CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, August 24, 2012

சென்னை பித்தன் பெயர் நீக்கம்?                                         

வயதில் மூத்தவர்கள் என்றாலும் நவீன தொழில்நுட்பம் வாயிலாக தமது எண்ணங்களை பகிரும் நல்லிதயங்கள் பல. உடல் ஒத்துழைக்காததால் மிக மெதுவாக டைப் செய்தோ அல்லது பிறர் உதவியுடனே பதிவிடும் பெரியவர்கள்  நம்மிடையே இருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே. அப்படி ஒரு பதிவர்தான் சென்னைய சேர்ந்த திருமதி.ருக்மணி அவர்கள். 'எவன்டா இந்த மலைய உடச்சது..கூப்புடுடா அந்த கலெக்டரையும், தாசில்தாரையும்' என்று ஓவராக 'மருந்து' அருந்திவிட்டு 'ஒத்த வெரல்ல மொத்த மலையையும் போன வாரம் தூக்கனேன் தெரியுமா?' என்று கதை சொல்லும் பலே பாண்டியாக்கள் பலர். ஆனால் 'பாட்டி சொல்லும் கதைகள்' எனும் பெயரில் ருக்மணி அம்மா கதைகளை சொல்லி வருகிறார் 2009 ஆம் ஆண்டு முதல். 

இவருடைய தளத்தை பார்க்க: http://chuttikadhai.blogspot.in/

திரட்டி எதிலும் இவர் இணையவில்லை என்று தெரிகிறது. இவருடைய பதிவுகளுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிப்பது வெங்கட் நாகராஜ் அவர்களும், நமது பின்னூட்ட (புயலோ) புயல், செல்லக்குட்டி   திண்டுக்கல் தனபாலன் அவர்கள்(உங்களுக்காக காத்திருக்கேன்/கோம் தலைவா. வாங்கோ). ஞாயிறு அன்று சென்னை பதிவர் சந்திப்பிற்கு வருவதை உறுதி செய்துள்ளார் ருக்மணி அவர்கள்.  

எனவே மூத்த பதிவர்களை கௌரவிக்கும் பட்டியலில் இவருடைய பெயரும் இணைவது மகிழ்ச்சியே. தானைத்தலைவர் மது மோர்மதி அவர்கள் கவனத்தில் கொள்க.(ஏகப்பட்ட சட்டைங்க கிழிஞ்சதுக்கு எல்லாம்   டென்சன் ஆவாதீங்கன்னே..லெஸ் டென்சன் மோர் வொர்க். மோர் வொர்க் லெஸ் டென்ஷன்). ஆகவே யூத் பதிவர் சென்னை பித்தனை எங்களுடன் 'கலக்க' விடுங்கள். அவரை மூத்த பதிவர் என்று கூறி கடும் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் (அவர்தான் சொல்ல சொன்னார்).   

எத்தனை பேர் வருவாங்க என்று கணக்கு போட்டு எதையும் சாதிக்க போவதில்லை. இவர்கள் போன்ற ஒரு புதிய பதிவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பதிவர் சந்திப்பும் வெற்றியே!! சியர்ஸ்!! (மகிழ்ச்சி என்று(ம்) ஆங்கிலத்தில் அர்த்தமுண்டு).  
..........................................................................

                   

20 comments:

CS. Mohan Kumar said...

என்ன வோய்.. நம்ம கவிதை வீதி சவுந்தர் மாதிரி தலைப்பு வைக்க ஆரம்பிச்சிட்டீர் !

முடி வெட்டியாச்சா? நாளையாவது வெட்டி விட்டு வந்து சேரவும். லேடிஸ் எல்லாம் பயந்துடுவாங்க. முடிவெட்டினா நம்ம சிவா ஹீரோ மாதிரி இருப்பார் தெரியுமா?

சனி, ஞாயிறு இரு நாளும் "விலா"வுக்காக ஒதுக்கி விட்டேன். வீட்டு மேடம் கூட " ஒழி" என சொல்லி பெர்மிஷன் குடுத்துட்டாங்க. சனிக்கிழமை எங்கே எப்போ மீட் பண்றதுன்னு நமக்கு போன் அல்லது மெயிலில் சொல்லுங்க

CS. Mohan Kumar said...

பின்னூட்ட புயல்கள் எனக்கு தெரிஞ்சு மூணு பேரு இருக்காங்க.

1. திண்டுக்கல் தனபாலன்.
2. வரலாற்று சுவடுகள்
3. ரமணி சார்

இவர்களுக்கும், இது போன்று தொடர்ந்து பலருக்கு ஊக்கம் தரும் மற்றவர்களுக்கும் இதற்காக ஏதாவது சிறப்பு செய்யணும். அடுத்த விழாவிலாவது யோசிங்க பாஸ்

பால கணேஷ் said...

அதுசரி... நீங்களும் தலைப்புலயே டெரர் ஆக ஆரம்பிச்சாச்சா சிவா? ருக்மணி அம்மாவின் பதிவுகளை இனியேனும் படிச்சுடணும்னு எனக்குத் தோண வெச்சது உங்க எழுத்து. செ.பி. அவர்களை இளைய பதிவர்ன்னு ஏத்துக்கற அதே நேரத்துல நான் குழந்தைப் பதிவர்ங்கறதையும் ஏத்துக்கணும்னு கேட்டுக்கறேன் (மிரட்டறேன்). இல்லையேல்... என் தொண்டர்கள் தீக்குளிப்பார்கள், தமிழ்நாட்ல பஸ். ரயில் எதுவும் ஒடாது -இப்டில்லாம் மிரட்டணும்னு ஆசை. ஆனா எதுவும் நடக்காதே... ஹி... ஹி...

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

இட்ஸ் எ இன்ஸ்பிரேஷன் பிரம் கவிதை வீதி. ஹேர் கட் பண்ணலை.


என்னது ஹீரோவா? காமடியனாக இருப்பதே போதும் சார். ஹீரோக்கள் சுத்த மொக்கையாக நடிக்கும் படங்களில் காமடியன்தான் ஆபத்பாந்தவன். உதாரணம்: ஓகே. ஓகே.

சனி,ஞாயிறு அன்று சினிமாவிற்கும் லீவ் விட்டுவிட்டேன். உங்க நிலைமை அந்தோ பரிதாபம். கண்டிப்பாக நாளை சந்திப்போம்.

சென்னை பித்தன் said...

மதுமதி! சிவா சொல்வதைப் பார்த்தீர்களா?!அதைக் கேட்டு நடப்பதும்,நடக்காததும் உங்கள் இஷ்டம்.
(என் பெயரையெல்லாம் தலைப்பில் போட்டால் வியாபாரம் பெருகாது சிவா!)

! சிவகுமார் ! said...@ மோகன்குமார்

கண்டிப்பாக. ரமணி எம்.ஜி.ஆர். போல நடித்து காட்ட வேண்டும்.

! சிவகுமார் ! said...


@ பால கணேஷ்

தீக்குளிப்பேன்னு தமிழின தலைவர் சொன்னதுக்கே 'போங்க சார் நீங்க ஒரு தமாசு'ன்னு சொன்ன மாநிலம் இது. :))

! சிவகுமார் ! said...


@ சென்னை பித்தன்

இப்படி தலைப்பு வைத்தால் வியாபாரம் பெருகுமா சார்?

> அண்ணாவுக்கு முத்தமிட்ட பிரபல நடிகை.

Yoga.S. said...

வணக்கம் சிவா சார்!///>அண்ணாவுக்கு முத்தமிட்ட பிரபல நடிகை<எந்த "அண்ணா"வுக்கு?,ஹி!ஹி!ஹி!!!!

! சிவகுமார் ! said...

Yoga, Please read:

http://chennaipithan.blogspot.com/2012/04/blog-post_16.html

Yoga.S. said...

நான் பேச நினைப்பதெல்லாம்;:::::கோகுல் மனதில்;:::::போன்ற சில தளங்கள் எங்களில் சிலருக்குப் பார்க்க/படிக்க முடியவில்லையே,ஏன்????யாராவது சொல்லி நிவர்த்தி பண்ணுங்களேன்!

Unknown said...

சென்னை பித்தன் அய்யா அவர்கள் யூத்பதிவர் அவரை மூத்த பதிவர் என்று கூறிய அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன்...!அப்படியே என் பெயருக்கு முன் பாலகன் என்று போடவும் வலியுருத்துகின்றேன்

ஆமினா said...

எத்தனை பேர் வருவாங்க என்று கணக்கு போட்டு எதையும் சாதிக்க போவதில்லை. இவர்கள் போன்ற ஒரு புதிய பதிவர் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பதிவர் சந்திப்பும் வெற்றியே!! சியர்ஸ்!! (மகிழ்ச்சி என்று(ம்) ஆங்கிலத்தில் அர்த்தமுண்டு). //

நிச்சயம் இது மகத்தான வெற்றியே

சியர்ஸ்ஸ்ஸ் :-))))

NKS.ஹாஜா மைதீன் said...

இவர்கள் போன்ற பதிவர்கள் வருவது நிச்சயம் விழாவுக்கு சிறப்புதான்..கலக்குங்க...

Jayadev Das said...

என் குழந்தைகளுக்கு கதைகள் வேண்டும், நிச்சயம் திருமதி.ருக்மணி அவர்கள் தளத்தை பார்க்கிறேன், பாட்டி இல்லாத குறையை இவர்கள் தளம் தீர்க்கும் என்ற நம்பிக்கையோடு!!


ஹிக்ஸ் போஸான்: கடவுளுக்கும் கடவுள் துகளுக்கும் என்ன சம்பந்தம்?
http://jayadevdas.blogspot.in/2012/08/blog-post_1900.html

”தளிர் சுரேஷ்” said...

அறிமுகத்திற்கு நன்றி! தலைப்பு பதறவைத்தது?!

இன்று என் தளத்தில்
அஷ்டமி நாயகன் பைரவர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_24.html

mohamed salim said...

நிறைய போட்டோக்களை எடுத்து உங்களின் வழக்கமான கமெண்ட்ஸ் உடன் எதிர்பார்க்கிறேன். மூத்த பதிவேர்களை கவுரவிப்பது பதிவர் சுந்திப்புகே மணிமகுடம்

உணவு உலகம் said...

சியர்ஸ் சிவா.

saidaiazeez.blogspot.in said...

ஏதோ உள்குத்து போல என்று பதறி வந்தால்... எல்லாமே புஸ்ஸ்ஸ்-னு போயிடுச்சி.
ஆனாலும் ருக்மணி சேஷசாயி அம்மா போன்றோரை இந்த மாதிரி அறிமுகப்படுத்தியதே ஒரு பெரிய சாதனைதான்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்

வெங்கட் நாகராஜ் said...

அட நம்மளை கூட சொல்லி இருக்கீங்களே உங்க பக்கத்திலே....

இத்தனை நாள் உங்க பக்கத்துக்கு வரவேயில்லையேன்னு இருக்கு...

இனிமே வந்துடுவோம்! சரிதானே.

நீங்களும் நம்ம பக்கம் வாங்க சிவகுமார்.

Related Posts Plugin for WordPress, Blogger...