மறுமலர்ச்சி:
எனது பேரபிமான வெஸ்ட் இண்டீஸ் T20 உலகக்கோப்பையை வென்றதில் மிக்க மகிழ்ச்சி.உலகக்கோப்பை துவங்கும் முன்பே இவர்கள்தான் வெல்வார்கள் என்று கணித்தவர் ஸ்டீபன் ப்ளெம்மிங். இறுதிபோட்டிக்கு முன்பு 'கோப்பை எங்களுக்கே. சாரி ஸ்ரீலங்கா' என்று கெத்தாக சொன்னவர் 'நவீன அய்யனார்' க்ரிஸ் கெயில். இவருடைய பங்கு பெரிதும் இல்லாமலே இலங்கையை வீழ்த்தியதன் மூலம் தங்கள் அணி ஒன் மேன் ஆர்மி இல்லை என்று நிரூபித்து உள்ளனர். இது போன்ற வெற்றி பெற்றால் தலைக்கனம் கொள்வதோ அல்லது தொடர் தோல்விகளால் மனம் நொந்து போவதோ வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வாடிக்கை இல்லை. ஒரு காலத்தில் உலகை ஆண்ட மன்னர்கள் மீண்டும் ஒரு முறை சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளனர். தொடரட்டும் வெற்றிகள்!!
க்ரிஸ் கெயிலின் 'கங்னம் ஸ்டைல்' ஆட்டம் உலகெங்கும் பேசப்பட்டு வருகிறது. தென் கொரிய ராப் பாடகர் சை என்பவர் கண்டுபிடித்த ஆட்டம்தான் இது. சையின் சக்க போடு ஆட்டத்தை பார்க்க:
...........................................................................
அடுத்த வாரிசு:
விகடனின் புதிய ரிலீஸ் 'டைம் பாஸ்' எனும் கையடக்க புத்தகம். விலை ஐந்தே ரூபாய். காசு குடுத்து வாங்கிவிட்டு வணிக வளாகம் சென்றால் அங்கே டைம் பாஸை இலவசமாக தந்து கொண்டிருந்தனர். மொத்தம் 64 பக்கங்கள். காமடி, ஜில் ஜில் ஸ்டில்கள், சினிமா, அரசியல் என்று சகலமும். குறிப்பாக 'ஜெ' வை வஞ்சப்புகழ்ச்சி கடிதத்தால் சுழற்றி அடித்துள்ளார்கள். விளம்பரங்கள் பெரிதும் இல்லாத பக்கங்கள். விரைவில் விளம்பரங்களை நிரப்பி, பக்கங்களை குறைத்து, விலையை ஏற்றி....விகடன் தனது பாரம்பரிய முத்திரையை பதிக்காமலா போய் விடும்? அதுவரை படித்து மகிழலாம்.
................................................................................
Engliஷ் விங்லிsh:
'ஸ்ரீதேவி இஸ் பேக்' என்று மதிப்பெண்களை அள்ளித்தந்து வடக்கத்தி மீடியாக்கள் கொண்டாடும் படம் கண்டேன். நிஜமாகவே நல்ல படம்தான். குறிப்பாக க்ளைமாக்ஸ். இங்கிலீஷ் கற்கும் இடத்தில் ராமமூர்த்தி எனும் நபருக்கு சோடாபுட்டி போட்டுவிட்டு பேக்கு போல காட்டியதோடு அவரை மதராசி என்று அழைக்கும் வண்ணம் காட்சியை அமைத்துள்ளனர். தயாரிப்பாளர் பால்கி தமிழனாக இருந்தாலும் 'செஞ்சப்பாத்தி கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து தமிழனை நையாண்டி செய்தாயடா..பால்கி வஞ்சகன் வடநாட்டானடா' எனப்பாட வைத்து விட்டார். இதற்கு முன் ரா ஒன்னிலும் ஷாருக் மதராசி ரோலில் நடிக்கும்போது நூடுல்ஸுக்கு தயிர் ஊற்றி சாப்பிடும் காட்சி ஒன்று வரும். அதைப்பார்த்து தியேட்டரில் இருந்த பானி பூரிகள் கிண்டல் செய்தன. இந்த நெருடலைத்தவிர்த்து பார்த்தால் அபவ் ஆவெரேஜ் படமாக இருக்கிறது இங்க்லீஷ் - விங்க்லீஷ்.
.................................................................................
சக்கரைத்தேவன்:
சென்ற வாரம் கரும்பு ஜூஸ் அடிக்க ரோட்டோர கடைக்கு சென்றால் 'ஐஸ் போட்டு தந்தா 10 ரூவா. இல்லைன்னா 20 ரூவா' என்றார் அண்ணன். காரணம் கேட்டதில் கரும்பு விலை தாறுமாறாக எகிறிவிட்டதென்றார். அதாகப்பட்டது ஐஸ் நீரில் தம்மாதூண்டு கரும்புச்சாறு கலந்து தந்தால் 10. கரும்புச்சாறில் லேசாக தண்ணீர் கலக்கி தந்தால் 20. எப்படி விஞ்ஞானம்? ஆனாலும் விலை ஜாஸ்திண்ணா என்றால் 'அடப்போ சார். உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போனா 50,100 க்கு கம்மியா கூல் ட்ரிங்க் விக்கறான். அதை விடவா' என அங்'கலாய்த்தார்'. அதுவும் சர்தேன்!!
.............................................................................
பிடிச்சிருக்கு:
சில நாட்களுக்கு முன்பு பதிவர் கே.ஆர்.பி.யுடன் காஞ்சி சென்றேன். பசுமை விடியல் சார்பாக பதிவர் கவுசல்யா நடத்திய நிகழ்ச்சி அது. பல நாட்களுக்கு பிறகு உருப்படியாக செலவழித்த வீக்கென்ட் என்று சொல்லலாம். இயற்கை ஆர்வலர்கள் மூலம் பல்வேறு தகவல் பரிமாற்றங்கள் நடந்தேறின. அருள் எனும் 25 வயது இளைஞர் காஞ்சி புறநகரில் நித்தம் 50 க்கும் மேற்பட்ட மரங்களுக்கு நீர் ஊற்றி வளர்த்து வருகிறார். அவரை அறிமுகம் செய்து வைத்த பதிவர் பலே பிரபுவிற்கு நன்றி. 'பலே' பெரிய ஆளாக இருப்பார் என்றுதான் இத்தனை நாள் எண்ணி வந்தேன். தம்பிக்கு வயது 23 தானாம். ஆசை அஜித் போல அம்சமாக இருக்கிறார். கணினி சார்ந்த பதிவுகளை இணைய தளம் மூலம் எழுதி மெளனமாக பல விஷயங்களை செய்து வருகிறார் பலே!!
அவருடைய தளம்: கற்போம்.
பதிவர்கள் கே.ஆர்.பி., பலே பிரபு, 'நாலு ரோடு' சூர்யா
..........................................................................
விதி:
டப்பா நிகழ்ச்சிகள் போடுவதில் முன்னணி தமிழ் சேனல்கள் நீயா நானா என்று போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றன. உதாரணம்: விஜய் டி.வி. சூப்பர் சிங்கர், ஜீ தமிழ் நிர்மலா பெரியசாமி மேடம் நிகழ்ச்சி..மற்றும் பற்பல. ஆனால் தற்போது அனைத்தையும் விஞ்சி நிற்பது ராஜ் டி.வி.யில் வரும் 'TAMIL பேசும் கதாநாயகி'தான். நாளைய கோலிவுட் ஈரோயினுக்கான தேடலாம். காலேஜு பொண்ணுங்க ஆடுறதும், பாடுறதும், ஆக்ட் தர்றதும்...செத்தாங்க ஜட்ஜுங்க. 'எப்பய்யா விடுவீங்க. வீட்டுக்கு ஓடனும்' என்பது போலவே நடுவர்களின் முகம் பாவனை செய்கிறது. நிகழ்ச்சியின் இடையே ஆடுவோரை ரவுசு செய்து பழைய பட கிளிப்பிங் போடுவது மட்டும் அருமை.
விதி உங்கள் வாழ்வில் யார்க்கர் போட வேண்டும் என்று நினைத்தால் இந்த சொர்க்கத்தில் மிதக்குக:
'TAMIL பேசும் கதாநாயகி'
............................................................................
இம்சை அரசன்:
தாண்டவம் போன்ற பெரிய ஸ்டார்களின் படங்களை சட்டென பார்த்து பட்டென மட்டையாகி அலுத்து விட்டது. ஏதோ நாம் எதிர்பார்த்த(!) அளவிற்கு ரித்தீஷ், பவர் ஸ்டார், டி.ஆர், ராமராஜன் படங்களை இன்னும் சில மாதங்களுக்கு தியேட்டரில் பார்க்கும் குடுப்பினை இல்லை என்றாலும் டெம்பரரி ரட்சகனாக மன்சூர் அலிகான் களம் இறங்கி இருப்பது இதயத்திற்கு இதம்.
.................................................................................
உடன்பிறப்பு:
தலைவன் கருப்பு சட்டை போட சொன்னாலும், துண்டு பிரசுரம் செய்ய சொன்னாலும் கண்ணை மூடிக்கொண்டு தீயாய் வேலை செய்யும் ஜாய்ன்ட் பர்த்களை பாராட்டத்தான் வேண்டும். அதே சமயம் இவர்களில் ஒருவராவது ' டமிலின தலைவா...உங்க ஊட்ல கரண்ட் இல்லாம எத்தனை மாசம் அவஸ்தை பட்டீங்களோ? கொசுக்கடிய எல்லாம் தாங்கிக்கிட்டு எங்களுக்கு லெட்டர் எழுத என்ன பாடு பட்டீங்களோ? அதா நெனச்சாலே எங்க நெஞ்சு கொக்குதே' என்று கேட்டதுண்டா? என்னய்யா உங்க கழக பற்று??
..................................................................................
மக்கள் ஆட்சி:
பிரபல அரசியல் பதிவரும், தமிழகத்தின் அனைத்து கட்சி பிரமுகர்களிடமும் பயங்கர தொடர்பில் உள்ளவருமான ரஹீம் கஸாலி மற்றும் செங்கோவி ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் வலைப்பூ - அரசியல்வாதி. அரசியல் குறித்த கோக்கு மாக்கான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்து வருகிறார்கள் இருவரும். அந்த சங்கமத்தில் தொபக்கடீர் என்று சமீபத்தில் குதித்துள்ளேன். முதற்கட்டமாக அத்தளத்தில் நாஞ்சில் சம்பத்(ம.தி.மு.க.) அவர்களிடம் முன்பொரு முறை எடுத்த பேட்டி வெளியாகி உள்ளது.

29 comments:
பலே பிரபு பக்கத்துல அவரவிட எளமையா புளு டீசர்ட் போட்டுட்டு ஒருத்தர் நிக்காரே, அவருதான் கேஆர்பிங்களா......?
////ஆனால் தற்போது அனைத்தையும் விஞ்சி நிற்பது ராஜ் டி.வி.யில் வரும் 'TAMIL பேசும் கதாநாயகி'தான்.///////
டப்பா நம்பர் 1
/////முதற்கட்டமாக அத்தளத்தில் நாஞ்சில் சம்பத்(ம.தி.மு.க.) அவர்களிடம் முன்பொரு முறை எடுத்த பேட்டி வெளியாகி உள்ளது.///////
அடுத்து எஸ்.ஏ.சி.கிட்ட பேட்டி எடுப்பீங்களா?
டைம் பாஸ் இன்னும் மனத்தில் ஒட்டவில்லை பாஸ்...
நேத்து வண்டலூரில் சாத்துக்குடி ஜூஸ் ஐஸ் போட்டு முப்பது போடாம நாப்பது வெயில் காலம் டா சாமி
நீங்கள் பெரிய அரசியல்வாதி ஆக வாழ்த்துக்கள் சிவா
மீல்ஸ் சூப்பர்.....என் விகடன் போல உள்ளதா விகடனின் டைம் பாஸ் ?
இந்த ஸ்பெஷல் மீல்சில் பாயாசம் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...
கலக்கல் மீல்ஸ் .. தொடரட்டும் பாஸ் ..
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
பலே பிரபு பக்கத்துல அவரவிட எளமையா புளு டீசர்ட் போட்டுட்டு ஒருத்தர் நிக்காரே, அவருதான் கேஆர்பிங்களா......?//
ஆமாம். (உதய) சூரியன் உச்சியில் அடிக்கும்போது எடுத்த படமென்பதால் அந்த ரியாக்சன்!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முதற்கட்டமாக அத்தளத்தில் நாஞ்சில் சம்பத்(ம.தி.மு.க.) அவர்களிடம் முன்பொரு முறை எடுத்த பேட்டி வெளியாகி உள்ளது.///////
அடுத்து எஸ்.ஏ.சி.கிட்ட பேட்டி எடுப்பீங்களா?//
ரஸ்க் சாப்பிட அத்தே பெரிய ரிஸ்க் எடுக்க விருப்பமில்லை.
//சீனு said...
டைம் பாஸ் இன்னும் மனத்தில் ஒட்டவில்லை பாஸ்...
நேத்து வண்டலூரில் சாத்துக்குடி ஜூஸ் ஐஸ் போட்டு முப்பது போடாம நாப்பது வெயில் காலம் டா சாமி
நீங்கள் பெரிய அரசியல்வாதி ஆக வாழ்த்துக்கள் சிவா//
மனதில் ஒட்ட அது என்ன முரசொலியா? ஜஸ்ட் டைம் பாஸ் தான தம்பி.
//NKS.ஹாஜா மைதீன் said...
மீல்ஸ் சூப்பர்.....என் விகடன் போல உள்ளதா விகடனின் டைம் பாஸ் ?//
நகைச்சுவை, சினிமா, அரசியல் செய்திகளின் கலவையாக உள்ளது. என் விகடனில் இருந்து மாறுபட்டுள்ளது.
//அரசன் சே said...
இந்த ஸ்பெஷல் மீல்சில் பாயாசம் இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் ...
கலக்கல் மீல்ஸ் .. தொடரட்டும் பாஸ் ..//
அது என்ன பாயாசம்னு சொல்லாமயே போறீங்களே..ஆனாலும் கிரித்தரம் புடிச்சு அலையறீ ங்கய்யா!!
பல நாட்களுக்கு பிறகு உருப்படியாக செலவழித்த வீக்கென்ட் என்று சொல்லலாம். //
நன்றி சிவா.
"என் விகடன்" மாதிரியான புக் தான் டைம் பாஸ் என்று நினைத்து இருந்தேன்.
//மக்கள் ஆட்சி:
பிரபல அரசியல் பதிவரும், தமிழகத்தின் அனைத்து கட்சி பிரமுகர்களிடமும் பயங்கர தொடர்பில் உள்ளவருமான ரஹீம் கஸாலி மற்றும் செங்கோவி ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் வலைப்பூ - அரசியல்வாதி. அரசியல் குறித்த கோக்கு மாக்கான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்து வருகிறார்கள் இருவரும். அந்த சங்கமத்தில் தொபக்கடீர் என்று சமீபத்தில் குதித்துள்ளேன். முதற்கட்டமாக அத்தளத்தில் நாஞ்சில் சம்பத்(ம.தி.மு.க.) அவர்களிடம் முன்பொரு முறை எடுத்த பேட்டி வெளியாகி உள்ளது.///
ஆமாம்யா... நானும் பாத்தேன்...
அதுல வேற உங்க எல்லாரு பேரும் இருந்துச்சா....
#சரி சரி.... புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்க... அல்லாருக்கும் மிட்டாய் வாங்கிக் கொடு...
பதிவு படித்தேன். விசயங்கள் அறிந்தேன்.
கங்கனம் ஆட்டத்தில் ஆரம்பித்து... டைம்பாஸில் நுழைந்து... ஸ்ரீதேவியின் மூக்கழகில் சொக்கி.... கரும்பு சூசில் குளித்து.... தம்பி பிரபுவுடன் சேர்ந்து பசுமை புரட்சி முடித்து... சொர்க்கத்தில் மிதந்து விட்டு... அழகு ஸ்டார் போஸ்டர் கடந்து... உ.பிக் களை கைப்பிடித்து இழுத்துவிட்டு...அரசியல் களத்தில் துபுகட்டீர் என்று குதித்த மெட்ராஸின் இன்னலே... பதிவுலகின் மின்னலே...
தாங்கள் மென்மேலும் இதுபோல் பல பதிவுகள் கண்டு அனைவரையும் களிப்புற செய்ய்மாய் அன்புடன் வேண்டுகிறோம்.
இப்படிக்கு
மின்னல் பேரவை
1, மின்னல் தெரு
மெட்ராஸ் குறுக்குச் சந்து
மெட்ராஸ் மெயின் ரோடு,
மெட்ராஸ். டமில் நாட்.
@கஸாலி
@செங்கோவி
@மெட்ராஸ்
அரசியல் வாதி தளத்தில் அடுத்ததாக, தற்போதைய அதிமுக கரண்ட் அமைச்சரின் பேட்டியைப் போடவும்.
# வாசகர் விருப்பம்
நன்றி.
//
அது என்ன பாயாசம்னு சொல்லாமயே போறீங்களே..ஆனாலும் கிரித்தரம் புடிச்சு அலையறீ ங்கய்யா!!
//
வெடலைப் பசங்க ஆசையாக் கேக்குறாய்ங்க... போட்ட உனக்கு நட்டமாலே..... மெரட்டாதலே.... பயந்துருவாங்கல்ல.
// தமிழகத்தின் அனைத்து கட்சி பிரமுகர்களிடமும் பயங்கர தொடர்பில் உள்ளவருமான//
தீவிரவாதி ரேன்ச்க்கு இருக்கு அறிமுகம் :-)
"மாஸ் ஸ்டார் " மன்சூர் அலி கான் .............
கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............
கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............கெக்க..............
பிடிச்சிருக்கு - ரொம்ப பிடிச்சிருக்கு (பசுமை விடியல் தளத்தில் அறிந்தேன்...)
சேவைகள் தொடர வாழ்த்துக்கள்....
ரேஸ்கல்ஸ்....!கே.ஆர்.பிய யாருய்யா கிள்ளி வச்சது....!அழும்புக்கு அளவே இல்லாம போச்சு...!
Welcome to Elite Group.
மீல்ஸ் கலக்கல்
விலை ஐந்தே ரூபாய். காசு குடுத்து வாங்கிவிட்டு வணிக வளாகம் சென்றால் அங்கே டைம் பாஸை இலவசமாக தந்து கொண்டிருந்தனர்.
ha....ha
ரசித்தேன்
பாஸ், அந்த கங்க்னம் ஸ்டைல்ல கூடிய சீக்கிரமே நம்ம சந்தானம் ஒரு படத்துல ஆடனும், அத நாம பார்க்கனும், அம்புட்டுதேன் லட்சியம்...
டைம் பாஸ், டைம் பாஸ்கெல்லாம் பாஸ்...//அதுவரை படித்து மகிழலாம். /// இது தாண்டா கொள்கை..
மன்சூர் அலிகான் படத்துக்கு எல்லாம் எதிர்பார்ப்பா? அவரு கேள்விப்பட்ட ஹார்ட் அட்டாக் வந்து போயிர போறாரு!!
கொசுக்கடியில் இருந்து கழக கண்மணிகளுக்கு கடிதம் எழுதும் டலீவன் வாழ்க பேதியோடு ...!
வணக்கம்,சிவா சார்!கொஞ்சம் லேட்டா தான்(மீல்ஸ்) சாப்புட முடிஞ்சுது!
Post a Comment