CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, October 13, 2012

மாற்றான் 


விடுநர்:
கே.வி. ஆனந்த்,
ஹைடெக் மசாலா இயக்குனர்
C/O சூர்யா-ஹாரிஸ் விலாஸ்,
கோடை(கோடம்பாக்கம்). 

பெறுநர்:
சிவா,
இணை(ய) கீ போர்ட் இயக்குனர்,
சென்னை.

பொருள்: மாற்றான் – வாக்குமூலம் (வழக்கு எண் 1/2)

மேன்மைமிகு சிவா அவர்களுக்கு,

வணக்கம். வீக்கென்ட் காலைக்காட்சி பார்த்துவிட்டு அரக்க பரக்க விமர்சனம் எழுத கணினி முன்பு ஓடிவந்து குத்த வைத்திருப்பீர்கள் என்று தெரியும். என் படம் பார்த்த (டபுள்) எபக்டில் இருந்து மீண்டு வர சற்று நேரமாகும் என்பதால் ருமேனியா பழச்சாற்றை அருந்திவிட்டு ஆசவாசப்படுத்தி கொள்ளவும். எங்கள் டீம் குறித்து தங்கள் மனதில் எழும் எழுச்சியான சந்தேகங்களுக்கு என்னாலான பதில்களை ‘என்னமோ ஏதோ’ முன் வைக்கிறேன்.

ஏ, பி,சி மூன்று க்ளாஸ் ஆடியன்சையும் தக்க வைக்க நான் படும் பாடு உங்களுக்கு என்ன தெரியும்? ஹாரிஸ் இசை, உக்வேனியா, பென்சில் வேனியா என்று வாயில் நுழையாத நாடுகளில் ஷூட்டிங், கௌதம் மேனன் பாணியில் வெள்ளைத்தோல் க்ரூப் டான்சர்கள்..இந்த செட் அப் அதி அவசியம் ஆகிப்போகிறது மூவேந்தர்(நான், சூர்யா, ஹாரிஸ்) ரசிகர்களை தக்க வைக்க. மணிரத்னம் மற்றும் மகேந்திரன் பட கேரக்டர்களின் வசன உச்சரிப்பை கலந்து கட்டிய டயலாக் டெலிவரி துணையுடன் இது கமர்சியல் படமா? கருத்து சொல்ற படமா? சயன்ஸ் கலந்த பொலிட்டிக்கல் த்ரில்லரா? என்று ரசிகனை மண்டை காய வைத்து ‘ஒரு தபா பாக்கலாம்பா’ என்று சொல்ல வைக்க....போங்க பாஸ். என் சேர்ல ஒரு நாள் உக்காந்து பாருங்க.

இப்படி மங்குனித்தனமாவா சீன் பண்ணுவாங்க என்று நீங்கள் இதைத்தானே சொல்கிறீர்கள்:

என்னதான் பசியில் இருந்தாலும் உண்ணாவிரதத்தில் இருக்கும் ஊழியர்கள் பட்டவர்த்தனமாக சிக்கன் பீஸ்களை உண்பது, ஹாரிஸ் இசையில் ஒத்தை பாடல் கூட விளங்காமல் போனது, பீகாரி அடியாளின் போன் சூர்யா கையில் இருக்கும்போது கம்பெனி மேனேஜர்(!) பீகாரிதான் லைனில் உள்ளாரா என்று  கன்பர்ம் செய்யாமல் உண்மைகளை உளறுவது..இன்னும் சில. என்ன சார் செய்ய? மூன்று க்ளாஸ் மக்களையும் கவர் செய்ய அப்படி ஒரு சீன் வச்சா இப்படி உதைக்கும். வைஸ் வெர்சா. மாற்றான் மாதிரி.

இன்டர்வல் வரை ரெண்டு சூர்யாவும் நன்றாக நடித்து இருந்ததால் உங்களை ரெஸ்ட் ரூமுக்கு அவசரமாக ஓட விடாமல் ஜாக்கிங் போக வைத்ததே எமக்கு வெற்றிதான். தமன்னா அளவிற்கு கலரும், நடிப்பும் இல்லாவிடினும் முட்டைக்கண்களால் உங்கள் இதயத்தை ஓரளவு காஜல் கவ்வியது கண்கூடு. ஒரு சூர்யா தன்னை விட்டு பிரிந்த பின்பு வரும் பாடலில் கண்ணாடி அருகே ஒட்டிக்கொண்டு அவன் தன்னுடன் இருப்பதாக இன்னொரு சூர்யா பீல் பண்ணுவது விசுவல் கவிதை என்று உங்கள் மனசாட்சி பாராட்டுவது கேட்கிறது.

‘யோவ்..குள்ளமுனி. காஜல் அகர்வாலுக்கு ரஷ்ய பாஷை தெரியும்னு அறிமுகம் செஞ்சப்பவே எனர்ஜி லைட்டா ஆப் ஆச்சி. அந்த அம்மணிக்கு பாரதி கவிதைகள்ன்னா கொள்ளை உசுருங்கிற மாதிரியெல்லாம் சீனு வக்கிறியே. படுவா. நேர்ல சிக்குன திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் யானையை வாடகைக்கி வாங்கிட்டு வந்து தொரத்தி தொரத்தி அடிப்பேன்’ என்று உக்கிரம் அடைவது எனக்கு புரிகிறது. இதே கேள்வியை நீங்கள் ஏன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ராஜீவ் மேனனை பார்த்து கேட்கவில்லை? முன்னாள் பேப் ஐஸ்வர்யா ராய் அப்படத்தில் பாரதி ரசிகையாய் வந்த போது வாய்க்குள் இரண்டு பெருச்சாளிகள் நுழையும் அளவிற்கு பிளந்து கொண்டு பார்த்ததேன்? ஏன் என்று எனக்கு தெரியும்? ‘ராஜீவ் மேனன் செகப்பு. நான் கருப்பு. செகப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டாண்டா’ எனும் அடிமை மனோபாவத்தில் ஊறியவனே? யூ ப்ளடி செகண்ட் க்ரேட் மசாலா மூவி பேன். ஸ்டூல் போட்டு ஏறி நின்று பற்களை பேர்த்து விடுவேன்.

‘தந்தையென்றும் பாராமல் தேசத்தின் நலன் கருதி சூர்யா தொண்டு செய்ததால் அவருக்கு ஜனாதிபதி கையால் விருது வழங்கப்படுகிறது’ க்ளைமாக்ஸ் கண்டு என்னை டம்ளருக்குள் போட்டு நயாகரா நீர்வீழ்ச்சியில் கொட்டி விட தங்கள் புஜங்கள் துடிப்பதை அறிகிறேன். அதற்கு முன்பாக எனது இறுதி ஆசை ஒன்று. பல நாள் சந்தேகமும் கூட. தெள்ளத்தெளிவாக சினிமா விமர்சனம் எழுதிய பின்பு எங்கிருந்தோ ஒரு பதிவர் பின்னூட்டத்தில் வந்து ‘அடடே..உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நன்றி’ என்றும், ‘இந்த படத்தை பார்க்கலாமா? வேணாமா?’ என்றும் கேள்வி எழுப்புகின்றனரே (விடிய விடிய எந்திரன் பாத்துட்டு ரஜினிக்கு ஜோடி பறவை முனியம்மாவா என்று கேட்கும் கிராதகன் போல)...அந்த மாற்றான்களை மட்டும் கண்ணில் காட்டவும். ஒரே மடக்கில் ரெண்டு லிட்டர் எனர்ஜி ஆன் ட்ரிங்கை அவர்கள் வாயில் ஊற்றிய பின்புதான் எனது அடுத்த ஷூட்டிங் துவங்கும்.

மீண்டும் சந்திப்போம். 

இப்படிக்கு,
கே.வி.ஆனந்த்.  

குறிப்பு:

// EFX காரர்களின் உழைப்பும், எடிட்டர் ஆண்டனியின் ட்ரிம்மிங்கும் அபாரம். ஆனால் சில பல காட்சிகளில் அவுட் ஆஃப் போகஸில் இருப்பதை ஏன் கவனிக்காமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. படம் நெடுக லாஜிக் மிஸ்டேக்குகள் கொட்டிக் கிடக்கிறது. இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த ஒருவன் இந்த ஓட்டம் ஓடுவது எல்லாம் சிரிப்பாக இருக்கிறது. ரஷ்ய அதிகாரிகளின் காட்சிகள் எல்லாம் அபத்த லாஜிக் மீறல்களின் உச்சம்.  குஜராத்தில் விழாவில் கலந்து கொள்ள தமிழ்நாட்டு ரிஜிஸ்ட்ரேஷன் வண்டி இருப்பது, ஊர் ஊராய் அவர் அலைவது. பத்து பேரின் விந்தணுக்களிலிருந்து பிறந்தவர்கள்தான் அமலன் விமலன் என்று தெரியப்படும் அந்த குகை காட்சி எல்லாம் இழுவையின் உச்சம்.//

இப்படி கேபிள் சங்கர் எழுதிய மாற்றான் குறித்த மாற்றான விமர்சனத்தில் இருப்பது போல ஏகத்துக்கும் நொங்கு எடுக்காமல் தங்கள் பங்கிற்கு பவ்யமாக படம் பார்த்தமைக்கு நன்றிகள் உரித்தாகிறது.

இப்படிக்கு,

மறுக்கா....கே.வி.ஆனந்த்.   
..............................................................................                                                     

28 comments:

ஜோதிஜி said...

அசத்தல்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடடே..உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நன்றி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த படத்தை பார்க்கலாமா? வேணாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடி பறவை முனியம்மாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இதே கேள்வியை நீங்கள் ஏன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ராஜீவ் மேனனை பார்த்து கேட்கவில்லை? //////

அப்போ இந்த ப்ளாக்லாம் இல்லீங்களே......? இருந்திருந்தா செகப்பா இருக்கானேன்னும் பாக்காம போட்டு பொரட்டி இருந்திருப்போம்....!

இப்படிக்கு,
ஓனர்
மெட்ராஸ் பவன்

! சிவகுமார் ! said...

@ஜோதிஜி திருப்பூர்.

வாங்க ஜோதிஜி.

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அடடே..உங்கள் விமர்சனம் படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. நன்றி.//

உங்கள் பின்னூட்டம் எனர்ஜி ஆனை மிஞ்சி விட்டது. அருமையான ஊக்க மருந்து.

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த படத்தை பார்க்கலாமா? வேணாமா?//

இன்டர்வலில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு சிட்டாய் பறந்து விடவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த படத்தை பார்க்கலாமா? வேணாமா?//

இன்டர்வலில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு சிட்டாய் பறந்து விடவும்.///////

வரலேன்னா படம் முடியற வரை உக்காந்து ட்ரை பண்ணி பாக்கனுமா?

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடி பறவை முனியம்மாவா?//

என்ன ஒரு எடக்கு? கோடம்பாக்க அகத்தியர் கே.வி.ஆனந்தின் கமண்டலத்தில் இருக்கும் அக்கா பீனா மினரல் வாட்டரை பீய்ச்சி அடிப்பேன்.

! சிவகுமார் ! said...


பன்னிக்குட்டி ராம்சாமி said...
////இதே கேள்வியை நீங்கள் ஏன் ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ ராஜீவ் மேனனை பார்த்து கேட்கவில்லை? //////

அப்போ இந்த ப்ளாக்லாம் இல்லீங்களே......? இருந்திருந்தா செகப்பா இருக்கானேன்னும் பாக்காம போட்டு பொரட்டி இருந்திருப்போம்....!

இப்படிக்கு,
ஓனர்
மெட்ராஸ் பவன்//

மேற்கண்ட பன்னியார் ஆதாரம் நான் மாற்றானால் சுய நினைவில்லா நிலைக்கு ஆளாக்க பட்டபோது கட்டாயமாக கைநாட்டு வாங்கி பகிரப்பட்டது.

angusamy said...

விடுநர்:
சிவா,
இணை(ய) கீ போர்ட் இயக்குனர்,
சென்னை


பெறுநர்
ப்ளாக் வாசகர்கள்
தமிழ்நாடு
இந்தியா
அகில உலகம்

பொருள்: சிரிக்க வைக்கும் (விலா நோக )ப்ளாக் போஸ்ட்

மேன்மை மிகு வாசக நெஞ்சங்களுக்கு
ப்ளாக் படித்து விட்டு சுட சுட கமெண்ட் போட காத்து இருப்பீர்கள் என தெரியும்!
உங்களுக்கு எலாம் வித்தியாசமாகவும் விலா நோக சிரிக்க வைக்கும் படியும் ப்ளாக் போஸ்ட் எழுதுவது இவ்வளவு கஷ்டமான விஷயம் தெரியுமா ?
யோசிச்சு யோசிச்சு காடு போல வளர்ந்து இருக்கும் என் முடி எல்லாம் கொட்டி போனதுதான் மிச்சம்
படிக்கிற உங்களை எல்லாம் ஒவொவொரு வரி விடாம படிக்க வைக்கணும் , படிக்காம அருமையான பதிவு சுவையான பதிவு பகிர்வுக்கு நன்றி இப்படி எல்லாம் போடாம
உண்மையாகவே படிக்க வச்சு சிரிக்க வச்சு அப்புறம் கமெண்ட் போடா வைக்கணும்
இதையெல்லாம் ரூம் போட்டு யோசிக்க வேண்டி இருக்கிறது

மறுக்கா
சிவகுமார்

(யப்பா எப்படியோ எழுதி முடிச்சிட்டேன் உங்க ஸ்டைல ல ட்ரை பண்ணினேன் முடியலை . ரொம்ப நல்ல இருந்தது சிவகுமார்
வித்தியாசமா யோசிச்சு கலகல எழுதி இருக்கீங்க
நன்றி )

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த படத்தை பார்க்கலாமா? வேணாமா?//

இன்டர்வலில் இயற்கை உபாதையை கழித்துவிட்டு சிட்டாய் பறந்து விடவும்.///////

வரலேன்னா படம் முடியற வரை உக்காந்து ட்ரை பண்ணி பாக்கனுமா?//

ஹாரிஸ் பாடல்கள் அடிக்கடி 'கலக்குவதால்' அந்த ரிஸ்க் தேவைப்படாது.

! சிவகுமார் ! said...

@angusamy

நன்றி அங்குசாமி. உங்களுக்கு மாற்றான்,சாருலதா, ஸ்டக் ஆன் யு குறுந்தகடுகளும், எனர்ஜி ஆன் ஊக்க மருந்தும் பார்சல்!!

CS. Mohan Kumar said...

// தந்தையென்றும் பாராமல் தேசத்தின் நலன் கருதி சூர்யா தொண்டு செய்ததால் அவருக்கு ஜனாதிபதி கையால் விருது வழங்கப்படுகிறது//

அடேங்கப்பா அம்புட்டு நேரம் இருந்தீங்களா???

//ஹாரிஸ் இசையில் ஒத்தை பாடல் கூட விளங்காமல் போனது//

ரெண்டு பாட்டு கேட்க நிச்சயம் நல்லா தான் இருக்கு சிவா

angusamy said...//நன்றி அங்குசாமி. உங்களுக்கு மாற்றான்,சாருலதா, ஸ்டக் ஆன் யு குறுந்தகடுகளும், எனர்ஜி ஆன் ஊக்க மருந்தும் பார்சல்!!//

இத்தனையும் குடுக்காத சக்தியை உங்களுடைய விமர்சனம் குடுக்குது சார்

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...

// தந்தையென்றும் பாராமல் தேசத்தின் நலன் கருதி சூர்யா தொண்டு செய்ததால் அவருக்கு ஜனாதிபதி கையால் விருது வழங்கப்படுகிறது//

அடேங்கப்பா அம்புட்டு நேரம் இருந்தீங்களா???//

எமெர்ஜென்சி எக்ஸிட் கண்ணில் படவில்லை. சிக்குண்டேன். சிதைந்து போனேன்.

angusamy said...

ஏதோ நாங்க எல்லாம் உங்களை போல ப்ளாக் பெருந்தலைகள் இருப்பதால் தப்பிக்கிறோம்
எங்களுக்காக முதல் நாள் மொக்கை படமோ அல்லது சூரா மொக்கையோ கடைசி வரை காசு கொடுத்து
தைரியமா பார்கறீங்க பார்த்தீங்களா அதுக்கு ஒரு salute

பால கணேஷ் said...

இந்தப் படத்தின் கதையை ஏதோ வெளிநாட்டுப் படங்களின் டிவிடியிலிருந்து சுட்டதுன்னு பலர் (அநியாயமா) சொல்றாங்க. இதில வர்ற நிறைய காட்சிகள் மற்றும் கதைத் திருப்பங்கள் சுபா எழுதிய வெவ்வேறு நாவல்களில் இருக்கின்றன. ஒருவேளை இப்படி அவியலா பல விஷயங்களையும் ஒரே படத்துல கொட்டினதாலதான்... சிவாவுக்கு அஜீர்ணமாயிடுச்சோ என்னவோ...!

! சிவகுமார் ! said...


மோகன் குமார் said...

////ஹாரிஸ் இசையில் ஒத்தை பாடல் கூட விளங்காமல் போனது//

ரெண்டு பாட்டு கேட்க நிச்சயம் நல்லா தான் இருக்கு சிவா.

சில வாரங்களேனும் மனதில் நிற்கும் பாடல்களை மட்டுமே விரும்புவேன் சார். அதாவது சூப்பர் ரக பாட்டுகள். மற்ற எதையும் எனக்கு பிடித்த லிஸ்டில் சேர்ப்பதில்லை. கடைசியாக என்னை கவர்ந்த பாடல் வாகை சூட வா - 'செங்க சூளக்காரா'.

ஹாரிஸ் இசையில் வரும் பாடல்களின் காட்சி அமைப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருப்பது மொக்கையாக இருக்கிறது. ரஹ்மானுக்கு பிறகு இசைக்கான சிம்மாசனம் கோடம்பாக்கத்தில் காலியாகவே இருக்கிறது!!

Philosophy Prabhakaran said...

அப்ப படத்தை பார்க்க வேண்டாம்ன்னு சொல்றீங்க...???

CS. Mohan Kumar said...

Philosophy Prabhakaran said...

அப்ப படத்தை பார்க்க வேண்டாம்ன்னு சொல்றீங்க...???
***
அலோ உங்க தலைவி இந்த படத்தில் நல்லா தான் கீறாங்க. அவங்களுக்காக நீங்க பாத்தே ஆகணும்

Unknown said...

கடிதம் அருமை....!படம் பார்க்கனும் போல இருக்கி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//ரஹ்மானுக்கு பிறகு இசைக்கான சிம்மாசனம் கோடம்பாக்கத்தில் காலியாகவே இருக்கிறது!!//
ஏன் சிவா?. ரகுமான் தன்னோட சீட்ல இருந்து இன்னும் எழுந்திருக்கவே இல்லயே.

Philosophy Prabhakaran said...

@ மோகன் குமார்
// அலோ உங்க தலைவி இந்த படத்தில் நல்லா தான் கீறாங்க. அவங்களுக்காக நீங்க பாத்தே ஆகணும் //

தல... கன்னுக்குட்டி நடிச்ச படத்தை நான் பார்க்காம இருப்பேனா... ஏற்கனவே பார்த்தாச்சு... இது சும்மா டெம்ப்ளேட் பின்னூட்டவாதிகளை கலாய்ச்சு போட்டது...

arasan said...

இப்படி ஒரு கடிதத்தை படித்த பிறகாவது தியட்டர் சென்று படம் பார்த்தே ஆகவேண்டும் //

அது கண்ணு குட்டியில்லாமல் பசுவாக இருந்தாலும் பார்த்தே ஆகுவோம் ...
குஷ்புக்கு கோயில் கட்டிய புண்ணிய பூமி இது ...

Anonymous said...

என்னாது காஜல் தமன்னா அளவுக்கு இல்லையா? அடபோங்கய்யா..
தமன்னாங்குறது நல்ல பிகரு கிடைக்குற வரைக்கும் தமிழன் டெம்ப்ரரியா யூஸ் பண்ண ஒரு சப்ப அயிட்டம்(இது அயன்ல அவுங்க அண்ணனே சொன்னது).. அப்பால ஹன்சிகா, காஜல் எல்லாம் வந்தப்புறம் தமிழன் மாறிட்டான்.. நீங்க இன்னும் மாற்றானாவே இருக்கீங்களே?

Anonymous said...

பை தி வே.. மொக்கையா விமர்சனம் எழுதுறேன்ங்குற பேர்ல அந்த சீன்ல லாஜிக் ஓட்டை, இந்த சீன்ல கேமரா நொன்ன, ப்லா,ப்லா,ப்லா,ன்னு எங்கள வறுத்தெடுக்காம, இப்புடி எதாவது புதுசா எழுதுனீங்க பாருங்க.. அதுக்காகவே பாராட்டுகள்....

Related Posts Plugin for WordPress, Blogger...