CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, October 5, 2012

ஜெயா பேரிகை கொட்டடா!!
'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும திங்கு திங்குன்னு ஆடுச்சாம்'. அது போல தி.மு.க.வுக்கு பதில் அ(ம்மா).தி.மு.க.வை ஆட்சில உக்கார வச்சாலும் சரி..இல்லை இவங்களுக்கு பதில் அவங்களை உக்காத்தி வச்சாலும் சரி...நமக்கு மிச்சம் நக்கிப்போட்ட மாங்கொட்டைதான்!! தி.மு.க.ஆட்சில நமக்கு ஏழெட்டு மந்திரிங்க பேராவது மனசுல நிக்கும். மேடம் ஆட்சில பம்மும் பன்னீர்செல்வம், வளர்மதி யக்கா தவிர வேற யாரு இருக்காங்கன்னே தெரியலடா ரங்கநாதா. இந்த பொற்காலத்தை இன்னும் மூன்றரை வருஷம் அனுபவிக்கப்போறதை நெனச்சாலே.....

ஏதோ ஒரு மயான அமைதியான அட்மாஸ்பியர் நிலவுது ஸ்டேட்ல. தி.மு.க. அளவுக்கு சுறுசுறுப்பா வேலை செய்யற ஆளுங்கட்சி அமைச்சருங்க கண்ணுலேயே பட மாட்டறாங்க. முன்னாள் சென்னை மேயர் சுப்பிரமணியம்..சும்மா சொல்லக்கூடாது. கில்லிய்யா. சிட்டில ஏகப்பட்ட வேலைங்க நடந்தது. சென்னை ஜ்யாக்ரபி மனுஷனுக்கு அத்துப்படி. ஆனா சைதை துரைசாமி இதுவரை ஜஸ்ட் பாஸ் கூட ஆகல. 'சாவுற வரைக்கும் ரெட்டை எலைக்குதான் ஓட்டு' புகழ்  பாட்டிய  ரோடு க்ராஸ் பண்ணிவிட்டா 'எம்.ஜி.ஆர் தம்பி நீ நல்லா இருக்கணும்'ன்னு வாழ்த்தும். அதுக்கு நல்லவங்க எல்லாமே தலைவர்தான். அது போல இன்னைக்கு வரை கரண்ட் கட் ஆன அடுத்த செகண்ட் நம்ம கண்ணு முன்ன வர்ற உருவம் ஆற்காடு வீராசாமி. நெகடிவ்வோ, பாசிடிவ்வோ..எப்பவும் லைம் லைட்ல இருக்கணும். இந்த வித்தை தி.மு.க. ஆளுங்களுக்கு தெரிஞ்சதுல கடுகளவு கூட தெரியாம இருக்காங்க ஆளும் அமைச்சர்ஸ். மேடம் ஆட்சில பவர் போன பல வாரங்கள் கழிச்சி வெறியோட நெட்ல தேடும்போதுதான் தெரிஞ்சுது கரண்ட் மினிஸ்டர் பேரு நத்தம் விஸ்வனாதனாம். புவர் மார்க்கெட்டிங் மினிஸ்டரே.

பதவி ஏத்ததும் ஆடம்பரம் வேண்டாம்னு மேடம் சொன்னது ஞாபகம் வருது. அதை காதுல போட்டுக்காம அவங்க போற எடமெல்லாம் வரிசையா ப்ளெக்ஸ் வச்சி அசத்தாரங்க ப்ளட்டின் ப்ளட்ஸ். அம்மையாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியல. 'அந்த அமைச்சர் திடீர் நீக்கம். இவர்தான் புது ஆடு'ன்னு பேப்பர்ல செய்தி படிச்சிட்டு பாட்டம்ல பாத்தா 'திருத்தம். இவரும் இரு நொடிகளுக்கு முன்பு நீக்கம். புத்தம் புது ஆடு சிக்கி இருக்கு' அப்படின்னு போடறாங்க. அம்மா கட்சில அமைச்சரா இருக்கறதுக்கு......வேணாம் விடுங்க.

பாவம் நம்ம வாழும் வள்ளுவர் கலைஞர். பேரன் தலைமறைவு, தலைவர் பதவிக்கு பிள்ளைகள் போட்டி, ஈழம் பத்தி எது பேசினாலும் ட்ரவுசர் கிழியுது. இந்த டென்ஷனை போக்க பேசாம ஆளுங்கட்சிக்கு எதிரா மனித சங்கிலி, மாட்டு சங்கிலி போராட்டம்னு எதுனா நடத்தி 'நான் நிக்கறேன். நிக்கறேன்' புலாசுலாக்கி லெவலுக்காச்சும் எதையோ செஞ்சிட்டு போகட்டுமே. அதுக்கும் அனுமதி மறுத்தா என்ன நியாயம்? எல்லாருக்கும் இருக்குற ஒரே மாஸ் என்டர்டெயினர் அவரு மட்டும்தான். தயவு செஞ்சி அதுக்கெல்லாம் தடை போடாதீங்க மேடம். எதையாவது செஞ்சிட்டு திரியட்டும். அவரு பேச்சை கேட்டு சனங்க மனசு மாறுவாங்கன்னு பயப்பட வேண்டாம். அது அந்து போன ரீலு. நீங்க/நாங்க பயப்பட வேண்டியது உங்களுக்கு மட்டும்தான்.    

ஈழப்போர் நடந்தப்ப கள்ள மௌனம் சாதிச்ச கேப்டனை விட கூடங்குளம் விஷயத்துல நீங்க வாசிச்ச மௌன ராகம் இருக்கே..அய்யாடி. 'கன்னடக்காரன் கூட பேச்சு வார்த்தை எல்லாம் கிடையாது. வீ வில் மீட் கோர்ட்' தைரியத்துக்கு சபாஷ் மேடம். தன்னோட 'பெங்களூர்' பலனுக்காக பேச்சு வார்த்தை நடத்துறேன்னு லைவ் வள்ளுவர் விவசாயிங்களை ஏமாத்திட்டு வந்தாரே. அவருக்கு நீங்க எவ்வளவோ மேல். அதே நேரத்துல கரன்ட்டே இல்லாத மாநிலத்துல கரன்ட் பில்லை ஏத்துன உங்க ராசதந்திரம் இருக்கே...அட்ரா அட்ரா.     

'நான் என்ன பண்ணுவேன். கஜானா எல்லாத்தையும் ராவிட்டு ஒத்தை பருக்கிய வச்சிட்டு போனாரு கலைஞர். மத்திய அரசு நிதி ஒதுக்கல'..இதே பல்லவியை பாடுனா ஆகுற கதையா. நீங்களும் மத்திய அரசு போல அதிரடி பொருளாதார சீர்திருத்தம் கொண்டு வாங்க. மெரீனா பீச் நுழைவு கட்டணம் 101 ரூவா, ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் பண்ணா சொத்து பறிமுதல்...நெறைய திட்டம் கைவசம் இருக்கு. ஆனா மினிஸ்டர் பதவி மட்டும் வேணாம். ஏதோ எங்க தெருல இருக்குற ஒத்தை நாய் மட்டும் என்ன பாத்தா மரியாதை கொலைக்குது. அதுக்கு வெறி ஏத்த வேணாம் பாருங்க. 

..........................................................................................    
                                    

8 comments:

ராஜ் said...

சூப்பர் தல...
//ஒரே மாஸ் என்டர்டெயினர் அவரு மட்டும்தான்///
உண்மை..உண்மை...கலைஞர் இல்லாத இணைய வாழ்கையை நினைச்சு கூட பார்க்க முடியல.

ரஹீம் கஸ்ஸாலி said...

சான்சே இல்லை சிவா. பின்னிட்டீங்க

உலக சினிமா ரசிகன் said...

அம்மாவை விமர்சித்து எழுதும் மெட்ராஸ் பவனுக்கு...
‘சுப்பிரமணிய சாமி’ புகழ் மகளிர் அணி வந்துகிட்டு இருக்காங்க...

பொன் மாலை பொழுது said...

ரொம்ப கொழுப்புதானைய்யா உமக்கு.
நல்ல இருக்கு!

Yoga.S. said...

அருமை சிவா சார்!அம்மான்னா சும்மாவா???

rajamelaiyur said...

கரண்ட் கரண்ட்னு சொல்றிங்கலே அப்படினா என்னா?.

vikky said...

amma ammathan

saidaiazeez.blogspot.in said...

இன்னாபா நீ
நமக்கு கீறது மெர்னா பீச் மட்டும்தான். அதுக்கோன் நீ ஃபீஸ் போட சொல்லீட்டேயேபா...
கஸ்மாலம் கஸ்மாலம்

Related Posts Plugin for WordPress, Blogger...