CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Sunday, October 14, 2012

ஸ்பெஷல் மீல்ஸ்(14/10/12)
உன்னைப்போல் ஒருவன்: 

                                                                    தக்காளி....சுட்டே புடுவேன்!!

தொடர்ந்து தமிழ்ப்படங்களை காப்பி அடிப்பதையே பிழைப்பாக கொண்டிருக்கும் ஹாலிவுட் ராஸ்கோலுகள் அடங்குவதாக தெரியவில்லை. 'தள' விசய் நடிப்பில் தீபாவளிக்கு பொட்டு வெடியாக களமிறங்கும் டுப்பாக்கி படத்தின் ஸ்டில்களை 'அன் ஆபீசர் அண்ட் எ ஜென்ட்ல்மேன்(1982)' படத்தில் அப்படியே சுட்டுள்ளனர். நாயகி தொப்பி, ஹீரோ சொக்கா, பேக்கு கிரவுண்ட் கலர்களை மற்றும் மாற்றினால் சுட்டது இல்லை என்றாகிவிடுமா? அது எப்படிய்யா 2012 தீபாவளி ரிலீஸ் பட ஸ்டில்லை 1982 லயே சுட்டீங்க? Scoundrals....!! 
..................................................................................         

பூத் ரிடர்ன்ஸ்: 
ரங்கீலாவிற்கு பிறகு ராம் கோபால் வர்மா படைப்பை நேற்று பார்த்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சிறந்த 3D எபக்ட்டில் வந்திருக்கிறது இப்படம். 3D பெயரில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் ஹாலிவுட், ஹிந்தி படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. அதற்கு விதிவிலக்கு பூத் ரிட்டர்ன்ஸ். ஓரிரு காட்சிகளைத்தவிர பெரிதாக திகிலடிக்கவில்லை. ஒவ்வொரு ஷாட்டிலும் வீட்டில் இருக்கும் பல்வேறு பொருட்களுக்கு பின்புறத்தில்  கேமராவை வைத்து கடுப்பேற்றுவதை தவிர்த்து இருக்கலாம். சிறந்த 3D மற்றும் ஒலி அமைப்புள்ள தியேட்டர்களில் மட்டும் ஒருமுறை பார்க்க தகுந்த படமிது. 
................................................................................

தினந்தோறும்:
T20 உலகக்கோப்பை முடிந்த அடுத்த கணமே தொடங்கிவிட்டது சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள். 365 நாளும் விடாமல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருவது அந்த விளையாட்டு மீதான ஈர்ப்பை இன்னும் சில ஆண்டுகளில் வெகுவாக குறைத்து விடும் எனத்தெரிகிறது. பொன் முட்டையிடும் வாத்தாக இந்த விளையாட்டை பாவித்து சேனல்கள் எல்லாம் விளம்பர நிறுவனங்களுடன் கை கோர்த்து செய்து வரும் சேட்டைகளால் விரைவில் க்ரிக்கட் தனித்துவம் இழந்து தவிக்க இருப்பது உறுதி. க்ரிக்கட்டின் நிஜ முகமான டெஸ்ட் போட்டிகள் இன்னும் எத்தனை நாட்கள் ஜீவனுடன் இருக்கும் என்பதைப்பொறுத்தே இதன் எதிர்காலமும். பார்க்கலாம்.
.............................................................................   

லூபெர்:
டைம் ட்ராவெல் வகையறா சினிமா இது. சோர்ஸ் கோட் எனும் கிளாச்சிக் படத்திற்கு பிறகு பெரிய அளவில் விமர்சகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது லூபெர். ரெயின் மேக்கராக நடித்திருக்கும் சிறுவனின் வில்லத்தனம் அருமை. சிறப்பு மூளை இருந்தால் மட்டுமே கதை தெளிவாக புரியும்.  சாமான்ய ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமை காத்தால் மட்டுமே சீட்டில் அமர முடியும்.
................................................................................  

ஏக் தா டைகர்: 
இன்று மாலை அனைத்து ஆங்கில சேனல்களிலும் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் ப்ரெஸ்/சேனல் மீட் அனல் பறந்தது. அர்விந்த் கேஜ்ரிவால் சொன்ன ஊழல் புகார்களை அடியோடு மறுத்தார் சல்மான். 'எனது NGO மாற்றுத்திறனாளிகளுக்கான கேம்ப் நடத்தவில்லை என்பது பொய். அவரை அழைத்து வாருங்கள்' என்றார் சல்மான். பாவம் ஒரு வயதான தாத்தா காதில் மிஷின் வைத்தவாறு அமைச்சரின் அடிப்பொடிகளால் கொண்டு வரப்பட்டார். அவரின் காதில் 'நாங்க சொல்ல சொன்னதை அப்படியே சொல்லு' பாணியில் மந்திரம் ஓதினர். 'இப்போது நிருபர்கள் இவரைக்கேளுங்கள்' என்று சல்மான் சவால் விட்டார். பிறகு  அவரே அந்த பெரியவரிடம் 'உங்களை நான் கட்டாயப்படுத்தல. நீங்களே சொல்லுங்க' எனக்கூற...மஞ்சத்தண்ணி தெளித்த ஆடு போல மிரண்டார் பெரியவர். 

'சேர்ல உக்காருங்க' எனத்தொண்டர்கள் அவரை அழுத்தி உட்கார வைத்து பாசமழை பொழிய முயன்றபோது 'மினிஸ்டரே நிக்கறாரு. நான் குந்துனா பாவம்' என்பதை சைகையால் காட்டி கும்பிடு போட்டுவிட்டு 'ஆமாங்க. ஐயாதான் இந்த காது மிஷினை தந்தாரு' என்று சொன்னவுடன் பூரிப்புடன் சல்மான் சொன்னது:  'சபாஷ். சபாஷ்.தர்மம் வென்றது'. உடனே தொண்டர்கள் ஆர்ப்பரித்து கூவியது 'சல்மான் குர்ஷித் ஜிந்தாபாத். ஜிந்தாபாத்'. ஷங்கர் படத்தில் வரும் 'பொதுமக்கள்' கேரக்டர்கள் மற்றும் மசலாத்தனங்கள் கூட பிச்சை எடுக்கும் அளவிற்கு என்னா பெர்பாமன்ஸ் டா சாமி!!
........................................................................

செல்லமே: 
வற்றாத ஜீவநதியாக தமிழ் சினிமாவிற்கென்றே இறைவன் சில தெய்வப்பிறவிகளை தந்து கொண்டே இருப்பது நாம் அறிந்ததே. ஏதோ பவர் ஸ்டாரை கைது செய்ததன் மூலம் எம் போன்ற ரசிகர்களை நிலை குலைய வைக்கலாம் என்று எத்தனை பேர் சதி செய்தாலும் இறைவன் செவிமடுக்க போவதில்லை. அதற்கு ஆதாரம்தான் எங்கள் செல்லம் 'எம்.ஜி.ஆர். சிவா' அண்ணனின் படைப்பான சக்கரவர்த்தி திருமகன். இந்த வாரம் அதிரடி ரிலீஸ். முகமூடி, தாண்டவம், மாற்றான் என மெகா ஸ்டார்கள் மண்ணை கவ்வி வரும் வேளையில் நம் கலைத்தாகம் தீர்க்க வந்த எம்.ஜி.ஆர் சிவாவை வாழ்த்தி வணங்கி மீண்டும் வாழ்த்துவோம். கெட் ரெடி போல்க்ஸ்...ஹீ இஸ் பேக்!!

                                                           வாழும் எம்.ஜி.ஆர் வாழ்க வாழ்கவே!! 

..................................................................

புதிய மன்னர்கள்: 
பதிவர்கள் சிலர் பிரபல பதிவர்கள் ஆக துணைபுரிவது புத்தக வெளியீடுகள். குறிப்பாக சென்னையின் 'எலைட்' பதிவர்கள் பண்டைய காலத்தில் புத்தகம் எழுதினர். அதன் பின்பு குறும்படங்கள் எடுத்தனர். தற்போது அதன் பரிணாம வளர்ச்சியாக வெள்ளித்திரையில் மின்ன உள்ளனர். அவர்கள் குறித்த சிறப்பு செய்திகள்:

* பதிவர் சுரேகா விரைவில் வெளிவர உள்ள 'காசி குப்பம்' படத்தில் நான்கு பாடல்களை எழுதி உள்ளார்.        
    
* டிஸ்கவரி புக் பேலஸ் அதிபர் வேடியப்பன் அவர்கள் இயக்குனர் ஆவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஒரு மினி லிங்குசாமியாக அண்ணன் வலம் வரலாம்.

* 'டாப்' சினிமா பதிவர் வசனம் எழுதும் படத்தில் ஒரு அதிரடி டுவிஸ்ட்டு தரும் கேரக்டரில் களம் இறங்குகிறார் 'எங்கள் அண்ணா' கே.ஆர்.பி.செந்தில். பட ரிலீஸ் வரை அந்த கேரக்டர் பற்றிய தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.   
................................................................

பிரியாணி: 
சென்னையின் புகழ்பெற்ற மவுன்ட் ரோடு புஹாரி ஹோட்டலுக்கு சமீபத்தில் விசிட் அடித்தேன். இவ்வுணவகம் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு சில மாதங்கள் ஆகி உள்ளது. சிக்கன் தம் பிரியாணி விலை 150. சற்று கூட திகட்டாத ருசி. ராய்தாவும் இலகுவாக தொண்டையில் இறங்குகிறது. கத்தரிக்காய் கறி மட்டும் மிஸ்ஸிங். மெனுவை பார்த்தபோது ஒரு முக்கிய தகவல் கண்ணில் பட்டது. அது சிக்கன் 65 க்கான பெயர்க்காரணம். 1965 ஆம் ஆண்டு புஹாரி ஹோட்டல்தான் இந்த ஐட்டத்தை கண்டுபிடித்ததாம். எனவே சிக்கன் 65 என்று பெயர் வைத்துள்ளனர்.  கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகளை டெஸ்ட் செய்து இறுதியாக தற்போதைய ருசியில் இருக்கும் தம் பிரியாணியை 1951 ஆம் ஆண்டு சென்னையில் அறிமுகம் செய்துள்ளனர். 'மவுன்ட் ரோடு தியேட்டரில் படம். புஹாரியில் பிரியாணி' என்பதுதான் அந்தக்கால சென்னைவாசிகளின் வீக்கென்ட் தாரக மந்திரம் ஆயிற்றே! எல்.ஐ.சி. வழியாக தேவி தியேட்டர் செல்லும் வழியில் இருக்கிறது புஹாரி. தி.நகர் ஜி.என். செட்டி சாலை மற்றும் நந்தனத்திலும் கிளைகள் துவங்கி சில மாதங்கள் ஆகின்றன.
..........................................................................  
                                                          
என் ஆச ராசாவே: 
ஒட்டுமொத்த திரை உலகையே உலுக்க வரும் உன்னத காவியமாம், நமதுயிர் 'சேவை மனிதன்' எம்.ஜி.ஆர்.சிவா நடித்த ஓவியமாம் 'சக்கரவர்த்தி திருமகன்' ட்ரெயிலர். இதைப்பார்த்து கோமாவில் கிடக்கும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் ஸ்டார்களுக்கு எங்கள் அனுதாபங்கள்.

'ஐஸ் மழையானாலும் அவனை கூல் பண்ண முடியாது. சூரியனே ஆனாலும் அவனை சுட்டெரிக்க முடியாது' எனும் பின்னணிக்குரல் ஒலிக்கும் இந்த காணொளி ஒன்று போதும். இனிமே நாங்கதான்டா!!

           
...........................................................................

.......................................................

சமீபத்தில் (எனக்கு இயக்குனர் கே.வி.ஆனந்த்) எழுதியது:

மாற்றான் - ஒரு விளக்க கடிதம்
........................................................

                                                             

26 comments:

Philosophy Prabhakaran said...

வடை...!

Philosophy Prabhakaran said...

படித்துவிட்டு வருகிறேன்...

Philosophy Prabhakaran said...

மீல்ஸ் சுமாராத்தான் இருக்கு :(

நாய் நக்ஸ் said...

வாயா வாத்தியார் ஐயா....
:)))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது டாகுடர் படத்த காப்பியடிச்சிட்டாய்ங்களா........ டேய் கெளம்புங்கடா கொடிய கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமா கெளம்புங்கடா.. இன்னிக்கு என்னான்னு பாத்துடலாம்.......!

Anonymous said...

இந்த ஹாலிவுட்காரனுகளே இப்புடித்தான்.. ஏற்கனவே குருவி படத்த சுட்டு "அவதார்" எடுதானுக, சமீபத்துல வேலாயுதம் படத்த சுட்டு "பேட்மேன்" எடுதானுக...

CS. Mohan Kumar said...

உண்மைய சொல்லுங்க அந்த எம் . ஜி ஆர் சிவா நீங்க தானே :)

தொழிலதிபர் KRP செந்திலுக்கு ரசிகர் மன்றம் துவக்கிட வேண்டியது தான்

MANO நாஞ்சில் மனோ said...

சுட்டு சுட்டு நாக்கை தள்ளுவதே டாகுட்டருக்கு பொழப்பா போச்சு கொய்யால...!

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது டாகுடர் படத்த காப்பியடிச்சிட்டாய்ங்களா........ டேய் கெளம்புங்கடா கொடிய கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமா கெளம்புங்கடா.. இன்னிக்கு என்னான்னு பாத்துடலாம்.......!//

யோவ் பன்னி, விக்கி"யை சட்டையை கட்டிகிட்டு செ ச்சீ கழட்டிக்கிட்டு போராட சொல்லுவோம்ய்யா அப்போதான் வொர்த்தா இருக்கும்.

! சிவகுமார் ! said...


//Philosophy Prabhakaran said...
வடை...! படித்துவிட்டு வருகிறேன்...//

இந்த கமண்ட்டை எல்லாம் எக்மோர் மியூசியத்துல இருந்து யாருய்யா சுட்டுட்டு வர சொன்னா?

! சிவகுமார் ! said...


//நாய் நக்ஸ் said...
வாயா வாத்தியார் ஐயா....
:)))))))//

குட் பிற்பகல் ஐயய்யா!!

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
என்னது டாகுடர் படத்த காப்பியடிச்சிட்டாய்ங்களா........ டேய் கெளம்புங்கடா கொடிய கட்டிக்கிட்டு கூட்டம் கூட்டமா கெளம்புங்கடா.. இன்னிக்கு என்னான்னு பாத்துடலாம்.......!//

அமைதி. அமைதி. தள விரல் அசைக்கும் வரை கோபத்தை ப்ரீசரில் வைக்குமாறு ரசிகர்களை தாழ்மையுடன்...

! சிவகுமார் ! said...


//மொக்கராசு மாமா (Real Santhanam Fanz) said...

இந்த ஹாலிவுட்காரனுகளே இப்புடித்தான்.. ஏற்கனவே குருவி படத்த சுட்டு "அவதார்" எடுதானுக, சமீபத்துல வேலாயுதம் படத்த சுட்டு "பேட்மேன்" எடுதானுக...//

விடுங்க. இன்னிக்கி நேத்தா இப்படி? ஒரு காலத்துல ஜெய்சங்கர் படத்தை சுட்டே ஜேம்ஸ்பாண்ட் எடுத்த பயலுகளாச்சே!!

! சிவகுமார் ! said...


//மோகன் குமார் said...
உண்மைய சொல்லுங்க அந்த எம் . ஜி ஆர் சிவா நீங்க தானே :)//

நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் என்பது மட்டும் உண்மை!!
//தொழிலதிபர் KRP செந்திலுக்கு ரசிகர் மன்றம் துவக்கிட வேண்டியது தான்//

கொஞ்சம் டெல்லி...அப்பறம் பி.எம்.....!!

! சிவகுமார் ! said...

//MANO நாஞ்சில் மனோ said...
சுட்டு சுட்டு நாக்கை தள்ளுவதே டாகுட்டருக்கு பொழப்பா போச்சு கொய்யால...!//

'நாக்கை தள்ள வைப்பதே' என்று மாற்றுக. பொருட்குற்றம் கண்டோம் யாம்!!

Seeni said...

theriyaatha thakavalkal....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிஞர் சுரேகாவுக்கு வாழ்த்துக்கள்.

Unknown said...

அக்கா நிர்மலா பெர்யசாமி டப்பிங்கல கோ......பால்.......என்னை மறந்திட்டிங்களே...!கோ.....பால்...!வசனம் இருக்கும்ன்னு நெனைக்கிறேன்...!

Unknown said...

வாழும் எம்சிஆரை குளோசப்ல காட்டாதிங்கப்பா......குயந்தை புள்ள நாஞ்சில்மனோ பயப்படுது பாரு...!

Unknown said...

சிவா நீயும்தான் எம்சிஆர் கணக்கா கலரா கீர....முயற்சி பண்றது...!பிலாசபிய டைரடக்குடரா போட்டு...!கேபிளை வஜனம் எழுத சொல்லிருவோம்!

முத்தரசு said...

// அது எப்படிய்யா 2012 தீபாவளி ரிலீஸ் பட ஸ்டில்லை 1982 லயே சுட்டீங்க? Scoundrals....!!//

டமிலன் 30வருசத்துல மறந்து இருப்பான்னு நெனச்சி......தேன்

அஞ்சா சிங்கம் said...

அடேயப்பா சிறப்பு மலர் போட கூடிய எல்லா தகுதியும் இந்த படத்திற்கு இருக்கும் போல தெரியுதே .
எனக்கு இப்பவே கண்ணா கட்டுது . சிவா இனிமேல் நான் உன் நண்பனாக தொடர்வது சந்தேகம் தான் .
மறு பரிசீலனைக்கான நேரம் வந்து விட்டது ...................

பட்டிகாட்டான் Jey said...

24 ரீலுக்கு பதிவெழுடிருக்காம். ந்க்கொய்யாலே மூனு மணி நேரமாச்சு. படிச்சி முடிக்க.

ஆன்லைன் வாரப்பத்திரிக்கை ஒன்னு தொடங்கு... நாங்க எல்லோரும் அதுல கொஞ்சம் துணுக்கு எழுதுறோம்....
ஐ அம் சீரியஸ்லி டெல்லிங் யூ நோ ...:-)))
சிவக்குமார் - காக்டெய்ல்
பிரபா - யூத் ஜொள்ளு
அஞ்சாசிங்கம் - வரலாற்றுத் துணுக்குகள்
செந்தில் - பார் பக்கம்
பன்னி - கலாய்த்தல் ஸ்பெசல்
பட்டிகாட்டான் - இந்த வார போட்டோ...
வீடு சுரேஷ் - படம் லொள்ளு...
முத்தரசு - எளிய எலக்கியம்...

இப்படி ஒரே எடத்துல எல்லாரும் வாரம் ஒருமுறை அல்லது ஃபோர்ட்நைட் அல்லது அட்லீஸ்ட் மந்த்லி ஒன்ஸ்....

யோசிங்க மக்காஸ் யோசிங்க...

Unknown said...நண்பரே நலமா !

அனுஷ்யா said...

சக்கரவர்த்தி சக்கரவர்த்தி...am waiting

திண்டுக்கல் தனபாலன் said...

கதை சுடுவது இல்லாமல் காட்சியையுமா...?

கவிஞர் சுரேகாவுக்கு வாழ்த்துக்கள்...

Related Posts Plugin for WordPress, Blogger...