CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, August 4, 2012

பதிவர்கள்: நிலவரமும் கலவரமும்கேபிள் சங்கர்: ஆள் பாக்க நேத்துதான் உப்பு சத்யாகிரகத்துக்கு போயிட்டு ரிட்டன் ஆனது மாதிரி தோற்றமளிப்பார். ஆனால் அடல்ட் கார்னர் எழுதுவதில் சென்டர் ஸ்டார். ச’கலகலா’ வல்லவர். தம்மாத்தூண்டு பதிவரிடம் கூட சகஜமாக பழகுவது பெரிய ப்ளஸ். தான் உண்டு. தன் பதிவுண்டு என்று செவனேன்னு கிடந்தவர் சமீபத்தில் பேட்மேன்(வவ்வால்) மீது காண்டாகி ருத்ரதாண்டவம் ஆடியது ஹாட் நியூஸ்.     

                                                                                
கே.ஆர்.பி.செந்தில்: கொட்டாங்குச்சியில் ‘ஏதோ’ ஒரு திரவத்தை இவர் அருந்தும் புதிய ப்ரொபைல் போட்டோ, காத்ரீனா கைப் பிகினியில் தோன்றிய ஸ்டில்லை விட அதிக ஹிட்ஸ் அடித்தது என கூகுள் அடித்து கூறுகிறது. எந்த பக்கம் உரசினாலும் பற்றிக்கொள்ளும் உக்கிரமான ஜ்வாலை இவர். அண்ணாத்தையை கொஞ்சம் கேர்புல்லாத்தான் டீல் பண்ணனும். என்னதான் தாஜா செய்து நட்பை வளர்த்து கொண்டாலும் ‘ஏண்டா தொன்னை. கண்டன்ட்டே இல்லாம என்ன கருமத்துக்கு பதிவு எழுதுற. நீயெல்லாம் டைடல் பார்க்ல புல்லு புடுங்கறதோட நிறுத்திக்க’ என்று பொசுக்கென்று மனதில் பட்டதை பேசுவது பெரிய ப்ளஸ். ‘என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்றீங்களே’ சத்யராஜ் போல இவரை சில நாட்கள்/மாதங்களில் கூட புரிந்து கொள்வது கடினம். உதயசூரியனை கண்டாலே உறுமியவாறு உருமி  அடிக்கும் உள்ளம் கொண்டவர் என்பதால் சற்று லேட்டாக துயிலெழும் தேவர் மகன்.

மேற்கண்ட இருவரும்(கேபிள், கே.ஆர்.பி)  பைக் டயர் தேய தேய சென்னை நகரில் நள்ளிரவில் வலம் வருவது ஜகமம்!!

                               
அஞ்சாசிங்கம்: மாநிற அமெரிக்க மாப்பிள்ளை போல இருப்பார். குடி என்றால் என்னவென்றே தெரியாத பச்ச ஓலை. பஜ்ஜி சாப்பிடலாமா என்று சொன்னவுடன் உடனே பக்கி போல சட்டென தலையாட்டி ஏழெட்டு குருடாயில் பஜ்ஜிகளை  உள்ளே தள்ளும் சராசரி ஆளில்லை. அந்த பஜ்ஜி முதலில் எந்த நாட்டில் உருவானது, பஜ்ஜிக்காக கி.மு. 142  ஆம் ஆண்டு போரிட்ட அரசர்களின் கொழுந்தியா மகன்களின் இரண்டாவது பேரன் பெயர் போன்ற தகவல்களை சொல்லிவிட்டுதான் பஜ்ஜியில் இருக்கும் எண்ணையை தினத்தந்தியில் ஒற்றி எடுப்பார். வரலாறு, அறிவியில் இரண்டிலும் நற்புலமை வாய்ந்த இவருடன் பழகினால் பல்வேறு தகவல்கள் கிடைப்பது பெரிய ப்ளஸ். அரிய தகவல்களை எல்லாம் பதிவில் எழுத சொல்லி சிலமுறை வற்புறுத்தி உள்ளேன். சொந்த பிரச்னைகள் சீரானதும் களம் புகுவதாக கூறியுள்ளது இந்த சிங்கம்.

                                
பிலாசபி பிரபாகரன்: பிஞ்சில் பழுத்த பயபுள்ள(அறிவாளின்னு சொல்ல வந்தேன்). எப்பேர்பட்ட பதிவராக இருந்தாலும் அஞ்சாமல் உரண்டைக்கு இழுத்து கேள்வி கேட்பது பெரிய ப்ளஸ். எப்போதும் சுப்ரமணியபுரம் காஸ்ட்யூமில் திரிவார். பதிவில் பலரக சேட்டை செய்தாலும், நேரில் இரண்டு வார்த்தைக்கு மேல் பேசாமல் இருக்கும் இந்த படுவா. அப்படியே பேச யாரேனும் வற்புறுத்தினால் வற்புறுத்தும் நபரின் பதிவுலக ரகசியத்தை சபையில் போட்டு உடைக்கவும் தயங்க மாட்டார். தனக்கு பிறக்க போகும் மகன் தலைகீழாக ஏரோப்ளேன் ஓட்டுவான் என்று ஜோசியர் சொன்னதைக்கேட்டு தம்பி மனம் விண்ணில் பறந்துகொண்டிருக்கிறது. குழந்தை பொம்மை, நிப்பிள் போன்ற பொருட்களை வாங்கி வருவது இவருடைய லேட்டஸ்ட் ஹாப்பி.

மேற்கண்ட இருவரும்(அஞ்சாசிங்கம், பிலாசபி) பைக் டயர் தேய தேய சென்னை நகரில் நள்ளிரவில் வலம் வருவது ஜகமம்!!

                                                               
சிராஜுதீன்:மேலுள்ள படத்தில் இடமிருந்து இரண்டாவதாக அஞ்சாசிங்கத்தை அடிக்க எத்தனிப்பவர்தான் இவர். டீக்கடை என்ற பெயரில் ப்ளாக்கை தொடங்கி இந்தாளு செய்யும் சேட்டைக்கு வானமே எல்லை. எப்போதாவது ஒரு பதிவு எழுதுவது. அதையும் டீக்கடை தீக்கடையாக்கும் அளவிற்கு ரகளை செய்வது இவரது தனிச்சிறப்பு. கையில் சைக்கிள் செயின், உடைந்த பன்னீர் சோடா பாட்டிலுடன் திடீரென பின்னூட்டம் போட ஆரம்பித்தால் குறைந்தது இருபது சட்டையையாவது ((இவருடையதையும் சேர்த்துதான்) கிழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார். இப்போதைக்கு எரிமலை குறட்டை விட்டு தூங்குகிறது. எப்போது வேண்டுமானாலும் கொந்தளிக்கும். அஞ்சாசிங்கமும், இவரும் எப்போது நேரில் சந்தித்தாலும் ரத்தம் கக்க கக்க கருத்து சண்டை போட்டதை லைவாக காணும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்ததுண்டு. இன்னும் கைகலப்பு நடக்காதது வருத்தமே!!

                                                                         
ஆரூர்.முனா.செந்தில்: சைவ சித்தாந்த மடாதிபதி போல போஸ் குடுக்கும் இவர் பழகுவதற்கு இனியவர். தான் செய்த தவறை சபையில் ஒப்புக்கொள்வது பெரிய ப்ளஸ். புல்லுருவிகள் இவரிடம் சிக்கினால் அப்படியே பிசைந்து மத்யான சாப்பாட்டிற்கு ரசமாக பிழிந்து சாப்பிட்டு விடுவார். ரயில்வே துறை சார்பான அனுபவ தகவல்களை அள்ளித்தருபவர். அத்துறை குறித்த தொடரை எழுத சொல்லி உள்ளேன். விரைவில் அந்த நாள் வருமென நம்புகிறேன். முக்கிய குறிப்பு: நாய் நக்ஸ் நக்கீரனின் உடன்பிறவா தம்பி. அவரிடம் நாளுக்கு நாற்பது முறை போனில் பேசாமல் தூங்க மாட்டார்.

                                                                          
வவ்வால்: ஜனரஞ்சக பதிவுகளில் சில மாதங்களாக தொய்வை சந்தித்த பின்னூட்டங்கள் இந்த தமிழக பேட்மேன் மூலம் மீண்டும் களைகட்ட தொடங்கிவிட்டது. ஒரு வரி பதிவு போட்டால் அதன் கீழ் பதிவு நீளத்திற்கு கமன்ட் போடுவதில் சித்தர்/ஜித்தர். ‘Every anonymous has a past. But vavval has a history’ எனும் இவருடைய பஞ்ச் செம ஹிட். சில சமயம் மட்டும் செல்ப் கோல் அடித்து கொள்கிறாரோ என்றொரு எண்ணம் பரவலாக உண்டு. எனினும் எப்போதும் பொறுமை இழக்காமல் இருப்பது இவருடைய பெரிய ப்ளஸ். ‘நவீன கழிப்பிடம் முதல் நாசா விட்ட ராக்கெட் டயர் கோளாறு வரை எல்லா சப்ஜக்டையும் விவாதிக்க நீங்க என்ன பெரிய இவரா?’ என்று பிரபல பதிவர்கள் மடக்கினாலும் அசராமல் ஆடி வருகிறார். ‘யாருய்யா இந்த வவ்வால்?’ என்று நேரில் பார்க்க ஆசைப்படும் நபர்களில் நானும் ஒருவன். அப்போது கேபிளும் அருகில் இருந்தால் நமக்கு இரட்டை தீபாவளிதான்!!

பதிவர்கள்: நிலவரமும், கலவரமும்....தொடர்ந்தாலும் தொடரும்!!          
................................................................................

................................
My other site:
...............................

                                                          

39 comments:

Thozhirkalam Channel said...

தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

vinhvishali said...

ஓ இப்ப இப்பிடி ஆரம்பிச்சிட்டியாய்யா....பிரபலம்னாலே இதெல்லாம் ஜகஜம் தானே மிஸ்டர் மெட்ராஸ் சிவா சார்...

! சிவகுமார் ! said...

//
Cpede News said...
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி//

இருக்குற திரட்டிங்கள்ல இணைச்சாலே மாசத்துக்கு நாலு ஓட்டுதான் விழுது. நீங்க வேற ஏன் பாஸு?

! சிவகுமார் ! said...

// vinhvishali said...
ஓ இப்ப இப்பிடி ஆரம்பிச்சிட்டியாய்யா....பிரபலம்னாலே இதெல்லாம் ஜகஜம் தானே மிஸ்டர் மெட்ராஸ் சிவா சார்...//

இப்ப இப்பிடியா? நாங்க எப்பவுமே இப்படித்தான் தல/தலைவி!!

CS. Mohan Kumar said...

KRP உங்களை திட்டுவதாக சொல்வதை நம்ப முடியவில்லை. உங்கள் பதிவுகளை எப்போதும் பிறரிடம் பெருமையாக Facebook மற்றும் பஸ்ஸில் பகிர்வது அவர் தான்

CS. Mohan Kumar said...

I want a film review (Short - one or 2 para) pl send in this week end without fail.

! சிவகுமார் ! said...

சென்ற பதிவிற்கு வவ்வாலும், அஞ்சாசிங்கமும் போட்ட பின்னூட்டங்களை பாராட்டி ‘பென்’ சிங்கம் கலைஞர் வசனம் எழுதிய பெண்சிங்கம் பேனா பரிசாக அளிக்கப்படுகிறது!! பாதியில் ஓடிய பன்னிக்குட்டியை பொதுப்பணித்துறை வலைவீசி தேடி வருகிறது.

! சிவகுமார் ! said...

// மோகன் குமார் said...
KRP உங்களை திட்டுவதாக சொல்வதை நம்ப முடியவில்லை. உங்கள் பதிவுகளை எப்போதும் பிறரிடம் பெருமையாக Facebook மற்றும் பஸ்ஸில் பகிர்வது அவர் தான்//

திருவல்லிக்கேணி மேன்சன் பதிவு எழுதிய மறுநாள் கே.ஆர்.பி.அண்ணன் என்னை ரகசிய அறையில் வைத்து ஊமைக்குத்து குத்தியதை மறக்க மாட்டேன் சார்.

! சிவகுமார் ! said...

//மோகன் குமார் said...
I want a film review (Short - one or 2 para) pl send in this week end without fail.//

கண்டிப்பாக சார்.

Unknown said...

வவ்வாலும் சிவாவும் ஒரே ஆள்தான்...!
அடிக்கடி கேபிளிடம் ஒரண்டை கொடுக்கச் சொல்லி உமக்கு பல்லி மிட்டாய் வாங்கி தந்து பிராபாகரன் சதி செய்வதாக ஒரு தகவல் பதிவுலகில் வீசுகிறது..!அது உண்மையா...?

Unknown said...

வவ்வால் உம்ம போன் நம்பரை நிறைய பேரு தேடிக்கிட்டு இருக்காங்க.....இருந்தா கொடும்மய்யா...பழகுவோம்!

உலக சினிமா ரசிகன் said...

பதிவர்கள்...பற்றிய பதிவு என்னை போன்ற ‘வெள்ளந்திகளுக்கு’தகவலையும்...
எச்சரிக்கையையும் தந்தது.நன்றி.

பதிவர் மீட்டிங்ல...ஒரு அனிமலுக்கு ‘ஆசிட்’ அடிக்கணும்.
வரலாமா?

! சிவகுமார் ! said...

///வீடு சுரேஸ்குமார் said...
வவ்வாலும் சிவாவும் ஒரே ஆள்தான்...!//

சாம்பராணிய நல்லா போட்டு ஊதுங்க மொதலாளி. பஞ்சுக்கடை பத்திக்கிட்டு எறியட்டும்.

எனக்கென்னவோ அஞ்சாசிங்கம் தான் வவ்வால்னு தோணுது!!

! சிவகுமார் ! said...

///வீடு சுரேஸ்குமார் said...
வவ்வாலும் சிவாவும் ஒரே ஆள்தான்...!//

சாம்பராணிய நல்லா போட்டு ஊதுங்க மொதலாளி. பஞ்சுக்கடை பத்திக்கிட்டு எறியட்டும்.

எனக்கென்னவோ அஞ்சாசிங்கம் தான் வவ்வால்னு தோணுது!!

! சிவகுமார் ! said...

// உலக சினிமா ரசிகன் said...
பதிவர் மீட்டிங்ல...ஒரு அனிமலுக்கு ‘ஆசிட்’ அடிக்கணும்.
வரலாமா?//

ஏகப்பட்ட அனிமல்ஸ் திரியுது. அஞ்சாசிங்கம், நாய்-நக்ஸ்...யாரை சொல்றீங்க?

Unknown said...

எங்க தல கொட்டங்குச்சியில குடிச்சாலும் அது ஸ்காட்ச்சாகத்தான் இருக்கும். போன பதிவுல நடந்த கவியரங்த்தை பார்த்துட்டு ரெண்டு நாள் கெரங்கிப் போய் திரிஞ்சேன். இப்பத்தான் சிவா தெளிஞ்சது. யப்ப யப்ப யப்பா என்னா ஞானம், என்னா ஞானம். இருவரையும் வச்சி வர பதிவர் சந்திப்புல கவியரங்கம் நடத்த சொல்லுங்க சிவா.

! சிவகுமார் ! said...

@ ஆரூர்.முனா.செந்தில்

சத்த நேரம் வெளில போயிட்டு வர்றதுக்குள்ள தருமி ரேஞ்சுக்கு ரெண்டு பேரும் பண்ண கூத்து மறக்க முடியுமா?

Unknown said...

ஏங்க போன் மேட்டரை வேறு ஞாபகப்படுத்துறீங்க. நக்கீரன் போன கீன போட்டுறப் போறார். அத நெனச்சே நான் கிலியில திரியிறேன்.

Unknown said...

அதுல யாரு தருமி, யாரு நக்கீரன். அப்படினா நம்ம பன்னிக்குட்டி ராமசாமிக்கு என்ன பெயரு.

rajamelaiyur said...

இவர்களில் கேபிள் சங்கரிடம் மட்டுமே பேசி உள்ளேன் ...மற்றவர்களிடமும் பேச வேண்டும்

rajamelaiyur said...

ஐயோ .. அரூர் அண்ணனை விட்டுவிட்டேன் ..

! சிவகுமார் ! said...

//ஆரூர் மூனா செந்தில் said...
அதுல யாரு தருமி, யாரு நக்கீரன். அப்படினா நம்ம பன்னிக்குட்டி ராமசாமிக்கு என்ன பெயரு./

ஆயிரம் பொற்காசுகள் என்று முரசு கொட்டுவாறே அவர்தான் பன்னிக்குட்டி.

! சிவகுமார் ! said...

//என் ராஜபாட்டை"- ராஜா said...
இவர்களில் கேபிள் சங்கரிடம் மட்டுமே பேசி உள்ளேன் ...மற்றவர்களிடமும் பேச வேண்டும்//

நாளை மாலை தயாராக இருங்கள் ராஜா. அனைவரிடமும் பேச!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

”தளிர் சுரேஷ்” said...

பதிவர்களை பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

Unknown said...

சிவா

பகிர்வுக்கு நன்றி

த.ம 0

இண்ட்லி ஞே!!!

வவ்வால் said...

சிவகுமார்,

பாஸ் ஏன் பாஸ் இந்த கொலவெறி, நான் நல்லா இருக்கிறது புடிக்கலையா, ஏதோ நான் உண்டு என் வலையுண்டு ,கட்டிங் க்,குவார்ட்டர் உண்டுன்னு ,யாருமே வராத டீக்கடையில எனக்கு நானே டீ ஆத்தி தேகமாற குடிச்சிக்கிட்டு இருக்கேன் ,அதுக்கும் ஆப்பு வைக்கப்பார்க்கிறிங்களே.

, அதுக்கு மேல வீடு சுரேஷ் ஒரு குண்ட தூக்கிப்போட்டால் மலையூர் மம்பட்டியான் போல அதை கேட்ச் செய்து வீசுறிங்களே அவ்வ்.:-))

ஹி...ஹி நான் எல்லாம் சரஸ்வதி சபதம் சி.டி ப்பார்த்து தமிழ்கத்துக்கிட்டு கவித பாடினவன்... வாய தொறந்த வாட்டர்ஃபால்ஸ் போல கவித கொட்டும், அஞ்சா ஸிங்கம் தூங்கிட்டு இருந்த அந்த மிருகத்தை தட்டி எழுப்பி விட்டார், எல்லா பழியும் அவருக்கே :-))


//அப்போது கேபிளும் அருகில் இருந்தால் நமக்கு இரட்டை தீபாவளிதான்!!//

உங்க தீபாவளிக்கு நான் தான் பட்டாசா அவ்வ் :-))

தலிவரு வேற பல்க் ஆஹ் இருக்காரு ஒரு கொட்டு வச்சலே மண்டை மாவிளக்காகிடும் போல இருக்கு :-((

உணவு உலகம் said...

//தொடர்ந்தாலும் தொடரும்//
மிரட்டலா! முன்னெச்சரிக்கையா!

வவ்வால் said...

//கே.ஆர்.பி.செந்தில்: கொட்டாங்குச்சியில் ‘ஏதோ’ ஒரு திரவத்தை இவர் அருந்தும் புதிய ப்ரொபைல் போட்டோ, //


ஆரணி,குடியாத்தம் பக்கமாக போனிங்கன்னா பதனீ, அத்திசாறு இப்படி கொட்டாங்க்குச்சில ஊத்தி கொடுப்பாங்க, அத்தி மர வேர கட் செய்துட்டு அதுல வடியிற சாறு குடிச்சா கள்ளுப்போல இருக்கும்,பழக்கம் இல்லாதவங்க குடிச்சா வாந்தி வரும் கே.ஆர்.பி அதான் குடிக்கிறார் என நினைக்கிறேன் :-))

பனவெல்லம் காச்சும் போதும் வெள்ளப்பாகு கூட கொட்டாங்குச்சில குடிக்க கொடுப்பாங்க.


மனிதர் உலகத்தில இருக்க எல்லாப்பானமும் குடிச்சிப்பார்ப்பார் போல இருக்கே.

அஞ்சா சிங்கம் said...

இந்த பதிவுலகில் எக்காலத்திற்கும் பொருந்த கூடிய அமெரிக்க மாப்பிள்ளை லுக்கு உனக்கு தான்யா இருக்கு .............

அஞ்சா சிங்கம் said...

சைவ சித்தாந்த மடாதிபதி...........////////////////////////

அப்படியா மடக்கி போடுங்கையா மடக்கி போடுங்க . பிற்காலத்தில் நமக்கு உபயோகப்படும் .
ஏற்க்கனவே ஆதீனங்களின் தொல்லை தாங்க முடியவில்லை ...

அண்ணே ஆரூர் அண்ணே .. ஏதாவது நடிகை சிக்குனா நமக்கு தகவல் குடுங்க ஒரு போன் கால் போதும் உடனே ஓடி வந்துடுறேன் .................

காப்பிகாரன் said...

பதிவர்களா பத்தி தெரிஞ்சுக்க ஒரு அருமையான பதிவு அதோட அவங்க பதிவுகளுக்கு லிங்க் குடுத்து இருந்த நல்ல இருந்திருக்கும்

Unknown said...

வவ்வால் ஜி! நீங்க ரொம்ப பெரிய ஆளு:)

மோகன் குமார் அண்ணே, தனிப்பட்ட முறையில் என்னிடம் அதிகம் வாங்கிகட்டுகிற ஆளும் சிவாதான்.

அஞ்சா சிங்கம் எனும் "என் சைக்கிளைப் பிடிய்யா" முன்னாடி நானெல்லாம் தூசு.

ஆனா முனா நீ பாவமய்யா (நக்கீரன் ராக்ஸ்)

இந்த பிலாசபி பைய்யந்தான் என்கிட்டே அடி வாங்காம திருந்த மாட்டான் போல:)

Philosophy Prabhakaran said...

என்னுடைய பங்குக்கு வலையுலக மும்மூர்த்திகள் பற்றி சிறுகுறிப்பு :-

கேபிள் சங்கர் (ரஜினிகாந்த்) - இவர்தான் சூப்பர்ஸ்டார்... ஏழு கழுதை வயசானாலும் நானும் யூத்துன்னு சொல்லி ஐஸ்வர்யா ராய்க்கு ஆசைப்படுவார்... நிறைய பேருக்கு உண்மையாவே இவரை பிடிக்கலை'ன்னா கூட "ச்சே... தலைவரை மாதிரி முடியுமா... அவருதான்யா அல்டிமேட்..." என்றெல்லாம் சும்மாக்காட்டி ஃபேஷனுக்காக சொல்லிக்கொள்வார்கள்...!

ஜாக்கி சேகர் (கமல்ஹாசன்) - சர்ச்சைக்குரிய நபர்... இவர் எது செய்தாலும் யாராவது பிரச்னை செய்வதற்காகவே காத்திருப்பார்கள்... ராவான ஆளு... உலக படங்கள் பலவற்றையும் கரைத்துக்குடித்தவர்... இவர் பேசுவது / பதிவிடுவது யாருக்கும் புரியாது... சில சமயங்களில் அவருக்கே கூட...!

கே.ஆர்.பி (சத்யராஜ்) - பெரியார் Follower... செம நக்கல் புடிச்சவர்... பெரிய புரட்சியாளரா இருப்பாரு போல இருக்கே'ன்னு நாமெல்லாம் நினைக்கும் போதே லொள்ளுமா'ன்னு சொல்லிட்டு யூ-டர்ன் அடிப்பவர்...!

ராஜ் said...

எல்லாரையும் பத்தி ரொம்ப காமெடியா சொல்லிடேங்க...உங்களை பத்தி சொல்லவே இல்லையே..??

வவ்வால் said...

கே.ஆர்.பிஜி,

//வவ்வால் ஜி! நீங்க ரொம்ப பெரிய ஆளு:)
//

உண்மையில் நீங்க தான் பெரிய ஆளு ,எனக்கு தெரிஞ்ச நாளைஞ்சு பானத்தை சொன்னால் அதெல்லாம் தப்பு நான் குடிச்சது ஆட்டுப்பாலுன்னாச்சம் எதாவது பானம் பேரு சொல்வீங்கன்னு பிட்ட போட்டால் கடைசி வரைக்கும் அது என்னப்பானம்னு சொல்லவே இல்லையே அவ்வ்.

இப்போ அது என்னப்பானமா இருக்கும்னு ஒரு கேள்வி என் மண்டையில தலைக்கீழா தொங்கிட்டே இருக்கு :-))

---------

சிவகுமார் தான் உண்மையான அஞ்சாநெஞ்சன் சுத்தியும் டெர்ரர் கும்பலா வச்சுக்கிட்டு அசால்ட்டா இருக்கார் :-))

--------

சென்னை சிறுத்தை பிலாசபி பிரபாகரனூ சொல்லாம சொல்லுறாப்போல படம் போட்டு இருக்கீங்க, சிறுத்தை சிங்கிள்லா உட்கார்ந்து இருக்கு :-))

-------

ஆரூர் மூனா முன்னர் ஒயின் ஷாப் ஓனர் போல டெர்ரர் ஆக ஒரு படம் போட்டு இருப்பார் அதை போட்டு இருக்கலாம் :-))

சிராஜ் said...

சிவா,

ஜனரஞ்சகமான எனது வலைத்தளத்தை டெரர் ரேஞ்சுக்கு சித்தரித்த சிவாவிற்கு என் மிதமான கண்டனங்கள்...

KRP ஆள் காலிண்ணு சொன்னீங்க..இப்ப பின்னோட்டம் போட்டு இருக்கார்...சரி விடுங்க பய புள்ள நல்லா இருந்தா சரி தான்...

அப்புறம் அஞ்சும் சிங்கம் பத்தி...நோ கமெண்ட்ஸ்..நாங்கள் இருவரும் வரும் பதிவர் சந்திப்பில் உணவுத்துறை அமைச்சர்களாக செயல்பட இருப்பதால் அடக்கி வாசிக்க ஆசைப்படுகிரேன்....

சிராஜ் said...

அப்புறம் இன்னொரு முக்கிய விஷயம்..

எனது அடுத்த பதிவு

"நாத்திகர்கள் - பயோடேட்டா"

ஆனா எப்ப வரும்னு யாரும் கேட்க கூடாது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜீவன் சுப்பு said...

செம செம .... அட்டகாசம் பிரதர் ....!

Related Posts Plugin for WordPress, Blogger...