CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, October 29, 2012

சக்கரவர்த்தி திருமகன்
   
உலக மகா ஜோசியர் நாஸ்ட்ரடாமஸ் புகழுக்கு இப்படி ஒரு களங்கம் ஏற்படும் என்று எவரும் எண்ணி பார்த்திருக்க மாட்டர். அதற்கென்ன செய்ய முடியும். 2012 ஆம் ஆண்டு 26 அக்டோபர் அன்று தமிழ்த்திரையுலகில் இப்படி ஒரு குபீர் புரட்சி நாயகன் தோன்றுவான் என்பதை கணிக்க இயலாமல் மாண்டே போனார் அம்மகான். நடிகர், கதாசிரியர் தயாரிப்பாளர் என பல சுமைகளை தோளிலும், முதுகிலும் தாங்கி வாழும் எம்.ஜி.ஆர். சக்கரவர்த்தி அவர்கள் எட்டுத்திக்கும் நம்மை திக்கு (திக்காக) முக்காட வைக்க வந்திருக்கும் ஒப்பற்ற காவியம்தான் சக்கரவர்த்தி திருமகன். ரிலீசுக்கு முன்பு ஒருநாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சுவற்றில் இப்படத்தின் விளம்பரம் இப்படி எழுதப்பட்டு இருந்தது: சக்கரவாத்தி திருமகன். அதை எழுதியவருக்கு முழு சம்பளம் தர முடியாத அளவுக்கு லோ பட்ஜெட் படமோ என்று கண்ணீர் எட்டிப்பார்த்ததன் விளைவே தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரை நோக்கி நேற்று இரவுக்காட்சி செல்வதற்கான ஊக்க மருந்தாய் அமைந்தது.

அதிர்ஷ்டம் இல்லாத பல பதிவர்கள் சிதறி ஓட என்னிடம் சிக்கிய ஒரே பதிவர் அண்ணன் கே.ஆர்.பி.செந்தில். 20 ரூபாய் டிக்கட் எடுக்க நின்றபோது எமக்கு முன்பாக இருந்த சிலர் 'படம் ஆரம்பிச்சாட்டாங்களா சார்?' என்று கவுண்டரில் பதற்றத்துடன் கேட்க நாங்கள் 'பாஸ்...அவ்ளோ பெரிய ரசிகரா நீங்க?' என்றோம். அவர்கள் 'ஆமாங்க. பவர் ஸ்டாருக்கு அப்பறம் நமக்கு ஸ்ட்ரெஸ் ரிலீப் இவருதானுங்களே' என்று சொல்ல எமக்கு தீபாவளி நேற்றிரவே தொடங்கிய உற்சாகம். 

சரி கதை என்ன? ஜெர்மனி நாட்டவர் இருவர் குற்றாலத்தில் கொலை செய்யப்பட, அதை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ.அதிகாரி சக்ரவர்த்தி. அவருக்கு துணையாக கவர்ச்சி பதுமைகள் - கம் - அசிஸ்டன்ட்களாக கங்கா, காவேரி துப்பு துலக்குகின்றனர். அண்ணன், தம்பி என இரு போதை மருந்து கடத்தும் வில்லன்கள். ஜெர்மானியர்கள் கொலையில் இவர்கள் பங்கு இருப்பது சக்ர கண்ணுக்கு புலனாகிறது. இவர்களை கம்பி என்ன வைக்க என்னவெல்லாம் செய்கிறார் நம்ம சக்ர என்பதை ஆக்சன், சென்டிமென்ட், கிளாமர் மற்றும் நான் ஸ்டாப் ஹ்யூமருடன் சொல்லி இருக்கிறார்கள்.

                                                   சக்கரவர்த்தி & திருமகன் (நானும்,கே.ஆர்.பி.யும்)                        

சக்ர...ம்ம்..சும்மா சொல்லக்கூடாது. எம்.ஜி.ஆரை தேய்ந்து போன ஜெராக்ஸ்  பிரிண்டில் பார்ப்பது போல சொல்லிலடங்கா அம்சத்துடன் பவனி வருகிறார். தொப்பையை தூக்கிக்கொண்டு வில்லன்களை துரத்தும்போது ஓடும் அழகிற்கு முன்பு அனுஷ்கா, காத்ரீனா கைப் போன்ற அழகிகள் எல்லாம் பீல்ட் அவுட் ஆகின்றனர். இடைவேளைக்கு பின்பு வரும் டூயட் பாடல் டான்ஸில் அஜித்தை அடித்து நொறுக்குகிறார். கஸ்டடியில் இருக்கும் கைதிகளை சக்ர விசாரிக்கும்போது அவர்கள் அலறிக்கொண்டே 'சார்..வேணாம் சார். கண்ணாடிய மட்டும் கழட்டிராதீங்க சார்' என்று பிளிறுவது ஏனென்று முதலில் எமக்கு பிடிபடவில்லை. கண்ணாடியை கழற்றினால்  இன்னும் உக்கிரமாக தலைவர் எதிரிகளை பந்தாடுவார் என்பதே அந்த பிளிறலுக்கு பின்பிருக்கும் டைரக்டர் டச் என்பது பின்பே புரிந்தது. 

சக்ரைக்கு இரு வெள்ளை வெளேர் நாயகிகள். 'அவர் என்னைத்தான் காதலிப்பார்' என்று கங்காவும், 'போடி..அவர் எனக்குத்தான்' என்று காவேரியும் தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாலும் புத்தியை தீட்டி புல்லுருவிகளை பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார் தலைவர். ஸ்கார்பியோ, பி.எம்.டபிள்யூ கார்கள், குற்றால இயற்கை ஸ்பாட்கள், செவ செவா அழகிகள் என்று பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கிறது இந்த (க்கரவர்த்தி) தி(ருமகன்). இடைவேளையில் போட்ட ட்ரெயிலர்: 'கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு'. ஜேம்ஸ் பான்ட் போஸில் சக்ர கையில் துப்பாக்கியுடன். நமக்கு இன்னொரு தீபாவளி கன்பர்ம். ஏற்கனவே ஒரிஜினல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஏ.வி.எம்.முடன் இணைந்து நடிக்கவிருந்த படம்தான் இந்த கி.ஆப்ரிக்காவில் ராஜு. ஏனோ அப்படம் விளம்பரத்துடன் நின்று போனது. அதை தூசு தட்டி இப்போது நமக்காக அர்ப்பணிக்கு உள்ளார் சக்ர.

                                                                          ச.தி.யில் வீழ்ந்த ரசிகர்கள்               

விசாரணைக்காட்சி ஒன்றில் துப்பாக்கியை ஜிப் போடும் இடத்தருகே சொருகி வைத்திருந்தார் தலைவர். அப்போது கே.ஆர்.பி.என்னிடம் சொன்னது  'துப்பாக்கிய எங்க சொருகி இருக்காரு பாருங்க தம்பி'. எனது பதில் 'ச.தி.யை மட்டும் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருந்தா 'துப்பாக்கி'ய சொருகி இருப்பார் நம்ம சக்ரவர்த்தி'. படம் முழுக்க இதுவரை கேட்டிராத டயலாக்குகள் கண்டமேனிக்கு வலம் வருகின்றன. சாம்பிள்கள் சில: 

'இவனை ஸ்டேசனுக்கு கொண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டுங்க'

'நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவன்'

'இந்த கேசை நான் முடிக்கறேன். நம்புங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை'

'பீட்சா பயங்கர திகில் படம். என்னமா எடுத்து இருக்காங்க. இந்த வருசத்துல இதுதான் பெஸ்ட்'  என்று கூசாமல் பொய் சொல்லும் ரசனையற்ற ரசிகர்களே, உங்களுக்கு தில் இருந்தால் ச.தி.யை இரண்டரை மணி நேரம் பரவச நிலையுடன் அமர்ந்து பாருங்கள். அதுவும் நைட் ஷோ பார்த்து  விட்டு சொல்லுங்கள். 'பீட்சா' (கலக்சன்) முழுவதையும் ஒரே வாயில் முழுங்கி கொட்டாய் கூரை இடிந்து விழும் அளவிற்கு ஏப்பம் விட்ட எங்கள் சக்ரவர்த்தியின் படம் வரும் வாரங்களில் ஜேம்ஸ்பாண்ட், துப்பாக்கி அனைத்தையும் டுமீலாக்கி வெ(ற்)றிநடைபோடும் என்பதில் கடுகு,எள், சமுத்திர மணல் அளவும் சந்தேகமில்லை. 

சக்கரவர்த்தி திருமகன் - சக்கர இனிக்கிற சக்கர!!
..............................................................................   
        


                               

Sunday, October 21, 2012

பீட்சா


         
சில நாட்களுக்கு முன்பு பேஸ்புக் நண்பர் ஈஸ்வரனுடன் தமிழ் சினிமா குறித்து உரையாடிக்கொண்டு இருந்த பொழுது 'காதலில் சொதப்புவது எப்படி ஓடியதை வைத்து மட்டுமே 'நாளைய இயக்குனர்கள்' கோடம்பாக்கத்தில் பெரும் வெற்றி பெறுவர் என்று கணித்து விட முடியாது. 10 நிமிட படமெடுப்பவர்களால் இரண்டரை மணிநேர சினிமா மூலம் ரசிகர்களை கட்டிப்போடுவது அவ்வளவு எளிதல்ல என்று கூறினார். ஆனால் பீட்சா மூலம் கார்த்திக் சுப்புராஜ் எனும் இயக்குனர் 'T20 ஆடத்தெரிந்த எங்களுக்கு 'டெஸ்ட்' மேட்ச் ஆடும் சூட்சுமம் நன்றாகவே தெரியும்' என நிரூபித்து விட்டார்!!

திகில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களை நான் அதிகம் பார்த்ததில்லை. கல்லூரி படிக்கையில் 'ஈவில் டெட்'(ரீ-ரிலீஸ்) படத்தை பைலட் தியேட்டரில் பார்க்க சென்றேன். 'ஒரு சீன்லயாவது நீ பயந்தே தீருவ' என்று நண்பர்கள் கிச்சு கிச்சு மூட்டியே உள்ளே அழைத்து சென்றனர். 'ஆறு வயசுலேயே அத்தே தச்சூடு ராஜ நாகத்தை வலது தோள்ல ஒண்ணு, எடது தோள்ல ஒண்ணுன்னு போட்டுக்கிட்டு திரிஞ்ச பய நீயி' என்று பாட்டி எனது பால்ய வயதில் சொன்னதாக ஞாபகம். அதனால் ஈவில் டெட் டெர்ரரை கிளப்பவில்லை. ஒருமுறை டி.வி.யில் 'அதே கண்கள்' படம் பார்த்தபோது 'அட..தமிழ்ல இப்படி ஒரு த்ரில்லரா? யார் அந்த மர்ம நபர்? அசோகன், ரவிச்சந்திரன் என்று ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் சந்தேகம் கொள்ள வைத்து விறுவிறுப்பை கிளப்பியது. நானும் பயமுறுத்தி பரபரப்பை கூட்டுகிறேன் பேர்வழி என்று அதன் பின் நிறைய பேர் முயன்று மீசை இல்லாவிடினும் மேலுதட்டில் மண்ணுடனேயே பின்வாங்கி சென்றனர்.

சமீபத்தில் பார்த்த அம்புலி இவ்வகையரா படங்களில் ஒரு ஈர்ப்பை தந்ததென சொல்லலாம். இன்னும் சிறப்பாக கையாளப்பட்டு இருந்தால் பெரிதும் பேசப்பட்டு இருக்கும் அம்புலி. அவ்வரிசையில் தற்போது தியேட்டர்களில் டெலிவரி ஆகி இருக்கிறது பீட்சா. 'வெண்ணை ரொட்டி' என்று பெயர் வைத்தே தீர வேண்டும் என எந்த கட்சியும் 'அவர் முமென்ட் இஸ் வைட்டிங்' என்று அடம் பிடிக்காதது ஆறுதல்!!

ஒரு வீடு. ஒரு கடை. புதிய நாயகன், புதிய தொழில்நுட்ப கலைஞர்கள். இவர்களை இயக்கி உள்ளது ஒரு 'அமுல் பேபி' இயக்குனர். முதல் காட்சியிலேயே திகிலை கிளப்பி இறுதிவரை நேரம் போனதே தெரியாமல் நம்மை ஆட்கொண்டு விடுகிறது. 'என்னை ஏன்டா இந்த படத்துக்கு கூட்டிட்டு வந்த' என தியேட்டரில் கேட்ட இளைஞனின் லேசான அலறல் பீட்சாவின் அமோக விற்பனைக்கான அசல் ஆட். கொட்டும் மழை சீசனில் ஏசியை வேறு அதிகம் போட்ட தியேட்டரில் இப்படி ஒரு இருட்டறை விளையாட்டைக்கண்டு அதிர்ந்த ரசிகர்கள் 'எப்படா இடைவேளை வரும். லைட்ட போடுங்க. பாத்ரூமுக்கு ஓடனும்' என்ற மன ஓட்டத்தில் இருந்திருப்பர் என்பது நிதர்சனம். நான் பார்த்த வரையில் சிறந்த திரைப்படத்தை பார்த்த திருப்தியில் சுபம் போட்டதும் ரசிகர்கள் கை தட்டி பார்த்ததுண்டு. ஆனால் இடைவேளை என்று திரையில் போட்டதும்  கைத்தட்டல் விழுந்தது இதுவே முதன் முறை. இயக்குனர், ஒளிப்பதிவாளர், நாயகன் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருக்கான சிறப்பு பரிசது.

                                சிம்புவின் தம்பி சாயலில் இருக்கும் கருப்பு சொக்கா பேபிதான் இயக்குனர்!!                

முகமூடி, பில்லா - 2, தாண்டவம், மாற்றான் என வலுவான கூட்டணிகளால் அமைந்த காவியங்கள் பஞ்சர் ஆகிப்போன இவ்வாண்டில் நான் ஈ, நான், சுந்தரபாண்டியன், பீட்சா போன்ற படங்கள் ஆரவாரமின்றி சுயேட்சையாக மக்களால் தேர்ந்து எடுக்கப்படுவது ஜாம்பவான்களுக்கான அபாய எச்சரிக்கை. அடுத்த காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகனை யூகிக்க விடாமல் இறுதி வரை தொடர் சிக்சர் அடித்த இயக்குனர் கார்த்திக்..'ரொம்ப நல்லா வருவீங்க தம்பி'!!  'பூத் ரிட்டர்ன்ஸ்' எடுத்த ராம் கோபால் வர்மா அவசியம் எங்க தம்பி கார்த்திக்கிடம் ட்யூசன் படித்தால் நலம்.  
        
'விக்ரம், சூர்யா, யுவன், ஹாரிஸ், அனுஷ்கா, காஜல்..இந்த டீம் போதும். ரசிகனை உள்ளே கொண்டு வந்துரலாம். கே.வி. ஆனந்த், விஜய் மாதிரி இயக்குனர்கள் மத்ததை பாத்துப்பாங்க. ஆயிரம் தியேட்டர்ல ரிலீஸ் பண்றோம். பணத்தை அள்றோம்' எனும் அலட்சிய போக்கால் மனம் போன போக்கில் படமெடுப்போருக்கான காலம் இனி அதிகம் இல்லை. நாளைய இயக்குனர்கள் எல்லாம் இன்றைய இயக்குனர்கள் நாற்காலியில் வலுவாக இடம் பிடிக்க ஆரம்பித்தாகி விட்டது. சுதாரியுங்கள். இல்லையேல் நேற்றைய இயக்குனர்கள் லிஸ்டில் உங்கள் பெயர் வலுக்கட்டாயமாக சேர்க்கப்படும்!!

பீட்சா - யுவர் முமென்ட் இஸ் வைட்டிங். டிக்கட் எடுங்க. 

..................................................      
.................................................                                                     

Friday, October 19, 2012

மின்சாரப்பிரச்னையும், அதற்கான தீர்வும்கோவை பதிவர் 'உலக சினிமா ரசிகன்' பாஸ்கரன் அனுப்பிய 'மின்'னஞ்சல். உங்கள் பார்வைக்கு: 


கோவைசா.காந்தி,
அக்டோபர் 2012
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப்பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பதுமின் நிபுணர்களின் கணிப்பு

இந்த சூழ்நிலையில்தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக்கிடக்கின்றனமின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோஇன்றையநெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.


1.தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்ஆகிய எரிவாயு மின்நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும்பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாகஇருக்கிறது.குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும்வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக்கொண்டிருகின்றனஇந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளனஅவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக்கிடக்கிறதுஅவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறதுஇதனால் கிட்டத்தட்ட 288மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம்இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கைஎரிவாயுவிற்காகமின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின்வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்திஅலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியதுஅதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும்.அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

வடசென்னை திட்டத்தைப் போலவேமேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால்இவற்றை அமைத்துஇயக்க குறைந்த காலமே போதுமானது.


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன்நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டதுஇதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம்தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கைஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டதுகடைசியில், 2007ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

இன்றைய தேதியில்மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும்வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும்வள்ளூரில் உள்ளமுதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டுமின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்துமின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறதுஇதன் காரணமாகநாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

ஆகதமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும்இந்த மின்சாரம்அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால்தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலைமின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும்எனினும்தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்திசெய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும்தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்திஅலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கினமுதலாவது அலகு ஜூன் 2013 இலும்இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும்உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும்இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும்ஆனால்,இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு225 மெகாவாட் கிடைக்க வேண்டும்மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாகமுடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறதுஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலாசட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரைவார்த்திருக்கிறதுஎனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறஇன்றளவும் முயற்சி செய்யவில்லை.


ஆகதமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாகஇன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்துநிற்கிறோம்.  இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும்.என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டுதமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசுவேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல்,கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாதுஎன்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறதுஇதோடு சேர்த்துகூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான்தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறதுதமிழக அரசின் இந்த வாதம்தவறானது.


கூடங்குளத்தில் உள்ள வி.வி..ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும்அதாவது பிரச்சினைகளின்றி அதுஇயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும்இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர்உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும்அணு உலையின் இயக்கத்திற்கும்அது தொடர்பானமின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும்எனவேஅணு உலையில் இருந்துகிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான்இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்துஇறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான்மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போககடைசியில் வெறும் 216மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.


இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாதுஅந்த நிலையைஎட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம்.எனவேகூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில்அதாவது 2015 ஆம் ஆண்டுவரைஅதன் 30-40% உற்பத்தித்திறனிலேயே இயங்க முடியும்இதன்படிதமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால்ஒவ்வொரு அணு உலையில்இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும்இதில்கம்பிஇழப்பான 22%  கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான்இரண்டு அணு உலைகளும் இணைந்தேமின்சாரத்தை அளித்தாலும் கூடதமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்துகிடைக்கப் போகிறதுஎனவேஉற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில்உடனடியாக எடுக்க வேண்டும்.
…………..

கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பதுமின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும்சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.


மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனதுமாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளதுமின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாதுமின்சாரஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்துஉயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டனஅத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின்விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.

அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறைஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லைஇதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின்உத்தரவை அமல்படுத்த முடியவில்லைஇறுதியில்அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம்மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம்பெற்றுள்ளதுதற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத்தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும்ஆனால்அது தன் கடமையை ஆற்றவில்லை.
பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

• 
சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறதுதமிழகத்தின் பிறபகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம்வழங்கப்பட்டு வருகிறது.


• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக்கொள்கின்றனஇவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.


• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறதுஇதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட்மின்சாரமாகும்.


• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும்அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றிபயன்படுத்தி வருகின்றனஅதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.


• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளதுமேலும்மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10%க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளதுஇதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில்மின்பளு குறைந்திருக்க வேண்டும்அப்படியானால்மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக்கூடாது.


• திரைப்பட அரங்குகள்ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்
ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றனஇதுதடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன.வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும்ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டுவருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும்விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்த நிலைஅடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டதுஇதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள்போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.


அரசும்ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.

இப்பிரச்சினையைத் தீர்க்கபாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும்உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும்எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும்மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.
• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம்செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.


தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.
......................................................................................................Related Posts Plugin for WordPress, Blogger...