சிஸ்டர் ஆமினாவின் மகன்(நாளைய பதிவர்) தன்வீருடன் நான்...
அம்மா சமையலை நித்தம் தின்று நாக்கு காய்ந்த தன்வீருக்கு அந்த டார்ச்சரில் இருந்து ஒரு நாள் விடுமுறை. ஏக குஷியாய் சாப்பிட்டு கொண்டிருந்தவனை கண்டு 'இனி நமது சமையலை மதிக்க மாட்டானோ' என்கிற பீதியில் ஊறுகாயை அள்ளி சிஸ்டர் ஊட்ட காரம் தாங்காமல் அலறினார் நாளைய பதிவர். அநியாத்திற்கு ஒரு எல்லையே இல்லையா?
ஆமினாவின் திகில் சமையல் பதிவுகளை படிக்க: http://samayalexpress.blogspot.in/
சேட்டையிடம் சேட்டை செய்ய அஞ்சாசிங்கம் அட்டெம்ப்ட்.
பதிவுலகில் தனக்கென தனிமுத்திரை பதித்த சேட்டைக்காரன் அவர்களை பார்க்கும் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. அவரை கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
தலைவரின் பதிவுகளை படிக்க: http://settaikkaran.blogspot.in/
'மனிதாபிமானி' ஆஷிக் மற்றும் ஷேக் தாவூத்
பதிவர் சந்திப்பில் ஆஷிக்கின் என்ட்ரிதான் ஹாட் நியூஸ். அனைவரிடமும் அமைதியாக ஒரு ஸ்மைலியை போட்டுவிட்டு அமர்ந்திருந்தார் மனிதர். பிலாசபி, சிராஜ் மற்றும் எனக்கு உணவு பரிமாறிய அன்பிற்கு நன்றி நண்பரே. 'நானும் சென்னைலதான் திரியறேன். என்னை கண்டுக்கவே இல்லியே நீங்க' என்றார் ஷேக். விரைவில் மீண்டும் சந்திப்போம் பாஸ். பிலாசபிக்கு ஐஸ்க்ரீம் வைத்தவர் குச்சியை மட்டும் வைக்காமல் ஆஷிக்கிடம் பேசிக்கொண்டே இருந்தார். பிறகு ஒரு வழியாக பிலாசபியின் கதறலை கேட்டு குச்சி தந்த ஷேக். இதானா உங்க டக்கு? :)
பள்ளித்தோழர் மற்றும் பதிவர் தியாகராஜனுடன் ருக்மணி அம்மா(பாட்டி சொல்லும் கதைகள்).
http://egaivendan.blogspot.in/
http://chuttikadhai.blogspot.com/
திடங்கொண்டு போராடிய சீனு
http://egaivendan.blogspot.in/
http://chuttikadhai.blogspot.com/
திடங்கொண்டு போராடிய சீனு
பதிவர் சந்திப்பு நடந்த நாள் அன்று அதிக உழைப்பை தந்தவர் தம்பி சீனு என்பதில் சந்தேகமே இல்லை. வருகைப்பதிவேட்டை கவனிக்க தனது நண்பர்கள் இருவரை அழைத்து வந்தார்(பதிவர்கள் அல்ல). ஒரு ஞாயிறு முழுக்க தங்களுக்கு சம்மந்தமே இல்லாத வேலையாக இருப்பினும் வார இறுதியில் பொழுது போக்காமல் இருந்த அந்த இரு இளம் நண்பர்களுக்கு மிக்க நன்றி. இனி வரும் வார இறுதி ஒன்றில் சீனு மற்றும் அவ்விரு நண்பர்களை மரியாதை செய்யும் வண்ணம் நகருக்குள் ஒரு சின்ன அவுட்டிங் அழைத்து செல்ல விழாக்குழு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.
சீனுவின் வலைப்பூ: http://seenuguru.blogspot.com/
மதிய உணவை சிறப்பாக ஏற்பாடு செய்தவர் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள். நான் வெஜ் சாப்பிடாத சோகத்தை காட்டாமல் சமாளிக்கும் அரசியல் ராஜதந்திரி ரஹீம் கஸாலி.
http://mani-saraswathi.blogspot.in/
http://rahimgazzali.com/
சீனுவின் வலைப்பூ: http://seenuguru.blogspot.com/
மதிய உணவை சிறப்பாக ஏற்பாடு செய்தவர் பதிவர் ஆயிரத்தில் ஒருவன் மணி அவர்கள். நான் வெஜ் சாப்பிடாத சோகத்தை காட்டாமல் சமாளிக்கும் அரசியல் ராஜதந்திரி ரஹீம் கஸாலி.
http://mani-saraswathi.blogspot.in/
http://rahimgazzali.com/
துபாயில் இருந்து பதிவர் சந்திப்பிற்கு வருகை தந்த சைதை அஜீஸ் அவர்கள்.
...........................................................
சமீபத்தில் எழுதியது:
சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள்
சமீபத்தில் எழுதியது:
சென்னை பதிவர் சந்திப்பு 2012 - ஜாலி பட்டாசுகள்
53 comments:
லிங்க்சோடு பகிர்ந்துள்ளீர்கள் நன்றி அண்ணா
விழா இனிதாக நடந்தது சிவா... சில விசயங்களை நான் தவற விட்டுவிட்டேன் என்று நினைத்தேன்...ஆனால் ரெகார்டிங் உள்ளது என்பதால் அதில் கண்டு களித்துக் கொள்கிறேன். ஒரு இரண்டு நாட்கள் கழித்து எனது பார்வையை வெளியிடுகிறேன்... காரணம் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் இல்லை...உங்கள் அனைவர் பதிவுகளில் இருந்து சேகரித்து பின் நினைவுகளை திரட்டிஎழுதுகிறேன்.
//இனி வரும் வார இறுதி ஒன்றில் சீனு மற்றும் அவ்விரு நண்பர்களை மரியாதை செய்யும் வண்ணம் நகருக்குள் ஒரு சின்ன அவுட்டிங் அழைத்து செல்ல விழாக்குழு நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்.// மறுப்பது அழகல்ல...ஆனால் நானே அழைத்தாலும் அவர்கள் வரமாட்டார்கள்...உங்கள் அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றி... அவர்களுக்கு பதிவு எழுதும் ஆசை பிறந்த்ததுள்ளது என்று நினைக்கிறன்... அது உண்மை என்றால் அவர்களையும் பதிவர்களாக கலந்து கொள்ளச் செய்கிறேன்.
ஸலாம்,
எப்படி இருக்கீங்க சிவா? பதிவர் சந்திப்புல விளம்பரத்துல வருகிற நடிகர் மாதவன் மாதிரி (நீங்க நேற்று சொல்ல சொன்னதை இன்றைக்கே சொல்லிட்டேன் பார்த்தீங்களா. நம்ம டக்கு அப்படி சிவா ஜி.) எப்போதுமே சிரித்த முகத்துடனே இருந்தீங்க. பிலாசபி தத்துவம் சொல்லுவார் என்று பார்த்தா ஒரு சினிமா பாட்டை நிறுத்தி நிதானமா தத்துவம் மாதிரி சொல்லி என்னை ஏமாற்றி விட்டார். (நீங்க, சிராஜ் , பிலாசபி மூவரும் சாப்டுகிட்டே (இடையில்) பேசிகிட்டு இருக்கும்போது குறுக்கால வந்து கேட்டோம்ல) பதிவர் சந்திப்புல உங்களை எல்லாம் சந்திச்சதில் ஏற்பட்ட மகிழ்ச்சியை விட அந்த வெஜிடேரியன் சாப்பாட்டை சாப்பிடுறப்போ அதிக மகிழ்ச்சி ஏற்பட்டது. தேங்க்ஸ் மணி சார். அப்புறம் பல நண்பர்களை சந்தித்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி.
மிக அருமை..
"பிரகாஷ், தனியா வாங்களேன்... கொஞ்சம் பேசணும்" என சிவா கேட்டதும் ரொம்ப மிரண்டுட்டேன்...
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களோட உரை கூர்மையா இருந்துச்சு. பொதுவெளியில் எப்படி பதிவர்களோட எழுத்துக்கள் இருக்கணும்னு நல்லதொரு பாலபாடத்தை அவர் எடுத்தார். அவர் பேச்சின் உண்மையை உணர்பவர்கள் பயனடையலாம். நண்பர் சீனுவோட உழைப்பு அதிகம். அவரை கண்டிப்பா பாராட்டனும். மனுஷன் அசரவே இல்லை. உட்கார்ந்து கிட்ட எங்களுக்கு அலுப்பு தட்டுது. உங்களுக்கு எப்படிப்பா அலுப்பே தட்டலை. சீனு வந்து அந்த ரகசியத்தை சொல்லுங்க.
பகிர்வுக்கு நன்றி..
லிங்க்குகளுக்கும்.
சிவா,
நல்ல தொகுப்பு. அதுவும் அந்த முதல் படம் சான்ஸே இல்லை, அடுத்து சினிவில் நுழைய திட்டம் இருக்குன்னு நினைக்கிறேன் அப்படியே கோட்டைக்கும் பயணம் போற ஐடியாவா ...
பவர் ஸ்டாரு, அல்டிமேட் ஸ்டாரு எல்லாம் இனிமே குளிர்க்கண்ணாடிப்போடுவாங்களா?
-------
எல்லாருக்கும் சாப்பாடு போட்டவர் சாப்பிடவே மாட்டாரா..அநியாயத்துக்கு "வெயிட்டா" இருக்கார் ஆயிரத்தில் ஒரு "மணி" .
---------
இணைப்புகள் கொடுத்தது சிறப்பு...
நன்றி சார்...
(வந்துட்டோம்லே... இனி தொடருவோம்லே... ஹா... ஹா...)
பம்பரம் போல சுழன்று சுழன்று, வேலை பார்த்தீர்கள்... பாராட்டுக்கள்...
சிவா...பதிவர் சந்திப்புக்கு...
கோவை புத்தகக்கண்காட்சியில் ஸ்டால் போட்டதால் வர முடியவில்லை.
அடுத்த முறை கட்டாயம் வருகிறேன்.
அனைவரின் லின்க்கோடு கொடுத்தது அருமை சிவா
@ ஹாரி பாட்டர்
நன்றி தம்பி.
@ சீனு
உங்கள் நண்பர் இருவரும் பதிவர் ஆக வாழ்த்துகள்.
@ ஷேக் தாவூத்
சீனு...பிரபல பதிவர் ஆயிட்டப்பா. ஷேக்கே ஷேக் ஹான்ட் தந்துட்டாரு.
@ ஆட்டோமொபைல்
நன்றி தானி தொலைபேசி நண்பரே :))
@ தமிழ்வாசி
எக்ஸ்ட்ரா போண்டா இருக்கான்னு கேக்க வந்தேன்.
@ இந்திரா
நன்றி இந்திரா
@ வவ்வால்
சாப்பாட்டுக்கடை மணி வாழ்க!!
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கு நன்றி சார். அடிக்கடி சீப்பால் தலை வாரி கலக்கறீங்க. அந்த மீசை அல்டிமேட்!!
@ உலக சினிமா ரசிகன்
விரைவில் சந்திப்போம் சார்.
@ மோகன் குமார்
நன்றி சார்.
ஹல்லோ சிவா...
பதிவு அருமை.. ஆனா சீனு விசயத்தில் ஒப்பந்தத்தை மீறிவிட்டீர்கள்... நெற்றிக்கண் திரந்தாலும், மூடி இருந்தாலும் குற்றம் குற்றமே...
வரவேண்டும் என மிக ஆவலாக இருந்தேன் . சனி கிழமை விருமுறை என்றதும் சந்தோஷமாக இருந்தது ஆனால் sunday Parents meeting என சொன்னதும் வருத்தமாக போய்விட்டது .. அடுத்தமுறை கண்டிப்பா வருகிறேன்
இன்று
இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ....
நிகழ்ச்சி அருமையாக இருந்தது...
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
முத போட்டோல யாருங்க ...வெள்ளை எம்.ஜி.யார் மாதிரியே இருகாரு..படங்கள் மற்றும் உங்க கமெண்ட் செம ..
@ சிராஜ்
சிராஜ்...நீங்கள்தான் அதற்கு பேடன்ட் ஓனர். உங்கள் பதிவிற்கு வைட்டிங்.
@ ராஜபாட்டை ராஜா
அடுத்த முறை அவசியம் வாங்க தல.
// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று
இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பா ...//
'இன்று' இந்த பதிவர்கள் தொல்லை தாங்கலப்பாவா? நித்தமும்தான்.
@ சங்கவி
தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...
@ ராஜ்
உங்க கலருக்கு முன்னால எம்.ஜி.ஆர். எம்மாத்திரம்!!
நன்றி சிவா! உங்களோடு இணைநது பணியாற்றியதில் எனக்குப் பத்து வயது குறைந்ததைப் போன்ற உணர்வு! உங்கள அனைவரிக் உழைப்புக்கும் உரிய பலன் கிடைத்துள்ளது
where is my photo?
நேற்று தங்களை சந்திச்சதில் ரொம்ப மகிழ்ச்சி. விழாவை கவனிக்குற பிசியில நீங்க இருந்ததால உங்களோடு அதிகம் பேச முடியலை. உங்க எழுத்துக்களை அதிகம் ரசிப்பேன். உங்களுக்கு நகைச்சுவையா எழுத நல்லா வருது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் சந்திப்போம் தம்பி
எங்கள் பாசமிகு (சத்தியமா உள்குத்து இல்ல )சிவாவுக்கு என் நன்றிகள் ...
படங்கள் மிகவும் அருமை ...
சில முகங்களை நேரில் கண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ..
சிறப்பான பணி சிவா!!!!
நம்ம சேட்டைக்காரன், பிலாசபி, நாய் நக்ஸ் மற்றும் மேன்மை
மிகு தாங்களையும் கண்டதில் பெருமகிழ்ச்சி!!!!
எனினும், வாழ்த்துக்கள் மற்றுமொருமுறை!
விழா பற்றிய பகிர்தல் அருமை!! இறைவன் நாடினால் அடுத்த விழாவில் சந்திப்போம்!! லிங்குகள் கொடுத்ததற்கு நன்றி
சிறப்பான பகிர்வு! நன்றி!
இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html
பதிவுலகில் நிறைய பேர் தங்கள் முகத்தை மறைத்தே எழுதுகிறார்கள்! முதன் முதலாக மிக பிரபலமான சேட்டைக்காரரின் முகத்தை பார்த்ததில் மகிழ்ச்சி!
நிகழ்ச்சியை நேரலையில் கண்டு களித்தேன்!
அன்பின் சிவக்குமார்
எக்ஸ்ட்ரா போண்டாவா - தமிழ் வாசியிடமா ? பாவ்ம் அவரு - அத விடப் பாவம் நீங்க.......
நல்லாவே இருந்துச்சு பதிவு - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
// 'இனி நமது சமையலை மதிக்க மாட்டானோ' என்கிற பீதியில் ஊறுகாயை அள்ளி சிஸ்டர் ஊட்ட காரம் தாங்காமல் அலறினார் நாளைய பதிவர். அநியாத்திற்கு ஒரு எல்லையே இல்லையா?//
அடப்பாவிகளா :-))) அநியாயம் அநியாயம்... ஆரும் நம்பாதிங்க :-))
சீக்கிரம் சிவாக்கு கல்யாணம் நடக்கனும்னு வேண்டிக்கிறேன் :-) அப்ப தானே இன்னொரு பதிவர் சந்திப்பு சீக்கிரம் நடக்கும் அவ்வ்வ்வவ்
விழா அமைப்பினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! அருமையான ஏற்பாடு பண்ணியிருந்தாங்க... நிறைவான சந்திப்பு! பாவம் எங்க தல சிவாக்கு கண்டிப்பா கால் வலி வந்திருக்கும்! தலைவர் கொஞ்ச நேரம் கூட உக்கார்ந்து பாக்கவே இல்ல நான்! (சாப்பிடும் போதாவது உக்காந்தீங்க்களா இல்லையா ஹி..ஹி..ஹி...
வணக்கம் ஹோட்டல் ஓனரே...உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி...அப்புறம் எனக்கு போட்டியா இருக்கிற மாதிரி..உங்க முதல் போட்டோ இருக்கு..ரொம்ப பொறாமையா இருக்கு,...
இனிய பகிர்வு நண்பரே... தொடரட்டும் பகிர்வுகள்.
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..
இந்தப் பதிவில் உங்கள் கமெண்டுகள் புன்னகைக்க வைத்ததால் தொடர்ந்து பதிவர் சந்திப்பைக் குறித்த உங்களது அனைத்து பதிவுகளையும் வாசித்த்டேன். You are so so hilarious! :-) Enjoyed! தொடரட்டும் உமது நகைச்சுவை!
மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள்...மகிழ்ச்சியாக உள்ளது...பாராட்டுக்கள் சார்
இனிய சந்திப்பு
பதிவர் விழாவில்
வாழ்த்துக்கள்
பதிவர் சந்திப்பு பற்றிய படங்கள் மற்றும் செய்திகளுக்கு நன்றி, நம்ம சென்னையின் மூத்த பதிவர் புதுகை அப்துல்லாஹ் வரவில்லையா?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
where is my photo?//
கூட்டுங்கய்யா பஞ்சாயத்த..
Post a Comment