CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, November 28, 2012

ஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்?                                                                                  இது நியாயமா சார்?

கடந்த ஞாயிறன்று வாணி மகாலில் மொத்தம் மூன்று நாடகங்கள். கிரேஸி மோகனின் சாக்லேட் கிருஷ்ணா, மீசை ஆனாலும் மனைவி மற்றும் ஒய்.ஜி.யின் இது நியாயமா சார். வாணி மகாலின் இரண்டு ஹால்களில் சிறியதான ஓபுல் ரெட்டி ஹாலில் கிரேஸி க்ரூப்பும், மகாஸ்வாமிகள் ஹாலில் மகேந்திரன் க்ரூப்பும் மேடையேறினர். சென்ற ஆண்டு குறைந்தபட்ச டிக்கட்களின் விலை ரூ. 150, 200 என்று இருந்தது. குறிப்பாக கிரேஸி மற்றும் எஸ்.வி.சேகர் நாடகங்களுக்கு. இவ்வாண்டு ரூ. 200, 300 என ஏறிவிட்டது. இந்த நாடகத்திற்கு வைத்த டிக்கட் விலை ரூ 200, 350 முதல் 1,000 வரை!!!!

க்ரைம் த்ரில்லர் என்று விளம்பரம் செய்யப்பட்ட 'இது நியாயமா சார்'? 1989 ஆம் ஆண்டு அரங்கேற்றம் ஆனது. இதுவரை  200-க்கும்  அதிகமான முறை  மேடையேறி உள்ளது. கதை, வசனம் வெங்கட். காதலி மீராவை கொலை செய்த குற்றத்திற்காக ராகுலுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறார் நீதிபதி சிதம்பரம். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் வாழும் அவரது வீட்டிற்கு துப்பாக்கியுடன் வருகிறான் சிறையில் இருந்து தப்பிய ராகுல். தான் ஒரு நிரபராதி என்றும், வழக்கு சரியாக விசாரிக்கப்படவில்லை என்றும் கோபத்துடன் கூறுகிறான். சாட்சிகளான ஆசிரியர் ஜோசப்(ஜீவா), வீடியோ நாத்(கிரி), டாக்டர் ஹேமா(சுபா), வழக்கறிஞர்(சுப்புணி) மற்றும் சமையல்காரர் பிச்சுமணி(ஒய்.ஜி.மகேந்திரன்) ஆகியோரை அதே வீட்டிற்கு கடத்தி வந்து வழக்கை மறுவிசாரணை செய்ய வற்புறுத்துகிறான். பிறகென்ன நடந்தது என்பதே கதை.     

'இது என்ன துச்சாதனன் வீட்டு நாயா? வேட்டியை உருவ பாக்குது' போன்ற சில கல கல வசனங்கள் பேசுகிறார் ஒய்.ஜி.அத்துடன் சில இரட்டை அர்த்தங்களையும் சேர்த்து. கோபமான வசனத்தின்போது சமையில் கரண்டியை சற்று வேகமாக தூக்கி அவர் எறிந்தபோது  மேடையின் முன் வரிசையில் இருந்தவர்கள் காலருகே வந்து விழ 'யார் வேணுமோ அந்த கரண்டிய எடுத்துக்கங்க' என்று டைமிங் அடித்தது நன்று. என்ன வசனம் பேச வேண்டும், எங்கே நிற்க வேண்டும் என்பதை நாடகம் நடக்கும்போதே பிறருக்கு மெல்லிய குரலில் யோசனை சொல்கிறார். வாணி மஹால்  மைக்கின் துல்லியம் அந்த பேச்சையும் நம் காதில் போட்டு வைக்கிறது. இவருக்கு இணையாக நம்மை ரசிக்க வைப்பது குள்ளமாக இருக்கும் சுப்புணி(அருணாச்சலத்தில் ரஜினியை கல்யாண மண்டபத்தில் சீண்டுபவர்). ஜம்பு எனும் பெயரில் அடியாளாக வரும் நபர் மட்டும் இறுதிவரை துப்பாக்கி ஏந்தியவாறு வசனம் பேசாமலே வணக்கம் போடுகிறார் பாவம்.

                                                                                       சுதேசி ஐயர்  

இந்நாடகத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. கிறித்தவ பாதிரியாரை கிண்டல் அடிப்பது, சுப்புணியின் உயரத்தையும், டாக்டர் ஹேமாவாக வரும் நடிகை சுபாவின் பெருத்த உடலை ஏளனம் செய்யும் வசனங்கள், 'குருட்டு கபோதி' போன்றவை இக்காலத்திலும் தொடர்வது ரசிக்கும்படி இல்லை. இனியேனும் இவற்றில் மாறுதலை கொண்டு வர வேண்டும் நாடகம் நடத்துவோர். சமையல்காரர் என்பதற்காக பெரும்பாலும் சமையல் கரண்டியுடன் ஒய்.ஜி. வருவது அக்மார்க் க்ளிஷே. ப்ளாஸ்க்கில் இருக்கும் காபியை அனைவரும் அருந்த சுப்புணிக்கு மட்டும்  டீ தந்தேன் என்று இவர் சொல்வதும், ஒரு காட்சியில் இடம் வலம் மறந்து எதிர்திசையில் நீதிபதி கைகாட்டி வசனம் பேசுவதும் கவனமாக கையாளப்பட்டு இருக்கலாம். நான் பார்த்த சில ஒய்.ஜி. நாடகங்களில்   சுப்ரமணி, கிரி மற்றும் சுபா ஆகியோர் காட்சிகளை நகர்த்தவே  பயன்படுகிறார்கள்.மூத்த கலைஞர்கள் பிருந்தா(இரண்டாம் படத்தில் ஒய்.ஜி.யின் வலப்பக்கம் இருப்பவர்) ,சுப்புணி(முதல் படத்தில் வலது ஓரம்) , பாலாஜி(இரண்டாம் படத்தின் வலது ஓரம்) போன்று சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரம் இவர்களுக்கு  அமையவில்லையா அல்லது நடிப்பே இவ்வளவுதானா எனும் கேள்வி எழுகிறது. சுப்புணி இல்லாவிட்டால் மேடை ஆட்டம் கண்டிருக்கும் என்பதற்கு அங்கொலித்த சிரிப்பொலிகளே சாட்சி.   

இப்போது இந்த நாடகத்தை பார்க்கும் பலருக்கு 'ஏற்கனவே பல சினிமாக்களில் பார்த்த காட்சிகளும், வசனங்களும் தானே இவை' என்ற சலிப்பு ஏற்படலாம். ஆனால் பெரும்பாலான நாடகங்கள் நாம் பார்த்த படங்கள் வெளியான சில பல  ஆண்டுகளுக்கு முன்பே மேடைகளில் வெற்றிக்கொடி நாட்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. நாடக வசனங்கள் பல தமிழ் சினிமாவில் காப்பி அடிக்கப்பட்டவை என்பது உண்மையே. உதாரணமாக இந்த நாடகத்தில் 'எனக்கொரு மகன் பிறப்பான்' என்று ஒரு நபர் சொல்லும்போது 'அவன் என்னைப்போலவே இருப்பான்' எனப்பாடி வம்பில் சிக்கினேன் என்று வசனம் பேசுவார் ஒய்.ஜி. இது அப்படியே கவுண்டமணி - செந்தில் நடித்த படமொன்றில் சுடப்பட்டிருக்கும். 

கிரேஸி மோகன் மற்றும் எஸ்.வி.சேகருக்கு வரும் கூட்டம் ஒய்.ஜி.க்கு வருமா? எதற்கு இவ்வளவு பெரிய ஹால்? ஓபுல் ரெட்டி மினி ஹாலையே செலக்ட் செய்து இருக்கலாமே? என்று எண்ணியவாறே உள்ளே சென்றேன். அதிகபட்சம் 40% சீட்டுகள் மட்டுமே நிரம்பி இருந்தது அதை மெய்ப்பித்தது. அதிர்ச்சி தராத க்ளைமாக்ஸ் மற்றும் மேற்சொன்ன குறைகளைத்தாண்டி போதுமான விறுவிறுப்புடன் நாடகத்தை கொண்டு சென்ற U.A.A குழுவினருக்கு பாராட்டுகள். 

'இது நியாயமா சார்?' சொல்லும் நீதி: சரிவர விசாரிக்கப்படாமல் தீர்ப்புகள் வழங்குதல் தவறு. அதை வெங்கட் அவர்களின் வசனம் மூலம் அழகாக சொல்லி இருக்கிறார்கள். 'குற்றவாளி என்று உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்ட நபர் நிரபராதி என்பது அயல்நாட்டில். நிரபராதி என்று உறுதியாகும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளியாக கருதப்படுவது நம் நாட்டில்'. சபாஷ் வெங்கட்.   

Images Copyright: madrasbhavan.com   
....................................................................

தொடர்புடைய பதிவு:


சமீபத்தில் எழுதியது:

...................................................................


           

Tuesday, November 27, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(27/11/12)நீங்களும் ஹீரோதான்: 

 
துப்பாக்கி ரிலீசின்போது சென்னையின் பிரதான சாலைகளை கலக்கிய போஸ்டர். அகில இந்திய சத்யன் ரசிகர் மன்றத்தின் அன்புத்தொண்டர்கள் தந்த அலப்பறையை பார்த்தால் படத்தில் அசல் ஹீரோ யார்? காமடியன் யார்? எனும் கேள்வி எழத்தான் செய்கிறது.
....................................................................

Life of Pi:
அவதாருக்கு பிறகு வந்த மிராக்ள் என்று சுய விளம்பரம் செய்து மக்களை தியேட்டருக்கு இழுத்த இப்படைப்பில் அனைவரும் சொல்வது போல் த்ரீ- டி மற்றும் விசுவல் எபெக்டுகள் சிறப்புதான். அழகான கதையையும் உள்ளடக்கியும் உள்ளது.ஆனால் ஏனோ இடைவேளைக்கு பின்பு மனதைத்தொட மறுக்கிறது. கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு முறை பார்க்கலாம்.
................................................................. 
  
காக்க காக்க: 
நேற்று இரவு பங்கு(ஷேர்) ஆட்டோவில் பயணித்தபோது நடந்த சம்பவம். அப்போது நேரம் 9.30 மணி. பாதி வழியில் ஒரு ட்ராபிக் போலீஸ் வண்டியை நிறுத்தி ஓட்டுனர் அருகில் அமர்ந்தார். 'அப்படியே நிறுத்து கொஞ்ச நேரம். 'வருதா'ன்னு பாப்போம்' என்று அவர் கட்டளையிட எங்களுக்கு 'அர்த்தம்' புரிந்தது. இரண்டு நிமிடம் பொறுமை காத்தோம் நானும், சக ஆண் பயணிகள் இருவரும். அருகில் இருந்த பெரியவர் அதன் பின் டென்ஷன் ஆகி பேச ஆரம்பித்தார்.

பயணி: 'லேட் ஆகும்னா வேற ஆட்டோல ஏறிக்கறேன்'

ஓட்டுனர்: 'ஏன் இவ்ளோ அவசரம்? போலாம்'

பயணி: 'மேடவாக்கம் போக 10 மணி பஸ் பிடிக்கணும்'.          

சட்டை செய்யாமல் போலீசும், ஓட்டுனரும் நமட்டு சிரிப்பு சிரித்தனர்.

ஓட்டுனர்: ' 10 மணி பஸ் தான? போலாம் இருங்க?'

பயணி: 'இருங்களா? அந்த பஸ்ஸை விட்டா 11.30 மணி பஸ்தான்' என்று கோபப்பட வேறு வழியின்றி நகர ஆரம்பித்தது பங்கு ஆட்டோ.     

போலீஸ், ஆட்டோ ஓட்டுனர்களே. வாழ்க உங்கள் நட்பு. 
..............................................................

Jab Thak Hai Jaan: 
இரண்டு வாரங்களுக்கு முன்பே பார்த்த படம். யாஷ் சோப்ரா எனும் பிதாமகனின் கடைசி படைப்பு. பொங்கி வழியும் ரொமான்டிக் காவியங்கள் பலவற்றை நான் ரசித்ததில்லை. விதிவிலக்காக உன்னாலே உன்னாலே போன்றவற்றை சொல்லலாம். சோப்ராவின் படத்தில் பாடல்கள் மனதை கொள்ளை கொள்ளும். இந்த மினிமம் கியாரண்டியை நம்பி சென்ற எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது. லண்டனில் தெருவோரம் கிதார் இசைத்து காசு சேர்க்கும் ஷாருக் கானை ரோல்ஸ் ராய்ஸ் காரில் வரும் காத்ரீனா கைப் காதல் செய்ய, காலப்போக்கில் காதல் முறிகிறது. தலைவர் இந்திய ராணுவத்தில் பாம்ப் ஸ்குவாட் அதிகாரி ஆக, காதலில் தோற்ற இவர் கதையை கேட்டு அனுஷ்கா ஷர்மா உருகி 'கட்டுனா உன்னைத்தான் கட்டுவேன்' என்று சொல்ல, திடீரென மறதி வியாதியில் ஹீரோ பாதிக்கப்பட....ஆள விட்றா சாமி.
................................................................

ஏழை ஜாதி: 
'ஆம் ஆத்மி பார்ட்டி'யை கேஜ்ரிவால் துவங்கியதும் எப்போதும் இல்லாத அதிசயமாக ஏழைப்பாசம் காங்கிரஸில் பீறிட்டு அடிக்கிறது. 'ஆம் ஆத்மி' என்பது ஆண்டாண்டு காலமாய் காங்கிரஸ் கையாளும் வார்த்தை. அதை ஹைஜாக் செய்துள்ளார் கேஜ்ரி' என்கிறார்கள். அடங்கப்பா உசிதமணி!! காங்கிரஸ் கா ஹாத். ஆம் ஆத்மி கே சாத்' (எங்கள் கை உங்கள் கையுடன்) என்று சொல்லிக்கொண்டு ஜெயித்த கதர் கட்சி விலைவாசி ஏற்றம் போன்ற பல சுமைகளை நம் மேலேற்றி கதற வைத்ததுதான் மிச்சம். இந்த லட்சணத்தில் ஆம் ஆத்மி எங்கள் பிராண்ட் என்று கூக்குரல் வேறு. 
................................................................

தலைநகரம்: 
வார இறுதி நாட்களில் சென்னையின் முக்கிய வணிக வளாகங்களில் அடிக்கடி நான் காணும் காட்சி. எஸ்கலேட்டர்களில் கால் வைத்து ஏற பெண்கள் சிலர் தயங்கிக்கொண்டு இருக்க கணவர்/தந்தை அவர்களை வலுக்கட்டாயமாக கைப்பிடித்து இழுக்கின்றனர். பதற்றத்தில் பின் பக்கமாக சாய்ந்து விழப்போகும்போது அருகில் இருக்கில் கைப்பிடியை பிடித்து தப்பிக்கின்றனர். சற்று பிசகினாலும் விபத்தை தவிர்க்க இயலாது. தளத்தை அடைந்ததும் அந்த குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் அப்பெண்ணை கிண்டல் செய்து கெக்கே பிக்கே என்று சிரிக்கும் கொடுமையும் நிகழ்கிறது. அட கொக்கனாங்கி பயலுகளா. லிப்ட், படி எங்க இருக்குன்னு செக்யூரிட்டி கிட்ட கேட்டுட்டு அதுல உங்க வீட்டு பொண்ணுங்கள கூட்டிட்டு போனா கிரீடம் கொறஞ்சிடுமாக்கும் வெண்ணைக்கு.
.......................................................................

பிடிச்சிருக்கு: 
ஒபாமா முதல் ஒட்டகப்பால் வரை விமர்சனம் செய்து எவரிதிங் ஏகாம்பரம் போல பதிவுலகில் பவனி வரும் போராளிகளுக்கு மத்தியில் தான் கற்ற கல்வி சார்ந்த விஷயத்தை அவ்வப்போது பதிவிட்டு வருபவர் நண்பர் செங்கோவி. அடிப்படை குழாயியல் குறித்து அவரிட்ட புதிய பதிவை படிக்க:

அடிப்படை குழாயியல்

நீதி: ஹிட்ஸ், ரேங்கிங் போன்ற கிரீடங்களுக்கு குழாயடி சண்டை போடும் குறு,பெரு நில மன்னர்கள், நாட்டாமைகள், பெஞ்ச் கோர்ட் டவாலிகள்  எப்போதாவது கொஞ்சம் உருப்படியாகவும் எழுதினால் புண்ணியமாய் போகும்.
.............................................................

சின்ன கவு'ன்'டர்: 
வீரபாண்டி ஆறுமுகம் மறைந்த நாளன்று செய்தி சேனல்களை பார்த்தபோது கேப்டன் செய்திகள் அதனை ஒளிபரப்பிய அழகைக்கண்டு வெறுப்புதான் மிஞ்சியது. செய்தி வாசிப்பவர் பின்னணியில் குரல் தர தி.மு.க. கூட்டம் ஒன்றில் வீ.ஆறுமுகம் கோபத்துடன் மேடையில் இருந்து தொண்டர்களை அமைதி காக்க சொல்லும் காட்சியை மீண்டும் மீண்டும் ரிபீட் செய்தனர். ஏன்  அவர் குறித்து வேறு வீடியோ காட்சிகளே கிடைக்கவில்லையா? அரசியல் பகையை தீர்க்க ஒரு மனிதரின் இறப்பை கூட இந்த அளவிற்கு ஏளனம் செய்ய முடியும் என்பதை கேப்டன் செய்திகள் நிகழ்த்தி காட்டி உள்ளது.
.......................................................................

சங்க(ம)ம்:
சில மாதங்களுக்கு முன்பு சென்னை பதிவர் சந்திப்பு முடிந்த உடனேயே கருத்து சுதந்திரத்தை காக்க சங்கம் அமைப்பது குறித்து பதிவர்கள் ஆலோசனை செய்தனர். அப்போது சில 'ஒளிவட்ட' பதிவர்கள் 'ஹே...ஹே...சங்கமாம் சங்கம்' என்று நையாண்டி செய்தனர். ஆனால் சமீபகாலமாக ட்விட்டர், பேஸ்புக் நண்பர்கள் சிலர் கைது செய்யப்படுவதை கண்ட பிறகு 'ஆமாய்யா. சங்கம் ஒன்னு தேவைதான்' என்று யோசிக்க ஆரம்பித்து உள்ளனராம். பிறர் முன்னெடுக்கும் காரியத்தை போகிற போக்கில் விமர்சிக்கும் மேதாவிகளே இனிமேலாவது உங்கள் புத்தியை சரியாக சாணை பிடிக்கவும்.
.......................................................................

தில்: 
டூப் மற்றும் கிராபிக்ஸ் உதவியுடன் எந்திரன் ரஜினி , குருவி விஜய் போன்ற அசகாய சூரர்கள் காட்டிய வித்தை எல்லாம் இந்த மும்பை தீரர்களின் அசல் அதிரடிக்கு முன்பு எம்மாத்திரம்:


...........................................................................


                                                          

Friday, November 23, 2012

ஓட்டை கேடயமும், உடைந்த வாளும் 
'செத்தான்டா அரக்கன். இப்படி செஞ்சாத்தான் நம்ம யாருன்னு ஒலகத்துக்கு தெரியும்' என்று கைத்தட்டலை பெற்று வருகிறது இந்திய அரசு. அஜ்மல் மரணம் அடைந்ததன் மூலம் தீவிரவாதிகள் மிரண்டு விடுவார்கள். இந்தியாவில் இது போன்ற செயல்கள் இனி வெகுவாக குறையும் என்று காலரை தூக்கி விடும் முன்பாக சுடும் நிஜங்களை அறிந்து கொள்ளே ஆக வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. தேசம் அமைதிபூங்காவாக திகழ இரண்டு மாபெரும் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காணாமல் எவரும் நிம்மதி பெருமூச்சு விட முடியாது என்பதே நிதர்சனம். ஒன்று நமதுயிர் காக்க தன்னுயிரை பலி தரும் NSG கமாண்டோ உள்ளிட்ட போர் வீரர்களின் தியாகத்திற்கு அரசு காட்டும் அசட்டு மரியாதை. மற்றொன்று 26/11 மும்பை நிகழ்விற்கு பின்பும் தேச பாதுகாப்பில் பெரியளவில் முன்னேற்றம் இன்றி கிடக்கும் துர்பாக்கிய நிலை. 

26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு சில வாரங்கள் கழித்து சம்பவம் நடந்த இடங்களை ஆய்வு செய்து பார்த்தது ஒரு ஆங்கில செய்தி சேனல். செயல்படாத சி.சி.டி.வி. உள்ளிட்ட சோதனைக்கருவிகள், எவரும் துப்பாக்கியுடன் எளிதில் ஊடுருவும் அளவிற்கு உஷார் நிலையில் இல்லாத செக்யூரிட்டி போன்ற குறைபாடுகளுடன் அவ்விடங்கள் இருந்ததாக ஆதாரத்துடன் செய்தி வெளியானது. தற்போதும் அந்நிலையில் பெரிய மாற்றம் இல்லை என மீண்டும் நிரூபித்துள்ளது இந்திய டுடேயின் ஆய்வு. பாகிஸ்தானில் தற்போதும் 42 தீவிரவாத முகாம்கள் உள்ளதாகவும், 750 நபர்கள் இந்தியாவில் ஊடுருவ காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்தியன் முஜாஹிதீன் எனும் தீவிரவாத அமைப்பின் தலைவன் தில்லியில் ஆறுமாதம் தங்கி இருந்து எங்கெல்லாம் குண்டு வைக்கலாம் என்று திட்டம் வகுத்து விட்டு சென்று இருக்கிறானாம். இது எப்படி இருக்கு?

கொஞ்ச காலத்திற்கு முன்பு வரை இன்டர்நெட் மற்றும் அலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளும் தீவிரவாதிகளை வலைபோட்டு பிடித்து வந்தது நமது உளவுத்துறை. தற்போதோ இந்திய உளவாளிகளுக்கு டேக்கா தந்து விட்டு சாட்டிலைட் போன் வழியாக கடினமான சங்கேத மொழியில் பேசி வருகின்றனர் அவர்கள். கூகிள் க்ராஷ் ஆனால் RAW பெரிய பின்னடைவை சந்திக்கும். அந்த அளவிற்கு அப்டேட் ஆகி இருக்கிறது என்றால் பார்த்து கொள்ளுங்கள். சமீபத்தில் நடந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டிங்கில் 'ட்விட்டர் மூலம் வன்செயல் குறித்த பரிமாற்றங்கள் டெர்ரர் க்ரூப் வாயிலாக நடந்து வருகிறது' என்று எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி சொல்ல 'ட்விட்டரா. அது என்னப்பா' ரீதியில் கேள்வி கேட்டனராம் பல அதிகாரிகள். அது சரி..அவர் என்ன சசி தரூரின் பால்லோயரா? இல்லை தமிழகத்தில் இருக்கும் சமூக வலைத்தள ஓனரா? பொறுமையாக தெரிந்து கொள்ளட்டும் பாவம்.

26/11 மூலம் இந்தியா பாடம் கற்றதோ இல்லையோ மற்ற தேசங்கள் இந்த நிகழ்வை பாடமாக வைத்து தங்கள் பாதுகாப்பை வலுப்படுத்தி கொண்டன. 2010 ஆண்டே 'மல்டிப்ள் அசால்ட் கவுன்டர் டெர்ரரிஸம் ஆக்சன் கேபபிளிட்டி' எனும் வியூகத்தை நடைமுறைப்படுத்த துவங்கி விட்டது அமெரிக்கா. மும்பை சம்பவம் நடந்தபோது இந்தியா எப்படி கோட்டை விட்டது என்பதை ஆய்வு செய்து அது போன்ற ஒரு நிகழ்வு தனது தேசத்தில் நடக்காமல் இருக்க அமெரிக்கா எடுத்த முன்னெச்சரிக்கை முயற்சி இது. அது போல உடனே உஷார் ஆனது நம்ம தம்பி பங்களாதேஷ். தாக்காவில் தாக்குதல் நடந்தால் சமாளிக்க உடனே இரண்டு ஹெலிகாப்டர்களை வாங்கிப்போட்டு விட்டது. அதே சமயம் மும்பை போலீஸ் அரசிடம் 6,000 சி.சி.டி.வி. கேமராக்களை கேட்டு இன்னும் தேவுடு காத்து கிடக்கிறது.  

 இப்படி இன்னும் ஏராளமான ஓட்டைகள் நமது கோட்டையில். உச்சகட்ட கொடுமையாக ஆறு கோடி செலவு செய்து வீரர்களுக்கு வாங்கப்பட்ட 80 Bomb Suit எனப்படும் பாதுகாப்பு கவசத்தில் 44 உடைகள் சீனாவின் போலி தயாரிப்பாம். சப்ளையரை விசாரித்ததில் 'ஆறு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்துவிட்டுதான் இத்தவறை செய்தேன்' என்று ஒப்புக்கொண்டு உள்ளான்.  
  
இதே நிலை நீடித்தால் பன்மோகனும், பாதுகாப்பு மந்திரி தந்தோனியும் இப்படித்தான் பேச வேண்டி வரும்:

எதிரி நாட்டான்: டேய்ய்ய்ய்ய்.....புலிகேசி....'

'ஐயோ..கேவலம் எறும்பு சைஸ் நிலப்பரப்பை ஆளும் இவன் விடும் சத்தத்தில் என் ரத்தமெல்லாம் சட்டென்று நிற்கிறதய்யா. யுத்தம் என்று ஒன்று வந்தால் என்ன ஆகும்...என்ன ஆகும். அமைச்சரே எனக்கு காய்ச்சல் அடிக்கிறது தானே'

'ஆம் மன்னா. என்னைப்போலவே தங்களுக்கும் காய்ச்சல் அடிக்கிறது'

'நாம் யாருக்கு என்ன தீங்கு செய்தோம். வாய் திறந்து கொட்டாவி கூட விட்டதில்லையே. அந்த லஸ்கர்-ஈ-தோய்பா கும்பல் தங்கள்  திருவிளையாடலை நம்மிடம்தான் காட்ட வேண்டுமா?'

போர்முனையில் பாதுகாப்பு உடையை சரிபார்க்கிறார் பன்மோகன்...

'என்னடா இது...ரங்கநாதன் தெரு பிளாட்பார்ம் ரெயின் கோட்டை விட மெல்லிதாக இருக்கிறது. எங்கே அந்த ட்ரெஸ் சப்ளையர்...'

சப்ளையர் வருகிறான்.

'என்னடா இது? ஆபத்தின் விளிம்பில் ஒரு மன்னன் தத்தளிக்கும்போது அனைத்து தற்காப்பு கவசங்களின் மீதும் மேட் இன் சைனா என்று போட்டுள்ளதே'

'எல்லாம் சரியாகத்தான் உள்ளது மன்னா. உங்களை ஏமாற்றத்தான் நேரம் கூடி வரவில்லை'

'அங்கே எதிரிகள் கூடிவிட்டார்களடா? அதற்கு என்ன செய்வது? தந்தோனி.. இந்த நயவஞ்சகனை ஒரு நாள் எனது சிம்மாசனத்தில் அமர வையுங்கள். மீடியா, எதிர்க்கட்சி, மக்கள் என அனைத்து தரப்பினரும் காரி துப்பினால் எப்படி வயிற்றை கலக்கி எடுக்கும் என்பதை பட்டுணரட்டும்.'

எதிரி நாட்டான்: என்ன கசாப்பை கசாப்பு கடைக்கு அனுப்பி விட்டாயா? எனக்கு ஓலை அனுப்பாதது ஏனடா?

'குரியர் அனுப்பினால் ஹிஸ்புல் முஜாஹிதீன் கூட்டம் போஸ்ட்மேனை வழியிலேயே மடக்கி பிடுங்கி விடுவார்கள் என்பதால் FAX அனுப்பினேனே? அது கூடவா வரவில்லை?

'இந்த கதையெல்லாம் என்னிடம் வேண்டாம். போட்டு விடுவேன்'   

'மகாபிரபு கோவப்பட வேண்டாம். எனது தேசத்தின் பாதுகாப்பை 100% ஸ்ட்ராங் செய்யும் வரை வெள்ளைக்கொடி காட்டுவதை தவிர வழியில்லை எனக்கு'

காங்கிரஸ் அல்லக்ஸ்:

"ஆஹா...டெர்ரர் கும்பலுக்கே டெர்ரர் காட்டியதால் இன்று முதல் நீ 'இத்தாலி அன்னை கண்டெடுத்த புனுகுப்பூனை' என்று போற்றப்படுவாய்.

தொடரும்............. 
..............................................................

News Source: India Today Weekly Magazine.

Thursday, November 22, 2012

பாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்       
ஆயிரம் ஸ்டார்கள் தமிழ்த்திரையில் மின்னி மறைந்தாலும் என்றும் நம்பர்  1 சூப்பர் ஸ்டார் என்றால் அது எங்கள் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்கள் மட்டுமே. தல நடித்த ஹரிதாஸ் 1944,1945,1946 என மூன்று தீபாவளிகளை கண்டு மெட்ராஸ் பிராட்வே தியேட்டரில் பின்னி பெடலெடுத்தது உலகறிந்த செய்தி. சம்பவம் நடந்த அந்த கால கட்டத்தில் எந்தப்பக்கம் திரும்பினாலும் மக்களை இசையால் கட்டிப்போட்ட ஹரிதாஸ் பாடல்களை பற்றிய ஒரு பார்வைதான் இந்த பதிவின் நோக்கம்,லட்சியம் மற்றும் கடமை.

மொத்தம் 13 பாடல்கள் மட்டுமே இப்படத்தில் இருப்பது பெருங்குறை. தலைவர் படத்தில் மினிமம் 25 பாட்டுகள் கூடவா இல்லாமல் போக வேண்டும். அந்த மன ரணத்தை இவ்விடத்தில் 8.5 ரிக்டர் ஸ்கேல் அதிர்வுடன் பதிவு செய்கிறேன். வெஸ்டர்ன்,  ராப், ராக் என்று என்னதான் குரங்கு பல்டி அடித்து யூத்களை சினிமாக்கார்கள் காலம் காலமாக கவர் செய்ய நினைத்தாலும் 'மன்மத லீலையை' பாடலின் பீட்டை பீட் செய்ய இந்த நொடி வரை எதுவும் பிறக்கவில்லை. பாடலின் துவக்கத்தில் மலரம்பால் தலைவரின் தலைக்கு மேல் இருக்கும் ஆர்ட்டினை எவர்க்ரீன் கனவுக்கன்னி டி.ஆர்.ஆர்(ராஜகுமாரி) தகர்க்க அதிலிருந்து புஷ்பங்கள் தலைவர் மேல் கொட்ட 'மன்மத லீலையை' என்று பாட ஆரம்பிக்கிறார். அலங்கரிக்கப்பட்ட கட்டிலில் சாய்ந்து கொண்டே அவர் பாட, இவர் ஆட..ஆஹா. என்னய்யா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி, பத்மினி? ரெண்டு ஸ்டெப் பின்னால நிக்க சொல்லுங்க. பூவை முகர்ந்து நம்ம ஹீரோ நாயகி மேல் வீச, அதை அவர் கச்சிதமாக கேட்ச் பிடிக்க மன்மத ரசம் 48 மணிநேரத்திற்கு நம் நெஞ்சில் சொட்டோ சொட்டென சொட்டுகிறது. 

அடுத்த மெகா ஹிட் பாடல் 'கிருஷ்ணா முகுந்தா முராரே'. ஆடியோ வால்யூமை ம்யூட்டில் வைத்தால் கூட காதில் கொய்யென கேட்கும் குரல் வளத்துடன் எம்.கே.டி. பாடியிருப்பார். தனது தாய்க்கு கால் அமுக்கிக்கொண்டு இருக்கும் தலைவரை கலாய்க்க முனிவர் வேடத்தில் வருவார் கிருஷ்ணர். அதை மனக்கண்ணில் கண்டுபிடித்து அவரை போற்றி பாடும் பாடல். தாய் தந்தையருக்கு கால் கழுவிவிட்டு சேவை செய்யும்போது இவர் பாடும் பாடல்தான் ' அன்னையும் தந்தையும்'. 'எவன்டி உன்ன பெத்தான்' என்று விவஸ்தை இன்றி அலறும் போக்கெத்த பயல்களுக்கு சாட்டையடி இந்த பாடல்.

அடுத்ததாக பகட்டுடை உடுத்தி தலப்பாகட்டுடன் குதிரையில் நகர்வலம் வரும் பாகவதர் தெருவில் செல்லும் பெண்களை சைட் அடித்து ரவுசு கட்டும் அல்டிமேட் ஹிட் பாடல் வாழ்விலோர் திருநாள். 'வாழ்விலோர்ர்ர்ரர் திருநாள்ள்ள்ள்ள்' என்று அண்ணன் அசத்தும்போது துபாய் புர்ஜ் டவரின் 100 வது மாடியில் நள்ளிரவு 2 மணிக்கு குறட்டை விட்டு தூங்குபவனை கூட அலறி எழ வைக்கும் எட்டுக்கட்டை குரல்வளம் ஓய் அது.          

                                                            
'என்னுடல் தனில் ஈ மொய்த்தபோது' எனும் பாடல் ஒரு சோகத்தாலாட்டு. அன்னை, தந்தையை நினைத்துருகி பாகவதர் 'என் பிழை பொறுத்தருள்வீரோ' என நெகிழ்ந்தவண்ணம் தொடர்கிறார் இப்படி: 'அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன். அறிவில்லாமலே நான் நன்றி மறந்தேன்' என தனது தவறை எண்ணி கண் கலங்கும் காட்சி அது. 'டாடி மம்மி வீட்டில் இல்ல'...பாட்டாய்யா எழுதறீங்க. படுவாக்களா!!

'உள்ளம் கவரும் என் பாவாய். நான் உயர்ந்த அழகன்தானோ?' எனும் ரொமாண்டிக் பாடல் ஹீரோயிசத்தின் உச்சம். உச்சம். உச்சம் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறேன் சபையோரே. தன்னை அம்சமாக அழகுபடுத்திக்கொண்டு தன்னழகை பற்றி தானே புகழாமல் நாயகியிடம் தன்மையாக கேட்கிறார் தலைவர் இப்பாடலில். இப்படி தொடர்கிறது அந்த கீதம்...

தல: 'உலகெல்லாம் (என்னை) புகழ்வதேன். உண்மை சொல் பெண்மானே'

தலைவி: 'யாரும் நிகரில்லையே. மாறா மன மோகனா'

தல: 'வெறும் வேஷமே அணிவதால் அழகே வந்திடாதே'

(நான் அலங்கார உடை அணிந்து டச் அப் செய்வதால் மட்டுமே அழகாகி விடுவேனோ என்று அடக்கமாக கேட்கிறார் தல).

என்னை மிகவும் கவர்ந்த தேனமுத ரொமாண்டிக் கிக் கீதமிது நண்பர்களே.

போனஸாக ரசிகர்களுக்கு 'நடனம் இன்னும் ஆடனும்' எனும் பாட்டுமுண்டு.  கலைவாணர், டி.ஏ. மதுரம் நகைச்சுவை நடனமாடி பாடியிருக்கும் கானம் இது.

இது போக இன்னும் சில வசந்த கீதங்களை உள்ளடக்கி இசை ரசிகர்களை குஷியோ குஷிப்படுத்துகிறது ஹரிதாஸ் ஆடியோ. இத்துடன் பாகவதர் புராணம் ஓயப்போவதில்லை. பொங்கி வரும் கண்ணீரை துடையுங்கள். விரைவில் ஹரிதாஸ் பட விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன். 

ஹேய்...வாழ்விலோர் திருநாள்!!
.......................................................................  

       


Wednesday, November 21, 2012

பதிவர் சுரேகாவின் - தலைவா வா!


                                                                                                  
           
பதிவர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர், பாடலாசிரியர் இப்படி இன்னும் பல தளங்களில் சிறப்பாக செயல்படும் சுரேகா அவர்கள் எழுதிய நூல்தான் 'தலைவா வா'. தலைப்பை பார்த்தால் அரசியல் சார்ந்த நூலோ என்று எண்ணி விட வேண்டாம். வேலை நிர்வாகத்தில் சரியான தலைவனை எப்படி உருவாக்குவது என்பதை எடுத்துரைக்கும் படைப்பிது. கவுண்டர் சொன்னது போல 'தல இருக்கறவன் எல்லாம் தலைவன் ஆகி விட முடியாது'. அதெற்கென சில பல தகுதிகள் குறிப்பாக தொழில் நேக்கு தேவை என்பதை உணர்த்துகிறது இந்நூல். 

எத்தனையோ நூல்கள் இந்த ரகத்தில் வந்து கொண்டிருக்கும்போது இதை மட்டும்  தேர்வு செய்ய என்ன காரணம்?.....சுரேகா. வேறொன்றுமில்லை. என்ன சொல்கிறது தலைவா வா? பார்க்கலாம் வாருங்கள்.  கணினி வன்பொருள் நிறுவனம் ஒன்றின் தமிழக விற்பனைப்பிரிவின் தலைவராக இருக்கிறார் விக்னேஷ். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்த அவரது அணியில் திடீர் சரிவு. மேலிடம் தந்த மோசமான ரிப்போர்ட்டால் நிலை குலைந்து போகிறார் விக்னேஷ். நேர்மையாக செயல்பட்டும் ஏனிந்த அவமானம் என்று குழம்புகிறான். விரைவாக தனது அணியின் செயல்பாட்டை மேம்பட செய்ய வேண்டிய கட்டாயம்? தீவிர சிந்தனைக்கு பிறகு ஒரு கார்ப்பரேட் குருவிடம் சிஷ்யனாக சேர்கிறான். அவரது ஆலோசனையின் பேரில் எடுக்கும் முடிவுகள் நிறுவனத்திற்கு எப்படி சாதகம் ஆகிறது என்பதே கதை.

சிறந்த கார்ப்பரேட் குருவின் அலுவலகம் எப்படி இயங்கும், அவருடைய பயிற்சி  முறைகள் எவ்வாறு இருக்கும் போன்ற பல விஷயங்களை சுரேகா அவர்கள் இப்புத்தகம் வாயிலாக பகிர்ந்து இருப்பது புதிய தலைமுறை அணி நிர்வாகிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 'பார்க்கலாம் என்று எடுப்பீர்கள். படித்து முடித்துதான் எழுவீர்கள்' என்று பின் அட்டையில் சொன்னது உண்மைதான். சாமான்யர்களுக்கும் புரியும் எழுத்து நடை, ஆரம்பம் முதல் இறுதி பக்கத்திற்கு சற்று முன்பு  வரை விக்னேஷ் குழம்பினாலும் வாசிப்பவர்கள் தெளிவாக பயணத்தை தொடரும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கும் (திரைக்)கதை போன்றவை சிறப்பு.

                                                                
அதே நேரத்தில் ஆசிரியரிடம் ஒரு சில கேள்விகள் கேட்டாக வேண்டியும் இருக்கிறது: தமிழக பிரிவிற்கே தலைமைப்பதவி வகிக்கும் நபராக இருக்கிறார் விக்னேஷ்.அந்த நிலைக்கு வரும்போதே தனது வேளையில் பல அனுபவங்களை தாண்டித்தான் வந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் மிகவும் வெள்ளந்தியாக மனைவி, குரு போன்றோர் எந்த யோசனை தந்தாலும் அதை அலுவலகத்தில் செயல்படுத்த பார்ப்பது உறுத்தலாக இருக்கிறது. அவர்களின் யோசனைகளை உள்வாங்கி தன்னிடம் உதிக்கும் எண்ணங்களையும் இணைத்து அவர் பணியாற்றி இருப்பதாக சொல்லி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். குருவின் ஆலோசனைகளை சிரமேற்கொண்டு விக்னேஷ் செய்யும் மாற்றங்களால் கிடைக்கும் தொடர் வெற்றிகள் ஆங்காங்கே விக்ரமன் படம் பார்க்கும் பீலிங்கை தருவதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக கையாளப்பட்டு இருக்கலாம்.  

தனக்கு கீழே வேலை செய்யும் நபர்களிடம் அன்பாக பேசி அவர்களது குடும்ப பிரச்னைகள் சிலவற்றை தீர்க்க வேண்டியதும் தலைமைப்பண்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இது அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்துதல் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் அணித்தலைவர் காட்டும் அன்பையே தனக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு அடிக்கடி லீவு போடுதல், விருப்பப்படும் அணிக்கு/வேலை நேரத்திற்கு மாற்றம் கேட்டு தொந்தரவு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை தலைவருக்கு வைத்து தர்மசங்கடத்திற்கு ஆளாக்கும் நபர்களுக்கு பஞ்சமில்லை அல்லவா. 

அதே போல பயிற்சி நடக்கும் கால கட்டத்திலேயே அலுவலகத்தில் தான் கற்ற பாடத்தை உடனுக்குடன் நடைமுறைப்படுத்துகிறார் விக்னேஷ். அனைத்தும் ஆக்கபூர்வமான மற்றும் ஊழியர்கள் நலன் சார்ந்தவை என்றாலும் 'என்னடா இது நேற்று வரை கண்டிப்புடன் இருந்தவர் திடுதிப்பென நம் மீது பாச மழை பொழிகிறார். எலி அம்மணமாக போகிறது என்றால் சும்மாவா? அவரது வேலை ஆட்டம் காண்கிறது. அதை சரிக்கட்ட நம்மிடம் குலாவுகிறார்' என்று சில ஊழியர்கள் கண்டிப்பாக சந்தேகிப்பார்கள். அவர்களிடம் இருந்து 100% உழைப்பை வாங்குவது லேசுப்பட்டதல்ல. முன்பு வாங்கிய அடிக்கு பதில் தர காத்திருப்பார்கள் அவர்கள். இதனால் அவர்களது வேலைக்கும்தானே ஆபத்து என்று கேட்கலாம்? 'போனால் போகட்டும். கீழ்நிலை ஊழியன் நான். அடுத்த வேலைக்கு அடித்தளம் போட்டவாறே இந்த 'செயலையும்' செய்து முடிப்பேன்' என்று கங்கணம் கட்டிக்கொண்டு கலகக்குழு அமைப்பவர்கள் பரவலாக உண்டு. இதையும் விக்னேஷ் எப்படி சமாளிக்கிறார் என்பதை சுரேகா எடுத்து சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். இவையனைத்தும் எனது கருத்துக்கள் மட்டுமே. ஆலோசனை அல்ல சுரேகா சார். :)

பணிச்சிக்கலில் தவிக்கும் உயரதிகாரிகள் சிலருக்கும், புதிதாக தலைமைப்பொறுப்பை ஏற்கவிருக்கும் இளைஞர்கள் பலருக்கும் சந்தேகமின்றி உபயோகமான நூலாய் இந்த 'தலைவா வா' இருக்கும் என்பது உண்மை. நேர்த்தியான அச்சு, தரமான தாள், சரியான இடைவெளி விட்டு பதிக்கப்பட்டு இருக்கும் சொற்கள் போன்றவை இப்புத்தகத்தின் கூடுதல் சிறப்புகள். ஓரிரு இடங்களில் இருக்கும் சொற்பிழைகள் தவிர்த்து வேறெந்த குறையுமில்லை. விலை 80 ரூபாய்(மட்டுமே). 

அலுவலகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களை இன்னும் யதார்த்தமாக, இக்கால இளைஞர்கள் டபுள் சபாஷ் போடும் விதமாக ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்பது சுரேகா அவர்களிடம் நான் விடுக்கும் கோரிக்கை. அது அவர் எழுதவிருக்கும் அடுத்த படைப்பில் இருந்தால் கூடுதல் மகிழ்ச்சி. 

இறுதியாக...

அலுவலக வேலை பார்க்கும் நண்பர்கள் 'தலைவா வா' படித்து விட்டு பிறருக்கும் தாராளமாக பரிந்துரை செய்யலாம்/பரிசளிக்'கலாம்'. 
..........................................................................                           

Tuesday, November 20, 2012

ஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்       
கடந்த ஞாயிறன்று வாணி மகாலில் பார்த்த நாடகம் ரோஷினி பைன் ஆர்ட்ஸ் வழங்கிய சுதேசி ஐயர். ஒய்.ஜி.மகேந்திராவின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸின் 60 ஆம் ஆண்டில் 59 வது படைப்பாகும் இது. தேசப்பற்றுள்ள சங்கரன் ஐயர் வீட்டில் துவங்குகிறது நாடகம். காலம் 2008 ஆம் ஆண்டு .சங்கரனைத்தவிர அவருடைய மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் அனைவரும் நவீன வாழ்விற்கு அடிமைப்பட்டு போக அதை எதிர்க்கும் சங்கரனை முதியோர் இல்லத்தில் சேர்க்க முடிவு செய்கின்றனர் அனைவரும். அந்நேரத்தில் விஞ்ஞானி நண்பன் ஒருவனின் உதவியால் மொத்த குடும்பத்தையும் 1945 ஆம் ஆண்டிற்கு டைம் மிஷின் மூலம் அழைத்து செல்கிறார் சங்கரன். முதலில் எவ்வித வசதியும் அற்ற பழங்காலத்தை வெறுக்கும் குடும்பம் அதன் பின் எப்படி மனம் மாறுகின்றனர் என்பதே கதை.

சுதேசியாக ஒய்.ஜி. கதாபாத்திரம் டெய்லர் மேட். நடிப்பதோடு அவ்வப்போது இசை எங்கே பயன்படுத்த படவேண்டும் என்பதை கையால் சைகை செய்து ஒலி அமைப்பாளரை வேலை வாங்குவதையும் பார்ட் டைமாக மேடையில் செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு. அது எந்த விதத்திலும் நாடகம் பார்ப்பவர்களை உறுத்தாமல் இருந்தது பாராட்டத்தக்கது.  அவருடைய மனைவியாக பழம்பெரும் நடிகை பிருந்தா. வழக்கம் போல் சிறந்த நடிப்பு. மேடை நாடகங்களில் என்னை கவர்ந்த ஜாம்பவான்களில் இவரும் ஒருவர். இதற்கு முன்பாக 'நாடகம்' எனும் தலைப்பில் நான் பார்த்த ஒய்.ஜி.யின் மேடை நாடகத்தில் நெகிழ வைக்கும் கேரக்டரில் நடித்து கைதட்டி வாங்கிய பிருந்தா  இம்முறை கலகலக்க வைத்துள்ளார். 1945 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எப்படி இருந்தது என்பதை வெறும் வசனங்கள் மூலம் ஒரே ஒரு செட் போட்டு கண் முன் கொண்டு வந்ததை பாராட்டத்தான் வேண்டும்.     

ஒய்.ஜி.யின் மச்சினன் நித்யாவாக வருபவர் ஆரம்ப காட்சியில் ஒவ்வொரு மாநிலம் சார்ந்த நடிகர்கள் இறக்கும் தருவாயில் எப்படி வசனம் பேசுவர் என்று நடித்து காட்டியது அருமை. சுதேசியின் மகன்களாக வரும் இருவரும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தம்மாலானதை செய்துள்ளனர். என்னை கவர்ந்த வசனங்களில் ஒன்று: 1945 ஆம் ஆண்டு தனது மூத்த மகனை பார்த்து... 

சுதேசி: ஏண்டா 2008 - க்கு போகணும்னு கதறு கதறுன்னு கதறுவியே. போலாமா?

மகன்: வேண்டாம்பா. இப்பவும் 'கதர், கதர்'னுதான் கதறறேன்.     

விடுதலைப்போராட்டத்தை கண்டு மகன் பேசும் வசனம் இது. அதே சமயம் ஒரு உறுத்தலான காட்சியும் இருந்தது. தனது சாட் தோழி சாத்விகாவை வீட்டிற்கு அழைக்கிறான் மூத்த மகன். அவர் ஒரு திருநங்கை என்பதை அறியாமல். நேரில் கண்டதும் அனைவரும் அதிர்கின்றனர். அவரை பகடி செய்வது போல் வரும் காட்சியை தவிர்த்து இருக்கலாம். இன்னொரு முக்கியமான வசனம் ஒன்றும் வந்து போகிறது. 1945 இல் வண்டி இழுக்கும் தொழிலாளி ஒருவர் சுதேசி வீட்டு வாசலில் நின்றவாறு 'அய்யா நான் உள்ள வரலாம்களா?' என்று கூச்சத்துடன் கேட்க அதற்கு சுதேசி(ஒய்.ஜி) சொல்லும் பதில்:

'நாங்க எப்ப உங்களை உள்ள வர வேணாம்னு சொன்னோம். நீங்களே வெளியே இருந்துட்டு வராம தயங்குனா நாங்க என்ன செய்ய முடியும்?'

இவ்வாண்டு(2012) இறுதியில் பெரியார் தொண்டர்கள் மயிலை கபாலீஸ்வரர் கோயில் கருவறை நுழைவு போராட்டம் நடத்த போகிற சமயத்தில் இந்த வசனம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது (இதே வசனம் முன்பே சுதேசி ஐயரில் வந்திருக்கும். ஆனால் தற்போது டைமிங் கச்சிதமாக பொருந்தி உள்ளது). இம்மேடை நாடகத்தில் எந்த ஒரு இடத்திலும் தொய்வின்று அனைவரும் நடித்து இருந்தனர். புதிதாக இந்த 'சுதேசி ஐயரை' பார்ப்பவர்களுக்கு அதிலும் குறிப்பாக இளையோருக்கு 'என்னடா இது ஏகத்துக்கும் கருத்து சொல்கிறார்கள். நகைச்சுவை கூட ஆஹா ஓஹோ என்றில்லையே' எனும் எண்ணம் வரலாம். அதற்கு காரணங்கள் இரண்டு: ஒன்று பெரும்பாலான நாடக வசனங்கள் சில பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதி அரங்கேற்றம் செய்யப்பட்டவையாக இருப்பது. மற்றொன்று எஸ்.வி.சேகர் அவர்கள் நாடகத்தில் நடப்பு சம்பவங்களுக்கு ஏற்ப (குறிப்பாக அரசியல்) ஒரே நாடகத்தின் முந்தைய வசனங்களில் மாற்றம் ஆங்காங்கே இருக்கும். ஆனால் ஒரு சில இடங்களை தவிர வசனத்தில் யாதொரு மாற்றமும் செய்யாமல் இருப்பது ஒய்.ஜி. அவர்களின் ஸ்டைல் என்பது தெளிவாக தெரிகிறது. 

எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் ஆகியோரின் படைப்புகளில் டைம்பாஸ் நகைச்சுவை மேலோங்கி இருக்கும். ஆனால் ஒய்.ஜி.பி/ஒய்.ஜி.எம்.மின்  யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் படைப்புகளில் பெரும்பாலும் கருத்துகளுடன் கூடிய நகைச்சுவைகள் தவறாமல் இடம் பிடிக்கின்றன. இந்த காலத்தில் யார் கருத்து கேட்பார்கள் என்றெண்ணாமல் U.A.A நாடகங்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டு வருகின்றன. இதன் மூலம் வசூலில் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும் என்பது அறிந்தும் விடாப்பிடியாக கருத்துள்ள நாடகங்களை அரங்கேற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் & கோவிற்கு வாழ்த்துகள்.            

சென்னையில் நடக்கும் மேடை நாடகங்கள் குறித்து கூடுமானவரை நான் எழுதி வருவதை அறிந்த ஒய்.ஜி. மகேந்திரன் அவர்கள் சென்ற முறை நாடகம் பார்க்க சென்றபோது என்னை ஊக்குவித்தது மறக்க இயலாது. இம்முறையும் குறைந்த கட்டண டிக்கட்டில் பின் வரிசையில் அமர்ந்து இருந்த என்னை அழைத்து முன்வரிசையில் உட்கார வைத்து நாடகத்தை ரசிக்க வைத்தார். அவருக்கு எனது நன்றிகள். 

தொடர்புடைய பதிவு:
U.A.A வின் 60 ஆம் ஆண்டு விழா காணொளிகள் காண:.....................................................................

                                  

Friday, November 16, 2012

Son of Sardaar/Maryada Ramanna        
சூப்பர் இயக்குனர் ராஜமௌலியின் பம்பர் ஹிட் தெலுங்கு படமான மரியாத ராமண்ணா தான் ஹிந்தியில் சன் ஆப் சர்தார். அஜய் தேவ்கன், சொனாக்ஷி சின்ஹா மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். ஷாருக்கின் காதல் ரசம் சொட்டும் 'ஜப் தக் ஹை ஜான்' படத்துக்கு போட்டியாக ஒரு தமாசு படத்தை தீபாவளிக்கு பற்ற வைக்க பார்த்து உள்ளனர். தெலுங்கில் ரெட்டி. இங்கே சர்தார். அங்கே ராயல் சீமா. இங்கே பஞ்சாப். டிபன் ரெடி.

சொந்த நிலத்தை விற்க லண்டனில் இருந்து பஞ்சாபிற்கு திரும்புகிறான் ஜஸ்ஸி(தேவ்கன்). ட்ரெயினில் வரும்போது நாயகியை கண்டதும் நட்பு/காதல் லேசாக தொற்றிக்கொள்கிறது.அவளுடைய பிரம்மாண்ட வீட்டில் விருந்தாளியாக செல்கிறான். கட். இப்போது ஒரு ப்ளாஸ்பேக். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பங்காளி வெட்டு குத்தில் தனது சகோதரனை இழக்கிறார் நாயகியின் தந்தை பில்லு(சஞ்சய் தத்). கொன்றது ஜஸ்ஸியின் தந்தை. அவரையும் வெட்டிப்போடுகிறது பில்லுவின் க்ரூப். வாரிசான நாயகன் மட்டும் எஸ்கேப். அவனையும் கொன்று வம்சத்தை அழிக்க சகோதரன் மகன்களுடன் வெறியுடன் காத்திருக்கிறார் பில்லு. தாங்கள் தேடிய ஆள் வீட்டுக்கு வந்த விருந்தாளி என்பதை அறிந்ததும் அவனை கொல்ல ஆயத்தம் ஆகிறார்கள். விருந்தாளியை வீட்டில் வைத்து கொள்வது ஆகாது என்பது பில்லு வீட்டார் மரபு. எனவே ஜஸ்ஸி வீட்டு வாசலை விட்டு வெளியேறும் தருணத்தை எதிர்நோக்கி கத்திகளுடன் காத்திருக்கிறது  அடியாட்கள் படை.  இதை அறிந்து கொண்ட ஜஸ்ஸி வீட்டுக்குள்ளேயே இருக்க என்னென்ன திட்டங்கள் போடுகிறான் என்பதே கதை.

சர்தார் கெட்டப்பில் நன்றாகத்தான் பொருந்துகிறார் தேவ்கன். படம் துவங்கியது முதல் இறுதி வரை 'சர்தார்'ன்னா தங்கம், சிங்கம் என்று புராணம் பாடியே நம்மை கொல்கிறார். முதல் மற்றும் கடைசி சீனில் ஷோ காட்டிவிட்டு மறைகிறார் சல்மான் கான். மரியாத ராமண்ணாவில் ராஜமௌலியின் மேஜிக் டச் இங்கு ஏகத்துக்கும் மிஸ் ஆகிறது. வில்லன்களை சீரியஸ் ஆட்களாக காண்பித்து நகைச்சுவை இழையோட காட்சிகளை நகர்த்தினார் அவர். இங்கோ வில்லன்கள் ஓவர் காமடி செய்தும், ஹீரோ 100% கிராபிக்ஸ் சண்டைகள் செய்தும் நம்மை கவர முயற்சித்து உள்ளனர். தெலுங்கில் சுனிலிடம் இருக்கும் அப்பாவி முகபாவம் தேவ்கனுக்கு பெரிதாய் கை குடுக்கவில்லை. 


தந்தையின் மரணத்திற்கு காரணமானவானின் வாரிசான தேவ்கனை கொல்லும் வரை  கூல் ட்ரிங்க், ஐஸ்க்ரீம் சாப்பிட மாட்டோம் என்று மினி வில்லன்கள் சபதம் செய்வது, ஆண்ட்டி ஆன பின்பும் சஞ்சய் தத்தை ஜூஹி சாவ்லா மணம் செய்ய சுற்றிவருவது என பஞ்சாபி மசாலாக்களை தூவி உள்ளனர். இவையெல்லாம் தெலுங்கில் மிஸ். அதுவே அதன் பலம். அவ்வப்போது கிராபிக்ஸில் தேவ்கன் பறந்து அடிப்பது என்னதான் காமடி படம் என்றாலும் மிக செயற்கையாக தெரிகிறது. அதற்கு பதில் கதையில் மேலும் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குனர்.

சொனாக்ஷியுடன் ட்ரெயினில் தேவ்கன் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன. பஞ்சாபி மெட்டில் வரும் பாடல்கள் சுமார். க்ளைமாக்ஸில் வரும் 'போம் போம்' பாடல் மட்டும் துள்ளல். மரியாத ராமண்ணாவில் வரும் என்னேட்லகு, ராயே சலோனி, தெலுகம்மாயி, அம்மாயி என ஒவ்வொரு பாடலும் ரசனையான அனுபவம். பஞ்சாப் சொனாக்ஷியை விட ஆந்திர சலோனி அழகிலும், நடிப்பிலும் முன்னே நிற்கிறார். தந்தையின் இறப்பிற்கு ஹீரோவை பழிவாங்க காத்திருக்கும் ரெட்டி பிரதர்ஸ் நடிப்பும், கெத்தான லுக்கும் தெலுங்கில்தான் டாப். இது போன்ற பல ப்ளஸ்கள் சன் ஆப் சர்தாரில் இல்லாததால் சுமாரான காமடி படமாகிப்போகிறது. ஆந்திர மேஜிக் இங்கு மிஸ் ஆக ஒரே காரணம்தானே இருக்க முடியும். ஆம். அங்கே இயக்கியது தி ஒன் அண்ட் ஒன்லி 'ராஜ' மௌலி ஆயிற்றே!!        
............................................................................
                                                                   

Tuesday, November 13, 2012

அம்மாவின் கை(ப்)பேசி           
தலைப்பே நெகிழ்வாக இருக்கிறதே. படத்தை பார்த்து முடித்ததும் அம்மாவுக்கு ஒரு போன் செய்து ''அம்மா..என்ன மன்னிச்சுரும்மா. இந்த பாவி செஞ்ச பாவத்துக்கு பரிகாரமே இல்லம்மா. தீபாவளிக்கு நீ சுட்ட கேசரியை உருட்டி ஒடஞ்சி போன டேபிளுக்கு முட்டு குடுத்து உன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குன ராட்சசன் நாந்தாம்மா. நாந்தாம்மா..." என்று கதறி அழ ஒரு சந்தர்ப்பம் கிடக்கும் என்றெண்ணி மனக்கோட்டை கட்டி இருந்தேன். ஆனால் சினிமா, ட்ராமா இரண்டுக்கும் இடைப்பட்ட திரிசங்கு வகையறா படங்களை எடுக்கும் தங்கர் பச்சானின் இந்த மண்வாசனைப்படம் எனது கனவில் 200 லாரி மண்ணை கொட்டி விட்டது. 

தான் எழுதிய அம்மாவின் கைப்பேசி நாவலை படமாக்க அரும்பாடு பட்டிருக்கிறார் தங்கர். பார்த்த நாமும்தான். நெறியாள்கை, ஒளி ஓவியம், அடவுக்கலை(நடனம்) என தங்கரின் தமிழ்ப்பற்று டைட்டிலில் வியாபித்து இருக்க..தொடங்குகிறது கதை. ஏகப்பட்ட பிள்ளைகள் பெற்ற அம்மாவாக ரேவதி(தனிப்பிறவியில் எம்.ஜி.ஆரின் தங்கையாக வருபவர்). கடைக்குட்டிதான் அண்ணாமலை(சாந்தனு). வெட்டிப்பய. குடும்பமே அவனை தண்டச்சோறு என்று ஏச அம்மா மட்டும் 'நவம்பர் போயி டிசம்பர் வந்தா டாப்பா வருவான்' என்று ஆதரவு தருகிறார். ஒரு நாள் குடும்ப காது குத்து விழாவில் நகைகள் காணாமல் போக அதை அபேஸ் செய்தது சாந்தனுதான் என்று எண்ணி அவருடைய அண்ணன் செருப்பால் அடிக்கிறார். ஊரே வேடிக்கை பார்க்கிறது. அடி, அவமானம் இரண்டிலும் இருந்து மகனை காக்க அம்மா துடைப்பத்தால் அவனை லேசாக 'டச் அப்' செய்து வெளியே அனுப்புகிறார்.

ஸ்ஸ்..யப்பா. என்னடா இது 'சொல்ல மறந்த கதை'யில் பிரமிட் நடராஜன் தன் மருமகன் சேரனை தெருவில் தள்ளி செருப்பால் அடித்து காறி உமிழும் ஓவர் ஆக்டிங் காட்சி போல இருந்து விடுமோ என்று கொதித்து வீட்டுக்கு ஓட நினைத்தேன். நல்லவேளை சாந்தனுவை யாரும் துப்பவில்லை. அத்தோடு ஊரை விட்டு போகிறார் அவர். ஏழு ஆண்டுகள் அவரை எண்ணி அம்மாவும், மாமன் மகள் இனியாவும் உருகி இளைக்கின்றனர். 'இது ஆகுறதில்லை' என்று கடைசியில் இருட்டுக்கடை அல்வாவை ஹீரோவுக்கு பார்சல் அனுப்பிவிட்டு வீட்டில் பார்க்கும் நபரை கல்யாணம் செய்து கொள்கிறார் இனியா. 

நாயகன் பெயர் 'அண்ணாமலை'. அப்பறம் என்ன? படிப்படியாக உழைத்து வாழ்க்கையில் முன்னேறுகிறார் தம்பி. அம்மாவிற்கு ஒரு கைப்பேசியை அனுப்பி அதன் மூலம் அவ்வப்போது பேசுகிறார். சுமாராக நடிக்கிறார். தனக்கு கைவசமான தொடை நடுங்கி கேரக்டரில் தங்கர். இவர் உட்பட கிட்டத்தட்ட எல்லாரும் நடிப்பை ரைஸ்மில்லில் பதுக்கி வைத்துவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களோடு சேர்ந்து நாமும் கிளிசரின் போட்டு அழ எத்தனை அட்டெம்ப்ட் போட்டாலும் முடியவில்லை. 

கிராமத்து ஆடு, கோழி, நாய், படகுத்துறை, தெருக்கூத்து உள்ளிட்ட சகலமும் வழக்கம்போல் ஒளி ஓவியரின் படத்தில் ஆஜர். இசை ரோஹித் குல்கர்னி. ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லை. சாந்தனுவை பார்த்து அழகம்பெருமாள் 'சார்னு கூப்பிடாம ஐயான்னே கூப்பிடு. அதுதான் சரி. எந்த வெள்ளைக்காரன் சந்திச்சிகிட்டாலும் 'சார்' போடுறது இல்லை' வசனம் மட்டும் நன்று. 

அம்மாவின் கை(ப்)பேசியை மையமாக வைத்து உருக்கமான கதையை சொல்வார் இயக்குனர் என்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. தங்கரின் பிற படைப்புகள் ஏற்படுத்திய தாக்கத்தில் 50% கூட இப்படம் ஏற்படுத்தாது வருத்தமே. தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்டவராக இதில் தங்கர் நடித்து இருக்கிறார். மண்சார்ந்த கதைகளை சரியான சினிமாவாக பதிவு செய்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நெறியாலும் திறனை அடுத்த படைப்பிலாவது செவ்வனே செய்வாரா? எழுந்திரிங்க தங்கர். எழுந்திரிங்க.

'உங்களுக்கெல்லாம் டூ பீஸ் ட்ரெஸ் போட்டு தைய தக்கன்னு ஆடனும், ஹீரோ நூறு பேரை வெட்டனும். அப்பதான்டா பாப்பீங்க. தாய் மண் மேல பற்று இல்லாத பதருங்க. உங்களுக்கு இப்படி படம் எடுத்தா எப்படி பிடிக்கும்?'ன்னு சவுண்டு விட்டுட்டு  எத்தனை பேர் அருவாளை தூக்கிட்டு வீட்டு வாசலுக்கு வந்தாலும் சரி. ரெண்டுல ஒண்ணு பாத்துடறேன். படம் பாத்த எனக்கு இருக்குற வெறிக்கு....வாங்க. அப்ப தெரியும்!!!!      


அம்மாவின் கை(ப்)பேசி - (வெகுஜன) தொடர்பு எல்லைக்கு அப்பால்.  
.................................................................................
                                         

Monday, November 12, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (12/11/12)


பன்னீர் புஷ்பங்கள்: 

                                         
கடைசியாக பன்னீர் சோடா குடித்து எத்தனை ஆண்டுகள் ஆயின என்பது நினைவில் இல்லை. சமீபத்தில் திருவான்மியூர் தியாகராஜா(S2) தியேட்டரில் படம் பார்க்க சென்றபோது அதன் இடதுபுறம் இருந்த பெட்டிக்கடையில் தென்பட்டது பன்னீர்(கோலி) சோடா. விலை ரூ. ஐந்து. அப்போதைய பன்னீர் சோடாக்களில் இருந்த கிக் இதில் சற்று குறைவுதான். 
..........................................................................     
     
பசங்க: 
தீபாவளி ட்ரெயிலர் டுமீல்கள் வெள்ளி அன்றே எங்கள் தெருவில் ஆரம்பித்து விட்டன. இண்டு, இடுக்ககளில் இருந்து எல்லாம் வெளிவந்து பகீரை கிளப்பி வாண்டுகள் பட்டாசு வெடிப்பதை கண்டால் எனக்கு கோபமும், பீதியும் கலந்தடிக்கும்.கார்கிலுக்கு தனியாக அனுப்பினால் பனிமலையை எரிமலையாக்கும்  ஆற்றலை என்னகத்தே கொண்டவன் என்பது மிகையில்லை என்பது ஊரறிந்த செய்தி என்றாலும், தெருவில் பட்டாசு வெடிக்கும் சுட்டிகளை கண்டால் ரத்தம் வர காதை திருகலாம் என்று இருக்கும். 

குருவி வெடியை காலருகே தூக்கி போட்டு விட்டு அது வெடிப்பதற்கு 0.01 நொடிக்கு முன்பாக 'அண்ணா பட்டாசு' என்று இந்த பயல்கள் அபாய சங்கு ஊதும்போது மனதில் ஏற்படும் கலவரத்தை அடக்க ஆர்மியே வந்தாலும் முடியாது. தீபாவளிக்கு முதல் நாளில் இருந்தே வீட்டடங்கு சட்டத்தை எனக்கு நானே போட்டுக்கொண்டு பம்மி விடுவேன். 
.....................................................................

பிடிச்சிருக்கு: 
பதிவு எழுதுவதில் தனிக்காட்டு ராஜாவாக வலம் வருபவர்களில் ஒருவர் சேட்டைக்காரன் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. நகைச்சுவை துள்ளலுடன் நயமாக தனது படைப்பை முன் வைக்கும் இவருடைய பதிவுகளில் சமீபத்தில் நான் ரசித்தவை:


....................................................................

ARGO:
ஹாலிவுட் விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற படம். சென்ற வாரம் தவற விட்டு நேற்று பார்த்தேன். 1979 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஈரானிய கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த ஆறு பேரை  எப்படி மீட்டெடுக்கிறார் என்பதே கதை. கொஞ்சமும் போரடிக்காமல் செல்கிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் விமான நிலைய சோதனைகளை தாண்டி ஏழு பேரும் ப்ளைட் ஏறும் காட்சி உச்சகட்ட படபடப்பு. அடுத்த ஆண்டு ஆஸ்கர் உறுதி என்று சொல்கிறார்கள் ஆர்கோ விமர்சகர்கள்.
.....................................................................

நாளை நமதே: 


                                                               
மேடமின் வளர்ப்பு மகன் 'சின்ன எம்.ஜி.ஆர்' சுதாகரனின் அண்ணன் பாஸ்(கரன்) ஹீரோ ஆகிட்டாரு டோய். நகரமெங்கும் 'தலைவன்' போஸ்டர்கள் தான். அதுவும் துப்பாக்கி போஸ்டருக்கு பக்கத்திலேயே ஒட்டி வைத்து இருக்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் சொல்ல சொல்லி 'பாஸ்' போஸ்டர் மூலம் சொன்னதை இங்கு பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. 'தயாரிப்பாளர் முதல் லைட்பாய் வரை எல்லாரும் வாழனும்' என்று சொன்ன பாஸ் வாழ்க. கலக்கறோம். தமிழ் நாட்டையே கலக்கறோம்!!
..............................................................................

ஆடும் கூத்து: 
பாராட்டு விழா நடத்துவதில் தொடர்ந்து சாதனைகளை முறியடித்து உரியடிப்பதில் சூர்ய வம்சத்திற்கு ஈடேது. கனியக்கா ஜாமீனில் வந்ததற்கு விழா கொண்டாடியது அப்போது. இப்போது ஐ.நா.வில் ஈழத்தமிழர் பிரச்னையை பேசிவிட்டு வந்த காரணத்திற்கு கென்டக்கி கர்னல் ஸ்டாலின் மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு விமான நிலையத்தில் தடபுடல் வரவேற்பென்ன, அறிவாலயத்தில் பாராட்டு விழாவென்ன...ஒரே சிரிப்பொலிதான் போங்க.
..........................................................................

மாற்றான்: 
இரட்டையர் டென்னிஸ் போட்டிகளில் உலகை ஆட்டிப்படைத்த லியாண்டர் - பூபதி பிரிவிற்கு பிறகு இந்திய டென்னிஸில் தற்போது மீண்டும் ஒரு வசந்தம். உலகின் முன்னணி ஜோடிகளான மார்க் நோயல்ஸ் - டேனியல் நெஸ்டர், பைரன் பிரதர்ஸ் ஆகியோரை வீழ்த்தி பூபதி - போபண்ணா வெற்றி பெற்று வருவது சிறப்பு. இவர்களாவது ஒற்றுமையுடன் இருந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு கிராண்ட் ஸ்லாம் போன்ற பெரிய வெற்றிகளை பெற்றால் நன்று.
.....................................................................

புகைப்படம்: 

                                                        
'நமது' கலைஞர் டி.வி.யின் தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் சமீபத்தில் சென்னை அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது. திரைப்படங்களில் பழைய பாடல்கள் சிறந்ததா? புதிய பாடல்களா? எனும் அபூர்வ தலைப்பை லியோனி தலைமையில் நடத்தினர். பாப்பையா பட்டிமன்ற நாயகன் ராஜா என்றால் லியோனிக்கு ராயபுரம் இனியவன். மேடையில் இவர் பெயரை அறிவித்தாலே கரகோஷம் காதை பிளக்கிறது. நிகழ்ச்சி முடிந்த பின்பு அவரை போட்டோ எடுத்த நபருக்கு பின்னே இருந்து நான் எடுத்த போட்டோ இது.
.................................................................

கல்யாண(சுந்தரத்தின்)பரிசு: 
இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கல்யாணப்பரிசு படத்தில் ஒரு சோகப்பாட்டை எழுதச்சொல்லி பட்டுக்கோட்டையாரை கேட்டுக்கொண்டாராம். அப்போது 'தயவு செய்து கதாபாத்திரத்தின் பார்வையில் எழுதுங்கள். சமூகப்பார்வை வேண்டாம்' என்று கேஞ்சிக்கேட்க ஓக்கே சொல்லி இருக்கிறார் தலைவர் பட்டுக்கோட்டையார். பாடலும் முழுமை பெற்று விட்டது. தான் சொன்னபடி எழுதியதற்கு தலைவருக்கு நன்றி சொன்னாராம் ஸ்ரீதர். அப்போது சிரித்தபடியே தலைவர் சொன்ன பதில்: பாடலை மறுமுறை கவனித்து கேட்டுப்பாருங்கள். முழுக்கு முழுக்க சமூக சிந்தனையுடன் மட்டுமே எழுதி இருக்கிறேன்' என்று சொல்ல அதிர்ந்தார் ஸ்ரீதர்.

தீபாவளி கொண்டாட முடியாத ஏழை ஒருவன் இன்னொரு ஏழையை பார்த்து பாடுவதாக அமைந்த அப்பாடல்:

உன்னைக்கண்டு நான் வாட. என்னைக்கண்டு நீ வாட.
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி.

ஊரெங்கும் மணக்கும் ஆனந்தம் நமக்கு
காணாத தூரமடா. காணாத தூரமடா.

நெஞ்சமும் கனலாகி நீராகும்போது
நிம்மதி என் வாழ்வில் இனியேது.

காணொளி பார்க்க: உன்னைக்கண்டு
..........................................................................

இதுதான்டா போலீஸ்: 
வசூலில் சூறாவளியாக சுழற்றி அடித்த சல்மானின் 'தபங்' படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ். ஷாருக், சல்மான், அமீர் கான்களின் படங்கள் அடுத்தடுத்து வருவதால் சினிமா ரசிகர்களுக்கு தீபாவளி இப்போதைக்கு முடிவதாய் இல்லை.


............................................................................

Images: madrasbhavan.com


Thursday, November 8, 2012

க்ரிக்கெட் - ஆள் அவுட்!


                                                               
வருடத்தில் ஒரு முறை வரும் தீபாவளி,ரம்ஜான்,கிறிஸ்த்மஸ் மாதா மாதம் வந்தால்? 'நிறைய லீவு கிடைக்கும்' எனும் பழங்கால பத்திரிகை ஜோக்கை தவிர்த்து விட்டு பாருங்கள். அதிகபட்சம் ஓராண்டு கறைபுரளுமா அவ்வுற்சாகம்? 'இனி ஜென்மத்திற்கு பண்டிகையே வேண்டாம். ஆளை விடுங்கள்' என்றுதான் சொல்லத்தோணும். அதைத்தான் ஜரூராக செய்து கொண்டு இருக்கிறது ட்வென்டி/20. வருடம் முழுக்க இடைவிடாமல் ஆடப்படும் 'இந்த புதுரக விளையாட்டு க்ரிக்கட் மீதான ஆர்வத்தை சிறார் மற்றும் மகளிர் மத்தியில் பெருத்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது, இந்திய விளையாட்டு சரித்திரத்தில் இது ஒரு நவீன புரட்சி/மறுமலர்ச்சி' என்றெல்லாம் சிலாகிக்க காரணங்கள் பல இருக்கலாம். நிதர்சனத்தில் T20 பார்மேட்  உலக க்ரிக்கெட்டிற்கு ஆற்றிய தொண்டுதான் என்ன?   

'இந்த எந்திர யுகத்தில் ஐந்து நாட்கள் எவன் டெஸ்ட் போட்டிகளை அமர்ந்து பார்ப்பான்?'எனும் கேள்வி க்ரிக்கெட் ரசிகர்கள் மனதில் எட்டிப்பார்க்க ஆரம்பித்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு நாள் போட்டிகள் உதயமாகிவிட்டன. இருந்தும் ஒரு ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க ஒரு நாளெனில் மொத்தம் எத்தனை போட்டிகள் நடத்த  வேண்டி இருக்கும்? தாங்காது என்று ஒலிம்பிக் நிர்வாகம் க்ரிக்கெட்டை ஒதுக்கியே வைத்தது. இவ்விளையாட்டின் சுவடே படாத தேசங்களில் எல்லாம் கண்காட்சி போட்டிகளை நடத்தி மக்களை கவர என்னென்னவோ செய்து பார்த்தது ஐ.சி.சி. 'நேரத்தை கொள்ளும் ராட்சசன். ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கும் ஆட்டம். எமக்கு வேண்டாம்' என்று அந்நிய நாடுகள் கும்பிடு போட்டன. அச்சமயம் வந்து இறங்கியது ஐ.பி.எல்.

உலகப்புகழ் பெற்ற கால்பந்து லீக் போட்டிகளின் தாக்கத்தாலும், ஐ.சி.எல்.லை துரத்தி அடிக்கும் நோக்கிலும் இந்திய க்ரிக்கெட் போர்ட் கச்சை கட்டிக்கொண்டு களமிறங்கியது. சில மணிநேர ஆட்டம், வண்ணங்கள், வான வேடிக்கைகள், திரை நட்சத்திரங்களின் அணிவகுப்பு, சியர் கேர்ல்ஸ்...என அக்மார்க் மசாலா இருந்தால் நம்மாட்களுக்கு சொல்லவா வேண்டும். 'சகலகலா வல்லவன்' T20 அனைத்து அரங்குகளிலும் அபார வெற்றி கண்டது. அதே சமயம் இந்த விளையாட்டின் நிஜ முகம் கொஞ்சம் கொஞ்சமாக பொலிவிழந்து வருவதை கண்டு க்ரிக்கெட்டின் அரிச்சுவடியை நன்கு தெரிந்து வைத்திருந்த ரசிகர்களும், வல்லுனர்களும் குமுற ஆரம்பித்தனர். பொன் முட்டையிடும் வாத்து வேக வேகமாக அறுக்கப்பட மிஞ்சி இருப்பது சொச்ச முட்டைகளே.

ஒரு சில ஐ.பி.எல்.போட்டிகள் மூலம் நிரந்தரமாக செட்டில் ஆகிவிடலாம் என்று சாமான்ய குடும்பத்தை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கேற்க துடித்தனர். அனைவருக்கும் நியாயமான முறையில் தேர்வுமுறை பின்பற்றப்பட்டதா என்பது மில்லியன் டாலர் கேள்வி. தேசிய க்ரிக்கெட்டில் இடம் பிடிக்கவே குரங்கு பல்டி அடிக்க வேண்டி இருக்கையில் அதைவிட பணத்தை கொட்டித்தரும் ஐ.பி.எல்.லில் சொல்லவா வேண்டும்? 

வணிக க்ரிக்கெட்டில் கொட்டும் பணம் எந்த அளவிற்கு தேசப்பற்றை மறக்க அடித்தது என்பதற்கு ஒரு உதாரணம்: 2010 இல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு இந்திய அணி(மகளிர் அணியும்) அனுப்பப்படவில்லை. அத்தேதிகளில் சர்வதேச போட்டிகள் இருப்பதே அதற்கு காரணம் என்று சொன்னது நிர்வாகம். இரண்டாம் நிலை வீரர்ககளை உள்ளடக்கிய அணியையாவது அனுப்பி இருக்கலாம் என்று வல்லுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். இத்தனைக்கும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதன் முறையாக க்ரிக்கட் அனுமதிக்கப்பட்ட வருடமது. ஆசியாவின் மிகப்பெரிய அணியே இல்லாமல் சப்பென முடிந்தது அப்போட்டிகள். 'பணமா? தேசப்பாசமா?' போரில் பணமே வழக்கம்போல் வென்றது.

                                                               

ஒவ்வொரு மேடையிலும் 'இந்திய டி ஷர்ட்டை' போட்டுக்கொண்டு ஆடுவதே பெருமை என்று கூறும் சச்சின் போன்ற கடவுள்கள் எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் போன்ற போட்டிகளில் பங்கேற்று உள்ளனர்? தேசத்திற்காக பணத்தை உதறி விட்டு புகழ் பெற்ற டேவிஸ் கோப்பை மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற லியாண்டர் பெயஸை விட எந்த விதத்திலும் சச்சின் சிறந்த வீரர் இல்லை என்பது சத்தியம்.  2003 ஆண்டு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் சாவின் வாசலுக்கு சென்று மீண்டார் பெயஸ். அதன் பின்பு இன்றுவரை தொடர்கின்றன வெற்றிகள். கேன்சரில் இருந்து மீண்ட யுவராஜ் சிங்கை கொண்டாடும் தேசம் அவரை விட மோசமான நோயை அனுபவித்த மாவீரன் லியாண்டரை எந்த இடத்தில் வைத்துள்ளது?

ஐ.பி.எல்., T20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் லீக்..இது போக பிற தேசங்கள் துவங்கவுள்ள லீக்குகள் என கிட்டத்தட்ட வருடத்தின் அனைத்து நாட்களிலும் இந்தக்குறுவிளையாட்டை எத்தனை நாட்கள் குறுகுறுவென மக்கள் பார்த்து ரசிப்பார்கள்? வெறும் பேட்ஸ்மேனின் சிக்சர்களை மட்டுமே மையமாக கொண்டு ஆடப்படும் இப்போட்டிகளின் மூலம் கபில், அகரம், வார்னே போன்ற சிறந்த பௌலர்கள் உருவாவது சாத்தியமே இல்லை. என்னதான் பார்வர்ட் வீரர்கள் கோல் போட்டு பெயரை தட்டிச்சென்றாலும் டிபன்ஸ் வீரர்கள் வலுவாக இல்லாமல் சிறந்த கால்பந்து அணி உருவாகவே முடியாது. அதுபோல பௌலர்களுக்கு பெரிதாக வாய்ப்பு தரப்படாத T20 அசல் க்ரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை.

டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காமல் எந்த ஒரு வீரனும் க்ரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடிக்க இயலாது. T20 பணத்தை கொட்டலாம். அதில் வானவேடிக்கை காட்டிய வீரர்கள்(கெயில் போன்றோர் விதிவிலக்கு) நீண்ட நாட்கள் மக்கள் மனதில் நிற்கப்போவது  புஸ்வான நிமிடங்களுக்கு மட்டுமே!!
...........................................................................          


                                                      

Wednesday, November 7, 2012

அப்துல்லாவும், 40 எம்.பி.க்களும்                                                                நாளைய ஜனா அப்து அண்ணனே!

ஆர்டிஸ்ட்(கலைஞர்) அவர்களுக்கு,

ப்ரேவ் ஹார்ட்டின் சன் நான் ஸ்டாப் ரன்னில் இருக்கையில் இந்தக்கடிதம் எழுதுவது முறையில்லைதான். ஆனால் அசப்பில் அஜித்தின் டூப் போலவே இருக்கும் அப்து அண்ணன் இணையத்தில் செய்யும் லார்ஜ் ஸ்கேல் அமர்க்களம் விண்ணைத்தாண்டி விஸ்வரூபம் எடுப்பதால் மனதில் இருக்கும் மசமசப்புகளை 13 ஆம் நம்பர் பஸ் ஏற்றி கோ(பால)புரத்திற்கு தூதனுப்புகிறேன்.    

சென்ற சனியன்று வந்த ஜூ.வி.அட்டை வாசகம்:  'ஜெ வலையில் ஜனா. வருத்தத்தில் கருணா'. ஆசியாவின் மூத்த பெரியவாள்  பெரிய வாள் ஆகிய உங்களையும், ப்ரணாப்பையும் மரியாதை இன்றி விளித்த ஜூ.வி.யை கண்டித்து இருக்கிறார் அப்து. இந்தியா போன்ற நாடுகளில் செயல்ரீதியாக ஜனங்களின் அதிபதியாக  பிரதமரே பெரும்பாலும் இருப்பதாலும், ஜனாதிபதியும் ஜனங்களில் ஒருவர் என்பதாலும் 'திபதி'யை லபக்கிவிட்டு 'ஜனா' போட்டது அவ்வளவு பெரிய தவறா? வடக்கத்தி ஆங்கில செய்தி சேனல்களில் கூட President என்பதை Pres என்று எப்போதோ கூற ஆரம்பித்தது விட்டார்கள். 'நமது' கலைஞர் செய்திகளை மட்டுமே பார்க்க வைத்து அப்து அண்ணனை 'வடக்கே கேட்டுப்பாரு என்ன பத்தி சொல்லுவான்' லெவலுக்கு போக விடாமல் தடுத்தது யார் குற்றம்?  

இருக்கையில்லாமல் எதிர்க்கட்சியாக இருக்கையில் நிதிப்பற்றாக்குறை ஏற்படுவது சனநாயகத்தில் ஜகமம் தானே? எனவே 'நிதியை' க்ளோஸ் செய்துவிட்டு 'கருணா' போட்டது எவ்விதத்தில் தவறு? இல்ல..தெரியாமத்தான் கேக்கறேன்?   

'எதுக்குய்யா எப்ப பாத்தாலும் என் தலைவனையே திட்டறீங்க?' என்று கொந்தளிக்க வேறு செய்கிறார்.அதைப்பற்றி நீங்களே அங்கலாய்க்கவில்லையே? இவ்வளவு பேசுபவர் உங்கள் கண்ணில் பட்டால் இந்தக்கேள்வியை மட்டும் முன் வையுங்கள் தலைவா:

'ஏம்பா அப்து..என் மேல கொள்ள பாசமா இருக்கியே? ஆனா மண்ணின் மைந்தன், பொன்னர் சங்கர், உளியின் ஓசை, பெண் சிங்கம் இதையெல்லாம் முதல் நாள் முதல் காட்சி பாத்து இருக்கியா? 'மனசாட்சிய' தொட்டு சொல்லு. ரஜினி, கமல் எல்லாம் மேடைல 'பராஷக்தி..என்ன வசனம்..' ன்னு பாராட்டி தள்ளிட்டு பக்கத்துல உக்காந்ததும் நான் 'நீங்க யாராவது ஒருத்தர் என் வசனத்துல ஒரு படம் பண்ண முடியுமா?' அப்படின்னு கேட்டா போதும் 'பீட்சா' பாத்தா பச்ச புள்ளைங்க மாதிரி முகத்துல என்ன கலவரம்? 'வெவரம்' தெரிஞ்ச உள்ளூர் ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட பதறி, செதறி ஓடறானுங்க. பேரன்களே என் வசனத்துல படம் பண்ண பம்மும்போது அவங்கள சொல்லி என்ன செய்ய? அவங்களை விடு. பெரிய்ய்ய பட்ஜெட்ல நீயே ஒரு படம் தயாரிச்சி ஹீரோவா நடிச்சா என்ன? ஒரு ஹால்ப் அஜித், மறு ஹால்ப் மகேஷ் பாபு மாதிரி இருக்கறதால ரெண்டு ஸ்டேட்லயும் பிச்சிக்கும். நான் வசனம் எழுதறேன். என்னப்பா சொல்ற? 

 'ரி..'

'முழுசா சொல்லுப்பா'

'ச.....................................ரி'

பார்த்தீர்களா தலைவா எப்படி டரியல் ஆகிறார் என? ஏற்கனவே கண்மணிகள் தந்த வீர வாள்கள் எல்லாம் (ஈழம்..உச்ச கட்ட போர்) சமயத்துக்கு சாணை பிடிக்கப்படாமல் அரண்மனை குடோனில் குமிந்தது போதாதென்று தளபதிக்கு வகை வகையாக வாள் தருகிறார்கள். இதற்கு இவரும் உடந்தை. ஒன்று கவனித்தீர்களா லைவ் லைவ் வள்ளுவரே..சமீபத்தில் தன்னை 'பெரியம்மா' செல்லம் என்று G + இல் பறை சாற்றி இருக்கிறார். கவனத்தில் கொள்க. 

இதுபோக இன்னொரு ப்ளஸ்ஸில்:

'---பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் போட வேண்டிய ஒரு உத்தரவை ஒரு சி.எம். போடுறாங்க. அதுல நான் இதைச் செஞ்சேன்னு பெருமை வேற!  # தன் பணி எது என்பதுகூட தெரியாத முதல்வர்--- ' என்று கூறி இருக்கிறார் அண்ணன் அப்து. இதெல்லாம் ஒரு குத்தமா தலைவா? நம்ம பவர்ல இருக்கும்போது மக்கள் தொண்டை பரணில் போட்டு விட்டு பாராட்டு விழாவில் பங்கேற்பதையே 24/7 செய்ததை விடவா? அப்போது மட்டும் 'மக்கள் சேவை செய்ய விடாம புளிக்க புளிக்க தலைவனை ஏன்யா பாராட்டறீங்க?' என்று அப்து அண்ணன் துண்டு பிரசுர போராட்டம் செய்திருந்தால்...அது தர்மம். 

'சென்னை நகரம் மழையில் மூழ்கிய போதெல்லாம் கென்டக்கி கர்னல்-கம்- தளபதி அவர்கள் முழங்கால் நீரில் நின்றவண்ணம் போஸ் தந்ததை நாளிதழ்களில் கண்டோம். இந்த ஆட்சியில் அப்படி எவருமில்லையே' என்று வருத்தம் வேறு பட்டுக்கொள்கிறார் பிரதர் அப்து. அப்து அண்ணன் பங்கேறும் நிகழ்ச்சி ஒவ்வொன்றிலும் நச்சு நச்சென்று போட்டோ எடுத்து தரும் அந்த புகைப்பட  'கலைஞரின்' வெலாசம் மட்டும் தர மாட்டேன் என்கிறார். ப்ளெக்ஸ் பேனரில் ஸ்டாம்ப் சைஸ் போட்டோவிற்கு கூட பெரியம்மா தடை போட்ட சோகத்தில் ப்ளட்டின் ப்ளட்டுகள் குமுறும் வேளையில் 'அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் அம்மாவின் ஆக்ரோஷ முகம் தெரிகிறது' என்று போஸ் தரச்சொல்லி கட்டுக்கோப்பான ஆளுங்கட்சி ஆட்களை உசுப்பி விடுவது கழக தர்மமா? அஞ்சி அவர் அடிச்சிட்டு அரை அவர் மட்டும் ரெஸ்ட் எடுக்க சொல்ற 'பெரியம்மா'  கட்சில இருந்து பார்த்தால் தெரியும் அவன் அவன் வலி. என்ன சொல்றீங்க வாழும் பெரியாரே?

எது எப்படி இருந்தாலும் இணையத்தில் உங்கள் புகழை பரபரப்பாக பரப்பும் அப்து அண்ணன் உங்கள் கட்சியின் கருவூலம் என்பது மிகையல்ல. கென்டக்கி கர்னலுக்கு முன்பாகவே நியூயார்க் சென்று வந்த உண்மைத்தொண்டர் ஆயிற்றே 'புது' கை அப்து. ஆகவே வரும் எம்.பி.தேர்தலில் சக்கர வியூகம் வகுக்கும் குழுவில் அண்ணனுக்கு முக்கிய பொறுப்பு அளித்தால் மட்டுமே இந்த புராதன வசனத்திற்கு மதிப்பு:

'நாளை நமதே. நாற்பதும் நமதே'.

தங்களின் நாளைய அறிக்கைக்கு இந்த குசேலன் தரும் பிட் பேப்பர்: 

'2016-இல் புது கோட்டையில் நமது கழகம் அரியணை ஏறும் நாள் வரை புதுக்கோட்டை அப்துல்லா வழி நடபோம். வீர வாள்கள் போதுமான அளவு ஸ்டாக் இருக்கிறது. தற்போதைய அவசர தேவை புல்லட் ப்ரூப் கேடயங்களே. போர்...ஆமாம் போர். விளிம்பு நிலை உடன்பிறப்பே, ரோட்டோர இட்லிக்கடை மூடியை ரீ மாடலிங் செய்து கேடயமாக்கி அணிவகுத்து வா. நான் உண்டு. தளபதி உண்டு. தலதளபதி அப்து அண்ணனும் உண்டு. வாரே வா!'
 
பெஸ்ட் HALF லக் தலைவா.

குறிப்பு: கருணா நிதிப்பற்றாக்குறையில் இருப்பதால் போரில் பங்கேற்றதற்கான ஆதாரத்தை இணையத்தில் வெளியிட விரும்புவோர் தத்தம் காசிலேயே புகைப்பட கலைஞரை அழைத்து வருவது உத்தமம்.
...............................................................................

'பை பையாய் கொண்டுள்ளோர் பொய் பொய்யாய் சொன்னாலும்
மெய் மெய்யாய் போகுமடி. குதம்பாய் மெய் மெய்யாய் போகுமடி.

நட்ட நடு சென்டர் ஆனாலும் (காசு) இல்லாதவரை நாடு மதிக்காது.
குதம்பாய் நாடு மதிக்காது.

கல்வி இல்லாத மூடரை கற்றோர் கொண்டாடுதல்
வெள்ளிப்பணமடியே. குதம்பாய் வெள்ளிப்பணமடியே.

'திராவிட கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே.
ஆட்சிக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே.

முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே.
சில முட்டாப்பயல எல்லாம் தாண்டவக்கோனே.
காசு நம்பர் ஒன் மந்திரி ஆக்குதடா தாண்டவக்கோனே.

கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே.
ஏழை ஜனத்தை கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே.
ஓட்டு பெட்டி மேல கண் வையடா தாண்டவக்கோனே.  

'திராவிட கூத்தாடினாலும் தாண்டவக்கோனே.
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே.
...............................................................................  
                                                           

Tuesday, November 6, 2012

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7நவம்பர் - 2011 இல் வெளிவந்த உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் தொடர்கிறது...


குடல் வெந்து போகும் வரை குடித்து ஆட்டம் போட்டுவிட்டு மேலே போய் சேரும் 90% சராசரி குடிமகன்கள், குடும்பத்திற்கு விட்டு செல்லும் சொத்து ஒரு அழுகிய தக்காளி விலை கூட பெறாது. பூ, இட்லிக்கடை  வியாபாரம் செய்யும் முறையை அவசர அவசரமாக அக்கம்பக்கத்து பெண்களிடம் கற்றுக்கொண்டு வருமானம் தேடும் பெண்கள் ஒருவகை. 'இது தேறாத கேஸ். இதை நம்புனா புள்ளைங்களை கரை சேக்க முடியாது' என்று வரவிருக்கும் ஆபத்தை முன்பே உணர்ந்து கணவன் உற்சாக ஆட்டம் போடும் காலத்திலேயே கைத்தொழில் ஒன்றை பழக ஆரம்பிப்பவர்கள் ஒரு வகை. இவர்களைத்தாண்டி சிறுவயதிலேயே பொழுதுபோக்கிற்கு கைத்தொழில் கற்றுக்கொண்டு அதன் மூலம் தனது குடும்பத்தை பல்லாண்டுகள் தாங்கிப்பிடிக்கும் மகளிர் மறுவகை. அம்மா இந்த இறுதி வகையைச்சேர்ந்தவர்.

அப்போது அவருக்கு 15 வயதிருக்கும். தாத்தாவுடன் வயல் வேலைக்கு சென்று வந்த காலம். 'குறிப்பிட்ட வயதை தொட்டாகி விட்டது. போதும் வீட்டோடு இரு'என்று பாட்டி பஞ்சாங்கம் வாசிக்க, அந்த சுதந்திர காற்றும் கரை கடந்தது.  அப்போது வந்த ஆபத்பாந்தவந்தான் தர்மன். அம்மாவின் உறவினர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். இல்லம் முழுக்க ஸ்டாலின், கார்ல் மார்க்ஸ், பாரதி போன்ற பெருந்தலைவர்களின் படங்களால் அலங்கரித்து வைத்திருந்த முற்போக்குவாதி. தலைவர்களின் உருவங்களை எம்ப்ராய்டரி  தையல் கலை மூலம் தத்ரூபமாக வரையும் ஆற்றல் கொண்டவர்.  பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்படுவதை விரும்பாத தர்மன் தாத்தாவிடம் சென்று 'தையலையாவது அவள் கற்றுக்கொள்ளட்டும். எத்தனை நாட்கள்தான் வீட்டில் கிடப்பாள்' என்று பேசி சம்மதம் வாங்கினார். அன்று அவர் எடுத்த அந்த சிறுமுயற்சிதான் எங்கள் வாழ்வாதாரத்திற்கான விதையாகிப்போனது.

கனகா எனும் டீச்சரிடம் சில மாதங்கள் தையல் பயின்று முடித்தார் அம்மா. ஒரு தையல் மிஷின் வாங்கித்தந்தால் வீட்டில் இருந்தவாறு துணிகளை தைத்து பழகலாம் என்று தாத்தாவிடம் கோரிக்கை வைத்தார் அம்மா.   தாத்தாவும், அம்மாவும் விளைவித்த சோளத்தை விற்று 500 ரூபாயை சொந்தக்காரனிடம் தந்தனர். முந்தைய பதிவுகளில் கூறிய அதே குடி கெடுத்த உறவினன்தான் அவன். 150 ரூபாய் மட்டும் தையல் மிஷின் வியாபாரியிடம்  தந்துவிட்டு 350 ரூபாயை தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். ஒரே தொகை தந்து வாங்க வேண்டிய தையல் மிஷின் இவனால் தவணை முறையில் வாங்கப்பட்டது. திருடிய பணத்தில் அட்லஸ் சைக்கிளை வாங்கி தன் வீட்டில் நிறுத்திக்கொண்டான் அந்த நல்லவன். 

'சரி..மிஷின் வந்தாகிவிட்டது. புதிதாக தொழில் கற்கும்போது நம்மை நம்பி யார் துணியை தருவார்கள்?' இது ஒவ்வொரு தையல் கலைஞர்களுக்கும் வரும் சோதனைதான். சாவடியில் (சத்திரம்) தங்கி இருக்கும் முதியவர்களிடம் சென்று அங்கு கிடைக்கும் துணிகளை வாங்கி அவர்களுக்கான மேலாடைகளை தைத்து தந்தார் அம்மா. முதியவர்களின் முகத்தில் மகிழ்ச்சி. வாய் மொழியாக செய்தி பரவ வயதில் மூத்த பணக்கார உறவினர் ஒருவர் 'இந்தாம்மா..இது விலை உயர்ந்த வெண்பட்டு. எனக்கொரு மேலாடை தைத்து தா' என்று ஊக்கப்படுத்த ஓரளவிற்கு பரிச்சயமான தையல் நிபுணர் ஆனார் அம்மா. 

'வயசுக்கு வந்த பொண்ணுக்கு எதுக்கு படிப்பும், தொழிலும். கெடக்கட்டும் வீட்டோட' என்று புரட்சி பேசும் பன்னாடைகள் நிறைந்த ஊரில் தர்மன் மாமா, இந்த வெண்பட்டு முதியவர் இருவரும் பெரியாரின் மாற்றுருவாகவே தென்பட்டனர். இவர்களைப்போன்ற சிலர் அந்த இருண்ட காலத்தில் இல்லாமல் போயிருந்தால் நான்கு சுவற்றுக்குள் நாசமாய் போயிருக்கும் பல நங்கையரின் வாழ்க்கை. 'என்ன உன் பொண்ணு தையல் கத்துக்க ஆரம்பிச்சி இருக்கா' என ஊரார் கேட்டதற்கு பாட்டியின் பதில் 'நாளைக்கி கல்யாணம் ஆன பின்ன ஒருவேள புருஷன் சரியில்லாம போயிட்டா குடும்பத்த காப்பாத்த வேண்டாமா? அதான்'.

பாட்டியின் கருநாக்கு கண்டிப்பாக பலிக்கும் என்று அம்மாவிற்கு ஆருடமா தெரியும்? அக்காலத்தில் புகழ்பெற்ற 'ரீட்டா' தையல் மிஷினை அவர் மிதித்த வண்ணம் நாட்கள் நகர்ந்தன.

தொடரும்......... 

.................................................................           


Monday, November 5, 2012

லைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே!!     
என்னதான் மாவட்டத்திற்கு ஒரு தமிழ் வழக்கு இருந்தாலும் சென்னையின் சிறப்பு தமிழின் சிறப்பே தாய்த்தமிழுக்கு 'syrup'பு. காலத்திற்கேற்ப தன்னை மெருகேற்றிக்கொள்வதில் இதற்கு ஈடு இணையில்லை. நீளமான வார்த்தைகளை ஒரு சில வார்த்தைகளாக சுருக்கி அடிப்பதில் வித்தகர்கள் எங்க ஊரு எடிசன்கள். சந்திரபாபு, லூஸ் மோகன், தேங்காய் ஸ்ரீனிவாசன், கமல் போன்றோர் நடித்த  பார்த்தோ அல்லது ஏரியாவை ஒரு ரவுண்ட் அடித்து விட்டு அவர்கள் பேசுவதை கிரகித்த மாத்திரத்தில் இத்தேன் தமிழை பேசிவிடலாம் என்ற இறுமாப்பு ஆகவே ஆகாது. பேச்சுக்கு இணையாக பாடி லாங்குவேஜ் இருந்தால் மட்டுமே முக்கால் கிணறு தாண்ட முடியும். இல்லாவிட்டால் 'தோடா நம்மான்டையே சீனு போடுறாரு' என்று பம்ப் அடித்து விடுவார்கள். ஆக்ஸ்போர்ட் டிக்சனரிக்கு இணையாக ஒரு புத்தகம் போடும் அளவிற்கு யுனிக் தமிழை தன்னகத்தே கொண்டுள்ள சென்னைத்தமிழை ஒரு தபா கண்டுக்கலாம் வா வாத்யாரே!!

ஏரியா பெயர்களை எங்க மன்சாலுங்க ஸ்டைலாக உச்சரிக்கும் அழகே அழகு. 'டேய்... த்ரான்மயூர் வன்ட்டண்டா. நீ சீக்ரம் மீசாப்பேட்டைல இந்து எகுரு'. விளக்கம்: 'திருவான்மியூர் வந்துவிட்டேன். மீரான்சாகிப் பேட்டையில் இருந்து கிளம்பு'. எப்படி?  'நந்து நந்து வா' - நந்தகோபாலன் என்பவரை பார்த்து பேசுகிறார் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. விளக்கம்:  'நந்து..நடந்து வா'. நந்துவை விரைவாக அழைக்க 'ட'வை கட் அடிக்க வேண்டும். கடுப்பா இருக்கு, காண்டா இருக்கு..இதையெல்லாம் விட சோக்கான வார்த்தை ஒன்று உண்டு. அது 'செம கான்ச்சலா இருக்கு மச்சி'. கடும் மன உளைச்சலில் இருக்கும்போது 'கான்ச்சல்' எனும் வார்த்தை விஸ்வரூபம் எடுக்கும்.

'தட்னா தாராந்துருவ' என்று தனது எதிரில் இருக்கும் புல்தடுக்கி பயில்வானை மிரட்டுவது ஒரு வகை. 'இம்மாம் பெரிய வார்த்த எதுக்கு' என்று அதையும் சுருக்கினர் வம்சா வழிகள். அது 'மவனே சொய்ட்டிப்ப'. விளக்கம்: 'மகனே..சுருண்டு விழுந்து விடுவாய்'.  'நல்லா இழு' என்பதை இழுக்காமல் இதழ் பிரிப்பது இப்படி: 'நல்லா இசு'. 'அடச்சீ வழி விடு' என்று எட்டு(சொற்கள்) போட்டு கஷ்டப்படுவதை விட இப்படி ஷார்ட் கட்டில் போவது உத்தமம்: 'அச்சீ ஒத்து'. 'என்னடா துள்ற' என்பது ஓல்ட் பேஷன். அதற்கு சரியான ரீப்ளேஸ்மென்ட் இதுதான்: 'இன்னாடா தொகுர்ற?'. அதுபோல  'துரத்திக்கொண்டு வருகிறான்' என்பதன் மாடர்ன் சொல்லாடல் 'தொர்த்தினு வர்றா(ன்)'.     

'ஸ்சூலுக்கு போகாம பொறுக்கி பசங்க கூடயே சுத்திட்டு இருக்காத. இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லவா?'. இதில் எதிர்பார்க்கும் சுருதி இல்லை அல்லவா? அதற்குத்தான் இது: 

'உஸ்கோலான்ட போவாம பொர்க்கி பசங்கலோடயே ஒலாத்தாத. இன்ஸி கிட்ட சொல்ருவேன்'.

ஆட்டோக்காரரிடம் பேரம் பேசும்போது 'என்னது இங்க இருக்குற போயஸ் கார்டனுக்கு 200 ரூவாயா?' என்று புலம்பி நேரத்தை வீணடிப்பதை விட 'ண்ணா..என்னாண்ணா இப்டி கேக்ற? நேத்தி கூட ஒர்த்தரு 150 தான் வாங்கனாரு. பாத்து சொல்ணா' என்று கச்சிதமான பாடி லாங்க்வேஜை பிரயோகப்படுத்துதல் அவசியம். கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்தாலும் சொதப்பி விடும்.

'குடித்து வந்து இவளை அடித்து விட்டு ஓடிவிட்டான். விடாமல் அழுது கொண்டிருக்கிறாள்' என்று பக்கத்து வீட்டாரிடம் இப்படி சொன்னால் வேலைக்கு ஆவாது? எப்படி சொல்லலாம்?

'குஸ்ட்டு அஸ்ட்டு ஓட்டான். அய்துனே கீது'. இப்படி நச்சென சொன்னால்தான் சட்டென மனதில் ஏறும்.  

'காசேதான் கடவுளடா'வில் தேங்காய் ஸ்ரீனிவாசன் 'ஆண்டவன் தொடங்கி ஆண்டிகள் வரைக்கும் காசேதான் கடவுளடா' பாடலில் உச்சரிக்கும் அக்மார்க் சென்னைத்தமிழ் மற்றும் 'ஏரியா' ஆட்டமும் எனது பேவரிட்:

'துட்டிருந்தா டீயடிப்பேன். இல்லாங்காட்டி ஈயடிப்பேன்.
சோக்கா பேசி நேக்கா பாத்து பாக்கெட் அடிப்பேன்.
டாவ் அடிப்பேன். டைவ் அடிப்பேன். ஜகா வாங்கி சைட் அடிப்பேன்.
கைத உன்னை நோட்டால் அடிப்பேன்.

இன்னா மனுஷன். இன்னா ஒலகம். அண்ணங்கீறான்.தம்பிங்கீறான்.
கல்லாப்பொட்டிய கண்டாங்காட்டி சலாம் அடிக்கிறான்.
பேஞ்ச மழ ஒஞ்சி போனா, சாஞ்ச எடம் காஞ்சி போனா..
பேட்டையத்தான் மாத்திக்கினு டேரா அடிக்கிறான்'.      

பிற வட்டாரங்களில் பேசப்படும் தமிழை விட சென்னைத்தமிழை என்னதான் நக்கல் விட்டாலும் 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' என்பது போல  எங்களுக்கு எங்க தமிழ் ஒஸ்திதாம்பா!!

புதுப்புது அர்த்தங்களுடன் பேட்டையில் மீண்டும் சந்திப்போம்.
...................................................................
          


   

Saturday, November 3, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(03/11/12)
மிரட்டல்: 
'இத ஜெயலலிதா கிட்ட கேளுங்க. நீ என்ன எனக்கு சம்பளமா தர்ற நாயி'..வாவ் கேப்டன் வாவ்.மேடமின் பிரதான எதிரிகளான தல தளபதி ஆர்டிஸ்ட்(கலைஞர்), ஸ்டாலின் கூட அம்மையார் என்று அழைக்கும்போது  நீங்க மட்டும் பேர் சொல்லி கூப்புடுற கெத்துக்கே ஒரு கண்டெயினர் பூங்கொத்து பார்சல் அனுப்பி பாராட்ட தோணுது. சாண்டி புயலையே ஒற்றை காலால் தாண்டி பாண்டி ஆடும் அளவுக்கு கப்பாகுட்டி(capacity) யாருக்கு வரும். அப்பறம்...'தொகுதி' பிரச்னைக்காக மேடமை பாக்க போறோம்னு சொல்ற உங்க கட்சி எம்.எல்.ஏ .க்களை முதல்ல தொகுதில நிஜமாவே என்ன பிரச்னை இருக்குன்னு மக்கள் கிட்ட கேட்டுட்டு போக சொல்லுங்க. என்னதான் மரியாதை நிமித்த சந்திப்புன்னு சொல்லிட்டு கேட் வரைக்கும் வீரமா போனாலும் மேடம் வர்றப்ப பம்மித்தான் ஆகணும். துணை தலைமை ஆசிரியர் பன்னீர் சார் கிட்ட கரக்டா கோச்சிங் எடுத்துக்கங்கப்பா.
....................................................................... 

அச்சமுண்டு அச்சமுண்டு:
கடந்த ஞாயிறு அன்று 'சக்கரவர்த்தி திருமகன்' பார்க்க தி.நகர் பேருந்து நிலையம் எதிரிலிருக்கும் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு இரவுக்காட்சி சென்றபோது நடந்த விஷயம் இது. படம் தொடங்கு விளக்குகளை அணைத்த ஐந்தாவது நிமிடம் எமக்கு முன் வரிசையில் இருந்த இளமாறன், அமுதன் இருவரும் அதி தீவிர அரவணைப்பை ஆரம்பித்தனர். சில நிமிடத்தில் சட்டைகளை கழற்றிவிட்டு தொண்டாற்ற தொடங்கினர். லீலை உச்ச கட்டத்தை எட்ட வேறு இருக்கையில் போய் அமர்ந்தோம். இடைவேளைக்கு பிறகு இன்னொரு ரகளை. குடிமகன் ஒருவன் இன்னொரு சோப்ளாங்கி இளைஞன் ஒருவனின் சீட்டில் மாறி அமர தகராறு முற்றி சட்டையை கிழித்து கொண்டார்கள். தியேட்டர் சார்பில் எவரும் எட்டிப்பார்க்க்கவில்லை. இரண்டு தாத்தாக்கள் மட்டுமே இன்சார்ஜ் அங்கே. கிருஷ்ணவேணி பக்கம் படம் பார்க்க (குறிப்பாக இரவுக்காட்சி) செல்பவர்கள் சாக்கிரதை.
..........................................................................

Ayaalum Njaanum Thammil: 
ப்ரித்விராஜ், நரேன், பிரதாப் போத்தன் நடித்திருக்கும் புதிய மலையாளப்படம். பெற்றோர்களின் அனுமதி இன்றி ஆபரேஷன் செய்வதால் டாக்டருக்கு ஏற்படும் விளைவுகளை அலசுகிறது கதை. ஆபரேஷன் செய்யவே வேண்டாம். ஒருவேளை குழந்தை இறக்க வாய்ப்பு உண்டு. மருந்து மட்டும் தாருங்கள் என்று சொல்லும் மக்களுக்கும், நோயாளியின் உறவினர் ஒப்புதல் இன்றி நல்லெண்ணத்துடன் சிகிச்சை செய்து அது தோல்வியில் முடிந்தால் சோதனைகளை சந்திக்கும் டாக்டர்களுக்குமான நல்ல படமாக அமைந்திருக்கிறது இது.

பயிற்சி மருத்துவர்களை பாஸ் செய்ய வைக்கும் உடான்ஸ் நோயாளியாக நகைச்சுவை நடிகர் சலீமின் நடிப்பு சபாஷ். தனது வியாதி குறித்து அறியாமல் அல்லாடும் ப்ரித்விக்கு நோயின் பெயரை சொல்லிவிட்டு 'ஸ்பெல்லிங் வேணுமா?' என்று சலீம் கேட்குமிடம் கலக்கல் கலாட்டா. பயிற்சி மருத்துவர்கள் வாழ்வின் பக்கங்களை புரட்டிப்பார்க்க விரும்புவோர் நிச்சயம் ஒரு முறை காணலாம்.
..........................................................................

ஜென்டில்மேன்:       
ஆரோகணம் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் 'நன்றி சுரேகா' என்பதை படித்ததும் 'அட' போட்டேன். இடைவேளைக்கு முன்பு 'வாங்க சார்' என்று எம்.எல்.ஏ.வை ஹோட்டலில் வரவேற்கிறார். அதன் பின்பு 'தப்பாட்டம்' பாடலில் நாயகி விஜி குறித்து ஒரு இளைஞர் (பதிவர்) சுரேகா காதில் கிசுகிசுக்க 'ஓ அப்படியா' என்பது போல் தலை அசைக்கிறார். இறுதியாக சொகுசு காரில் இருந்து இறங்கி 'கலெக்டர் வீட்டு செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சோம். கவலைப்படாதீங்க. உங்க அம்மா கெடச்சிருவாங்க' என்று சொல்கிறார். ஆக மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வந்து செல்கிறார். நேரில் பார்ப்பது போலவே படத்திலும் இன் பண்ணிய பார்மல் உடையுடன் திரையிலும்.

சும்மா லுங்கியை கட்டிக்கொண்டு 'டேய்.. நா கண்டி உள்ள வந்தேன். பேட்டா பாஞ்சி வந்து மூஞ்ச கீசிறுவேன்' பாணியில் மந்திரியை பார்த்து பெரிய வூடு கட்டாவிடினும் அட்லீஸ்ட் சின்ன வூடாச்சும் கட்டுற ரவுடியா சீக்கிரம் 'நடிங்க' தலைவா.     
.........................................................................

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு: 
பசும்பொன் தேவர் குருபூஜை என்பதால் அண்ணா சாலையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சில நாட்களுக்கு முன்பு காலை முதல் மாலை வரை பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது சென்னை. ஏற்கனவே 'நீலம்' செம காட்டு காட்டிக்கொண்டு இருக்க, தேவராபிமானிகள் வேறு அண்ணா சாலை நோக்கி படையெடுக்க ட்ராபிக் ஜாமில் விழி பிதுங்கியது சென்னையின் இதயம். இது போல பல திருவிழா காட்சிகளை தலை நகரவாசிகள் கண்டு களிக்க சென்னையின் பிரதான வீதிகளில் மேலும் பற்பல சிலைகளை நிறுவி நீங்காப்புகழ் பெறுமாறு 2098 ஆம் ஆண்டு முதல்வராக(ராமதாஸ்  ஐயா  சாரி..கீபோர்ட் உங்க பேரை  தானவே டைப் அடிக்குது) வரப்போகிறவர் வரை கேட்டுக்கொள்கிறோம். 
........................................................................

நான் ஆணையிட்டால்: 
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழக்கமாக தரப்படும் சத்துணவை(?) மாற்றி 13 வகை உணவுகளை தரச்சொல்லி உள்ள  ஜெக்கு ஒரு சபாஷ். நான் பள்ளி படித்த காலத்தில் குண்டு அரிசிச்சோற்றை கொஞ்சம் பருப்பு கலந்த சாம்பாருடன் சேர்த்து சுடச்சுட தட்டில் கொட்டுவார்கள். சமயங்களில் வீட்டு சாப்பாட்டை விட சத்துணவு ருசி நன்றாக இருந்ததும் உண்டு. தற்போது பல்வகை சாதங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் செய்தி மகிழ்ச்சி தந்தாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்கிற அச்சம் இருக்கத்தான் செய்யும். அவ்வப்போது தரப்பரிசோதனை செய்து உண்மையாகவே சத்துணவை தந்தால் சரி.
................................................................. 
 
நடிகன்:
சோ, வரதராஜன், கிரேசி மோகன், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோரின் மேடை நாடகங்கள் பெரும்பாலானவற்றை சென்னை சபாக்களில் பார்த்தாகிவிட்டது. தரமான புதிய நாடகங்கள் இவர்களிடம் வருவதும் அரிதாகிப்போனதன் பொருட்டு நாடகம் பார்ப்பதும் குறைந்து போனது. எனக்கு பல நாள் சந்தேகம் ஒன்று மனதில் நிழலாடுகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை? அவ்வாறு முயன்று ஏதேனும் காரணத்தால் பின்தள்ளப்பட்டனரா?அறியேன். அதற்கான முயற்சியில் முனைப்புடன் கலைஞர்கள் ஈடுபட்டால் இன்னும் சில ஆண்டுகளில் அது சாத்தியப்படலாம். காத்திருக்கிறேன்.
...................................................................       

அழகிய தமிழ் மகன்: 
'அமர்ந்து விட்டு செல்க' அதாவது 'சிட் டவுன். தென் கோ'.  இதில் ஏதோ ரசாயன தரக்குறைவு இருந்ததை பல்லாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த சென்னைத்தமிழன் புதிய பார்முலா ஒன்றை கண்டுபிடித்ததன் விளைவு:

'உக்காந்துட்டு போ'

'உக்காஞ்சிட்டு போ'   

'குந்திட்டு போ'

'வக்காரு. போலாம்'    
...........................................................................

திரும்பிப்பார்: 
கடந்த சில நாட்களாக சட்டசபை நிகழ்வுகளை ஜெயா மேடம் டி.வி.யில் பார்த்து வருகிறேன். மேடம் பேசும்போது சுற்றி நடக்கும் தமாசுகள்..அல்டிமேட்யா. வெகு சீரியசாக மின்வெட்டு குறித்து அவர் அறிக்கை தந்து கொண்டிருக்க சபா ஹீரோ தனபால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. கண்ணாடி டம்ளரை கையில் பிடித்து இடது ஓரம் திரும்பி குனிந்து, பம்மி தண்ணீர் பருகியது கண்கொள்ளா காட்சி. மேடம் இன்னும் கொஞ்சம் வால்யூமை ஏற்றி இருந்தால் பதற்றத்தில் டம்ளர் நீர் முழுவதையும் சட்டை பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டு இருப்பார் பாவம். 

பக்கத்து சீட்டில் இருக்கும் ஒரே காரணத்திற்காக முதுகை இருக்கையில் சாய்த்து கூட அமர முடியாமல் முன்னாள் முதல்வர் பன்னீர் தவிக்க, இரண்டு வரிசை தள்ளி பின்னே அமர்ந்திருக்கும் சில எம்.எல்.ஏ.க்களோ கொட்டாவி விடுதல், லேசாக கண் சொக்குதல் என எல்லை மீறுகிறார்கள். குளிர் விட்டு போச்சி போல. மொதல்ல அவங்களை எல்லாம் உங்க எதிர் வரிசைல உக்காத்தி வைங்க மேடம். தலைவி நாட்டு பிரச்சனைய பேசும்போது கொட்டாவியா விடுறீங்க கொட்டாவி!
............................................................................     

அமர்க்களம்:
கவுண்டர் பட்டையை கிளப்பிய காமடிகளில் வியட்நாம் காலனி படமும் ஒன்று. 'ஜுஜூலிப்பா' பிரபு, மனோரமா,வினிதாவுடன் தலைவர் செய்யும் ரவுசு எவர்க்ரீன். சாம்பிள் வெடி:

ஆச்சி: உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லியே

கவுண்டர்: ஜோசப்

ஆச்சி: ஜோசப்பா...கிறிஸ்டினா?     

கவுண்டர்:பின்ன ஜோசப்னா கிறிஸ்டினா இல்லாம சைவ சித்தாந்த மடாதிபதியாவா இருப்பான்? ...................................................................................

     
Related Posts Plugin for WordPress, Blogger...