இப்பதிவை படிப்பதற்கு முன்பு தயவு செய்து இக்காணொளியை பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.பெருஞ்சூரியனின் டெஷோ உள்ளிட்ட பல வித்தைகளுக்கு இதை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஏதுமில்லை என்பது திண்ணம்.
காணொளி: தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ
ஆறாவது நிமிடத்தில் வரும் காட்சி சாலப்பொருத்தம். மேஜிக் ஷோவிற்கு
வந்த கூட்டத்தை பார்த்து கண் கலங்கியவாறு வடிவேலு “இந்த கிரேட் கிரிகாலன் மேஜிக்கை
பாக்க எவ்ளோ கூட்டம் பாத்தியா. ஏன் மாப்ள கூட்டமே இவ்ளோ இருந்தா கலக்சன் ஹெவியா
இருக்கும்ல.”
மாதவன்: “கலக்சன் கறஞ்சிருச்சி மாமே”
வடிவேலு: “என்னடா சொல்ற?”
மாதவன்: “ஆட்டோ அடமானம் வச்ச காசுல தலைக்கு பத்து ரூவாய்ன்னு ஆளுங்கள
கூட்டிட்டு வந்துருக்கேன். ஷோ நல்லா இருந்தா அவங்க பத்து ரூவா மேல போட்டு
குடுப்பாங்க”
வடிவேலு: “நம்ம ஷோதான் நல்லா இருக்காதேடா. டே மாப்ள. குட்ட லெவலுக்கு
எறங்குனாலே குமுற குமுற அடிப்பானுங்க. இப்ப கடல் லெவல்ல காலை விட்டுருக்கேன். கதற
கதற அடிப்பானுங்களேடா”
ஆடியன்ஸ்: “யோவ். ஆரம்பிய்யா சீக்கிரம்”.
வடிவேலு(ஆவேசமாக): “ஆரம்பிக்க தெரியாமதானடா அலை மோதிட்டு இருக்கேன்.”
ஷோ ப்ளாப் ஆனதும் அழுதவாறு வடிவேலு: "கிரிகாலா..ஒடம்ப இரும்பு ஆக்கிக்கடா. அடை மழை ஆரம்பிச்சி வெளுத்து வாங்கப்போவுது"
‘என்னய்யா இது...எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ கதை மாதிரி
ஈழப்பிரச்சனைக்கு எங்க த்ரீ டாமில் அறிஞர் தான் காரணம்னு சொல்லிட்டே இருக்கீங்க.
கட்டிலுக்கு கீழ ஒருத்தர் இருக்கார். அவர் கிட்ட பாதி பொறுப்பை ஒப்படைங்கடா’ என
இப்போது ஆட்காட்டி விரலை பிரபாகரன் பக்கம் திருப்பி விட்டுள்ளனர் இணைய உ.பி.க்கள்.
வைகோ ஒரு காமடி பீஸ். சீமான் ஒரு சிரிப்பு போலீஸ் என்று வியாக்கியானம்
சொல்வதெல்லாம் இருக்கட்டும். முதலில் இலங்கை தமிழர்கள் உங்கள் தானைத்தலைவனின் ஷோ
குறித்தது என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டுப்பார்த்தீர்களா? “ராஜபக்சேவை
நம்பினாலும் நம்புவோம். லைவ் வள்ளுவரை நம்பவே மாட்டோம்” என்று கூறியுள்ளனர்.
ஆதாரம் ஆனந்த விகடன்(உங்கள் மனசாட்சியையும் சேர்த்து கொள்ளவும். ‘ல’ இல்லை ‘ள’). எவ்வளவு பெரிய துரோகத்தை செய்துவிட்டோம் என்கிற கூச்சம் கொஞ்சம்
கூட இல்லாமல் உங்கள் தலதான் ரக ரகமாக மேஜிக் ஷோ நடத்தி கொண்டு இருந்தால்,
இணையத்தில் அவரையே டேக் ஓவர் செய்யும் அளவிற்கு யோசிக்கிறீர்களே?
உங்களுக்கு கைக்கு வாக்கா
ஏதாச்சும் தந்தே தீரணுமே. இந்த துணை பிரதமர், துணை முதல்வர் மாதிரி துணை இளைஞர்
அணி தலைவர் பதவி தந்தா கொஞ்ச நாளைக்கி உங்க இம்சைல இருந்து நாங்கெல்லாம் தப்பிக்கலாம் போல.
................................................................................
13 comments:
சாப்பாடு சூப்பர், அடிக்கடி வ்ந்து போகனும் போல இருக்கு
Siva..
Aarambichittiya....
Fridge anda vaayan....!!!
Yow ..net-la
nee yaarunne theriyaathu...
Summa koovikkittu.....
Poya...poi....
Mothira kaiyaala
kuttu
vaangu.....!!!!!
:)
:)
:)
வெல்கம் அந்தோணி.
@ Naai-Naks
மோதிரக்கையால குட்டு வாங்க எனக்கு தகுதி இல்ல தலைவா!!
என்ன சார் பதிவுக்கு பதிவு ஒரே ஷோ வா இருக்கு
ஃபேஸ்கட்ட பாத்தாவே தெரியவேணாமா...... இவங்கல்லாம் என்ன பண்ணுவாய்ங்கன்னு....?
சிவா,
எப்படி பாஸ் உங்களால மட்டும் இப்படில்லாம் முடியுது, மஹா தைரியசாலி தான்!
இணைய முரசொலிகள் சில நாளா சத்தமே காட்டவில்லை, சரியா பேட்டா(செருப்பை சொல்லவில்லை) கிடைக்கவில்லையா :-))
//துணை இளைஞர் அணி தலைவர் பதவி தந்தா கொஞ்ச நாளைக்கி உங்க இம்சைல இருந்து நாங்கெல்லாம் தப்பிக்கலாம் போல.//
நீங்க வேற ரொம்ப பெரிசா சொல்லிக்கிட்டு ,"வட்ட செயலாளர் வண்டு முருகன்" போன்ற பதவிக்கொடுத்தாலே சாவுற வரைக்கும் சந்தோஷமா கூவுவாய்ங்க :-))
ஹா ஹா ஹா செம சேட்டைய்யா. தலீவரு இப்போ ட்விட்டர்க்கு வந்து இருக்காராம். உளுத்தும் பருப்பு எல்லாம் குதிக்கிறாங்க.
செம பாஸ்... கலைஞர் போன் வயரு பிஞ்சு ரொம்ப வருஷம் ஆகுது....இன்னும் பேசிக்கிட்டு இருக்காரு...
நல்ல நக்கல்!சிறப்பு!
இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
// ‘ல’ இல்லை ‘ள// ஹா ஹா ஹா
நல்ல நக்கல் ..
எவ்வளவோ பார்திடோம், இந்த மேஜிக் ஷோவையும் பார்த்திட்டு போறோம். ஷோ நல்ல காமெடியா இருந்திச்சு பாஸ்.
Post a Comment