CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, August 1, 2012

பரபரப்பான பதிவர் சந்திப்பு


புதிதாக பதிவெழுத தொடங்கிய  சாதா பதிவர் ஒருவருக்கு பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள பல நாள் ஆசை. அதற்கான நேரம் கைகூடியது ஓர் நாள். பிரபல கிரீட பதிவர்கள் சிலரையும் சந்திக்கும் தருணம் வரப்போவதை எண்ணி  மனதில் லேசான பூரிப்பு. லொக்கேஷனை அடைந்தார் சாதா. முதலில் தென்பட்டது உம்மனாமூஞ்சி கிரீடம். ஒளிவட்ட நபர்களிடம்   மட்டுமே பேசுபவர். அது தெரியாமல் சாதா அவரிடம் சென்று "சார்..எப்படி இருக்கீங்க? என்னமா எழுதறீங்க? உங்களுக்கு கைக்கு வாக்கா எதுனா வசமா குடுக்க நெனைக்கறேன்". கிரீடம் அவரை அலட்சியமாக பார்த்து லேசான புன்முறுவல் பூத்து விட்டு வானத்தை பார்க்கிறது. பாவம் சாதா. இடம் பெயர்ந்தது. 

அடுத்து சாதாவின் கண்ணில் பட்டது ஏகப்பட்ட ஹிட்ஸ், கமன்ட், ஓட்டுகள் வாங்கும் கிரீடம்.  ஏற்கனவே அப்செட்டில் அமர்ந்திருந்த சாதாவை பார்த்து "ஹல்லோ..நீங்க ப்ளாக்கரா?" என்று உற்சாகமாக அழைக்க, கிடைத்த பதில் "இல்லைங்க. வெள்ளாடு மேய்க்க வந்துருக்கேன்". திரட்டியில் ஒரு ஓட்டை வாங்க இதெல்லாம் பார்த்தால் ஆகுமா? கிரீடம் அசரவில்லை.

கிரீடம்: நல்லா தமாசா பேசறீங்க பாஸு. உங்க ப்ளாக் பேரு என்ன?

சாதா: நான் சீரியசாத்தான் பேசனேன். என் ப்ளாக் பேரு துள்ளு ராஜா அள்ளு ராணி.

கிரீடம்: ஓ..அது நீங்கதானா? நான் அடிக்கடி அந்த பக்கம் வந்துட்டு போவேன்.

சாதா: வந்துட்டு போவீங்களா??

கிரீடம்: இல்ல. படிக்கவும் செய்வேன். நேத்து கூட ஒரு பதிவு எழுதனீங்களே? 'ஒத்த ராவில் என்.டி.திவாரி ஆவது எப்படி'ன்னு. அசத்தல் சார். 

சாதா: அப்படியா? அதுல உங்களுக்கு பிடிச்ச வரி எது?

கிரீடம்: (போனாப்போதுன்னு 'ஆஹா அருமை. ஓஹோ பெருமை'ன்னு ஒரு கமன்ட் போட்டு, ஓட்டையும் போட்டா அடி மடியிலயே கை வக்கரானே). அதாங்க அந்த இந்த வரி....(அவன் வாயாலேயே சொல்ல வச்சி அதுல இருந்து பில்ட் அப் பண்ணி எஸ்கேப் ஆயிருவோம்).

சாதா: எந்த வரி?

கிரீடம்: எந்த வரின்னு சொல்ல. வரிக்கு வரி சரவண பவன் சோலா பூரி மாதிரி.

சாதா: ஒரு மணி நேரம் தர்றேன். அது எந்த வரின்னு சொல்லல...தோசக்கரண்டிய எடுத்து உள்நாக்குல சூடு வச்சிடுவேன். என் கதைக்கு கொஞ்ச நேரம் கழிச்சி வருவோம். "ஏன்யா யோவ். 'நான் காலையில் எழுந்து காலால் நடந்தேன். முதலில் வலது காலை முன்னே வைத்தேன். அடுத்து இடது காலை. நேராக சென்று வலது பக்கம் திரும்பி ஜன்னல் ஓரத்தில் இருந்த புராதன பிரஷ்ஷில் பேஸ்ட்டை பிதுக்கினேன். பிறகு வலது கையால் அதை தூக்கி வாய்க்குள் நுழைத்தேன். முதலில் வலமிருந்து இடம். பிறகு இடமிருந்து வலம். பிறகு மேலிருந்து கீழ். கீழிருந்து மேல். தண்ணீரை வாயில் ஊற்றி நீர் யானை கொட்டாவி விட்டது போல சவுண்ட் விட்டு கொப்பளித்தேன்' என்னய்யா பதிவு இதெல்லாம். தினத்தந்தில கன்னித்தீவு எழுதறவனையே நாக் அவுட் பண்ணிடுவீர் போல. 

கிரீடம்: ஒருவரி கதை. ஒரு பக்க சுவாரஸ்யம். திரைக்கதை யுத்தி. ஹி..ஹி.

சாதா: போதும். கொஞ்சம் இரும். முக்கியமான ஆடு சிக்கி இருக்கு. ஹலோ..தல இங்க வாங்க?

இடியாப்பம்: இதோ வந்துட்டேன். வந்துட்டேன். (ஏக துள்ளலுடன்).

சாதா: 'பதினெட்டு முறை பத்தாவது பாஸ் செய்ய முடியாததால் தற்கொலை செய்ய நினைக்கிறேன். அதற்கு முன் சோக இசை மழையை பொழிந்து உங்கள் இதயத்தை நனைக்கிறேன்' அப்படின்னு ஒரு கவிதை(?) எழுதனனே..அங்கன வந்து 'வாழ்த்துகள். அருமையான பகிர்வு. தொடர்க.' கமன்ட் போட்ட கம்னாட்டி நீதான?

இடி: ஆமா. நாந்தான். அதுக்கு என்ன இப்ப? புயல் சேத பகுதிகள்ல ஹெலிகாப்டர்ல போயி நூத்து கணக்குல சோத்து பொட்டலம் போடற மாதிரிதான் சார் இது. யாருக்கு கமன்ட் போடறோம்னு குறிப்பறிஞ்சி போட முடியாது. போற வழில லைனா போட்டுட்டே போறதுதான்.......

சாதா: உங்க தெருல இதுக்கு முன்ன கொல விழுந்துருக்கா?

இடியாப்பம்: இல்லையே? ஏன்?

சாதா: விழும். கண்டிப்பா விழும்.

இடி: அட போய்யா. இந்த மடம் இல்லனா சந்த மடம். ஓட்டு போட ஆளா இல்ல. (இன்னொரு இடியாப்பத்தை பார்க்கிறார்) ஹாய் நண்பா...அந்த ஏழாவது ஓட்டை போட சொல்லி தந்தி அடிச்சனே...பதிலே இல்ல?

சாதா: அட போங்க பாஸு. ஜனவரி மாசம் நான் போட்ட 312 பதிவுல 111 வது பதிவுக்கு நீங்க ஓட்டே போடல. அஸ்கு புஸ்கு..இப்ப நா மட்டும் போடணுமா?

இடி: விடுய்யா. அதுக்கு சேத்து ஒரு கள்ள ஓட்டு போட்டுடறேன்.

சாதா: அப்படின்னா சரி. ஆமாம் தல. உங்க பதிவை நானும், என் பதிவை நீங்களும் ஒரு தரமாச்சும் எப்பதான் படிக்கறது?

இடி: நாம ஏன் படிக்கணும் அந்த கெரகத்த. அது படிக்கறவன் பாடு. 
.................................................................................   

              
 

63 comments:

தமிழ்மகன் said...

வர இருக்கும் ஸ்மார்ட் போன்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2012/07/latest-smartphones-2012-review.html

பட்டிகாட்டான் Jey said...

உள்குத்துனு தெரியுது...ஊமகாயம் யாருக்கு ஆச்சுனுதான் தெரியல...

சரி இப்ப இந்த பதிவுக்கு ஓட்டு போடனுமா தல...

! சிவகுமார் ! said...

வேணாம் ஜெய். :)

Unknown said...

யோவ் பாத்தியா நீ பண்ண அலும்புக்கு உனக்கும் முத கமண்ட...ஹிஹி!

sathishsangkavi.blogspot.com said...

பதிவர் சந்திப்பு பரபரப்பா இருக்கோ இல்லியோ சிவா உள்குத்து பரபரப்பா இருக்கு...

Unknown said...

அருமையான பகிர்வு!

Unknown said...

அற்புதமான வடை ச்சே..! உரைநடை!

Unknown said...

அந்த ஒரு பக்க கதை பிரமாதம்...!

டப்டப்டப்டப்டப்டப்டப்(கைதட்டல் பாஸ்)

Unknown said...

த.ம.1

நாய் நக்ஸ் said...

Mic.....
Appuram...?????

MARI The Great said...

ஹி ஹி ஹி!

Unknown said...

சந்து
சந்தாகப்போய்
மூட்டிக்கொண்டேன்
முட்டுச்சந்து
எனத்தெரியாமல்..

கவித...கவித

இது புடிக்கலேன்னா...

ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்துச்சாம்
ரெண்டு கொடம் தண்ணி ஊத்தி

-ஸ்ஸ்ஸ்ஸ்பா குஷ்பூவாலயே முடியல..

Unknown said...

அப்பாலிக்கா அந்த மூ(அதன்யா மூட்டுச் சந்து ஸ்பெல்லிங் மிஸ்டேன் இல்லையா வெண்ணெ)

நானேனே தமிழ்ல கண்டு புடிச்ச புதிய எலக்கியம்..

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said... சந்து
சந்தாகப்போய்
மூட்டிக்கொண்டேன்
முட்டுச்சந்து
எனத்தெரியாமல்..

கவித...கவித.......................////////////////////

ஏய் மனிதா .
முட்டு குடுத்து
முட்டுச்சந்தை
தூக்கிட முடியுமா...?

கட்டுசோத்தை
கட்டிவைத்து
கற்பழிக்க முடியுமா .........?

கவித கவித .........

நாங்களும் தயாராகிக்கிட்டுதான் இருக்கோம்................. பி கேர்புல்

Unknown said...

அஞ்சா சிங்கம் ஒருதரம்
அஞ்சா சிங்கம் ரெண்டுதரம்
அஞ்சா சிங்கம் மூனுதரம்..

இதான்யா கவித...

சென்னை பித்தன் said...

எல்லோரும் கேட்பது போல் ‘’’’ஏன் இந்தக் கொலவெறி,சிவா?”ஆனாலும் நடப்பைத்தானே எழுதியிருக்கிறீர்கள்!!

CS. Mohan Kumar said...

LOL

வவ்வால் said...

அஞ்சா சிங்கம்,கே.ஆர்.பிஜி, உங்களுக்குள்ள முழிச்சிக்கிட்டு இருக்க அந்த கவிதாமிருகம் ...எனக்குல்ல கவுந்தடிச்சு தூங்கிட்டிருக்கு...வீணா எழுப்பிவிட்டீங்க...அப்புறம் நீங்க எல்லாம் கிங்காங் படத்தில வர்ர ஃபேமஸ் டயலாக் "ஓடுங்க...எல்லாம் ஓடுங்க ..அந்த கொடுர்ர மிருகம்...நம்மளை நோக்கி வருது ..ஓடுங்க"னு சொல்லிக்கிட்டு ஓட வேண்டியிருக்கும் :-))

பீ கேர்புல் ..நான் என்னை சொல்லிக்கிட்டேன்!

அஞ்சா சிங்கம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...
அஞ்சா சிங்கம் ஒருதரம்
அஞ்சா சிங்கம் ரெண்டுதரம்
அஞ்சா சிங்கம் மூனுதரம்..

இதான்யா கவித...//////////////////////

காக்கைக்கு
தன் குஞ்சு
பொன் குஞ்சு ..............

காக்கைக்கு
மட்டுமா
எனக்கும்தான் .................

இது சத்தியமா கவித தானுங்கோ ..........

அஞ்சா சிங்கம் said...

மோகன் குமார் said...

LOL

///////////////////////////////////

இந்த கவிதைக்கு அர்த்தம் புரியவில்லை கொஞ்சம் விளக்க முடியுமா .........?

தக்காளி திருக்குறளை விட சின்னதா இருக்கு .........

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சுபோங்க......நான் கிளம்புறேன், காதுல ரத்தமா கொட்டுது...

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...அஞ்சா சிங்கம்,கே.ஆர்.பிஜி, உங்களுக்குள்ள முழிச்சிக்கிட்டு இருக்க அந்த கவிதாமிருகம் ......
//////////////////////////

அண்ணே அது காண்டாமிருகமா இருந்தாலும் பரவாயில்லை . அவுத்து விடுங்க ஒரு கை பார்த்துடலாம் ....
செத்தாண்ட சிவக்குமாறு............

அஞ்சா சிங்கம் said...

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சுபோங்க......நான் கிளம்புறேன், காதுல ரத்தமா கொட்டுது.................///////////////

ஏன்னே அருவாளை சரியா சொருகலையா.........?

வவ்வால் said...

அஞ்சா சிங்கம்,

இன்னிக்கு வெஜ் பிரியாணியா போச்சேன்னு இருந்தேன் ,தோ வாரேன்...

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

அஞ்சா சிங்கம்,

இன்னிக்கு வெஜ் பிரியாணியா போச்சேன்னு இருந்தேன் ,தோ வாரேன்...

////////////////////////

வாங்க வாங்க .........ஒரு பய இங்க சோடா விக்க கூடாது ......

வவ்வால் said...

//வாங்க வாங்க .........ஒரு பய இங்க சோடா விக்க கூடாது ......//

அஞ்சா ஸிங்கம்,

வாராவதி இறக்கம் ...
வவ்வால் வந்தா திறக்கும்
வவ்வால் பேர சொன்னாலே

சோடாப்பாட்டில் பறக்கும்.

வெத்தல போட்ட
ஷோக்குல
வவ்வால் வந்தார்
கேப்புல்ல ...

ஹி...ஹி
இன்ட்ரோ சாங்க் ...

அடுத்து தான் ஓப்பனிங்!

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம் ,

சிவப்பு கொடிப்பறக்கட்டும் ,போர் முரசு ஒலிக்கட்டும், வால் கண்டேன் வவ்வாலே கண்டேன் ,
என எட்டு திக்கும் அஷ்ட திக்கஜங்களும் அலற ஆட்டம் ஆரம்பம்...

ஏ மானிடா
மெராஸ் பவனில்

மெதுவடை கேட்கலாம்,

ஆனால்
மெதுவாக கேட்டால்
மெதுவடை,
வேகமாக கேட்டால்
வெங்காய வடையா
கிடைக்கும்?
சற்றே சிந்திப்பாய் ...
ஏ மானிடா...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.gilma.in

உலக சினிமா ரசிகன் said...

ஒரு பால்ல செஞ்சுரி அடிச்சிருக்கியே...சிவா.

உன் கால்ல என் பேனாவை வச்சுட்டேன்.

உன் பாணில பின்னுட்டம் போட்டுதான்....தப்பிச்சுட்டு இருக்கேன்.
இந்த பதிவுல நெறைய காப்பியடிக்க மேட்டர் கிடைச்சுது.

வவ்வால் said...

குதிரை
வேகமாக
ஓடும் போது
மெதுவாக
ஓட்ட நினைக்காதே
ஓடும் வரை
குதிரையை
ஓட்டிச்செல்
ஊர் வரைவில்லை
என்றாலும்...!

ஹி..ஹி இதான் பின்னவினத்துவ ஒலக கவித:-))

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

பூரித்து எழுவதால் பூரி ...
இட்டு எடுப்பதால் இட்லி ...
பொங்கி வழிவதால் பொங்கல் ...
ஓசை எழுப்புவதால் தோசை ....

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...

சேணம் கட்டாத குதிரையால்
செக்கு இழுக்க முடியாது ...

வானில் நிலவு மிதந்தாலும்
ஒளி நின்று போகாது ..........

இது நடு நவீனத்துவம் .................

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஐயோ பசுபதி டீச்சரை வச்சிருக்காருங்கோ ...............
இந்த ஆளு சைட்டை எவனோ ஹக் பண்ணிடாங்கோ ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தேன்குடிக்கும் தேனீ
மாடு போடும் சாணி
ஏறிப்பாக்க ஏணி
குடிச்சது பச்சத்தண்ணி...

Unknown said...

என்னய்யா நடக்குது இங்க? கவிதை போட்டியா?

பதிவர் சந்திப்புன்னு வந்தா ஆளாளுக்கு கவிதை சொல்றீங்களே, என் பங்குக்கு ஒரு கவிதை


வி
தை

ஓகேவா?

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...
புரட்சி வெடிக்கட்டும்
புரட்சி வெடிக்கட்டும் ....
என்று காலகாலமாக
சொல்லி கொண்டிருக்கிறார்கள் ................
இன்று வரை எதுவும்
வெடிக்கவில்லை .
யாருக்கும் தெரியவில்லை .
அது கொளுத்தி போட்டால் தான் .
வெடிக்கும் என்று ..............

இது முன் நவீனத்துவம் .........( இன்னும் லெப்ட்டு ரைட்டு சைடு மேல கீழேன்னு நிறைய இருக்கு )

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

செமித்து விடுவதால் சேமியா,
சட்டியில் இருப்பதால் சட்டினி
ஆனால்
சிட்டு என இருப்பது சிட்னியா?

வவ்வால் said...

ப.ரா,

பன்னு தின்னும் பன்னி,
கரும்பு தின்னும் கன்னி,
கண்ணடிச்சா ஜன்னி!

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

வாயில இருந்து வாந்தி வரலாம்,

ஆனால்

பூவில இருந்து பூந்தி வராது!

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...

பீரை பொங்கவிட்டவனும்,
பிகரை நம்பிக்கெட்டவனும்,

வாழ்க்கையில விளங்கினதா சரித்திரம் கிடையாது!

அஞ்சா சிங்கம் said...

Blogger வவ்வால் said...

ப.ரா,

பன்னு தின்னும் பன்னி,
கரும்பு தின்னும் கன்னி,
கண்ணடிச்சா ஜன்னி!..................

///////////////////////////////////

நமக்கு கர்நாடகம்

விடுமா தண்ணி ........

அஞ்சா சிங்கம் said...

Blogger வவ்வால்

உரிக்க உரிக்க
ஒண்ணுமே இல்லை
ஒன்னு வெங்காயம்
இன்னொன்று
ப்ரூனா அப்துல்லா.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
Blogger வவ்வால்

உரிக்க உரிக்க
ஒண்ணுமே இல்லை
ஒன்னு வெங்காயம்
இன்னொன்று
ப்ரூனா அப்துல்லா.......//////

அப்போ நமீய என்னான்னு சொல்லுவீங்கண்ணே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வவ்வால் said...
ப.ரா,

பன்னு தின்னும் பன்னி,
கரும்பு தின்னும் கன்னி,
கண்ணடிச்சா ஜன்னி!//////

அப்போ போண்டா திங்கும் கன்னி கண்ணடிச்சா ஜன்னி வராதுங்களா?

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

முதலில் அந்த புரச்சி வெடியை சிவப்புக்கலர் காகிதம் சுற்றி சிவகாசியில் செய்ய ஆர்டர் கொடுக்கவும் :-))

----
அஞ்சா ஸிங்கம்,

கோடம்பாக்கம் கோவிந்து
குவார்ட்டர் அடித்துவிட்டு
கிக்கு ஸீரோ என்றான்...
ஒன்னும் தெரியாத
ஒலகநாதன்
ஒலகசினிமா டிவிடியின்
பின் விளைவால்
கிம்டுக்டூவின்
கிக்கு ஸீரோ என
தன் இருத்தலை
பதிவு செய்தான்,
மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!
என் இருத்தலும் பதிவானது!.

ஹி..ஹி இதான் டாஸ்மாக் நவினத்துவம் .

இதுக்கு அப்புறம் சாக்னாக்கடை ,பிரியாணிக்கடை நவீனத்துவம் எல்லாம் இருக்கு :-))

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...அப்போ நமீய என்னான்னு சொல்லுவீங்கண்ணே?
///////////////////////////////////////////////////

நல்லா பாருங்கையா நமிக்கு நிறைய இருக்கு .. புருனாக்குதான் ஒன்னும் இல்லை ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// அஞ்சா சிங்கம் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...அப்போ நமீய என்னான்னு சொல்லுவீங்கண்ணே?
///////////////////////////////////////////////////

நல்லா பாருங்கையா நமிக்கு நிறைய இருக்கு .. புருனாக்குதான் ஒன்னும் இல்லை ............///////

அதுக்குத்தான் கேட்கிறேன்.....

அஞ்சா சிங்கம் said...

வவ்வால் said...
ஒன்னும் தெரியாத
ஒலகநாதன்
ஒலகசினிமா டிவிடியின்
பின் விளைவால்
கிம்டுக்டூவின்
கிக்கு ஸீரோ என
தன் இருத்தலை
பதிவு செய்தான்,.................../////////

இது கேபுள் ஷங்கரை பற்றிய கவிதை இல்லை என்று உளமார நம்புகிறேன் ..

/////மச்சி ஒரு குவார்ட்டர் சொல்லேன்!
என் இருத்தலும் பதிவானது!.///////////////////

இது கே.ஆர்.பி. செந்தில் இல்லை என்று நம்பிவிட்டேன் ..........

அஞ்சா சிங்கம் said...

ஆப்ப கடையில் சிம்ரன்
சிம்ரன் ஆப்பக்கடை ......................

ஆப்ப கடையில் ஆயா .
பாவம் ஆப்பக்கடை ஆயா .......

சிம்ரன் முதலாளித்துவம் ........................
ஆயா கம்யுனிசம் .................

வவ்வால் said...

அஞ்சா சிங்கம்,

கர்நாடகம்
மேடையில்லா
நாடகம்
காவிரியில்
தண்ணீரில்லாவிட்டாலும்
கர்நாடக தண்ணீர்
டாஸ்மாக்கில்,
மல்லையா இருக்கும் வரை
மகிழ்ச்சிக்கு தொல்லையா?நெவெர்!

வவ்வால் said...

நமிதா,

காயமே
இது பொய்யடா,
வெறும்
காற்றடைத்த பையடா,
காலியான சட்டி
ஆனாலும்
கவலையில்லா குட்டி!

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

நல்லாத்தானே போயிட்டிருக்கு ,ஏன் ஏன் இந்த கொல வெறி, பெருந்தலைகளை கோத்துவிட்டு என் சோலியை புடிக்க பாக்குறிகளே,

அஞ்சரைக்குள்ள வண்டி
இழுக்குது சுண்டி
மீ ரண்டி ..ரண்டி

இ ராத்திரிக்கு யாத்திர இல்லா ..கமிங் வித் குவார்ட்டர் கட்டிங் ...தி டார்க் நைட் அரைசெஸ்!

நவ் தி லெஜெண்ட் முற்றும்!

அஞ்சா சிங்கம் said...

வவ்வால்...

பார்வதி ஓமனக்குட்டி
காயமே
இது பொய்யடா,
வெறும்
காற்று போன பையடா
காலியான சட்டி
ஆனாலும்
கால்கிலோ தேறாத குட்டி!

அஞ்சா சிங்கம் said...

வவ்வால்...

இ ராத்திரிக்கு யாத்திர இல்லா ..கமிங் வித் குவார்ட்டர் கட்டிங்
///////////////////////////////

சும்மா இருந்தவனை சொறிஞ்சி விட்டுடீங்களே ...................
இப்போ நானும் கேளம்பனுமே ........

பக்கார்டி எனை அழைக்கிறது.........
காதல் கவி கேட்கிறது .................
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்க்கை ........

ஹாலிவுட்ரசிகன் said...

பதிவுக்கு ஓட்டு போடுறதை கடைசில தேர்தலுக்கு வோட்டு வாங்குற ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டிங்களே? சரி ... ஃப்ரீயா வுடுவோம். :)

Unknown said...

சிறந்த கவிதையாக
மோகன்குமார் அவர்களின்
குறுங் கவிதை
"LOL"
தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது!
வவ்வால் & அஞ்சா சிங்கமும்
கோட்டர் அடித்துவிட்டு குப்புற படுக்கவும்!

உணவு உலகம் said...

ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

அஞ்சா சிங்கம் said...

FOOD NELLAI said...

ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
///////////////////////////////////////////

ஆஹா இந்த கவிதைதான் முதலிடம் பிடிக்க தகுதியானது .......

என்ன ஒரு ஒலி உச்சரிப்பு சந்தம் எல்லாம் சரியா இருக்கு பாருங்க .

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

அது ஃபுட்நெல்லையின் வாயு தொல்லை , நிறைய சுண்டல்,பொரி னு ஆடிப்பதினெட்டில் சாப்பிட்டு வாயிப்பிரிக்கிறார் அதையும் கவித னு சொல்லும் கவிகாளமேகம்யா நீர் :-))

நேத்து அடிச்ச கூத்துல ஓட்டல் கடை ஓனர் கடையே வேண்டாம்னு காசிக்கு ஓடிட்டாரா ?

அடுத்த கவித அரங்கம் ஒன்னு போடலாமா,வசதி எப்படி ? :-))
(காண்டாமிருகம், இன்னும் தூங்கலை)

உணவு உலகம் said...

// அஞ்சா சிங்கம் said...
FOOD NELLAI said...

ஆ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
///////////////////////////////////////////

ஆஹா இந்த கவிதைதான் முதலிடம் பிடிக்க தகுதியானது .......

என்ன ஒரு ஒலி உச்சரிப்பு சந்தம் எல்லாம் சரியா இருக்கு பாருங்க .//
என்னை முழுமையாய்ப் புரிந்து கொண்ட உள்ளம். :))

உணவு உலகம் said...

//வவ்வால் said...
அஞ்சா ஸிங்கம்,

அது ஃபுட்நெல்லையின் வாயு தொல்லை , நிறைய சுண்டல்,பொரி னு ஆடிப்பதினெட்டில் சாப்பிட்டு வாயிப்பிரிக்கிறார் அதையும் கவித னு சொல்லும் கவிகாளமேகம்யா நீர் :-))

நேத்து அடிச்ச கூத்துல ஓட்டல் கடை ஓனர் கடையே வேண்டாம்னு காசிக்கு ஓடிட்டாரா ?

அடுத்த கவித அரங்கம் ஒன்னு போடலாமா,வசதி எப்படி ? :-))
(காண்டாமிருகம், இன்னும் தூங்கலை)/
பாவம், பச்சை புள்ளை, மிரட்டாதீங்க.

அஞ்சா சிங்கம் said...

@ வவ்வால் அடுத்த கவித அரங்கம் ஒன்னு போடலாமா,வசதி எப்படி ? :-))
(காண்டாமிருகம், இன்னும் தூங்கலை)///////////////////////////////

போடலாம் ஓட்டல் ஓனர் ஒத்துக்கணுமே ...............
இத்தனை கவிதையையும் படிச்சிட்டு பயபுள்ளைக்கு ரெண்டு நாளா ஒரே வாந்தியும் பேதியும் ..........கக்கூசை விட்டு இன்னும் வெளிய வரவே இல்லை .............

வவ்வால் said...

அஞ்சா ஸிங்கம்,

//போடலாம் ஓட்டல் ஓனர் ஒத்துக்கணுமே ...............
இத்தனை கவிதையையும் படிச்சிட்டு பயபுள்ளைக்கு ரெண்டு நாளா ஒரே வாந்தியும் பேதியும் ..........கக்கூசை விட்டு இன்னும் வெளிய வரவே இல்லை ....//

அடப்பாவமே ரொம்ப பயந்த சுபாவமா இருப்பார் போல ,எதாவது சரக்கை ஊத்தி உடம்பை தேத்திவிடுங்க, நாளைக்கும் ஒரு கச்சேரி வைக்கணும்னா ஓட்டல் வேணும்ல நமக்கு :-)-)

முத்தரசு said...

சூப்பர்

அருமை

கலக்கல்

நீர், சிந்தனை சிற்பி

Related Posts Plugin for WordPress, Blogger...