CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, August 23, 2012

பதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 4
இப்படி ஒரு அசத்தல் பதிவை ஹிட்சுக்கு எழுதி இருப்பவர் பதிவர் சங்கவி அவர்கள்(இதை சொன்னதும் அவர்தான்). சில தினங்களுக்கு முன்பு மது குறித்து வந்த பதிவால் ஒரு சர்ச்சை ஏற்பட அதன் பின் இரு தரப்பினரும் சற்று எல்லை மீறியதை உணர்ந்து பிரச்னையும் தீர்ந்தது. ஆனால் அதை மீண்டும் அண்ணன் சங்கவி கிளப்பி மேலும் சங்கடத்தை உண்டாக்கி இருப்பதன் காரணம் ஏன் என்பது தெரியவில்லை. ஏற்கனவே பதிவர் சந்திப்புகளை  முன்னின்று நடத்தியவர் என்ற முறையில் இதை எப்படி கையாண்டு இருக்கலாம் என்று சற்று யோசித்து இருக்கலாம். குடிப்பது தவறு என்று தீவிர பிரச்சாரம் செய்வதில் எனக்கு என்றுமே உடன்பாடில்லை. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதே பழக்கம் எல்லை மீறி பொது இடங்களில் பிரச்னையை உருவாக்கினால் அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்புவதில்லை.

சங்கவி எழுதிய பதிவில் 'குடியின் வேதனையை  அறிந்தவர்கள் இதைப்பற்றி எழுதி இருக்கலாம். அதை நாங்கள் கண்டுகொள்வதில்லை' எனும் சமூக அக்கறை நிரம்பிய வார்த்தைகள் மட்டுமே இப்பதிவு எழுதுவதற்கு அடிப்படை காரணம். குடியால் பாதிக்கப்பட்ட கைம்பெண்களும், அவர்தம் பிள்ளைகளும் நித்தம் உங்கள் வீட்டு வாசலில் 'ஐயா..எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சப்போவதில்லை. தமிழகத்தில் குடியால் கணவனை இழந்த கோடிக்கணக்கான ஏழைப்பெண்களில் பலர் இட்லிக்கடை வைத்தும், கட்டண கழிப்பறையில் காசு வசூலிக்கும் வேலை என உழைத்து தனது பிள்ளைகளின் வாழ்விற்காக ஆண்களுக்கு இணையாக வேர்வை சிந்தி குடும்பத்தை கரை சேர்க்கும் தீரம் உடையவர்கள்தான். அவர்களை நீங்கள் கண்டு கொள்ளாவிடினும் இந்த நரக வாழ்வில் நீச்சல் அடிக்க கற்றுக்கொள்வார்கள். வழக்கம்போல கண்டுகொள்ளாமல் இருக்க வாழ்த்துகள். 

மற்றபடி அவர் எதற்கு குடிக்க ஆரம்பித்தார் எனும் பிளாஷ்பேக் குறித்து சிலாகிக்கவும், கண்டிக்கவும் ஒரு காரணனும் தனிப்பட்ட முறையில் எனக்கில்லை. 

அப்பதிவில் நானிட்ட பின்னூட்டத்திற்கு அவரின் பதில்:

'கோவை பதிவர் சந்திப்பில் குடிக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை அதே சமயம் நிகழ்ச்சிக்கு முந்தைய இரவு நாங்கள் குடிக்காமலும் இல்லை... நாங்க அட்ட கத்தி இல்ல சார் உண்மைய பகிரங்காக ஒத்துக்கொள்வோம்'.

'பல' பேர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்கும் 'யாரும்' எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதற்குமான வித்யாசம் இல்லையா? பெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள்  கூட அச்செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர் என்று சொல்கிறீர்களா? ஈரோடு பதிவர் சந்திப்பில் தாங்கள் உ.பா. பிரியர்களுக்கு தனியே அறை  அமைத்து சியர்ஸ் சொல்லி இருந்தால் அதில் எவ்வித ஆட்சேபனையும் இருந்திருக்காது. ஆனால் மறுநாள் விழா நடக்க இருந்த மண்டப வாசலில் வெளிப்படையாக அந்நிகழ்வு நடந்தது வருத்தம் அளித்தது.'நான் விரும்பி படிக்கும் பிரபல(!) பதிவர்(கள்) மேலே இருக்கின்றனர். வாருங்கள். அவர்களை சந்தித்து விட்டு வருவோம்' என்று புதிதாக பதிவர் சந்திப்பிற்கு வரும் நபர் தன் தாய், மனைவி அல்லது சகோதரியுடன் வந்திருந்தால் முகச்சுளிப்பை ஏற்படுத்தி இருக்க 100% வாய்ப்பே இல்லை என்று உங்களால் அடித்து சொல்ல முடியுமா?   

இனி வரும் காலங்களில் பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் எண்ணுவதற்கான  சாத்தியங்கள் அதிகம். அவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகிவிட்டது உங்கள் பதிவு, பின்னூட்டத்தில் இருக்கும் சில வரிகள். இனி வரும் காலங்களில் பதிவர் சந்திப்பை நடத்துபவர்கள் தனது ஜிகிரி தோஸ்துகளை ஊக்குவிக்க உ.பா. வாங்கி தாருங்கள் அல்லது தராமல் போங்கள். அது உங்கள் விருப்பம். அப்படித்தான் செய்வோம் என்று கூறினால் அதை அவர்கள் தங்கி இருக்கும் இடங்களிலோ அல்லது மதுபானக்கடைகளிலோ வைத்துக்கொள்ளுங்கள். கொண்டாடி மகிழுங்கள். 

குறிப்பு: மனதில் வன்மம் கொண்டு தனிப்பட்ட முறையில் ஒருவரை அர்த்தமின்றி தாக்கும் பிஸ்தாக்கள் லிஸ்டில் நான் என்றும் இருந்ததில்லை.  செயல் ரீதியான விமர்சனம் மட்டுமே செய்ய விரும்புகி றேன். சங்கவி புரிந்து கொள்வார் என நம்புகிறேன். பதிவர் சந்திப்பு என்றாலே ஏதோ குடிகாரர்கள் கூட்டம், அக்னி ஏவுகணைகள் வந்து விழும் இடம் என்று அர்த்தமற்ற பீதியை கிளப்பும் 'பேரன்பு' கொண்ட இதயங்களின் சமூக அக்கறையையும் மெச்சி ஆக வேண்டும். எப்பேர்பட்ட பிரச்னை ஆயினும் தரம் தாழ்ந்த வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டாம் என எனக்கு உரிமையுள்ள நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன். பெரும்பாலும் படித்தவர்கள் உலவும் இணையத்தில் இது போன்ற செயல்கள் ரசிக்கும் வண்ணம் இல்லை. 

இரு தரப்பிற்கு இடையே சட்டை கிழிப்புகள் நடக்கையில் அதற்கு மேலும் சாம்பிராணி போட்டு பொழுது போக்கும் ஜீவன்களே..நீங்க நல்லா வருவீங்க.   
........................................................................

ப்ளாஷ் நியூஸ்:

பதிவர் சந்திப்பின் தலைவர் பெயர் மதுமதி என்பதை 'மோர்'மதி என்று தற்காலிகமாக மாற்றி உள்ளோம். இந்த மேட்டர்களை எல்லாம் கண்டு கலவரம் அடையாமல் தோழர் மோர்மதி தொடர்ந்து விழா ஏற்பாடுகளில் இயங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (பாவம் மனுஷன். சீக்கிரம் சன்யாசம் வாங்கிட்டு நேபாளம் போயிடுவார் போல). 


38 comments:

Unknown said...

http://www.iravuvaanam.blogspot.com/2012/08/blog-post_22.html

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தினால் கேள்விகுறியான மாணவனின் எதிர்காலம் - உதவி வேண்டி விண்ணப்பம் ..!
----------------------------------

சிறு விளம்பரம் செய்து கொள்கிறேன் தவறாக எண்ண வேண்டாம் சிவா ..!

sathishsangkavi.blogspot.com said...

பதிவர் பாக்ஸிங் போட்டி என்று நீங்கள் பதிவிட்டது சரியா சிவா...

sathishsangkavi.blogspot.com said...

குடியைப்பற்றியும் அதன் வேதனைகள் பற்றியும் எங்களுக்கும் தெரியும் எதோ தமிழகத்தில் இதன் அருமை பெருமையை நீங்கள் மட்டும் அறிந்தவர் போல பேசுவது சரியில்லை...

sathishsangkavi.blogspot.com said...

பெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள் ஆதரவு தெரிவித்தாங்களா என்று கேட்டுள்ளீர்கள்...

முதலில் எதிர்ப்பு தெரிவித்தது யார்... ஈரோடு சந்திப்பில் அதைப்பற்றி எதிர்பு தெரிவித்தது நீங்கள் மட்டும் தான் சிவா..

உங்க கூட வந்தவர்கள் யாரும் குடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா???

sathishsangkavi.blogspot.com said...

இதை மிகப்பெரிய வீரச்செயல் என்கிற ரீதியில் பதிவர் சந்திப்பு நடக்கும் நேரங்களில் எழுது படம் காட்ட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்...

இதை நான் வீரச்செயல் என்று எங்கேயும் சொல்லவில்லை சிவா.. யார் படம் காட்டுகிறார்கள்.. தேவையில்லாத வரிகளை உபயோகிக்கிறீர்கள் சிவா...

இந்த பதிவால் எனக்கு ஒரு ...... லாபமும் கிடையாது...

sathishsangkavi.blogspot.com said...

படம் காட்டுவது எங்கள் வேலை அல்ல...

நான் நல்லவன் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்பவன் தான் படம் காட்டுபபவன்....

sathishsangkavi.blogspot.com said...

பதிவர் சந்திப்பிற்கு முன் இரவு சரக்கடித்தால் சந்திப்பு நடந்த இடத்திற்கு உள்ளே விடமாட்டோம் என்ற பதிவு போட தைரியம் இருக்கா சிவா...

sathishsangkavi.blogspot.com said...

நான் ஹிட்டுக்கு பதிவு எழுதினேன்... நீங்க எதற்காக எழுதுனீர்கள் என்று சொல்ல முடியுமா சிவா....

! சிவகுமார் ! said...


//சங்கவி said...
குடியைப்பற்றியும் அதன் வேதனைகள் பற்றியும் எங்களுக்கும் தெரியும் எதோ தமிழகத்தில் இதன் அருமை பெருமையை நீங்கள் மட்டும் அறிந்தவர் போல பேசுவது சரியில்லை...//

குடியின் வேதனையை நான் 'மட்டுமே' அறிந்தேன் என்று எங்கு சொன்னேன்? பதிவர் சந்திப்பிற்கு சரக்கு தேவையே என்று ஒட்டு மொத்த பதிவர்களின் எண்ணமாக நீங்கள் தலைப்பு வைத்தது அனைவரையும் கேட்டா வைத்தீர்கள்? பதிவர் சந்திப்பில் என் போன்ற உ.பா. பிரியர்களுக்கு சரக்கு தேவை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்?

! சிவகுமார் ! said...


//சங்கவி said...
பெண் பதிவர்கள் மற்றும் வயதான பதிவர்கள் ஆதரவு தெரிவித்தாங்களா என்று கேட்டுள்ளீர்கள்...

முதலில் எதிர்ப்பு தெரிவித்தது யார்... ஈரோடு சந்திப்பில் அதைப்பற்றி எதிர்பு தெரிவித்தது நீங்கள் மட்டும் தான் சிவா..

உங்க கூட வந்தவர்கள் யாரும் குடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா???//

சங்கவி எனது பதிவை முழுதாக படித்தீர்களா? இல்லையா?
பிறருக்கு தொந்தரவு தராமல் குடிப்பதை தட்டி கேட்டு பஞ்ச் பேசுவது எனக்கு விருப்பமில்லை என்பதை மட்டுமே தெள்ளத்தெளிவாக கூறி உள்ளேன். அது என் நண்பர்களே ஆனாலும் அவர்களது பெர்சனல் விருப்பங்களில் தலையிட மாட்டேன். சென்னைக்கு வருகையில் அவர்களிடமே நீங்கள் கேட்டுப்பாருங்கள் பாஸ்.


//உங்க கூட வந்தவர்கள் 'யாரும்' குடிக்கவில்லை என்று உங்களால் உறுதியாக கூற முடியுமா???////

ஈரோடு சந்திப்பில் இரவு நடந்த நிகழ்வை கண்டு மனம் வருந்து கே.ஆர்.பி. என்னுடன் கீழே வந்துவிட்டார். அவர் குடிக்கவில்லை. நம்பிக்கை இல்லை எனில் அவருக்கு இ மெயில் அல்லது கால் செய்து உறுதி செய்து கொள்க.

நாய் நக்ஸ் said...

@ சிவா...சங்கவி....

எதற்க்காக இந்த பேச்சி...
கடைசியில் அவர்களை போலவே அந்த விஷயம் நீர்த்துபோனத்தை போல்....

பிரச்சனை வேறு பக்கம் திசை மாறுகிறது....
சங்கவி போட்ட பதிவு எதிர் பதிவு...

சிவா போடுவது__________
ஒன்னும் சொல்லுவதற்கு இல்லை...

அவர்கள் எதை எதிர்பார்தார்களோ அது நடக்க ஆரம்பித்துவிட்டது...

! சிவகுமார் ! said...

சங்கவி said...
இதை மிகப்பெரிய வீரச்செயல் என்கிற ரீதியில் பதிவர் சந்திப்பு நடக்கும் நேரங்களில் எழுது படம் காட்ட வேண்டாம் என்பது என் வேண்டுகோள்...

இதை நான் வீரச்செயல் என்று எங்கேயும் சொல்லவில்லை சிவா.. யார் படம் காட்டுகிறார்கள்.. தேவையில்லாத வரிகளை உபயோகிக்கிறீர்கள் சிவா...

இந்த பதிவால் எனக்கு ஒரு ...... லாபமும் கிடையாது...//

நாங்க அட்டகத்தி இல்லை என்று நீங்கள்தான் சொன்னீர்கள். இப்பதிவு உங்களுக்கு லாபம் கொழிக்க
எழுதப்படவே இல்லை. தேவையில்லாத வரிகளை உபயோகிக்கிறீர்கள் சங்கவி.

! சிவகுமார் ! said...


//சங்கவி said...
படம் காட்டுவது எங்கள் வேலை அல்ல...

நான் நல்லவன் நான் மட்டுமே நல்லவன் என்று சொல்பவன் தான் படம் காட்டுபபவன்....//

நான் மட்டுமே நல்லவன் என்று எங்கும் சொல்லாதபோது அர்த்தமற்ற வாதத்தை ஏன் முன் வைக்கிறீர்கள்?

! சிவகுமார் ! said...

//சங்கவி said...
பதிவர் சந்திப்பிற்கு முன் இரவு சரக்கடித்தால் சந்திப்பு நடந்த இடத்திற்கு உள்ளே விடமாட்டோம் என்ற பதிவு போட தைரியம் இருக்கா சிவா...//

அட ஆண்டவா. பதிவை படிக்காமல் எதற்கு இப்படி எழுதுகிறீர்கள்? பதிவர் சந்திப்பு நடக்கும் இடத்தில் இடையூறு செய்தால் அவர்களை கண்டிப்பது அல்லது வெளியே அனுப்புவது நியாயம். தனிப்பட்ட இடத்தில் சரக்கு அடிப்பதில் தலையிட மாட்டேன் என்று தெளிவாக எழுதிய பிறகும் அதை திசை திருப்பி காமடி செய்ய வேண்டாம் சங்கவி.

Yoga.S. said...

ஏன் இப்படி,சிவா&சங்கவி????????????????

! சிவகுமார் ! said...


//சங்கவி said...
நான் ஹிட்டுக்கு பதிவு எழுதினேன்... நீங்க எதற்காக எழுதுனீர்கள் என்று சொல்ல முடியுமா சிவா....//

அதை படிப்பவர்கள் எண்ணத்திற்கே விட்டு விடுவோம். கேள்விகளுக்கு நேரடி பதில் அளிக்காமல் தொடர்ந்து திசை திருப்புவது சரியல்ல.

! சிவகுமார் ! said...


நக்கீரன்,yoga...

இது (வி)வாதம் மட்டுமே. தனிப்பட்ட கோபம் இருவருக்கும் இல்லை.சங்கவியும், நானும் நிகழ்வன்று போட்டோவுக்கு போஸ் கொடுப்போம்.
என் வாதத்தை நிறைவு செய்கிறேன். வணக்கம்.

Admin said...

"நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்..நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்"
அடுத்த கட்ட பணிகளைப் பார்ப்போம் வாருங்கள் தோழர்களே..

சேலம் தேவா said...

குடித்தால்தான் பிரச்சினை என்று நினைத்தால் அதைப்பற்றி பேசி எழுதினாலும் பிரச்சினைதான்..விட்டொழியுங்கள் நண்பர்களே...

சிராஜ் said...

நக்கீரரே...

யாரு என்ன எதிர்பார்த்தா???? ரொம்ப பில்டப் பண்ணாதீங்க...

எதிர்பார்த்தாங்களாம்.. சந்திப்ப குழைக்க சதியாம்.. என்னப்பா கலர் கலரா பிலிம் காட்றீங்க...

ராஜ் said...

பாஸ்,
இந்த பதிவை நீங்கள் தவிர்த்து இருக்கலாம் என்பது என் கருத்து :)

வவ்வால் said...

சிவா,

நீங்க ரொம்ப நல்லவர் என்பது புரிகிறது.

ஆனால் எல்லாருக்குமே நல்லவராக இருக்க நினைப்பது எப்படின்னு புரியலை.

சங்கவி அவர் தரப்பினை இன்டைரக்ட்டா சொல்லி இருக்கிறார் என அப்பதிவை எடுத்துக்கொள்ளலாம்.

மனிதாபிமானிப்பதிவில் ஈரோடு பதிவர் சந்திப்பே மதுவிழா என்ற அளவில் சொல்லியதால் ...இப்படி எதிர்வினையாற்றி இருக்கலாம்,எனவே அவருக்கு இதில் தனிப்பட்ட நோக்கம் இல்லை எனக்கருதலாம்.

நக்ஸ் அண்ணே,மூனாக்கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் கவனிக்கவும்.

குறிப்பிட்டு வம்புக்கு இழுத்தவர்களை நீங்கள் மெல்லிதயம் கொண்ட ந்ற்பண்பாளர் என்பதால் மென்மையாக வருடியது போல கண்டித்தீர்கள்,அது அனைவருக்கும் சாத்தியமில்லையே.

நீங்கள் அனைவர் நலனுக்காகவும் தான் சொல்லியுள்ளீர்கள் என்பது மட்டும் புரிகிறது.மற்றப்படி சொல்வதற்கு ஏதுமில்லை, சாம்பிராணி கூட இல்லாத அப்பிராணி நான் :-))

----------

sathishsangkavi.blogspot.com said...

சிவா நம் விவாதம் இன்னும் நிறைய செய்யனும் இதப்பத்தி..

அதை நேரில் செய்வோம்...

இங்க செய்தால் நம்மாளுக கிளப்பிவிட்டுவிடுவார்கள்...

இன்னும் நிறைய கேள்வி உங்களை கேக்கனும் அதற்காகவே காலையிலேயே வருகிறேன்...

இதைப்பற்றி இனி நிறைய பதிவு வரும்... ஐ ஜாலி.., ஜாலி.., நாம் வேடிக்கை பார்போம்... சரி நேரில் சந்திப்போம் சிவா....

! சிவகுமார் ! said...


வவ்வால்,ராஜ், தேவா, சிராஜ், மதுமதி... இது இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் மட்டுமே.
சங்கவியிடம் பேசிவிட்டேன். புரிந்து கொண்டார். நன்றி.

! சிவகுமார் ! said...


உங்கள் கருத்தில் நீங்களும், என் கருத்தில் நானும் அரை பாடி லாரியில் கம்பி பிடிக்காமலே நிற்போம்.
வெல்கம் டு சென்னை சங்கவி.:)

சேலம் தேவா said...

அடப்பாவிங்களா..சீரியஸா கமெண்ட் போட்டா கடைசில நம்மள காமெடியாக்கிருவாங்க போலருக்கே... :)

! சிவகுமார் ! said...

தேவா..தவறான புரிதல். என் கருத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. இனியும் இருக்காது. முன்பே சொன்னது போல எங்கள் இருவருக்கும் தனி விரோதமில்லை. கருத்து பேதம் மட்டுமே.

CS. Mohan Kumar said...

அலோ எப்படி நீங்க ரெண்டு பெரும் போன் பண்ணி பேசிக்கலாம்? இது போங்கு ஆட்டம் ! ஒத்துக்க முடியாது, இங்கே சண்டை போட்டா தானே சுவாரஸ்யமா இருக்கும்

போங்கப்பா ஏமாதீடீங்க

பட்டிகாட்டான் Jey said...

.

mohamed salim said...

பெண்கள் குழந்தைகள் உள்பட பலர் கூடும் இனிமையான பதிவர் சந்திப்பு நல்ல முறையில் நடைபெற வாழ்த்துக்கள் நல்ல பதிவுக எழுதி இருக்கின்றிர்கள்

எப்பொழுதும் காமெடி கலந்து பதிவு எழுதும் நீங்கள் இன்று ஒரு சீரியஸ் பதிவு இட்டுளிர்கள்

வவ்வால் said...

// இது இருவருக்கும் இடையேயான கருத்து மோதல் மட்டுமே.
சங்கவியிடம் பேசிவிட்டேன். புரிந்து கொண்டார். நன்றி. //

:-))

Unknown said...

// ஈரோடு பதிவர் சந்திப்பில் தாங்கள் உ.பா. பிரியர்களுக்கு தனியே அறை அமைத்து சியர்ஸ் சொல்லி இருந்தால் அதில் எவ்வித ஆட்சேபனையும் இருந்திருக்காது //

தனியே வந்தவங்களுக்கு ராஜேஸ்வரி லாட்ஜ்லையும்,குடும்பத்தோட வந்தவங்களுக்கு,சண்முகா லாட்ஜ்லையும் ரூம்போட்டிருந்தோம்...
இரவு உணவு எங்கள் குழும நண்பர்களுக்கா தயாரித்திருந்தோம்,நீங்க எல்லாம் வர்ரன்னு சொன்னதால சேத்து சமச்சிருந்தோம்,குடும்பத்தோட வந்தவங்கள் பார்சலும்,ஹோட்டல்லையும் சாப்பிட்டுட்டாங்க...
சங்கமம் பத்தி செந்தில்ணா பதிவு
http://krpsenthil.blogspot.in/2011/12/blog-post_23.html

Nizam said...

//இனி வரும் காலங்களில் பதிவர் சந்திப்பை முன்னின்று நடத்த இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் எண்ணுவதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம்//

மிக சரியான கண்ணோட்டம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.சிவா...

உங்கள் பதிவை படித்தால் சிரிக்க வைக்காமல் அனுப்புபவர் அல்லர் நீங்கள்..!

என்னதான் சட்டை கிழியும் அளவுக்கு சீரியஸ் பதிவு போட்டாலும் அதிலுமா.... சிரிக்க வைக்க முடியும்..!!

///ப்ளாஷ் நியூஸ்:
பதிவர் சந்திப்பின் தலைவர் பெயர் மதுமதி என்பதை 'மோர்'மதி என்று தற்காலிகமாக மாற்றி உள்ளோம். இந்த மேட்டர்களை எல்லாம் கண்டு கலவரம் அடையாமல் தோழர் மோர்மதி தொடர்ந்து விழா ஏற்பாடுகளில் இயங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். (பாவம் மனுஷன். சீக்கிரம் சன்யாசம் வாங்கிட்டு நேபாளம் போயிடுவார் போல). ///

-------'சிவா க்ளாஸ்ஸிக்'...!

! சிவகுமார் ! said...@ கார்த்திக்

நண்பரே...உபசரிப்பு, ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததில் சந்தேகம் இல்லை. ஆனால் அங்கு முக்கிய குறையாக இருந்த இன்னொரு விஷயத்தை சங்கவியிடம் நேரில் தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டு இனி அப்படி நிகழாமல் பார்த்து கொள்வதாக சொன்னார். இப்போதைக்கு... டாட்.

Unknown said...

"சிவாஸ்"

Easy (EZ) Editorial Calendar said...

சீக்கிரமா முடிச்சி படத்த (pthoto) போடுங்க


நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

mubarak kuwait said...

பதிவர் மாநாட்டில் ஏன் சவுக்கு வரவில்லை, அவருக்கு அழைப்பு தரப்பட வில்லையா?

Related Posts Plugin for WordPress, Blogger...