சம் வால்யூமை ஏற்றி இருந்தால் பதற்றத்தில் டம்ளர் நீர் முழுவதையும் சட்டை பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டு இருப்பார் பாவம். 

பக்கத்து சீட்டில் இருக்கும் ஒரே காரணத்திற்காக முதுகை இருக்கையில் சாய்த்து கூட அமர முடியாமல் முன்னாள் முதல்வர் பன்னீர் தவிக்க, இரண்டு வரிசை தள்ளி பின்னே அமர்ந்திருக்கும் சில எம்.எல்.ஏ.க்களோ கொட்டாவி விடுதல், லேசாக கண் சொக்குதல் என எல்லை மீறுகிறார்கள். குளிர் விட்டு போச்சி போல. மொதல்ல அவங்களை எல்லாம் உங்க எதிர் வரிசைல உக்காத்தி வைங்க மேடம். தலைவி நாட்டு பிரச்சனைய பேசும்போது கொட்டாவியா விடுறீங்க கொட்டாவி!
............................................................................     

அமர்க்களம்:
கவுண்டர் பட்டையை கிளப்பிய காமடிகளில் வியட்நாம் காலனி படமும் ஒன்று. 'ஜுஜூலிப்பா' பிரபு, மனோரமா,வினிதாவுடன் தலைவர் செய்யும் ரவுசு எவர்க்ரீன். சாம்பிள் வெடி:

ஆச்சி: உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லியே

கவுண்டர்: ஜோசப்

ஆச்சி: ஜோசப்பா...கிறிஸ்டினா?     

கவுண்டர்:பின்ன ஜோசப்னா கிறிஸ்டினா இல்லாம சைவ சித்தாந்த மடாதிபதியாவா இருப்பான்? ...................................................................................

     

22 comments:

Unknown said...

குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை?
///////////////////////////
அம்பி அசடாட்டம் பேசற...விருமாண்டி பசுபதி முதல்,சினிமால கலக்குற பல நடிகர்கள் வரை இப்ப கூட டெங்குல இறந்தாரே அவா வரைக்கும் வீதி நாடங்களில் நடிச்சவா...? இன்னிக்கும் வீதி நாடகங்கள் நடந்துன்டுதான் இருக்கு அதில் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் நிறைய திரையுலகில் வர்ரா...! சபாவுல அவாளுக்குத்தான் அம்பி வாய்ப்புக் கொடுப்பா...! சபாவுக்கு மட்டும் போகாதேள் தலைநகரில் அப்பஅப்ப வீதி நாடகங்கள் நடக்றதுன்டு யாராவது தோழர்கிட்ட விசாரிச்சுன்டு போய்ப் பார் அம்பி!

Unknown said...

https://www.youtube.com/watch?v=rOwyHiWipGQ&feature=related

! சிவகுமார் ! said...

@ வீடு சுரேஸ்குமார்

சுரேஸ்..இங்கு நான் குறிப்பிட்டு இருப்பது நகைச்சுவை நாடகங்கள் பற்றி மட்டுமே. ஓரளவு விளம்பரமும் இருப்பதால்(நாளிதழ், சுவரொட்டி) சபாக்களில் நகைச்சுவை நாடகங்கள் பார்ப்பதென்பது ஏதுவாகிறது. கிட்டத்தட்ட அனைத்து சபாக்களும் நகரின் பிரதான வீதிகளில் இருப்பது இன்னும் ப்ளஸ். சென்னை போன்ற பெருநகரின் மைய இடத்தில் வீதி நாடகங்கள் நடைபெறுவது மிகக்குறைவு.

கனி அக்கா சென்னை சங்கமம் நிகழ்ச்சி வச்சாத்தான் உண்டு. மேடம் இருக்கறதால அது நடக்குமோ? நடக்காதோ?

காப்பிகாரன் said...

அண்ணே சூப்பர் புல் கட்டு கட்டுன திருப்தி இந்த மீல்ஸ்

வவ்வால் said...

சிவா,

நல்ல ரங்கீலா பதிவு!

//குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை? //

இதற்கு முக்கியமான காரணம் ஸ்பான்சர்ஸ், அவாளுக்கு மட்டும் தான் பிரபல நிறுவனங்கள் ஸ்பான்சர் கொடுக்கின்றன, காரணம் அங்கே அவாளுக்கு வேண்டியவா முக்கிய பொறுப்பில் இருப்பது வழக்கம்.

பிரலப நாடக மேதைகள் ஸ்பான்சர் கொடுக்கிறாங்கன்னு சில அம்பிகள் சொல்லக்கூடும், நீங்க குறிப்பிட்ட பட்டியலில் இருப்பவர்களின் ஆரம்பகாலத்தில் இருந்தே ஸ்பான்சர்ஸ் எளிதாக கிடைத்திருக்கு.

எல்லாம் வழக்கமாக சொல்வாங்க, நான் ஏஜீஎஸ் அலுவலகம், சிம்சன், டீவிஎஸ் இல் வேலை செய்துக்கொண்டே நாடகம் போட்டேன் என, எல்லாம் ஸ்பான்சர் உபயம் தான்.

டிக்கெட் கட்டணம் அரங்க வாடகைக்கு கூட காணாது.

-----------


வீதி நாடகம் ,சென்னையில் நகரத்தில் நடப்பதில்லை, பூந்த மல்லி, தாம்பரம் பகுதிகளில் பார்த்திருக்கிறேன்.

வீடு சுரேஷுக்கு அதெல்லாம் சென்னைக்கு வெளியில் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை நமக்கு தெரியாமல் நடக்குதோ என்னமோ?

ஒரு காலத்தில் மெரினா பீச்சில் கூட மக.இக திடீர்னு கூடி நாடகம் போடுவாங்க, கையில ஒரு பறை வச்சுக்கிட்டு அடிச்சு பாட்டு பாடுவாங்க, போலீஸ் வந்ததும் இடத்தை காலி செய்துடுவாங்க.

திண்டுக்கல் தனபாலன் said...

நாடகங்களை பொருத்தமட்டில் (சென்னையை தவிர மற்ற இடங்களில்) நடக்கத் தான் செய்கிறது... (முன்பை விட குறைவு)

ஆரோகணம் பார்க்க வேண்டும்...

மறக்க முடியாத நகைச்சுவை.... ஜுஜூலிப்பா...

மீல்ஸ் அருமை... நன்றி..

Unknown said...

http://chakkarakatti.blogspot.in/2012/11/blog-post_3.html
விஜய் வெற்றி பெற்றது எப்படி?

! சிவகுமார் ! said...


கூடுதல் தகவல்களுக்கு நன்றி வவ்வால். மேற்சொன்ன ஜாம்பவான்கள் வெவ்வேறு வகையான நகைச்சுவை செய்தாலும், அந்த வட்டத்தையும் உடைத்து மேலும் சிலர் வந்தால் நன்றாகே இருக்கும் என்பதே என் கருத்து. குறிப்பாக நகரின் மையத்தில் அப்பேற்பட்ட நாடகங்கள் அரங்கேற வேண்டும் என்பதென் ஆசை. பார்க்கலாம்.

! சிவகுமார் ! said...


நன்றி

காப்பிகாரன்.

! சிவகுமார் ! said...


நன்றி தனபாலன்.

ராஜ் said...

இப்ப நான் சிரிப்பொலி சேனல்க்கு பதிலா ஜெயா டிவி நியூஸ் தான் கேட்குறேன்..
ரெண்டு நாளைக்கு முன்னாடி அமைச்சர் ஒருத்தர் கை நடுங்க அம்மா புகழ் பாடி கொண்டே ஒரு அறிக்கையை படிக்க..அதை கேட்டு அம்மா சிரிக்க...காண கண் கோடி வேண்டும்...
எல்லாமே அமர்க்களம் பாஸ்...
அப்புறம் பதிவுலகமே பட்டாசு வெடித்து கொண்டாடிய ராஜன்-சின்மயி பிரச்சனை பத்தி நீங்க ஒண்ணுமே எழுதலையே....???? ஏன் பாஸ்...???
//குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை///
மேடை நாடகத்துல வேணா அவங்க இருக்கலாம்...மத்தவங்க எல்லாம் டிவியில கொடி கட்டி பறக்குறாங்க..ரோபோ ஷங்கர், சிவா கார்த்திகேயன்..இன்னும் நிறைய பேர்...திறமை இருந்தா கண்டிப்பா மேல வருவாங்க.. :):)

! சிவகுமார் ! said...

@ வவ்வால்
//எல்லாம் வழக்கமாக சொல்வாங்க, நான் ஏஜீஎஸ் அலுவலகம், சிம்சன், டீவிஎஸ் இல் வேலை செய்துக்கொண்டே நாடகம் போட்டேன் என, எல்லாம் ஸ்பான்சர் உபயம் தான். //

ஹா..ஹா..தப்புத்தாளங்கள்?

ரஹீம் கஸ்ஸாலி said...
This comment has been removed by the author.
ரஹீம் கஸ்ஸாலி said...

ஆக மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வந்து செல்கிறார். ////
அப்படின்னா ஆரோகணம் படத்தில் சுரேகா ஒரு செகண்ட் ஹீரோன்னு சொல்லுங்க.

! சிவகுமார் ! said...

@ ராஜ்

ஒரு வாரம் நெட்டிற்காக பெரும்பாடு பட்டேன். கரண்ட் கட், மோடம், லோ வோல்டேஜ் பிரச்னை. பில் கட்டாததால் திங்கள் அன்று நெட் கட். அடுத்து வந்த புயலால் டெலிபோன் வயர் பணால். ஸ்ஸ்..ஒரு வழியாக இன்றுதான் இந்த இதிகாசத்தை சமர்ப்பிக்க முடிந்தது. அதற்குள் ட்விட்டர் சர்ச்சை குறித்து கட்டப்பஞ்சாயத்து தல, நாட்டாமை, பெஞ்ச் கோர்ட் டவாலி வரை அனைவரும் தீர்ப்பு சொல்லிவிட்டனர்.

இலை மறையாக எழுதுவதற்கும், அதீத ஆபாசத்துடன் எழுதுவதற்குமான வித்யாசத்தை நண்பர்கள் கண்டுகொண்டால் நன்று. உசுப்பேற்றி பிரச்னையை ஊக்குவிக்கும் சுற்றத்தை அவர்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.

! சிவகுமார் ! said...


@ கஸாலி

கமண்ட்டை ரப்பர் போட்டு அழிச்சிட்டாரே....

! சிவகுமார் ! said...


@ ராஜ்

திறமைசாலிகள் மீடியாவிற்கு செல்வது ஒருபக்கம். அதே சமயம் நேரடி நாடகம் பார்ப்பதன் அனுபவமே அலாதி. ஒரு ரீடேக் கூட இன்றி நடிக்கும் கலை ஒரு வரம். ரஜினி கூட மேடை நாடகத்தில் நடிக்க யோசித்து வருவதாக கூறியுள்ளார்.

சக நடிகர் வசனத்தை மறக்கையில் அல்லது வேறேதேனும் இடையூறு ஏற்படுகையில் அதை சமாளித்து நாடகத்தின் போக்கை சரியாக நகர்த்த சாமர்த்தியம் அவசியம். அதுதான் மேடை நாடகத்தின் தனித்தன்மை. நான் பார்த்தவரையில் எஸ்.வி.சேகர் அதில் கில்லாடி. ஆனால் ஒய்.ஜி. மகேந்திரன் சீரியஸ் ஆன மனிதர். சமீபத்தில் அவர் நடித்த 'நாடகம்' எனும் நாடகத்தை பார்த்தேன். அப்போது முன்வரிசையில் இருந்த நபர் கைபேசியில் பேச ஆரம்பித்ததும் அவரை வெளுத்து வாங்கி விட்டார் ஒய்.ஜி.!! :))

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு கலவையான சுவையான சாப்பாடு! கவுண்டமணி ஜோக்கும் விஜயகாந்த் பற்றிய நக்கலும் சிறப்பு!

Prem S said...

அசச்சமுண்டு நமக்கும் அச்சமுண்டு ..

ராஜி said...

ஸ்பெஷல் மீல்ஸ் செம டேஸ்ட். அதிலயும் சட்டசபை நிகழ்ச்சி படிச்சு சிரிச்சுட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ

ஜோதிஜி said...

எழுதும் கருத்துக்கள் என்பது மற்றவர்கள் அத்தனை பேர்களுக்கு சேர வேண்டியது முக்கியம். முதலில் உங்கள் பதிவில் உள்ள பின்னூட்டத்தில் வந்த யூ டியுப் சமாச்சாரங்களை எடுத்துப் போட்டு பார்க்கலாம என்றால் அதற்கு வழியில்லை என்று ஒப்பிக்கின்றது.

இது போன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.

சுதந்திரத்தை பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் உருவாக்க வேண்டியது நமது கடமை.

Unknown said...

@ஜோதிஜி

நான் கொடுத்த லின்க்கின் மீது மௌஸ் கர்சரை வைத்து செலக்ட் செய்து Key Bordல் Ctrol+C அழுத்தி Copy செய்து புதிய Tap Open செய்து அதில் Ctrol + V அழுத்தி Paste செய்யுங்க அப்புறம் பாருங்க வீடியோ ஓடும் நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...