CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, September 18, 2012

சுந்தர பாண்டியன்                                                           
பாசத்தையும், ரத்தக்கறையையும் கலந்து கட்டி காவியம் படைக்கும் சசிகுமார் படங்களை பார்க்காமல் தவிர்த்து விட பெரும்பாலும் காரணம் கிடைப்பதில்லை. போஸ்டர்களை பார்க்கையில் ஜாலியான சப்ஜக்ட் என்று நம்பி தியேட்டரின் உள்ளே சென்றேன். அட்டகத்தி படம் நெடுக பஸ்ஸில் பயணித்த களைப்பு தீர்ந்த சில நாட்களில் உசிலம்பட்டி பஸ்ஸில் ஊர் சுற்ற வேண்டிய கட்டாயம் நமக்கு. 

இரண்டு மனைவிகளுடன் இனிதே குடும்பம் நடத்தும் ஊர் தலைக்கட்டு ஒருவரின் வீர மகன்தான் சுந்தர பாண்டியன். கல்லூரி படிக்கும் தனது நண்பனின் காதலுக்கு உதவ செல்லும் பாண்டிக்கு ஒரு ட்விஸ்ட்டு வைக்கிறார் இயக்குனர். அதைத்தாண்டி வெற்றிபெற்றாலும் இறுதியில் ட்விஸ்ட்டோ ட்விஸ்ட் வைக்கிறார்கள் நண்பர்கள். பாண்டி எப்படி பாண்டி ஆடி அதிலிருந்து தப்புகிறான் என்பதுதான் கதை.

கண்ணில் படுவோரை எல்லாம் கலாய்க்க சசி சீரியசாக முயன்றாலும் சில நேரங்களில் அந்தோ பரிதாபம். 'நண்பன் என்பவன் யாரென்றால்' எனும் சுப்ரமணியபுர பீரியட் மந்திரத்தை இதிலும் ஜெபிக்கிறார். வசனங்கள் நன்றாக இருந்தாலும் 'நட்புக்காக' கொடியேந்தும் காட்சிகள் அண்ணன் படத்தில் விடாமல் பின்தொடர்வது போரடிக்க ஆரம்பித்து விட்டது. முழுப்படத்தை பார்க்க வைத்த பெருமை நாயகி லக்ஷ்மியையே சேரும். கோபப்பார்வை, காதல் ஏக்கம் என அம்மணி வீடு கட்டி அடித்துள்ளார். சூப்ப்ப்பர். 'பரோட்டா' சூரி முட்டு தந்து பாண்டியனின் தேரை இழுக்கிறார். அதனால் ஆங்காங்கே வரும் சுமார் ஜோக்குக்கு கூட அழுத்தமாக கேட்கிறது மக்களின் சிரிப்பொலி. அப்புக்குட்டியின் ஒருதலைக்காதல் ரசிக்க வைக்கிறது. 

சசி ஜெயிலில் இருந்து ரிலீசாகி வீட்டுக்கு வரும் சீனில் ஊர் பாட்டிகள் எல்லாம் ஒப்பாரி வைக்குமிடம், சசியின் நண்பன் பல நாட்களுக்கு பிறகு காதலை சொல்ல நாயகியை நெருங்கும்போது தோழி கத்தி கலாட்டா செய்வது போன்றவை கலக்கல் கலாட்டா. பாடல்கள் எதுவும் மனதில் தங்கவில்லை. தொடர்ந்து வரும் பேருந்து காட்சிகள் சலிப்பு. மூன்றாண்டு லக்ஷ்மியை நினைத்து உருகும் நண்பனின் திருமண பத்திரிக்கையை பார்க்கும் சசி 'எனக்கு கல்யாணம் நடக்கறது அப்பறம். பாவம் அவன். லக்ஷ்மியை ரொம்ப நேசிக்கிறான்' என்று உதவ செல்கிறார். உதவி எல்லாம் வேண்டாம். 'சசியை கொன்றே தீருவேன்' என  அந்த நண்பன் அடம் பிடிப்பது மகா மொக்கையான லாஜிக்காக படுகிறது. 

க்ளைமாக்ஸில் மரண அடி வாங்குவது சசி மட்டுமல்ல.'சுந்தர பாண்டியனும்'தான். ஆயிரம் வெட்டு குத்து பட்டாலும் பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து கொண்டு வரும் சூப்பர் ஹீரோ இங்கும் இருப்பது...அடப்போங்கய்யா. ரத்தக்காவு இல்லாமல் சசியின் படங்கள் இருக்குமா என்ன? இதிலும் அதே அதே. சபாபதே. மொத்தத்தில் டைம் பாஸ் படம்.
............................................................

மத்திய எழுபதுகள் முதல் சுமார் 15 ஆண்டுகள் கிரிக்கெட் உலகை ஆண்ட அணியான வெஸ்ட் இண்டீஸ் பற்றிய சிறப்பு சினிமா 'பயர் இன் பாபிலோன்' இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது. கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை எனது பேவரிட் அணிகளில் வெஸ்ட் இண்டீஸுக்கே முதலிடம்(அடுத்து பாகிஸ்தான்).அவர்களைப்பற்றிய சினிமா என்பதால் தவற விட வாய்ப்பில்லை..................................................................

சமீபத்தில் எழுதியது:

முட்டாள் எடுத்த மொக்கைப்படம்

ரன்பீர், பிரியங்கா பர்பி - விமர்சனம்
..................................................................

My other site:
agsivakumar.com 
14 comments:

முத்தரசு said...

டைம் பாஸ் படமா...சரி அப்படினாக்க வெய்டிங் லிஸ்டுல சேர்த்துட்டேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முழுப்படத்தை பார்க்க வைத்த பெருமை நாயகி லக்ஷ்மியையே சேரும். கோபப்பார்வை, காதல் ஏக்கம் என அம்மணி வீடு கட்டி அடித்துள்ளார். //////

ஹீரோயின் நல்லா இல்லேன்னு பிலாசபி சொன்னாரே? நீங்க பார்த்தது ஹீரோயின் கூட வர்ர பொண்ணா இருக்க போவுது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரிச்சர்ட்ஸ், ஹேய்ன்ஸ், கிரினிட்ஜ், ரிச்சி ரிச்சர்ட்சன், லோகி, பேட்டர்சன், அம்புரோஸ், வால்ஷ்............ அது ஒரு பொற்காலம்.......

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

ஓக்கே தல.

! சிவகுமார் ! said...


@ பன்னிக்குட்டி

பிலாசபி பயபுள்ள என் கூடதான் படம் பாத்துச்சி. ஹீரோயின் வரும்போது வச்ச கண் வாங்காம பாத்ததை நான் பாத்தேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ! சிவகுமார் ! said...

@ பன்னிக்குட்டி

பிலாசபி பயபுள்ள என் கூடதான் படம் பாத்துச்சி. ஹீரோயின் வரும்போது வச்ச கண் வாங்காம பாத்ததை நான் பாத்தேன். /////////

ஓஹோ மேட்டர் அப்படி போகுதோ........?

! சிவகுமார் ! said...


//பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரிச்சர்ட்ஸ், ஹேய்ன்ஸ், கிரினிட்ஜ், ரிச்சி ரிச்சர்ட்சன், லோகி, பேட்டர்சன், அம்புரோஸ், வால்ஷ்............ அது ஒரு பொற்காலம்.......//

கிரிக்கெட்டில் எனது ஆதர்ஷ நாயகனே தலைவன் ரிச்சர்ட்ஸ் தான். ' ரிச்சர்ட்ஸ் பொண்ணுதான் எனக்கு மனைவியாக வேண்டும்' என நான் அடம்பிடித்த நாட்கள் உண்டு என்று வீட்டில் சொல்வார்கள்.

சீனு said...

நான் எழுத நினைத்தும் இது தான் சிவா... ஏதோ ஜல்லியான படம் என்று எதிர்பார்த்து சென்றால் மிகப் பெரிய ஆப்பை சொருகி அனுப்பி விட்டார்கள்

CS. Mohan Kumar said...

//முழுப்படத்தை பார்க்க வைத்த பெருமை நாயகி லக்ஷ்மியையே சேரும். கோபப்பார்வை, காதல் ஏக்கம் என அம்மணி வீடு கட்டி அடித்துள்ளார். சூப்ப்ப்பர்.//

சிவா: அப்பா தமன்னாவோட வாழ்க்கை?

arasan said...

பார்த்துட வேண்டியதுதான் ... முகமூடி நாத்தம் இதில் இருக்காது என்று போகலாம் ...

யய்யா சீனு தமிழ் சினிமாவை நம்பி உள்ளே போனா இப்படி ஏமாற வேண்டியது தான் ...

திண்டுக்கல் தனபாலன் said...

சசிக்காக பார்க்க வேண்டும்...

Yoga.S. said...

நல்ல விமர்சனம்!நன்றி!!!

Unknown said...

விமர்சனம் நல்லா இருக்கு...அது என்னா கடைசில நம்ம நாட்டு கிரிக்கெட்ட மட்டும் ஓட்றது...அயல்நாட்டு கிரிக்கெட்னா மட்டும் சூப்பருங்கறது...நல்லதுக்கு இல்லீங்க்...எப்பவும் ஒரே மாதிரி பார்க்கவும்...அங்கயும் அதி பயங்கர கோல்மால்லாம் நடந்திருக்குங்கோ!

Yoga.S. said...

வினை தீர்க்கும் விநாயகன் தாள் பணிந்து அருள் பெறுவோம்!

Related Posts Plugin for WordPress, Blogger...