CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, August 15, 2012

Ek Tha Tiger


                           
அமீர், ஷாருக் இருவரையும் விட தற்போது முன்னணியில் இருக்கும் கானான சல்மானின் ஆக்சன் கம் ரொமாண்டிக் காம்போதான் இந்த ஏக் தா டைகர். இந்த முறை சல்லு பாய் மிக ரிச்சாக களமாடி இருக்கிறார். ரம்ஜான் மற்றும் சுதந்திர தினச்சிறப்பு ரிலீஸ் என்பதால் அதையொத்த  அம்சங்களுக்கும் பஞ்சமில்லை. வெளிநாட்டு நிலப்பரப்புகளில்தான் படம் பிடிப்பேன் என்று படத்துக்கு படம் அடம் பிடிக்கும் கபீர் கானின் மூன்றாவது இயக்கம். முந்தையவை காபுல் எக்ஸ்பிரஸ் மற்றும் நியூயார்க். ஹிந்தி சினிமா அனுராக் காஷ்யப், திபாகர் பேனர்ஜி போன்றோர்களால் வேறு கட்டத்திற்கு சென்று கொண்டிருக்க பிரபுதேவா மாதிரி இயக்குனர்கள்  மசாலாப்பட ரசிகர்களை தக்கவைத்து கொள்ள ரவுடி ராத்தோர்களை கோதாவில் இறக்கினால் கபீர் கான் டைகரை வைத்து வித்தை காட்டி இருக்கிறார்.   

இந்திய உளவுத்துறை 'ரா'வின் ரகசிய ஏஜென்ட்தான் டைகர். இரான், அயர்லாந்து, கஜகஸ்தான் என்று பல்வேறு தேசங்களுக்கு சென்று தனக்கு தரப்படும் வேலையை செய்து முடிப்பவர். இந்தியாவின் திறமை வாய்ந்த  விஞ்ஞானி ஒருவர் அயர்லாந்தில் இருப்பதாகவும், பாகிஸ்தானை எதிர்த்து தாக்கும் ஆன்ட்டி மிஸைல் பற்றிய தொழில்நுட்பம் தெரிந்தவர் அவ்விஞ்ஞானி என்றும் உயரதிகாரி கிரீஸ் கர்னாட் தெரிவிக்கிறார். பாகிஸ்தானின் உளவாளிகளிடம் ஏவுகணை ரகசியத்தை அவர் தெரிவித்து விட வாய்ப்பு இருப்பதால் தீவிரமாக கண்காணிக்க அத்தேசம் செல்கிறார் சல்மான். மறுபக்கம் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.உளவாளிகள் ஹீரோவை குறிவைத்து துரத்த 'அட..தட தட எக்ஸ்பிரஸ்தான் இப்படம் என்று எண்ணிய ரசிகர்கள் வாயில் பெவிகாலில் செய்த சிறப்பு பிரியாணியை வைத்து அடைக்கிறார் கபீர் கான் - தி டைரக்டர்.  

'உளவுத்துறை அளவுக்கு நான் ஒர்த் இல்லீங்க' என்று கொஞ்ச நேரத்திற்கு பின் காத்ரீனா கைபுடன் 'என்ன விலை அழகே?' மூடுக்கு சென்று விடுகிறார். அதன் பின் ரா மற்றும் ஐ.எஸ்.ஐ. இரண்டுமே இந்த ஜோடிகளை மூர்க்கமாக விரட்ட ஆரம்பிக்கிறது. இந்த லட்சணத்தில் 'இவ்விரு துறையும் ஒன்றாக சேர்ந்து ஒரு காரியம் செய்கிறார்கள் என்றால் அது இக்காதலர்களை விரட்டுவதுதான்' என்று பின்னணி குரலில் புல்லரிக்கிறார் ஒருவர். ஒரு வசனம் மட்டும் சிரிக்க வைக்கிறது. காத்ரீனா 'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?'..சல்மான் 'ஏன்? முதல்ல எனக்கு கேர்ள் பிரண்ட் இருக்கான்னு கேக்க மாட்டியா?'....கத்ரினா 'உன் வயசுக்கு அதெல்லாம் ரொம்ப ஓவர்'. கரெக்ட்தான். டைகரின் முகத்தில் லேசாக முதுமை எட்டிப்பார்க்கிறது. பாடல்களில் மட்டும் பெரும் பேரழகியாக தெரியும் காத்ரீனா க்ளோஸ் அப்களில் மனதை கவ்வவில்லை.    

பல்வேறு தேசங்களை பக்காவாக படம்பிடித்துள்ளது அசீமின் கேமரா. பாடல்கள் எதுவும் சரிப்படவில்லை.  கிராபிக்ஸ் உதவியுடன் கட்டிடங்களுக்கு இடையே தாவும் காட்சியில் காத்ரீனா க்ளாப்ஸ்களை அள்ளுகிறார். உலக நாடுகள் அனைத்தும் ஆட்களை வைத்து விரட்டினாலும் எவர் கைகளிலும், துப்பாக்கி தோட்டாக்களிலும் அகப்படாமல் ஜோடிப்புலிகள் ஓடும் ஓட்டத்தை என்னன்னு சொல்ல? வழக்கம்போல இந்த படத்தையும்  100 கோடி வசூல் தந்துவிட்டுதான் மறுவேலை பார்ப்போம் என்று சல்மான்/காத்ரீனா/மசாலா விரும்பிகள் முடிவு செய்துவிட்டால் தடுப்பார் யார்?   
          
ஏக்  தா டைகர் - மசாலாப்புலிளி
............................................................................

.................................................
சமீபத்தில் எழுதியது:

அட்டகத்தி - விமர்சனம் 
..................................................
..............................
My other site:
agsivakumar.com
..............................
                                          

6 comments:

NKS.ஹாஜா மைதீன் said...

அடடா இந்தி பட விமர்சனமா....ஓகே ஓகே....

பட்டிகாட்டான் Jey said...

இந்திப்படத்துக்கு இந்தில விமர்சனம் எழுதுப்பா....

Unknown said...

ஏக்...மோர்! தோ துக்கடா...!

Unknown said...

படம் புளியா இருந்தா லைட்டா சால்ட்ட தூவி சாப்பிட வேண்டியதுதான்...!

ராஜ் said...

ஹிந்திகாரனுக சல்மான் படம் எப்படி இருந்தாலும் பார்ப்பாங்க, அதுவும் இல்லாம சல்மான் தொட்டது எல்லாம் பெரிய ஹிட் ஆகிருக்கு, இந்த படமும் பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறன்.
மசாலாப்புலிளி- பாஸ் குழம்புக்கு போடுற புளி தானே...

வவ்வால் said...

என்ன ஒருத்தர் பார்க்கலாம்னு எழுதினா இன்னொருத்தர் ஃபெவிக்கால் பிரியாணி என பேதி கிளப்புறாங்களே, இதிலே ஏதோ ராவான சதி இருக்கு :-))


தமிழில் டப்பிங் செய்தால் "ஒண்டிப்புலி" என பெயர் வைப்பார்களா?

பாகிஸ்தான்,பங்களாதேஷ் மற்றும் உலக நாடுகள் ரைட்ஸ் நல்ல விலைக்கு [போகும் என்பதால் "கான்" நடிகர்களின் படம் ஓடவில்லை என்றாலும் கவலைப்படமாட்டார்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...