CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, September 19, 2012

திருப்பதி அனுபவம்லு                                                                      திருப்பதி அருங்காட்சியகம்

தக்குனூண்டு இருந்த போது இருமுறை ஏழுமலைக்கு சென்றதாக ஞாபகம். அதன்பின் தற்போதுதான் திருப்பதிக்கு விசிட் அடிக்க வாய்ப்பொன்று அமைந்தது. அதிகாலை சுப்ரபாத தரிசனத்திற்கு நண்பர்கள் ஆன்லைனில் டிக்கட் எடுக்க முயன்று தோற்க, சனி இரவே கோவில் க்யூவில் இடம் பிடித்து ஞாயிறு காலை டிக்கட் எடுக்க முடிவு செய்தோம். இறைவனை வழிபட செல்லும் இடங்களில் எல்லாம் வகை வகையான விசித்திர கேரக்டர்களை காணும் வாய்ப்பு அமைவதால் நமக்கு ஏக குஷி. இங்கும் அதற்கு பஞ்சம் லேதண்டி.

சனி இரவு எட்டு மணிக்கு சுப்ரபாத ஸ்பெஷல் கம்பிக்கூண்டில் அடைத்து விட்டனர். ஒன்பது மணி வாக்கில் பாய், போர்வை சகிதம் பாவ மூட்டைகளை சாய்த்து குடும்பம் குடும்பமாக குறட்டை விட ஆரம்பித்தனர். வெளியே சென்று டீ, சுச்சா அடிக்க விரும்பினால் செக்யூரிட்டி நமது கையில் கையெழுத்து போடுவார். மறுபடி உள்ளே வரும்போது அவரின் ஆட்டோகிராப்பை காட்டினால்தான் அனுமதி. இல்லாவிடில் கடைசியில்தான் இடம் கிடைக்கும். நள்ளிரவை நெருங்கியபோது நண்பர்களுடன் காவல் அண்ணன் கையெழுத்தை வாங்கிக்கொண்டு டீ அடிக்க சென்றேன். திரும்பி வரும்போது என்னை மட்டும் தடுத்தார் ஒரு மொட்டை பாஸ். 'ஆட்டோக்ராப் எக்கட?' என்று மிரட்டினார். நமக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கில் 'இதோ உந்தி. மீரு எவரு? செக்யூரிட்டியா?' என்றதற்கு லேதென்று தலையாட்டினார். 'அப்பன்னா ஊரிக கூச்சண்டி. மீகு ஆ அத்தாரிட்டி லேது' என வசனம் பேசினேன். அதற்கு நண்பன் 'அவரு பொது ஆள்தான். சில சமயம் போலி ஆளுங்க உள்ள நுழையரதால உஷாரா இருக்காங்க' என ஆசுவாசப்படுத்தினான். பொழுது விடிந்தால் கூண்டிற்குள் இருக்கும் நமக்கு முதலில் சுப்ரபாதம் பாடுவது பேப்பர்காரர்தான். ரெண்டு ரூபாய் பேப்பரை ஆறு ரூபாய்க்கு விற்று அம்சமாக லாபம் பார்த்தார்.          

வருடம்தோறும் மக்கள் கூட்டம் அதிகரிப்பினும் ஆங்காங்கே சுகாதாரமான கழிப்பறை, குப்பைகள் இல்லா சாலைகள், 24/7 சுடச்சுட உணவு என திருப்பதி  இயங்குவது ஆச்சர்யம்தான். சின்ன கோவில்களில் கூட எந்த சாமியை முதலில் கும்பிட வேண்டும், எந்த போஸில் வழிபட வேண்டும் என்கிற டெக்னிக் தெரியாதவன் நான். திருப்பதியில் சுத்தம். சுப்ரபாத தரிசனத்திற்கு திங்கள் அதிகாலை  'சிறப்பு' க்யூவில் சுமார் 150 பேர் பாலாஜியை நோக்கி சில நூறு மீட்டர் ஓட ஆரம்பித்தனர். வேட்டி கட்டினால்தான் அதிகாலை ஸ்பெஷல் தரிசனம் என்று கண்டிஷன். ஜென்மத்தில் முதன் முறை வேட்டி கட்டல். எங்கே வஸ்திரம் கழன்று விடுமோ எனும் திகிலில் என்னை விட வயதானவர்களை எல்லாம் ஓட விட்டு ஸ்லோ மோஷனில் ஜாக்கிங் செய்ய ஆரம்பித்தேன். பாலாஜி இருக்கும் இடத்தின் மெயின் கதவு திறக்கும் முன் சிலர்  'கௌசல்யா சுப்ரஜா' பாட ஆரம்பித்தனர். கதவின் இடுக்கில் இறைவனைக்கண்டு ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை டீலிங் பேச  சில ஆர்வக்கோளாறுகள் செய்த சேட்டைகள் ஒன்றா இரண்டா?     

                                                                           காலம் மாறி போயிந்தி.... 

அங்கே வேதாளம் போல் என முதுகில் தொத்திக்கொண்டு ஒருவர் வெங்கியை எட்டிப்பார்க்க பிரயத்தனம் செய்து கொண்டிருந்தார். 'ஹல்லோ..ப்ளீஸ் ரிமூவ் தி ஹான்ட் ப்ரம் மை சோல்டர்' என்று நான் சொல்ல 'தரிசனம் பாபு..அந்துகே' என்றார் பக்திமான். 'தானிகி நான் ஏமி பாவம் சேசானு. செய் எத்தண்டி' என்று சவுண்ட் விட்டதும் தோளை விட்டார் தோழர். கதவு திறக்க மத்திய மற்றும் மூத்த வயது ஆட்கள் பாலாஜியை நோக்கி பறந்தனர். இலவச தரிசனம் என்றால் ஓரிரு நொடியில் 'ஜரகண்டி'. சிறப்பு தரிசனம் என்பதால் கூட சில நொடிகளுக்கு பிறகு ஜரகண்டி. 

வழிபாடு முடிந்து நாங்கள் வெளியே வந்த சில நிமிடங்கள் கழித்தே நண்பன் வினோத் வந்தான். ஏண்டா லேட் என்றதற்கு 'சாமிகிட்ட நிக்கிற ஜரகண்டீஸ்வரர் கைல நூறு ரூவாய் திணிச்சேன். ஒரு நிமிஷம் எக்ஸ்ட்ரா வழிபாடு கெடச்சது' என்றான். அடங்கோ..மூலவர் இருக்குற மூணடி தள்ளியும் லஞ்சமா? என்று புருவத்தை உயர்த்தியவாறு சற்று தள்ளி மண்டபத்தில் அமர்ந்தோம். சில நிமிடங்கள் காணாமல் போய் வந்து சேர்ந்தான் வினோத். கையில் வெற்றிலை. வெற்றிலையில் வெண்ணை. 'யார் தந்தாங்க?' என கோரஸ் பாடியதற்கு அவனின் பதில் 'சுப்ரபாதம் பாடுன நாலு பேரு அங்க உக்காந்து இருந்தாங்க. அதுல ஒருத்தருக்கு நூறு ரூவாயை உன் கைல மறச்சி வச்சி ஷேக் ஹான்ட் குடு. வெற்றிலை உன் வசமாகும். இறைவனுக்கு பூசை செய்த ஸ்பெஷல் இலையாக்கும்'. பலே!

அடுத்ததாக பத்து ரூபாய் தந்தால் ஒரு மினி லட்டு கிடைக்கும் இடத்திற்கு விரைந்தோம். அங்கும் வழக்கம்போல் ஒத்தை லட்டுக்கு துட்டை தந்து விட்டு சில அடிகள் நகர்ந்தேன். பயபுள்ள வினோத் மூன்று லட்டுகளுடன் அடக்கொண்ணா சிரிப்புடன் வீறுநடை போட்டு வந்தான். வழக்கம்போல 'ஹவ் இட் இஸ் பாஸ்ஸிபில்' எனக்கேட்டால் 'கவுண்டரில் பத்து ரூபாய் அதிகம் தந்தேன். 'கண்ணா, ரெண்டு லட்டு தின்ன ஆசையா?' என அன்புடன் எக்ஸ்ட்ரா லட்டு தந்தார் அண்ணையா' என்றான். சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல விஷயங்களில் பக்காவாக இருக்கும் திருப்பதி நிர்வாகம் லஞ்சத்தை மட்டும் முக்காபுலா ஆடவிட்டு வேடிக்கை பார்ப்பது ஏன் என்பதே கேள்வி? கேரளா கோவில்களில் இத்தகு சமாச்சாரங்கள் குறைவாக இருப்பதாகவே உணர்கிறேன். 

ஈ லோகம்லோ எவருக்கும் பொறுப்பு லேது. அக்கறை லேது தேவுடா!!

.................................................................................  

Images:
madrasbhavan.com
            

                                                               

13 comments:

கார்த்திக் சரவணன் said...

அண்ணா வணக்கம். நமக்குள் என்ன ஒரு ஒற்றுமை! சற்று முன்புதான் நானும் திருப்பதி பதிவு எழுதினேன்.

http://schoolpaiyan2012.blogspot.in/2012/09/blog-post_19.html

Unknown said...

தேவுடா...மீரு கூச்சந்தி நேனு அடுக்குதானு!

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பகிர்வுக்கு நன்றி..

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

Unknown said...

ஏலுகொண்ட வாலா கோவிந்தா...கோவிந்தா...!

இந்தியாவிலேயே எனக்கு பிடிக்காத கோவில் கேரள கோவில்கள்தான் காரணம்!

மூனு அடி தூரத்தில் இருந்து பிரசாதம் வீசும் ஐயர்கள்!

பூ..பழம் கொடுக்கும் போது நமது கைக்கும் அவர்கள் கைக்கும் குறைந்தது இரண்டு அடி கேப் இருக்னும்...என்று பகிரங்கமாக சொல்வது சாமிகள் நம்மை தொடமாட்டா...!

மற்றபடி கேரள கோவிலில் கலையம்சம் மட்டும் பார்த்துவிட்டு பிரசாதம் வாங்க மாட்டேன்.ஆனால் திருப்பதியில் அப்படியில்லை லஞ்சம் இருந்தாலும் பெருமாளுக்கு முன் அனைவரும் சமம் என்று இருக்கின்றது...அந்த வகையில் பெருமாள் பெஸ்ட்...!

சேலம் தேவா said...

டப்பு இச்சே தேவுடுனி சூஸேஸி இதி ஏமி மாட்ட..?! :) டப்புதான் முக்யம் பாபு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஏமண்டி ஏஞ்செஸ்த்துனாரு........ திவ்ய தரிசனம்.....!

Yoga.S. said...

அனுபவம் புதுமை!!!

ஆமினா said...

எங்க வீட்ல இதுமாதிரிதான் பாதி தமிழும் மீதி தெலுங்குமா போட்டு கொல்லுவாங்க! ஆத்துக்காரர் ஆந்திராக்காரர்...

திருப்பதியில் தான் வாழ்ந்தார்கள் என்பதால் வீடு தொடங்கி குண்டூசி வரைக்கும் எந்த ஒரு பேச்சிலும் 'எங்க திருப்பதி போல வருமா?' என்பார்...

உங்க பதிவு செமையா ரசிச்சேன்.

ஆமா, சிவா தலையில் இருந்த 5 கிலோ முடி பாலாஜி சார் கிட்ட ஒப்படைச்சாச்சா? அத சொல்லலையே... மொட்ட போட்ட போட்டோவை போடுங்க... ஆவலுடன் சகோதரி ஆமினா :-)))

bandhu said...

இந்த 'வினோத்'களை பெண்ட் எடுத்தாலே இந்தியாவில் லஞ்சம் குறைந்துவிடும் போல தோன்றுகிறது!

Anonymous said...

எதாவது ஏஜென்ட் மூலமா போனா, கொஞ்சம் சௌகர்யமா இருக்கும்னு சொல்றாங்களே...

Unknown said...

தமிழும், தெலுங்கும் கலந்த நகைச்சவைப் பதிவு! லட்டு தின்ன ஆசை! கிடைக்குமா..!

திண்டுக்கல் தனபாலன் said...

நகைச்சுவையுடன் இனிய அனுபவம்... எழுத்து நடை ரசிக்க வைத்தது...

ARASU said...

un kusumbukku vara vara alave illaiya pa ha ha ha...

Related Posts Plugin for WordPress, Blogger...