CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, October 18, 2012

போய்த்தொல!!


                   

என்னதான் அரசாங்கம் 'கக்கூசை கட்டி தொலைங்கய்யோ யோவ்' என்று ஊரெங்கும் உரக்க கூவி என்ன பயன். பணம் இருந்தும் சில அகராதி புடிச்ச இல்லத்து அரசன்/அரசிங்க 'அட போய்யா...வீணாப்போறத கட்டிக்காக்க கட்டடம் வேறயாக்கும். காத்தாட போற சொகமே தனிதான்' என்று இன்றும் இறுமாப்புடன் கண்டு கொள்ளாமல் 'போகின்றனர்'. 'ஆயிரங்களை செலவு செய்து வித விதமான செல் போன்களை வாங்கினாலும் வாங்குவேன். நவீன கட்டண கழிப்பறையில் குத்த வைக்கவே மாட்டேன். எவன் 2 ரூபா தருவான். அதுவும் வெளியூர் பஸ் ஸ்டாண்டுல 5 ரூவா கேக்கறான் 'கழி'சடை' என்று வறுமைக்கோடு குறித்து வக்கனையாக வசனம் பேசுகிற கோஷ்டிகளுக்கும் பஞ்சமில்லை.தோழர்களே...கக்கா பற்றிய சிறு தகவல்கள் மற்றும் நினைவலைகளால் உங்களை ஒரு பரவச நிலைக்கு கொண்டு செல்லவே இப்பதிவு. வாங்க...போகலாம்!!

பப்பரப்பே என்று வெட்டவெளியில் கலீஜ் செய்யாமல் நாகரீகமாக கழிவறை கட்டி பழையன கழித்தலை பண்டைய காலத்திலேயே செய்தவர்கள் ஹரப்பா, மொகஞ்சதாரோ வாழ் மக்கள். அதுதான் தற்போதைய இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இருந்த இடம். flush டாய்லட் எனும் நவீன கக்கூசை 1596 ஆம் ஆண்டு கண்டுபிடித்தவர் ஜான் ஹாரிங்டன். இப்படியாக இதன் வரலாறு அலெக்சாண்டர், நெப்போலியனுக்கு இணையாக பல்வேறு திருப்பங்களையும், கலக்கலான நிகழ்வுகளாலும் அமையப்பெற்றது. 'ஒரு மனுஷன் எப்படி வேணாலும் சாகலாம். ஆனா கீழ போனதால்தான் மேல போனான்னு மட்டும் பேர் வாங்கவே கூடாது' எனும் பழமொழிக்கேற்ப அளவாக உண்டு அம்சமாக டவுன்லோட் செய்தலே உன்னத உடலுக்கு நாம் செய்யும் தொண்டு.

சிறுவயது முதல் இன்று வரை விசித்திரமான கக்காயிஸ்ட்களை நம்மில் பலர் சந்தித்து இருப்போம். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? தம்மாத்தூண்டாக இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள்: கூட்டுக்குடித்தனம் இருந்த காம்பவுண்டில் வசித்ததால் எல்லா வீட்டிற்கும் சேர்த்து மூன்றே கழிவறை மட்டுமே எங்களுக்கு. அதிகாலை எழுந்து அவசரமாக இலக்கை நோக்கி பாயும்போது எனக்கு முன்பே பக்கத்து வீட்டு ஸ்ரீதர் மாமா ஜூனியர் விகடனை கக்கத்தில் வைத்துக்கொண்டு உள்ளே புகுந்து விடுவார். கடைசி பக்கம் வரை கரைத்து குடித்த பின்பே அவருக்கு வெளியே வரும். அதன் பின்பு அவர் வெளியே வருவார். கெரகம் பிடித்தவர் ஜூ.வி. படிக்கும்போது மூக்கை எந்த பூட்டால் பூட்டி இருப்பார் என்ற சந்தேகம் இன்றுவரை தொடர்கிறது எனக்கு..!!     

அங்கு சில வீடுகள் தள்ளி இருந்தது நண்பன் கிரியின் இருப்பிடம். ஓட்டை குண்டு பல்பை மாற்றாமல் வீட்டு ஓனர் வருடக்கணக்கில் வைத்து இருந்ததால் இரவு நேரங்களில் கழிவறைக்குள் நுழைய பயந்து தெருவில் அமர்ந்து டவுன்லோட் செய்வான் அந்த படுவா. எருமை வயதாகி ஏழாம் வகுப்பு படிக்கும்போதும் அந்த வெட்டவெளி தியானத்தை அவன் கைவிடவில்லை. அவ்வப்போது நான் 'டேய்..ச்சீ..உள்ள போ. பொம்பளைங்க எல்லாம் பாக்கறாங்க' என்று கல்லை விட்டு எறிந்தும் பயனில்லை. நீண்ட வருடங்கள் கழித்து அவனை ஒருமுறை சந்திக்க சென்றேன். திருமணம் ஆகி இருந்தது. வாசலில் நின்று பேசிக்கொண்டு இருக்கையில் அவனுடைய சொந்தக்கார பையன் ஒருவன் ட்ரவுசரை வேகமாக கழற்றியவாறு கிரி முன்பு அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்து லோடு இறக்க ஆரம்பித்தான். கையில் குச்சி ஐஸுடன். 'த்தூ' மாரி பொழிந்துவிட்டு நடையை கட்டினேன்.   

சில நாட்களுக்கு முன்பு ஒரு அதிகாலை நேரத்தில் அதிபிரபல பதிவருக்கு போன் போட்டு பேசியே கொல்லலாம் என எண்ணினேன்(எத்தனை பேரை பேசியே கொன்றிருப்பார்). முதல் பத்து நிமிடங்கள் பொறுமையாக பேசியவர் 'சரி...கொஞ்ச நேரம் கழிச்சி கால் பண்ணு. ஒரு வேலை இருக்கு' என்று கெஞ்சினார். நானோ 'அதெல்லாம் முடியாது. எங்களுக்கு எத்தனை முறை அறுவை சிகிச்சை செஞ்சி இருப்பீங்க. பேசுங்க. டாபிக்கா இல்லை. கேஸ் விலை ஏறிப்போச்சி. மன்மோகன் கதை நாறிப்போச்சி' என தொடர்ந்தேன். 'டேய்...புரிஞ்சிக்க. வயிறு கலக்குது..' என்று அபஸ்வரத்தில் அலறினார். நான் விடுவதாய் இல்லை. இரண்டு நிமிடங்கள் மயான அமைதி. அதன் பின் அவர் 'சரி..இப்ப பேசு. எவ்ளோ நேரம் வேணும்னாலும்' என கம்பீரக்குரலில் கர்ஜிக்க ஆரம்பித்தார். 'அவசரமா போகணும்னு சொன்னாரே? இப்ப...' என்று நான் குழம்ப...அண்ணன் சொன்ன பதில். 'நான் இப்ப 'போய்க்கிட்டுதான்' இருக்கேன். எங்க கிட்டயேவா? பேசு. இப்ப பேசு'. போனில் துர்வாடை வீசிவிடுமோ எனும் அச்சத்தில் தொடர்பை துண்டித்தேன். மறக்க மாட்டேன் அந்த மகானை!!

இப்படியாக நம்மில் பலர் இந்த சோதனைச்'சாவடி'களை கடக்காமல் காலத்தை 'கழிக்க' இயலாது என்பது மட்டும் நிதர்சனம். வீட்டுக்கு/மேன்சனுக்கு குறைந்தது இருவர் இப்படி இல்லாமல் இல்லை. அதாவது  கக்கூசில் நுழைந்தால் மணிக்கணக்கில் குந்திய வண்ணம் மலரும் நினைவுகளை  அசை போட்டவாறே பொழுதை போக்குவது ஒரு ரகம். கதவோரம் கதிகலங்கி கதக்களி ஆடுபவனுக்கு  வாய்ப்பு தராமல் அல்டாச்சியம் செய்வது. இன்னொரு ரகம் இதனினும் வினோதம். 'ஒரு நிமிஷம் உக்காருங்க. கக்கூஸ் போயிட்டு வந்துடறேன்' என்று ஓடுவார். நாம் ஹாலில் இருக்கும் பேப்பரை எடுத்து 'தினத்தந்'....படித்து முடிப்பதற்குள் 'போயிட்டு வந்துட்டேன். அப்பறம் சொல்லுங்க' என சட்டென வந்து நிற்பார் மனிதர். அப்படி என்னதான் போனாரோ?   
              
கழிவறையில் பல்வேறு மனநிலைகளுடன் மாந்தர்கள். காணொளி: 

  
..................................................................................


                                                                                             

15 comments:

arasan said...

வணக்கம் சிவா அண்ணே ..
எப்படி இப்படி ஒரு பதிவு போடணும் என்று தோனுச்சு ..
முதல் படமும் , கடைசி விடியோவும் எப்படி தான் உங்க கண்ணுக்கு மட்டும் சிக்குதோ ?

சதீஷ் செல்லதுரை said...

யாருன்னே அந்த பிரபல பதிவர்? அத கிசு கிசு பாணில போட்டு விடுங்க...மணக்கட்டும்...ஈஸ்ட் ஆர் வெஸ்ட் வாய்க்கா ஓரம் வயலோரம் தண்டவாளம்தான் பெஸ்ட் ....பாழாய்ப்போன நாகரிகம் எல்லாத்தையும் கெடுத்து போட்டுடுச்சு...

பட்டிகாட்டான் Jey said...

// யாருன்னே அந்த பிரபல பதிவர்? //

அது *சிதம்பர* ரகசியம் சொல்ல முடியாத்....... :-))))

பட்டிகாட்டான் Jey said...

ஆரூர் மூனா செந்தில் பிளஸ்ல போட்ட வாஷ் பேசின் படத்தை எக்ஸ்ட்ராவா இங்க போட்டு....

இது கக்கா போனபின் வந்து கை கழுவும் இடம்னு போட்ருக்கலாம் இல்ல....

அந்த பிளஸ் சுட்டியாவது இங்கே போடு... :-)))

பட்டிகாட்டான் Jey said...

ங்கொயாலே மெட்ராசூ நைட் 2.33 லிருந்து 2.35 வரை அனுப்பிச்ச 4 நாலு எஸ் எம் எஸ் எல்லாரும் பாக்கிறா மாதிரி டிஸ்ப்லே வைக்கிறேன்....:-)))

! சிவகுமார் ! said...

//அரசன் சே said...
வணக்கம் சிவா அண்ணே ..
எப்படி இப்படி ஒரு பதிவு போடணும் என்று தோனுச்சு ..//

கக்கா பதிவுகளின் காவியத்தலைவன் பன்னிக்குட்டியின் இன்ஸ்பிரேஷன் தான்!!

! சிவகுமார் ! said...


//சதீஷ் செல்லதுரை said...
யாருன்னே அந்த பிரபல பதிவர்?//

அவர் முற்றும் துறந்த மகான்!!

! சிவகுமார் ! said...


@ ஜெய்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்....

பட்டிகாட்டான் Jey said...

//
@ ஜெய்

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.... //

மீறி எழுந்தால் மறுபடியும் கவ்வும்...:-))

இப்படிக்கி,
நாய் நக்ஸ் நக்கீரன் :-)))

Unknown said...

இப்பதிவின் மூலம் எங்களையெல்லாம் மெய்சிலிர்க்க வைத்து விட்டீர். வாழ்க பல்லாண்டு. இப்படியே தொண்டு செய்து தலைவர் பன்னிக்குட்டியின் புகழை பாரெங்கும் பரப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நாய் நக்ஸ் said...

இப்போதைக்கு இதான்....
:)))))))))))))))))

vikky said...

kakaka pooo

vikky said...

kakaka pooo

Philosophy Prabhakaran said...

யோவ் என்னய்யா இது கக்கூசை பத்தி எல்லாம் எழுதி கலீஜ் பண்ற... ச்சீ ச்சீ ச்சீ ச்சீ கெட்டப்பய...

Unknown said...

நக்கீரன் போஸ்ட் படிச்ச மாரியே இருக்கு...!

Related Posts Plugin for WordPress, Blogger...