CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, September 11, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (11/09/12)


புகைப்படம்: 

                                                             
சென்ற வாரம் நண்பர்களுடன் திருப்பதி சென்றபோது க்ளிக் அடித்தது. இடம் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் அருகில் இருக்கும் பூங்கா.
................................................................

ஷீர்டி சாய்:

அன்னமய்யா, ஸ்ரீராமதாசு வரிசையில் நாகார்ஜுனா நடித்துள்ள படம். ஷிர்டி சாய் செய்யும் அதிசயங்கள் பெரும்பாலான காட்சிகளை ஆக்ரமிக்கின்றன. இடைவேளை வரை வரும் பாடல்கள் ஆன்மீக அமுதம். அதன்பின் சோகமயமான பாடல்களின் ஆக்கிரமிப்பு. நாகார்ஜுனா நடிப்பு நன்று. ஷாயாஜி ஷிண்டே வட்டி வாங்கும் சேட்டாக வந்து லேசாக சிரிக்க வைக்கிறார். சரத்பாபு, கமலினி முகர்ஜி, பிரம்மானந்தம் என நீள்கிறது நட்சத்திர பட்டியல். முன்பெல்லாம் ஆன்மீக படங்களில் கிச்சு கிச்சு கிராபிக்ஸை தந்து வெறுப்பேற்றி வந்தனர். அம்மன் படத்தில் ஓரளவு முன்னேறி தற்போது சீரடி சாயில் சிறப்பான கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி உள்ளனர். மதங்களை கடந்து ஏழைகள் மற்றும்  வாயில்லா ஜீவன்களிடம் அன்பு பாராட்டியவரின் வாழ்வினை பார்க்க ஷீரடி சாய் சரியான தேர்வுதான். 
....................................................................

வேட்டையாடு விளையாடு: 
சென்ற ஆண்டு டெர்ரர் கும்மி நண்பர்களால் வெற்றிகரமாக துவக்கப்பட்ட ஹன்ட் பார் ஹின்ட் போட்டிகள் தற்போது  இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பரிசு ரூ.10,000. களம் காண விரும்பும் மக்கள் படிக்க:


மூளைக்கு வேலை தரும் போட்டி என்பதால் யோசித்து உள்ளே குதிக்க. வின்னருக்கு 'ஆகச்சிறந்த எழுத்தாளர்' பன்னிக்குட்டி ராமசாமி நேரில் வந்து பரிசு வழங்க வாய்ப்புண்டு என ஐ.நா.சிறப்பு தூதர் கூறி உள்ளார்.
..............................................................................

ரன் பேபி ரன்:
புகழ்பெற்ற ஸ்டிங் ஆபரேஷன் ஆளாக மோகன்லால் நடித்திருக்கும் சினிமா. ஹிந்தியில் ராணி முகர்ஜி, வித்யா பாலன் நடித்த டி .வி.சேனல் தீம் படமான  'நோ ஒன் கில்ட் ஜெஸ்ஸிகா' அளவிற்கு அசத்தாவிடினும் போர் அடிக்காமல் பார்க்க முடிகிறது. டி.வி. சேனல்கள் பிரேக்கிங் நியூசிற்கு செய்யும் தில்லாலங்கடி வேலைகளை எடுத்து சொல்கிறது இப்படம். கேரக்டருக்கு பக்காவாக பொருந்துகிறார் லால் ஏட்டன். அமலா பாலை ரொமான்ஸ் செய்யும்போது அங்கிளோ அங்கிள் போல தலைவர் இருப்பது டமாசு. மசாலத்தன கிளைமாக்ஸ் மைனஸ்.       
..........................................................................

சந்தித்த வேளையில்: 
மதுரையின் 'மினி அஞ்சாநெஞ்சன்' பதிவர் மணிவண்ணன் சென்னைக்கு வந்ததன் பொருட்டு சென்னை-மதுரை பதிவர் பேரணி நடத்த ஆயத்தமானோம். 'யாரைக்கேட்டு சென்னை-மதுரை பேர வச்ச?' என்று எவரும் கொந்தளிக்காதது பேராறுதல்.   

                                     ஸ்பென்சரில் 'வடா பாவ்' வை அமுக்கும் மணி, பிலாசபி, அஞ்சாசிங்கம்.


தி.நகர் நடேசன் பூங்காவில் ஆரூர் முனா செந்தில் ,மதுரை மணி, அதிபிரபல எழுத்தாளர் சிவகுமார், 'சென்னை டான்' மதுமதி.                                                           
...................................................................................

'ஆட்டோ'க்ராப்: 
1998 ஆம் ஆண்டுக்கு பிறகு மீட்டர் என்கிற வஸ்துவை உபயோகிக்காமல் ஊரை ஏமாற்றும் சென்னை ஆட்டோக்காரர்களுக்கு அரசாங்கம் எந்த ஆப்பும் வைக்கவில்லை. அடிக்கடி இப்பிரச்சனை எழுப்பப்பட்டாலும் எவ்வித பயனும் இல்லாமலே போனது. இப்போது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்  அக்கொடுமைக்கு முடிவு கட்ட கோதாவில் இறங்கி உள்ளது. 'மீட்டர் எங்கே'  எனக்கேட்டு கையெழுத்து வேட்டையை துவங்கி உள்ளனர். மீட்டர் அராஜகத்தை தட்டிக்கேட்டு ஆட்டோ ஓட்டிகளுக்கு குட்டு வைக்க க்ளிக் செய்க:

.................................................................................

சபாஷ் பாபு:
கூடங்குளம் போராட்ட விஷயத்தில் தனது களப்பணியை செவ்வனே செய்து வருகிறது தினமலர். சிறை செல்லும் உதயகுமார் குறித்து அந்நாளிதழ் சொல்லும் தலைப்பு 'புத்தி வந்தது உதயகுமாருக்கு'. உங்களுக்கு எப்போது புத்தி உதயமாகும் உசிதசிகாமணிகளே?
...............................................................................

நாளைய செய்தி: 
லண்டனுக்கு பிறகு அடுத்த ஒலிம்பிக் போட்டிகளை 2016 ஆண்டு நடத்த உள்ள நகரம் ரியோ டி ஜெனிரோ(பிரேசில்). அதற்கான முன்னோட்ட காணொளியை தயாரித்து உள்ளனர் பிரேசில் ஒலிம்பிக் அமைப்பாளர்கள். இவ்வாண்டும் ஒலிம்பிக் தங்கத்தை இழந்த பிரேசில் கால்பந்து அணி சொந்த தேசத்திலாவது தங்கம் அடிக்குமா என்பதுதான் கால்பந்து ரசிகர்களின் முக்கிய எதிர்பார்ப்பு. காத்திருப்போம்.  
                                                  
     
..........................................................................


32 comments:

அஞ்சா சிங்கம் said...

அற்புதமான புகை படம் இவ்வளவு திறமையை கக்கத்தில் மறைத்து கொண்டு இப்படி அமைதியாக இருப்பது வியப்பளிக்கிறது .இனி உங்கள் தளத்தில் வெறும் புகைப்படங்களாக போட்டு தாக்கலாம் ..........

இப்படிக்கு
டயபர் பாய்ஸ் ..

! சிவகுமார் ! said...


அட..பாடாவதி பாராட்டுக்கு நன்றி தோழர். டயப்பர் வாயர் இருக்க பயமேன். சுஜாதா விருது நமக்கே!!

”தளிர் சுரேஷ்” said...

ஸ்பெஷல் மீல்ஸ் வழக்கம் போல சூப்பர்! சீர்டி சாய் தமிழில் வந்தால் பார்க்கலாம்! எனக்கு தெலுங்கு அலர்ஜி! கூடங்குளம் விடிவு எப்போ என கேட்க வைக்கிறது!

இன்று என் தளத்தில்!
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
http://thalirssb.blogspot.in/2012/09/8.html

முத்தரசு said...

//'ஆகச்சிறந்த எழுத்தாளர்' பன்னிக்குட்டி ராமசாமி //

ஙே...

முத்தரசு said...

//ரன் பேபி ரன்://

சிடி இருக்கு பாக்க நேரமில்லை

இந்திரா said...

//ஆகச்சிறந்த எழுத்தாளர்//

அப்டினா என்னங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Present Sir

Admin said...

'டான் டான்'னு அடிக்கிறீங்களே!

TERROR-PANDIYAN(VAS) said...

Present Sir..

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

இது வேறையா.. :)

Unknown said...

மணிவண்ணனை சந்தித்த சென்னை-மதுரை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்.அப்புறம் உருளைக்கிழங்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்...! எனக்கு பயந்து வருது...!காய்ச்சல் வரும் போல.....!

இப்படிக்கு

கோமாளி!

! சிவகுமார் ! said...


@ எஸ்.சுரேஷ்.

நன்றி. எப்படியும் படித்தே தீருவேன்.

! சிவகுமார் ! said...


@ மனசாட்சி

வொர்த் ஆன படம்தான். பாருங்கள்.

! சிவகுமார் ! said...


@ இந்திரா

அடிக்கடி அமவுண்ட் தந்து அவார்ட் வாங்கும் பதிவர், உள்ளூர் பதிவர் சந்திப்பை கண்டு வயிறு எரியும் பதிவர், ஒன்றாய் இருக்கும் நண்பர்களை பிரித்து சொத்தையாக பொழப்பு நடத்தும் பதிவர்.....இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

! சிவகுமார் ! said...


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Present Sir//

வாங்கங்க சாமியோ.

! சிவகுமார் ! said...


@ மதுமதி

ஏக் ஹீ பாஷை ஹை சென்னை மே. உஸ்கா நாம் மதுமதி ஹை.

! சிவகுமார் ! said...


//TERROR-PANDIYAN(VAS) said...
Present Sir..

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.//

இது வேறையா.. :)//

என்ன செய்ய. சென்னையின் பீத்த பதிவரை லேசாக கிண்டினால் கூட வேறு ஐடியில் வந்து கொச்சையாக கமன்ட் போடுவாராம். அம்மாதிரி சாக்கடைகளை அனுமதிக்க வேண்டாமே என்றுதான்....!!

! சிவகுமார் ! said...


@ வீடு சுரேஸ்குமார்

அருமையான பாடாவதி பின்னூட்டம். உங்களுக்கு வேட்டைக்காரனின் டூப் போட்ட ஜோக்கர் தொப்பி இலவசம்.

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் ஆஜர் வச்சிட்டேன் ..........

ராஜ் said...

புட்பால் உலக கோப்பை(2014) கூட இந்த முறை பிரேசில் நாட்டில் தான் நடக்க உள்ளது...டபுள் கொண்டாட்டம் பிரேசில் மக்களுக்கு..

MARI The Great said...

எச்சுஸ்மீ... நானும் ஒரு டெம்ப்ளேட் கமெண்ட் போடலாமா?

#entry registered!

CS. Mohan Kumar said...

//@ எஸ்.சுரேஷ்.

நன்றி. எப்படியும் படித்தே தீருவேன். //

:))

Yoga.S. said...

வணக்கம்,சிவா சார்!///அதி பிரபல எழுத்தாளர்.////அப்பிடீன்னா என்னங்க????

அனுஷ்யா said...

தினமலர் சூவன்னாவை மூடிக்கொண்டு இருப்பது நலம்... படித்தாலே அந்த எடிட்டருக்கு துபாய் தண்டனை தரவேண்டும் போல இருக்கிறது...

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாமே படப் பெயர்கள் வைத்து... மீல்ஸ் அருமை...

'கூடங்'குளம் பிரச்சனை எப்போது முடியுமோ...?

அனுஷ்யா said...

அப்புறம் அண்ணாச்சி.. மீச என்னாச்சு... ?

த.ம-4319

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான மீல்ஸ்....

முதல் படம் அசத்தல் நண்பரே... மிக நன்றாக இருக்கிறது.

கோவை நேரம் said...

ஏதோ எழுத்தாளர் என்று சொன்னீங்க..யாருங்க அது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பிரபல எழுத்தாளரா?பதிவரா?

சமுத்ரா said...

good

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யா கொட புடிச்சிட்டு போற பெரியவரே வணக்கமுங்க....... அந்த கிரீஸ் டப்பாவ கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு போங்கங்க........

Unknown said...

கண்ணாடி அணிந்த புகைப்படத்தை ப்ரசூரிக்காததற்க்கு கடுமையான கண்டனங்கள்

Easy (EZ) Editorial Calendar said...

அற்புதமான படைப்பு....வாழ்த்துக்கள்........

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Related Posts Plugin for WordPress, Blogger...