சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நண்பர் ஈஸ்வரனுடன் தமிழ் சினிமா குறித்து உரையாடிக்கொண்டு இருந்த பொழுது 'காதலில் சொதப்புவது எப்படி ஓடியதை வைத்து மட்டுமே 'நாளைய இயக்குனர்கள்' கோடம்பாக்கத்தில் பெரும் வெற்றி பெறுவர் என்று கணித்து விட முடியாது. 10 நிமிட படமெடுப்பவர்களால் இரண்டரை மணிநேர சினிமா மூலம் ரசிகர்களை கட்டிப்போடுவது அவ்வளவு எளிதல்ல என்று கூறினார். ஆனால் பீட்சா மூலம் கார்த்திக் சுப்புராஜ் எனும் இயக்குனர் 'T20 ஆடத்தெரிந்த எங்களுக்கு 'டெஸ்ட்' மேட்ச் ஆடும் சூட்சுமம் நன்றாகவே தெரியும்' என நிரூபித்து விட்டார்!!
திகில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. கல்லூரி படிக்கையில் 'ஈவில் டெட்'(ரீ-ரிலீஸ்) படத்தை பைலட் தியேட்டரில் பார்க்க சென்றேன். 'ஒரு சீன்லயாவது நீ பயந்தே தீருவ' என்று நண்பர்கள் கிச்சு கிச்சு மூட்டியே உள்ளே அழைத்து சென்றனர். 'ஆறு வயசுலேயே அத்தே தச்சூடு ராஜ நாகத்தை வலது தோள்ல ஒண்ணு, எடது தோள்ல ஒண்ணுன்னு போட்டுக்கிட்டு திரிஞ்ச பய நீயி' என்று பாட்டி எனது பால்ய வயதில் சொன்னதாக ஞாபகம். அதனால் ஈவில் டெட் டெர்ரரை கிளப்பவில்லை. ஒருமுறை டி.வி.யில் 'அதே கண்கள்' படம் பார்த்தபோது 'அட..தமிழ்ல இப்படி ஒரு த்ரில்லரா? யார் அந்த மர்ம நபர்? அசோகன், ரவிச்சந்திரன் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் சந்தேகம் கொள்ள வைத்து விறுவிறுப்பை கிளப்பியது. நானும் பயமுறுத்தி பரபரப்பை கூட்டுகிறேன் பேர்வழி என்று அதன் பின் நிறைய பேர் முயன்று மீசை இல்லாவிடினும் மேலுதட்டில் மண்ணுடனேயே பின்வாங்கி சென்றனர்.
சமீபத்தில் பார்த்த அம்புலி இவ்வகையரா படங்களில் ஒரு ஈர்ப்பை தந்ததென சொல்லலாம். இன்னும் சிறப்பாக கையாளப்பட்டு இருந்தால் பெரிதும் பேசப்பட்டு இருக்கும் அம்புலி. அவ்வரிசையில் தற்போது தியேட்டர்களில் டெலிவரி ஆகி இருக்கிறது பீட்சா. 'வெண்ணை ரொட்டி' என்று பெயர் வைத்தே தீர வேண்டும் என எந்த கட்சியும் 'அவர் முமென்ட் இஸ் வைட்டிங்' என்று அடம் பிடிக்காதது ஆறுதல்!!
ஒரு வீடு. ஒரு கடை. புதிய நாயகன், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள். இவர்களை இயக்கி உள்ளது ஒரு 'அமுல் பேபி' இயக்குனர். முதல் காட்சியிலேயே திகிலை கிளப்பி இறுதிவரை நேரம் போனதே தெரியாமல் நம்மை ஆட்கொண்டு விடுகிறது. 'என்னை ஏன்டா இந்த படத்துக்கு கூட்டிட்டு வந்த' என தியேட்டரில் கேட்ட இளைஞனின் லேசான அலறல் பீட்சாவின் அமோக விற்பனைக்கான அசல் ஆட். கொட்டும் மழை சீசனில் ஏசியை வேறு அதிகம் போட்ட தியேட்டரில் இப்படி ஒரு இருட்டறை விளையாட்டைக்கண்டு அதிர்ந்த ரசிகர்கள் 'எப்படா இடைவேளை வரும். லைட்ட போடுங்க. பாத்ரூமுக்கு ஓடனும்' என்ற மன ஓட்டத்தில் இருந்திருப்பர் என்பது நிதர்சனம். நான் பார்த்த வரையில் சிறந்த திரைப்படத்தை பார்த்த திருப்தியில் சுபம் போட்டதும் ரசிகர்கள் கை தட்டி பார்த்ததுண்டு. ஆனால் இடைவேளை என்று திரையில் போட்டதும் கைத்தட்டல் விழுந்தது இதுவே முதன் முறை. இயக்குனர், ஒளிப்பதிவாளர், நாயகன் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கான சிறப்பு பரிசது.
சிம்புவின் தம்பி சாயலில் இருக்கும் கருப்பு சொக்கா பேபிதான் இயக்குனர்!!
முகமூடி, பில்லா - 2, தாண்டவம், மாற்றான் என வலுவான கூட்டணிகளால் அமைந்த காவியங்கள் பஞ்சர் ஆகிப்போன இவ்வாண்டில் நான் ஈ, நான், சுந்தரபாண்டியன், பீட்சா போன்ற படங்கள் ஆரவாரமின்றி சுயேட்சையாக மக்களால் தேர்ந்து எடுக்கப்படுவது ஜாம்பவான்களுக்கான அபாய எச்சரிக்கை. அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகனை யூகிக்க விடாமல் இறுதி வரை தொடர் சிக்சர் அடித்த இயக்குனர் கார்த்திக்..'ரொம்ப நல்லா வருவீங்க தம்பி'!! 'பூத் ரிட்டர்ன்ஸ்' எடுத்த ராம் கோபால் வர்மா அவசியம் எங்க தம்பி கார்த்திக்கிடம் ட்யூசன் படித்தால் நலம்.
'விக்ரம், சூர்யா, யுவன், ஹாரிஸ், அனுஷ்கா, காஜல்..இந்த டீம் போதும். ரசிகனை உள்ளே கொண்டு வந்துரலாம். கே.வி. ஆனந்த், விஜய் மாதிரி இயக்குனர்கள் மத்ததை பாத்துப்பாங்க. ஆயிரம் தியேட்டர்ல ரிலீஸ் பண்றோம். பணத்தை அள்றோம்' எனும் அலட்சிய போக்கால் மனம் போன போக்கில் படமெடுப்போருக்கான காலம் இனி அதிகம் இல்லை. நாளைய இயக்குனர்கள் எல்லாம் இன்றைய இயக்குனர்கள் நாற்காலியில் வலுவாக இடம் பிடிக்க ஆரம்பித்தாகி விட்டது. சுதாரியுங்கள். இல்லையேல் நேற்றைய இயக்குனர்கள் லிஸ்டில் உங்கள் பெயர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும்!!
பீட்சா - யுவர் முமென்ட் இஸ் வைட்டிங். டிக்கட் எடுங்க.
..................................................
.................................................
10 comments:
விமர்சனம் சூப்பர்.
//ஆனால் இடைவேளை என்று திரையில் போட்டதும் கைத்தட்டல் விழுந்தது இதுவே முதன் முறை //
படம் நல்லா போயிட்டிருக்கும்போது இடைவேளை வந்தா கொஞ்சம் எரிச்சல் தானே வரும் சதோசமா கைதட்டினா...
// நான் ஈ, நான், சுந்தரபாண்டியன், பீட்சா போன்ற படங்கள் //
சாட்டை-யும் நல்லா இருக்குனு
விமர்சனம் பட்சிச்சேன் இல்லையா???
அட டைரக்டர் நிஜமா குறளரசன் மாதிரி தான் கீறார்
நான் படம் பார்க்க முக்கிய காரணம் அவர் இடது பக்கம் நிற்பவர் ஹீ ஹீ
// கல்லூரி படிக்கையில் 'ஈவில் டெட்'(ரீ-ரிலீஸ்) படத்தை பைலட் தியேட்டரில் பார்க்க சென்றேன். //
உமது ஏழ்மை நிலை கண்டு வருந்துகிறேன்... நேரில் சந்திக்கும்போது பொற்கிழி தருகிறேன்...
// 'வெண்ணை ரொட்டி' என்று பெயர் வைத்தே தீர வேண்டும் என எந்த கட்சியும் 'அவர் முமென்ட் இஸ் வைட்டிங்' என்று அடம் பிடிக்காதது ஆறுதல்!! //
இப்பொழுதெல்லாம் தமிழில் பெயர் வைத்தால் மட்டும் வரிவிலக்கு கிடையாது... நிறைய ரூல்ஸ் இருக்கு...
விமர்சனம் நல்லாயிருந்துச்சுண்ணே ... டைரக்டர் ஓகே. அவரு பக்கத்துல மிஷ்கின் தம்பி மாதிரி நிக்கிறாரே. அவரு யாரு? :P
//'T20 ஆடத்தெரிந்த எங்களுக்கு 'டெஸ்ட்' மேட்ச் ஆடும் சூட்சுமம் நன்றாகவே தெரியும்'//
என்னே ஒரு உதாரணம்!!
//இல்லையேல் நேற்றைய இயக்குனர்கள் லிஸ்டில் உங்கள் பெயர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும்!!//
அந்த நாளைத் தான் ரொம்ப ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன். :)
/// T20 ஆடத்தெரிந்த எங்களுக்கு 'டெஸ்ட்' மேட்ச் ஆடும் சூட்சுமம் நன்றாகவே தெரியும்' என நிரூபித்து விட்டார்!! ///
இது போல் விமர்சனம் பல இடங்களில் 'நச்'...
//'பூத் ரிட்டர்ன்ஸ்' எடுத்த ராம் கோபால் வர்மா அவசியம் எங்க தம்பி கார்த்திக்கிடம் ட்யூசன் படித்தால் நலம். ///
சூப்பர்...
//'T20 ஆடத்தெரிந்த எங்களுக்கு 'டெஸ்ட்' மேட்ச் ஆடும் ///
எனக்கென்னமோ நீங்க சினிமாவை ஒன்டே மேட்ச் உடன் கம்பேர் பண்ணிருக்கலமோன்னு தோணுது.. டெஸ்ட்!! அது டெலி சீரியல்?
summa nachunu oru padam
சரிய்யா படத்தை பார்த்துருவோம், உன் விமர்சனத்திற்காக...!
ஐய் நானும் படம் பார்த்துட்டேன் நானும் படம் பார்த்துட்டேன் ... என்ஜாய் பண்ணி பார்க்க வேண்டிய படம் சிவா, வாவ் நைஸ்...... உங்க விமர்சனமும் நைஸ் தல....
கேபிள் ஜாக்கி உண்மைத்தமிழன் சிபி எல்லாரும் கதை விமர்சனம் எழுதுறாங்க நீங்க மட்டும்தான் சினிமா விமர்சனம் எழுதுறீங்க
//கேபிள் ஜாக்கி உண்மைத்தமிழன் சிபி// அய்யய்யோ செளிபிரிடீஸ் பத்தி தப்ப பேசிடனே கோர்ட்டு கேசின்னு அலைய வசிருவான்களோ...
எசமான் நீங்க தான் காப்பத்தனும்
Post a Comment