* மைக்கேல் பெல்ப்ஸ்..இதுவரை பங்கேற்ற ஒலிம்பிக் போட்டிகளில் 18 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் வென்றிருக்கும்
அசகாய சூரன் ஆப் அமெரிக்கா. போட்டி துவங்கும் முன் ஹெட் செட்டில் பாட்டு கேட்டவாறே
வரும் பாங்கே சொல்கிறது. தங்கம் வெல்வதென்பதும் ஒரு பொழுதுபோக்கென்று. நல்லவேளை இந்த ஒலிம்பிக்குடன் அண்ணன் வணக்கம் போட்டுவிட்டார்.
* வரலாறு காணாத ஒலிம்பிக் தோல்வியை சந்தித்து உள்ளது இந்திய ஆடவர் ஹாக்கி அணி.
பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் படுதோல்வி. ஒரு டிரா கூட இல்லை. முன்பொரு காலத்தில்
தங்கமாக அள்ளிவந்த ஹாக்கி அணியின் நிலை இப்படி இருளடைந்து போனது மிகப்பெரிய
அதிர்ச்சி. ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள் அனைத்திலும் வென்று முதல் இடத்தை பிடித்த
இந்திய அணி தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு இப்படி ஒரு கெட்ட பெயரை தேடித்தந்தது ஏனோ?
* இம்முறையும் துப்பாக்கி சுடும் வீரர்கள் நமது மானத்தை காப்பாற்றி
உள்ளனர். அடுத்ததாக பாக்ஸிங் வீரர்கள் மற்றும் மேரி கோம் ஆகியோரை சொல்லலாம்.
தடகளத்திலும் வட்டு எறிதலில் இறுதிவரை சென்ற விகாஸ் கவுடா, பூனியா இருவரும்
பாராட்டுக்கு உரியவர்களே. சீனப்பெண் காலில் சுளுக்கு ஏற்பட்டதால் எப்படியோ
வெண்கலம் வென்று விட்டார் சாய்னா.
* ‘நான் இவனோடு ஆட மாட்டேன். எனக்கு இவர்தான் ஜோடியாக வேண்டும்.’ என்று
ஏகப்பட்ட கண்டிஷன் போட்டு ஒலிம்பிக் போட்டிக்கு முன் சொதப்பிய லியாண்டர், பூபதி,
போபண்ணா என மொத்த டென்னிஸ் அணியும் மண்ணை கவ்வியது ஆச்சர்யம் இல்லைதான்.
* ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் ஆசையுடன் களம் இறங்கிய முன்னணி டென்னிஸ்
வீரர்கள் ரோஜர் பெடரருக்கும், நோவான் டோஜோவிக்கிற்கும் அக்கனவு நிறைவேறாமல் போயே போயிந்தி.
* 100 மீட்டர் ரேஸில் இம்முறை
உசைன் போல்ட் தங்கம் வெல்வது சற்று சந்தேகம்தான் என்று ஒரு எண்ணம் நிலவியது. அதை
பொய்ப்பித்து மின்னலென ஓடி முதலிடம் பிடித்துவிட்டார் போல்ட். 200 மீட்டர் ரேஸிலும் ஓடவுள்ளார் இந்த கருப்பு மின்னல்.
* அதிக உலகக்கோப்பைகளை வென்ற பிரேசில் கால்பந்து அணி இதுவரை ஒலிம்பிக் தங்கம்
வென்றதில்லை என்பது தெரியுமா? இம்முறை எப்படியோ இறுதிப்போட்டிக்கு நுழைந்து விட்டது
பிரேசில். மெக்சிகோ அணியை வீழ்த்தினால் அந்த சாதனையும் வசமாகும்.
* நாங்களும் லண்டன் போட்டிக்கு ஆளை அனுப்பி நேரடி ஒளிபரப்பு செய்கிறோம் பேர்வழி
என்று சரண்யா எனும் செய்தி வாசிப்பாளரை வைத்து தமாஷ் செய்து வருகிறது புதிய தலைமுறை.
அம்மணி கையில் ஒரு பேப்பரை வைத்து பிட் அடித்தவாறு போட்டிகள் குறித்து
பேசுவது..என்னமோ போங்க. விளையாட்டு துறையில் தேர்ந்த ஒருவரை போட்டி நடக்கும்
இடங்களுக்கு அனுப்பி அடுத்த முறையேனும் பரிகாரம் செய்து கொள்ளவேண்டும் பு.த.
* அட்சய திரிதியை அன்று சென்னையில் ஒலிம்பிக் ஓட்டப்பந்தய போட்டிகள் நடந்தால்
எல்லா தங்கமும் இந்தியாவிற்குதான். இதை யோசிக்காமல் மெடல் கிடைக்கவில்லை என்று
புலம்புதல் நியாயமில்லை. இன்னாபா சொல்றீங்க?
தொடரும்.......
.........................................................
5 comments:
அட்சய திரிதியை தான் டாப்பு சார்
அட நீ வேற சும்மா கலாய்க்காதேபா!
வெலிநாட்லேருந்து ஆண்கள் 3 கிராம் தங்கமும் பெண்கள் 6 கிராம் தங்கமும்தான் கொண்டார்லாம நைனா. அதுக்கு மேல போனா கஸ்மாலம்... அட இல்லேபா கஸ்டம்ஸ் டூடி கட்னும்பா.
அதுங்காட்டி தான் நம்மாளுங்க போனாமாதிரி போய் வெறுங்கையோடு வன்டாங்க.
பிரிஞ்சுதா?
ஒலிம்பிக் தங்கம் நமக்கு ஒரு எட்டாக்கனி தான் போல...
சிறப்பான பகிர்வு! நமக்கு தங்கம் எட்டாக்கனி! டென்னிஸ்காரர்கள் பந்தா எல்லாம் கோவிந்தாவாகிப்போனதில் ஆச்சர்யம் இல்லை!
இன்று என் தளத்தில்!
சென்ரியுவாய் திருக்குறள்
எம்புள்ளைய படிக்கவைங்க!
உடைகிறது தே.மு.தி.க
http://thalirssb.blogspot.in
கிரிக்கெட் மோகத்தில் ஹாக்கியைப் புறக்கணித்து விட்டோம் சிவா.மற்ற நாடுகள் ஆடும் முறையை மாற்றி முன்னேறும்போது,நம் ஆட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
Post a Comment