CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 29, 2012

சக்கரவர்த்தி திருமகன்
   
உலக மகா ஜோசியர் நாஸ்ட்ரடாமஸ் புகழுக்கு இப்படி ஒரு களங்கம் ஏற்படும் என்று எவரும் எண்ணி பார்த்திருக்க மாட்டர். அதற்கென்ன செய்ய முடியும். 2012 ஆம் ஆண்டு 26 அக்டோபர் அன்று தமிழ்த்திரையுலகில் இப்படி ஒரு குபீர் புரட்சி நாயகன் தோன்றுவான் என்பதை கணிக்க இயலாமல் மாண்டே போனார் அம்மகான். நடிகர், கதாசிரியர் தயாரிப்பாளர் என பல சுமைகளை தோளிலும், முதுகிலும் தாங்கி வாழும் எம்.ஜி.ஆர். சக்கரவர்த்தி அவர்கள் எட்டுத்திக்கும் நம்மை திக்கு (திக்காக) முக்காட வைக்க வந்திருக்கும் ஒப்பற்ற காவியம்தான் சக்கரவர்த்தி திருமகன். ரிலீசுக்கு முன்பு ஒருநாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சுவற்றில் இப்படத்தின் விளம்பரம் இப்படி எழுதப்பட்டு இருந்தது: சக்கரவாத்தி திருமகன். அதை எழுதியவருக்கு முழு சம்பளம் தர முடியாத அளவுக்கு லோ பட்ஜெட் படமோ என்று கண்ணீர் எட்டிப்பார்த்ததன் விளைவே தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரை நோக்கி நேற்று இரவுக்காட்சி செல்வதற்கான ஊக்க மருந்தாய் அமைந்தது.

அதிர்ஷ்டம் இல்லாத பல பதிவர்கள் சிதறி ஓட என்னிடம் சிக்கிய ஒரே பதிவர் அண்ணன் கே.ஆர்.பி.செந்தில். 20 ரூபாய் டிக்கட் எடுக்க நின்றபோது எமக்கு முன்பாக இருந்த சிலர் 'படம் ஆரம்பிச்சாட்டாங்களா சார்?' என்று கவுண்டரில் பதற்றத்துடன் கேட்க நாங்கள் 'பாஸ்...அவ்ளோ பெரிய ரசிகரா நீங்க?' என்றோம். அவர்கள் 'ஆமாங்க. பவர் ஸ்டாருக்கு அப்பறம் நமக்கு ஸ்ட்ரெஸ் ரிலீப் இவருதானுங்களே' என்று சொல்ல எமக்கு தீபாவளி நேற்றிரவே தொடங்கிய உற்சாகம். 

சரி கதை என்ன? ஜெர்மனி நாட்டவர் இருவர் குற்றாலத்தில் கொலை செய்யப்பட, அதை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ.அதிகாரி சக்ரவர்த்தி. அவருக்கு துணையாக கவர்ச்சி பதுமைகள் - கம் - அசிஸ்டன்ட்களாக கங்கா, காவேரி துப்பு துலக்குகின்றனர். அண்ணன், தம்பி என இரு போதை மருந்து கடத்தும் வில்லன்கள். ஜெர்மானியர்கள் கொலையில் இவர்கள் பங்கு இருப்பது சக்ர கண்ணுக்கு புலனாகிறது. இவர்களை கம்பி என்ன வைக்க என்னவெல்லாம் செய்கிறார் நம்ம சக்ர என்பதை ஆக்சன், சென்டிமென்ட், கிளாமர் மற்றும் நான் ஸ்டாப் ஹ்யூமருடன் சொல்லி இருக்கிறார்கள்.

                                                   சக்கரவர்த்தி & திருமகன் (நானும்,கே.ஆர்.பி.யும்)                        

சக்ர...ம்ம்..சும்மா சொல்லக்கூடாது. எம்.ஜி.ஆரை தேய்ந்து போன ஜெராக்ஸ்  பிரிண்டில் பார்ப்பது போல சொல்லிலடங்கா அம்சத்துடன் பவனி வருகிறார். தொப்பையை தூக்கிக்கொண்டு வில்லன்களை துரத்தும்போது ஓடும் அழகிற்கு முன்பு அனுஷ்கா, காத்ரீனா கைப் போன்ற அழகிகள் எல்லாம் பீல்ட் அவுட் ஆகின்றனர். இடைவேளைக்கு பின்பு வரும் டூயட் பாடல் டான்ஸில் அஜித்தை அடித்து நொறுக்குகிறார். கஸ்டடியில் இருக்கும் கைதிகளை சக்ர விசாரிக்கும்போது அவர்கள் அலறிக்கொண்டே 'சார்..வேணாம் சார். கண்ணாடிய மட்டும் கழட்டிராதீங்க சார்' என்று பிளிறுவது ஏனென்று முதலில் எமக்கு பிடிபடவில்லை. கண்ணாடியை கழற்றினால்  இன்னும் உக்கிரமாக தலைவர் எதிரிகளை பந்தாடுவார் என்பதே அந்த பிளிறலுக்கு பின்பிருக்கும் டைரக்டர் டச் என்பது பின்பே புரிந்தது. 

சக்ரைக்கு இரு வெள்ளை வெளேர் நாயகிகள். 'அவர் என்னைத்தான் காதலிப்பார்' என்று கங்காவும், 'போடி..அவர் எனக்குத்தான்' என்று காவேரியும் தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாலும் புத்தியை தீட்டி புல்லுருவிகளை பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார் தலைவர். ஸ்கார்பியோ, பி.எம்.டபிள்யூ கார்கள், குற்றால இயற்கை ஸ்பாட்கள், செவ செவா அழகிகள் என்று பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கிறது இந்த (க்கரவர்த்தி) தி(ருமகன்). இடைவேளையில் போட்ட ட்ரெயிலர்: 'கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு'. ஜேம்ஸ் பான்ட் போஸில் சக்ர கையில் துப்பாக்கியுடன். நமக்கு இன்னொரு தீபாவளி கன்பர்ம். ஏற்கனவே ஒரிஜினல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஏ.வி.எம்.முடன் இணைந்து நடிக்கவிருந்த படம்தான் இந்த கி.ஆப்ரிக்காவில் ராஜு. ஏனோ அப்படம் விளம்பரத்துடன் நின்று போனது. அதை தூசு தட்டி இப்போது நமக்காக அர்ப்பணிக்கு உள்ளார் சக்ர.

                                                                          ச.தி.யில் வீழ்ந்த ரசிகர்கள்               

விசாரணைக்காட்சி ஒன்றில் துப்பாக்கியை ஜிப் போடும் இடத்தருகே சொருகி வைத்திருந்தார் தலைவர். அப்போது கே.ஆர்.பி.என்னிடம் சொன்னது  'துப்பாக்கிய எங்க சொருகி இருக்காரு பாருங்க தம்பி'. எனது பதில் 'ச.தி.யை மட்டும் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருந்தா 'துப்பாக்கி'ய சொருகி இருப்பார் நம்ம சக்ரவர்த்தி'. படம் முழுக்க இதுவரை கேட்டிராத டயலாக்குகள் கண்டமேனிக்கு வலம் வருகின்றன. சாம்பிள்கள் சில: 

'இவனை ஸ்டேசனுக்கு கொண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டுங்க'

'நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவன்'

'இந்த கேசை நான் முடிக்கறேன். நம்புங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை'

'பீட்சா பயங்கர திகில் படம். என்னமா எடுத்து இருக்காங்க. இந்த வருசத்துல இதுதான் பெஸ்ட்'  என்று கூசாமல் பொய் சொல்லும் ரசனையற்ற ரசிகர்களே, உங்களுக்கு தில் இருந்தால் ச.தி.யை இரண்டரை மணி நேரம் பரவச நிலையுடன் அமர்ந்து பாருங்கள். அதுவும் நைட் ஷோ பார்த்து  விட்டு சொல்லுங்கள். 'பீட்சா' (கலக்சன்) முழுவதையும் ஒரே வாயில் முழுங்கி கொட்டாய் கூரை இடிந்து விழும் அளவிற்கு ஏப்பம் விட்ட எங்கள் சக்ரவர்த்தியின் படம் வரும் வாரங்களில் ஜேம்ஸ்பாண்ட், துப்பாக்கி அனைத்தையும் டுமீலாக்கி வெ(ற்)றிநடைபோடும் என்பதில் கடுகு,எள், சமுத்திர மணல் அளவும் சந்தேகமில்லை. 

சக்கரவர்த்தி திருமகன் - சக்கர இனிக்கிற சக்கர!!
..............................................................................   
        


                               

16 comments:

நாய் நக்ஸ் said...

Kadaiciya
ennathaan
solla
vara...???????

Dvd...pl....

Dvd
theya
theya
padam
paakka
naanga
ok....
1 condition
neeyum
kooda
irukkanum.....!!!!!!!

saidaiazeez.blogspot.in said...

இன்னாபா நீ
இவ்லோ ஸூப்பரா எய்திட்டு ஆர்வத்த கிளப்பிட்ட. நான் இந்த காவியத்த பார்த்தே ஆகனும். உடனே லிங்க் கொடுபா. அல்லாட்டி டிரைலராவது போட்டுகாட்டு தலீவா!
அந்த துப்பாக்கிய சொருகுன ஸீன் நான் பார்த்தேஆகனும்பா.

உலக சினிமா ரசிகன் said...

பாம்பை பிடிச்சு ஜட்டிக்குள்ளேயே விட்ட வீரத்திருமகன் சிவா வாழ்க.

இப்படத்தை திரையிடாத மல்டிபிளக்ஸ்
சர்வாதிகாரத்தை ஒரு வரி கண்டித்திருக்கலாம்.

CS. Mohan Kumar said...

உடனடியாக பார்க்க தூண்டும் விமர்சனம் :)

ஆமா சிவா தம்பி என்ன கொஞ்ச நாளா கருப்பு சட்டை, கருப்பு டி ஷர்ட் என அலைகிறார்?

Thozhirkalam Channel said...

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

http://otti.makkalsanthai.com/upcoming.php

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

கோவை நேரம் said...

ரொம்ப தைரியம் தான்...உங்களுக்கு....

arasan said...

ஏழைகளின் தீபம் நாளைய மகா தீபம் நாமக்கல்லாரின் படத்திற்கு என்னையும் அழைத்து போகிறேன் என்று உறுதி அளித்து ஏமாற்றிய உங்களை கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன் ...

முரளிகண்ணன் said...

:-)))))))))))

திருத்தணி விமர்சனம் எப்போஜி?

அ. வேல்முருகன் said...

சும்மா சொல்லக்கூடாது எம்.ஜீ.ஆர் பக்கத்திலேயே நின்னு போட்டா எடுத்ததா நினைப்பு

வவ்வால் said...

சிவா,

காவியத்தை கண்டு வந்த கலை உள்ளங்களை வாழ்த்த வயதில்லை , வணங்கவோ மனமில்லை என்னே ஒரு கோராமை :-))

படத்தில கூட இம்புட்டு காமெடி இருக்குமான்னு தெரியலை விமர்சனத்தில காமெடி கரைபுறண்டு ஓடுது :-))

யார் யாருக்கோ அஞ்சா நெஞ்சர் பட்டம் கொடுக்கிறாங்க, படம் பார்த்ததுமில்லாமல் நடிப்பு சூறாவளி சக்ர கட் அவுட்டுடன் இணைந்து புகைப்படம் எடுத்த உங்க ரென்டு பேருக்கும் அஞ்சா நெஞ்சங்கள் என பட்டம் கொடுக்கலாம்.
(மதுரையில இருந்து கேசு போடுவாங்களோ...அவ்வ்வ்)
------
விரைவில் நடு ஆப்பிரிக்காவில் நாய் நக்ஸ்ன்னு ஒரு படம் வர இருக்குதாம் ...உஷாரு :-))

ஹாலிவுட்ரசிகன் said...

அண்ணே ... ஹீரோவுக்கு கட்-அவுட் வைக்கிறாங்களோ இல்லயோ...இந்தக் காவியத்தை எல்லாம் பார்த்து விமர்சனம் போடும் உங்களுக்கு தான் அடுத்த கட்-அவுட்! ஆமா!!

angusamy said...

அவர்கிட்ட வெளி நாட்டுல எப்ப ரிலீஸ் பண்ணுவாருனு கேட்டு சொல்லுங்க அப்பு
இல்லேன்னா atleast திருட்டு VCD லயாவது பார்கனும்கர ஆர்வத்தை உங்க விமர்சனம் தூண்டுகிறது சிவா!!!
ஆமாம் மொத்தம் எத்தனை பேரு இருந்தீங்க தியேட்டர் ல

settaikkaran said...

இடுக்கண் வருங்கால் நகுக என்ற திருக்குறளுக்கு, நீங்களும் சிரித்து எங்களையும் சிரிக்க வைத்துவிட்டீர்கள்! பலே! :-)

Unknown said...

தலைவா இந்த படத்துக்கு கூடவா விமர்சனம் அவ்வ்வ்வவ்வ்

unmaiyanavan said...

நீங்க பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்னு, அந்த படத்தோட விமர்சனத்தை எழுதி, எங்களையும் பார்க்க தூண்டி விட்டுட்டீங்க. ஆனா சும்மா சொல்லக்கூடாது, விமர்சனத்தை படிக்கும்போதே வயிறு புண்ணாயிடுச்சு. இதுல அந்த படத்தை வேற பார்த்தா!!!

ரஹீம் கஸ்ஸாலி said...

யோவ் இந்த மாதிரி படத்தை தைரியமாக பார்த்த உனக்கு தில் அதிகம் என்று சொல்வதா? அல்லது இப்படிப்பட்ட மொக்கைகளை கூட விடாமல் பார்க்கும் உன்னை சினிமா பைத்தியம் என்பதா?

Related Posts Plugin for WordPress, Blogger...