CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, September 26, 2012

வி(வகார) நாயகா !!


                                                         
தமிழகத்தில் கடவுளை எதிர்ப்பு பிரச்சாரம் மூலம் விழிப்பு உணர்வினை உண்டாக்க அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கும் சம,ரச,சன்,மார்க்கர்களை காணும்போது 'நம்ம அறிவுக்கண்ணை தொறக்க ஒரு நாஸ்திக தூதன் எப்படா அவதரிப்பான்' என்று இறைவனை வேண்டாத நாளில்லை. அந்த அதிசய தூதர் புவியெனும் மேடைக்கு வரும் வரை ஆடியன்ஸ் ஆகிய நம்மை மகிழ்விக்க குபீர் கலைஞர்களாக களம் புகுந்தவர்கள் பலர். குறிப்பாக லைவ் வள்ளுவர் கலைஞர், கி.வீரமணி,கமலஹாசன், சத்யராஜ்..இப்படி நீண்டு கொண்டே போகும் அப்பட்டியல். அவர்களின் நகலாக ஒரு சில நண்பர்களும்!! அவர்களில் ஒருவர்தான் தம்பி பிலாசபி பிரபாகரன் என்பது என் அவதானிப்பு. நேற்று கூகிள் ப்ளஸ்ஸில் பிலாசபி கொழுக்கட்டை கிடைக்காத கடுப்பில் விநாயகர் சதுர்த்தி மகா பக்தகோடிகள் குறித்து சொன்ன கருத்தை மையமாக கொண்டு எழுதப்படும் பதிவிது. அவ்வூர்வலத்தில் நடந்த செயலுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன். 

ஓட்டு அரசியலுக்கு தொடர்ந்து இந்து மதத்தை மட்டுமே தாக்கும் பராக்கிரமசாலி கலைஞர் என்பது நமக்கு தெரியும். ஆயுத பூஜை போன்ற ஹிந்து பண்டிகைகள் வந்தால் மட்டும் 'விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள்' என்று கலைஞர் டி.வி. கதறும். அதுபோல சகட்டுமேனிக்கு விடாமல் ஹிந்து மதத்தை நக்கல் அடிப்பதில் விற்பன்னர்கள் கமல், சத்யராஜ் போன்றோர். பிற மதங்களில் உள்ள மூடப்பழக்கங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து தமது திரைப்படங்களிலோ அல்லது மேடைகளிலோ பேசாமல் கழன்று கொள்வதில் திறமைசாலிகள். ஏனெனில் அங்கே தொட்டால் எப்படி ஷாக் அடிக்கும் என்பதை ஞான திருஷ்டியில் நன்கு உணர்ந்தவர்கள் ஆயிற்றே.

இறை நம்பிக்கை உள்ளவன்தான் 'தனது மதக்கடவுள் மட்டுமே உயர்ந்தவர் 'என்று பரவலாக சொல்லிக்கொள்கிறான். முட்டிக்கொல்கிறான். ஆனால் 'போங்கடா பொசக்கெட்டவங்களா. கடவுளே கண்ணுக்கு எட்டுன தூரம் வரை தெரியலையே' என்று நட்ட நடு சென்டர்  நாஸ்திகம் பேசும் நல்லவர்கள் சிலர் என்ன வெளக்கெண்ணைக்கு அனைத்து மத அவலங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பம்முகிறார்கள்? தனது மதத்தில் நடக்கும் முட்டாள்தனங்களை அம்மதத்தை சேர்ந்த இறைநம்பிக்கை உள்ள பதிவர்களே சபையில் வைத்து வாதிடுகையில் 'ஓ மை காட். ஷோ மீ தி காட்' என்று ரவுசு கட்டும் ஜூனியர் பெரியார்கள் ஜகா வாங்குவதேன் என்பதுதான் கேள்வி.  

ஆரம்பம் முதலே இந்து மதத்தில் நடக்கும் அவலங்களை மட்டுமே அவைக்கு கொண்டு வரும் பிலாசபி தப்பித்தவறி பிறமதத்தினரால் அப்பாவி மக்கள் இன்னலுக்கு ஆளாவது குறித்து எதையும் எழுதாது ஏன் என்று பல மாதங்களுக்கு முன்பே நான் கேட்டிருக்கிறேன். அதற்கு தம்பியின் பதில் "என் எதிரில் நடக்கும் சம்பவங்கள்(உதாரணம்: அவரது லேட்டஸ்ட் கூகிள் + :விநாயகர் சதுர்த்தி விழால கைய புடிச்சி இழுத்தியா) பற்றி மட்டுமே கருத்து தெரிவிக்க முடியும்".

தம்பி தெரியாமத்தான் கேக்கறேன்...ஜெயேந்திரர், நித்யானந்தா போன்றோர் பற்றி நீங்கள் பகடி செய்து எழுதிய பதிவுகள் அவர்களுடன் பழகியதாலோ அல்லது சில அடிகள் தள்ளி நின்று லைவ்வாக பார்த்ததாலோ வந்த எழுச்சியின் வெளிப்பாடா? ஊடகம் தரும் செய்திகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட பதிவுகள்தானே? இதுவரை தங்கள் கண்ணில் பாதிரியார்கள் செய்யும் அட்டூழியங்கள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற சம்பவம் போன்ற ஒன்று கூடவா தென்படவில்லை? என்றா இது தமாசு!!

பாபர் மசூதியை இடித்த இடிச்சபுளிகள், லிபியாவில் அமெரிக்க தூதரை கொன்ற கொற்கை வேந்தர்கள், பாலியல் குற்றத்தை செய்யும் பாதிரியார்கள், புத்த மதத்தவன் என்று சொல்லிக்கொண்டு எம் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த வெங்கம்பயல்கள் அனைவரும் எமது கண்களுக்கு ஈன ஜென்மங்களாகவே தெரிகின்றனர். கேட்டால் பெரும்பான்மை மக்கள் இருக்கும் இடத்தில் அவர்கள் மீதான விமர்சனம் மட்டுமே வைக்கப்படுவதே நியாயம் என்று சொல்கிறீர்கள். தவறென்று தெரிந்தால் அது குறித்து பேச பெரும்பான்மை, சிறுபான்மை என்று ரகம் பிரித்து யூ டர்ன் அடிப்பது தொலைநோக்கு பார்வையுள்ள நாஸ்திகர்களுக்கு அழகல்ல!!
........................................................................
     


24 comments:

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

பட்டிகாட்டான் Jey said...

//
விநாயகர் சதுர்த்தி மகா பக்தகோடிகள் குறித்து சொன்ன கருத்தை மையமாக கொண்டு எழுதப்படும் பதிவிது. அவ்வூர்வலத்தில் நடந்த செயலுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
//

அடிச்சான்யா ஆரம்பத்துலேயே சிக்சர்....
சொல்லாடலை கையாடல் பண்ணி நேக்கா தப்பிச்சுட்டன்.
நான் இதை மனப்பாடம் செய்துகொள்கிறேன் தம்பி.

மெட்ராஸா கொக்கா... :-)))

பட்டிகாட்டான் Jey said...

போட்ட கமெண்ட் காணோம்...

அடங்கொன்னியா....கமெண்ட் மாடரேசனா!!!!????? நல்லாருங்க மக்கா

பட்டிகாட்டான் Jey said...

//
ஏனெனில் அங்கே தொட்டால் எப்படி ஷாக் அடிக்கும் என்பதை ஞான திருஷ்டியில் நன்கு உணர்ந்தவர்கள் ஆயிற்றே.
//

ஞான திருஷ்டி நோட் பண்னியாச்சு... :-)))

ஆம மெட்ராஸூ இது எங்க கெடைக்கும்.... கிலோ எம்புட்டூ.... அந்த வெவரத்தை சொல்லாம விட்டுப்புட்டியே கண்ணு...:-(((

பட்டிகாட்டான் Jey said...

//
நட்ட நடு சென்டர் நாஸ்திகம் பேசும் நல்லவர்கள் சிலர் என்ன வெளக்கெண்ணைக்கு அனைத்து மத அவலங்கள் குறித்து கருத்து தெரிவிக்க பம்முகிறார்கள்?
//

யார் யார் எதை பற்றி எப்போது என்ன பேசவேண்டும் என்று சொல்ல நீர் யார்?...
அவரவர்களுக்கு வசத்திப்படும் போது ... வசதிப்பட்ட நேரத்தில்... எங்கள் கண்ணால் கண்டவைகளிப் பற்றி ... எப்படி எழுத வேண்டும் என்று ச்ங்களுக்குத் தெரியும்....

உன் வேலையைப் பார்ஹ்ட்துக் கொண்டு செல்லவும்.

இப்படிக்குனு எவம் பேர போட்டாலும் திட்டுவானெ.... எப்பா மெட்ராஸூ இப்போதைக்கி இப்படிக்கு “நான் இல்லை” அம்புட்டுதேன். ஓவர்..ஓவர்...

பட்டிகாட்டான் Jey said...

//
தம்பி தெரியாமத்தான் கேக்கறேன்...ஜெயேந்திரர், நித்யானந்தா போன்றோர் பற்றி நீங்கள் பகடி செய்து எழுதிய பதிவுகள்
//
இந்தப் பகடிக்கிம், கண்டனத்துக்கும் என் ஆதரவை கன்னாபினா என்று தெரிவிப்பதோடு...
மேற்படி ”ஜெ+நி, ஜெண்டில்மேன்களின்” முகத்தில் காறி ஒரு முறை துப்பிக் கொள்கிறேன்.
எப்பூடீ....சைக்கிள் கேப்ல சந்தர்ப்பத்தை ஊஸ் பண்ணிகிட்டோம்ல...

பட்டிகாட்டான் Jey said...

ஆமா இந்த வாரம் ஏதும் வேண்டுதலா??? எல்லா இடத்துலேயும் இது தொடர்பாவே, ப்ளஸ்,ஸ்டேட்டஸ், பதிவுனு ஓடிட்டிருக்கு??????

பட்டிகாட்டான் Jey said...

//
நாஸ்திகர்களுக்கு அழகல்ல!!
//

யோவ் மெட்ராஸூ அழகைப் பத்தி நீ பேசாதே....
முன்னாடி முடி கொத்தா சிலுப்பிகிட்டு இருந்தா அழகப்பத்தி பேசுர ரைட்ஸ் வந்துருமா....பிச்சிப்புடுவோம் பிச்சீ...

[ இதுல ஏதும் தனி மனித தாக்குதல் இருக்குனு சொல்லிருவாய்ங்களோ...:-) ]

! சிவகுமார் ! said...

//பட்டிகாட்டான் Jey said...
//
விநாயகர் சதுர்த்தி மகா பக்தகோடிகள் குறித்து சொன்ன கருத்தை மையமாக கொண்டு எழுதப்படும் பதிவிது. அவ்வூர்வலத்தில் நடந்த செயலுக்கு எனது கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
//

அடிச்சான்யா ஆரம்பத்துலேயே சிக்சர்....
சொல்லாடலை கையாடல் பண்ணி நேக்கா தப்பிச்சுட்டன்.
நான் இதை மனப்பாடம் செய்துகொள்கிறேன் தம்பி.

மெட்ராஸா கொக்கா... :-)))//

நேக்கா தப்பிக்கற டம்மி பீசுகளிடம் உங்கள் கருத்தை பதிவு செய்க ஜெய். 'கந்தா போற்றி கடம்பா போற்றி என்று எழுதியதை விட இந்து கோவில்களில் நடக்கும் அவலங்களை பற்றி நான் எழுதிய பதிவுகளே அதிகம். உதாரணம்:

http://www.madrasbhavan.com/2012/09/blog-post_19.html

http://www.madrasbhavan.com/2012/08/blog-post_1063.html

பதிவுலகத்துக்கு கேப் விட்டு வந்தததால பல மேட்டர்கள் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஸோ சாரி!!

! சிவகுமார் ! said...//பட்டிகாட்டான் Jey said...
போட்ட கமெண்ட் காணோம்...

அடங்கொன்னியா....கமெண்ட் மாடரேசனா!!!!????? நல்லாருங்க மக்கா//

டப்புனு உணர்ச்சிவசப்படாதீங்க. உங்க கமன்ட் இங்கதான் இருக்கு!

! சிவகுமார் ! said...

பட்டிக்காட்டான் இம்சை தாங்கல..

பட்டிகாட்டான் Jey said...

//
பட்டிக்காட்டான் இம்சை தாங்கல..
//

சோடா குடி மச்சி சரியாப் போயிடும்.

இந்த மொக்கைக்கே இப்படினா...இன்னும் மொக்கை கைவசம் நெறையா இருக்கே....

பட்டிகாட்டான் Jey said...

//
பதிவுலகத்துக்கு கேப் விட்டு வந்தததால பல மேட்டர்கள் உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். ஸோ சாரி!!
//

அடப்பாவி இது காலங்காலமா நடக்குதா.... அதெல்லாம் வேற படிக்கனுமா....போய் படிக்கீரேன்...படிச்சிட்டு அப்படியே அப்பீட்டு...நோ கமெண்ட்ஸ் :-)))

Unknown said...

கொல்லைப் புறம் சென்று ஆலயக் கதவை பூட்டிக்கொண்டு பூசை செய்யும் மஞ்சள் துண்டு அடியார்களை தமிழகம் அறியும்! அந்த அடியார்களை பற்றி அருகிலிருந்தும் ஒரு Fuckக்கம் கூட எழுதவில்லை பிலாசபி....ஏன்..?
வங்கதேச பகுத்தறிவு கவிஞர் அடைக்கலம் தேடி இந்தியா வந்த போது கொலை மிரட்டல் விடுத்த மதப்பொறுக்கிகளை பிலாசபியின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை...!

உணவு உலகம் said...

என்ன இது, விவகார நாயகனுக்கு வந்த சோதனை!

சேலம் தேவா said...

தவறு செய்வதைப் பற்றி சொல்வதில் பெரும்பான்மை,சிறுபான்மையெல்லாம் கூடாது.நடுசென்டராகத்தான் திட்ட வேண்டும்.

(தயவுசெய்து உங்கள் தளத்தில் நீங்கள் கொடுக்கும் இணைப்புகள் இன்னொரு Tab-ல் Open ஆகும் வகையில் Template-ல் மாற்றம் செய்யவும்.)

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!நல்ல பகிர்வு,சாட்டையடி!இலங்கையில் மட்டும் தான் என்றில்லை!இங்கிலாந்தில் கூட சிங்கள பௌத்த துறவி?!பாலியல் குற்றச் சாட்டில் கம்பி எண்ணுகிறார்!

அஞ்சா சிங்கம் said...

வீடு சுரேஸ்குமார் said...

கொல்லைப் புறம் சென்று ஆலயக் கதவை பூட்டிக்கொண்டு பூசை செய்யும் மஞ்சள் துண்டு அடியார்களை தமிழகம் அறியும்! அந்த அடியார்களை பற்றி அருகிலிருந்தும் ஒரு Fuckக்கம் கூட எழுதவில்லை பிலாசபி....ஏன்..?
வங்கதேச பகுத்தறிவு கவிஞர் அடைக்கலம் தேடி இந்தியா வந்த போது கொலை மிரட்டல் விடுத்த மதப்பொறுக்கிகளை பிலாசபியின் கண்களுக்கு ஏன் தெரியவில்லை...!
////////////////////////////////////////////////////////////////////

அதானே நடுநிலை என்றால் எல்லாவற்றையும் தட்டி கேக்கணும் ஒரு கண்ணின் வெண்ணை மறுகண்ணில் சுண்ணாம்பு வைக்ககூடாது ................

திண்டுக்கல் தனபாலன் said...

உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி...

நன்றி...

Yoga.S. said...

நான் போட்ட கமெண்டையும் காணோம்!WHY?

செங்கோவி said...

ஏதாவது கமெண்ட் போடுவோம்னு தோணுது..ஆனால் என்ன போடன்னு தெரியலியே............................

vikky said...

vinayagarukkey vilambarama ayyo siva siva

vikky said...

vinayagarukkey vinay seiyyum vilambarama nathukkappa nathathu

”தளிர் சுரேஷ்” said...

காலம் காலமாக பகுத்தறிவு?! வாதிகளிடம் அடிபடுவது இந்து மதம் தான்! பழுத்த மரம் கல்லடி படுவது இயல்புதான்! இவை எல்லாவற்றையும் தாங்கி எழுந்து நிற்கும் இந்துமதம்! நல்லதொரு பகிர்வு!

Related Posts Plugin for WordPress, Blogger...