CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, August 18, 2012

பதிவர்கள் நிலவரமும், கலவரமும் - 2


உண்மைத்தமிழன்:


                                                                           
நேரில் பார்த்தால் 'நாந்தாப்பா அந்த ஏ.வி.எம்.சரவணன்' ரேஞ்சில் பவ்யமாக தோன்றும் சென்னையின் அண்ணாச்சி. 'இவர் உண்மைத்தமிழன்னா அப்ப நாங்க எல்லாம் போலித்தமிழனுங்களா?' என்று பல பதிவர்களை கேட்க வைத்து போராளி ஆக்குபவர். அனைவரிடமும் பண்பாக பேசும் மென்மனதுக்காரர். அதே நேரம் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை போக்ரான் குண்டு பதிவின் வாயிலாக நிரூபித்தவர். அப்பதிவை படிக்க க்ளிக் செய்க: மேனே மாரா. மேனே மாரா.      

சிரிப்பு போலீஸ்: பதிவுகள் எப்படி காவியங்களாக மாறி தஞ்சை, மாமல்லை, உத்திரமேரூர் கல்வெட்டுகளில் பதியும் வண்ணம் தகுதி கொண்டதாய் அமைய வேண்டும் என்பதை கசடற கற்றவர். ராஜ்கிரனின் என் ஆச ராசாவே, எம்.ஜி.ஆரின் திருடாதே போன்ற சமூகப்படங்களை விட ரமேஷின் அறச்சீற்ற பதிவுகளை கண்டு அடுத்த மைக்ரோ செகண்டே திருந்தி அருவாள் சீட்டுக்கட்டு போன்றவற்றை கீழே போட்டு மூட்டை தூக்கி உழைக்க ஆரம்பித்த விளிம்பு நிலை மனிதர்கள் ஏராளம். அதில் இணையற்ற புரட்சியை செய்த பதிவென்று இதை சொல்லலாம்: நினைத்தாலே இனிக்கும்       

சென்னை பித்தன்: 

                     
அடையாறின் அல்டிமேட் ஸ்டார். பரபரப்பான தலைப்பை வைத்து ஆட்களை இழுக்கும் வசிய மருந்தை வைத்திருக்கும் ஹோல் சேல் டீலர். வரலாறு படத்தில்  அஜித்தின் அப்பாவாக நடிக்க கிடைத்த வாய்ப்பை துச்சமென தூக்கி எறிந்தவர். 'வேணும்னா அஜித்தை எனக்கு அண்ணனா நடிக்க சொல்லுய்யா' என்று அதிரடியாய் சொன்ன ரியல் யூத். சில நாட்களுக்கு முன்பு ஸ்கார்பியோ காரை வலது கால் சுண்டுவிரலால் தூக்கி கடாசி நிலமதிர வைத்த பில்லா. அதன்பொருட்டு ஏற்பட்ட லேசான சுளுக்கினால் ஓய்வில் உள்ளார். ஊழல் அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழிக்க மிஸ்டர் சென்னை அவர்கள்  விரைந்து வீறுநடை போட வாழ்த்துவோம்.

நாய் நக்ஸ் நக்கீரன்:  

                                                                   
மிஸ்ட் கால் குடுத்தே ரத்தக்காவு வாங்கும் ரவுசு பார்ட்டி எங்கள் நக்ஸ் மாமா.  200 ரூபாய் மட்டுமே மொபைல் பில் கட்டிக்கொண்டிருந்த என்னை(இன்னும் பலரை) 700 ரூவாய் கட்ட வைத்து வீட்டில் உண்டைக்கட்டி  வாங்கித்தந்த சிதம்பரம் ஆதீனம் இவர். ஆனால் பாசம் என்று வந்துவிட்டால் ஆறு கிலோ அன்பை அக்குளில் அள்ளிக்கொண்டு வந்து  அரவணைத்து அளவளாவுவதில் அண்ணனுக்கு நிகரில்லை. ஒரே படத்தில் உலகையே பேச வைத்த பவர் ஸ்டார் போல வலைப்பூ என்ற பெயரில் ஒன்றை கடனுக்கு தொடங்கி ஓவர்நைட் எவர் ஸ்டார் ஆன அன்னாரின் வலைப்பூ: எங்க மாமா நக்ஸ்.

சிராஜுதீன்:       

                                                                   
அரசியல் சாணக்யரும், பதிவுலக 'சோ'வுமான ரஹீம் கஸாலியின் சிஷ்ய பிள்ளை. ஐந்து நிமிடத்திற்கு மேல் யாராவது மொக்கை போட்டால் மறுகணமே பெருங்குறட்டை விட்டு தூங்கவல்ல வரம் பெற்றவர். பதிவுலகில் சிலசமயம் மட்டுமே தலைகாட்டுபவர். அந்த அரிதான நேரங்களில் எல்லாம் ரத்த சரித்திரம் படைக்காமல் போவதில்லை இந்த டீக்கடைக்காரர். குறைந்தது பத்து பேர் சட்டையையாவது கிழித்து விட்டு தனது சட்டையையும் கிழித்த பின்பே மறுவேலை பார்க்கும் மகான். வலது கை குடுப்பது வலது கைக்கே தெரியாத அளவிற்கு தானம் தருவதில் தர்மர். வள்ளல் பாரி..வீ ஆர் சாரி. அன்னாரது வலைப்பூ: வடைபஜ்ஜி.  

கலைஞர்:  

                                                                         
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட். இணையத்தில் புதிதாக களமிறங்கி இருக்கும் 'இணையப்போராளி'... தி ஆர்டிஸ்ட்(கலைஞர்). உ.பி.க்கள் அல்லாதவர்களை இணையப்போராளிகள் என்று கலாய்த்த கழக கண்மணிகள் வாங்கிய பெனால்டி கிக் இது. இனி நமக்கு தினம் தினம் தீபாவளிதான்!!   
............................................................................                                                                      

......................................................
சமீபத்தில் எழுதியது:

தேவுடு சேசின மனுஷுலு - விமர்சனம் 
.......................................................


68 comments:

NAAI-NAKKS said...

அப்பாடா...
மாப்பிள்ளை வாரார்ன்னு போட்டுட்டியா,,,இனி....
பாரு கூட்டத்தை...

சும்மா அல்லும்....

NAAI-NAKKS said...

யோவ்வ்வ்வ்வ் எல்லாரும் என்னுடைய ...ரோம்ப ரொம்ப சுமாரானா போடோவே போடுறீங்க....

இந்த வாட்டி வரும்போது உலக புகழ்
போட்டோகிரப்பர் வச்சி என்னை போட்டோ எடுத்து போடவும்...

Prabu Krishna said...

:-)))

Philosophy Prabhakaran said...

சிரிப்பு போலீஸுக்கு சரியான லிங்கை போதுமய்யா...

Philosophy Prabhakaran said...

மன்னிச்சூ... முந்தய பின்னூட்டத்தில் டு து ஆயிடுச்சு...

மோகன் குமார் said...

கலிஞறு பேஸ்புக்கிலிருந்து ரெண்டே நாளில் வாபஸ் ஆகிட்டாராமே?

Philosophy Prabhakaran said...

ஒவ்வொரு பதிவரைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் இதுதானாப்பா...

நானும் என் பங்குக்கு கொஞ்சம் சொல்றேன்... நிகழ்ச்சியை தொகுத்து வழங்குறவங்க நோட் பண்ணிக்கோங்க...

உனா தானா அண்ணாச்சி வடையில் கூட மெது வடை தான் சாப்பிடுவாராம்... இட்லின்னா குஷ்பூ இட்லி... அந்த அளவுக்கு மென்மையானவர்...

புதிய பதிவர்களை ஊக்குவிப்பதில் அண்ணாச்சிக்கு ஈடு இணை யாருமில்லை (இப்ப இல்ல ஒரு காலத்துல)...

காட்டான், வெளங்காதவன், பன்னிக்குட்டி ராம்சாமி, நாய் நக்ஸ் போன்ற பெயர் கொண்ட பதிவர்கள் மீது அண்ணாச்சிக்கு தனிப்பாசம் உண்டு...

பதிவுலகில் யார் சண்டை போட்டுக்கொண்டாலும் அண்ணாச்சிக்கு பிடிக்காது... கையை கொடுங்கலே, கட்டிப்புடிங்கலேன்னு சிங்கம் படத்து சூர்யா மாதிரி சமாதானம் செய்து வைப்பார்...

அப்புறம் முக்கியமான விஷயம், கட்டழகு தேகத்துடன் கதாநாயகிகள் வரிசையில் வந்து நின்றாலும் அண்ணாச்சி கண்களை மட்டும்தான் பார்ப்பார்... அம்புட்டு "கண்"ணியமானவர்...!

விக்கியுலகம் said...

முதல் - கன்னித்தீவு...

ரெண்டாவது - என்றும் இளமை...

மூன்றாவது - மொக்கை

நாலாவது - சரியா தெரியாது..

ஐந்தாவது - 50 வருச வரலாறு!

Philosophy Prabhakaran said...

// நாலாவது - சரியா தெரியாது.. //

மாம்ஸ் சட்டை கிழியாம தப்பிக்க பாக்குறாரு... விடாதீங்க சிராஜ் விரட்டிப் பிடிங்க...

விக்கியுலகம் said...

நாலாவது சரியா கிழிக்கனும்னா ரெடியா இருக்க சொல்லுங்க கிழிக்கிறேன்...அவ்வ்

வரலாற்று சுவடுகள் said...

:D :D

மதுரை சொக்கன் said...

தம்பி சிவகுமார்.அருமையான அறிமுகங்கள்.நீங்கள் எழுதியதைப் படித்து விழுந்து விழுந்து சிரித்ததில் சென்னை பித்தன் அவர்களுக்கு, லேசான காயம்,கால் சுளுக்குடன் வயிற்றுச் சுளுக்கு என்று பிரச்சினைகள் அதிகமாகி விடவே என்னைக் கருத்துச் சொல்லச் சொல்லி விட்டார்.அருமையான நகைச்சுவை உணர்வு உள்ளவர் நீங்கள்..என்றும் அதை இழந்து விடாதீர்கள். நாளை சந்திப்புக்கு செ.பி. வர இயலவில்லையென்றால் அதற்கு முழுக் காரணம் நீங்கள்தான்!:)

வாழ்த்துகள் சிவா.

பால கணேஷ் said...

ஹய்யா.. சிவகுமார் பார்வையில படாம நான் தப்பிச்சுட்டேன். ஜாலிதான்!

அரசன் சே said...

கலக்கல் சிவா சார் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் சிவா என்னை அமெரிக்கால ஒபாம பதிவெழுத கூப்டாரு ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்ட்டாரு என் கிரகம் இந்த தமிழ் பதிவர்கள்கிட்ட அதுவும் இந்த டெரர் கும்மி பக்கிகளோட வந்து மாட்டிக்கிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நாய் நக்ஸ் சான்சே இல்லை.

புதுகை.அப்துல்லா said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

அப்பாடா...
மாப்பிள்ளை வாரார்ன்னு போட்டுட்டியா,,,இனி....
பாரு கூட்டத்தை...

சும்மா அல்லும்....//

ங்கொய்யால அத்தனை பேர்கிட்டயும் கடன் வாங்கின வசூல் பண்ண வரத்தான் செய்வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

யோவ்வ்வ்வ்வ் எல்லாரும் என்னுடைய ...ரோம்ப ரொம்ப சுமாரானா போடோவே போடுறீங்க....

இந்த வாட்டி வரும்போது உலக புகழ்
போட்டோகிரப்பர் வச்சி என்னை போட்டோ எடுத்து போடவும்..//

சட்டியில் (ஜட்டியில் இல்லை) இருந்ததான அகப்பைல வரும்

s suresh said...

நகைச்சுவையுடன் சிறப்பான தகவல்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html

! சிவகுமார் ! said...//NAAI-NAKKS said...
அப்பாடா...
மாப்பிள்ளை வாரார்ன்னு போட்டுட்டியா,,,இனி....
பாரு கூட்டத்தை...

சும்மா அல்லும்....//

யாருய்யா அந்த மாங்கா மாப்ள??

! சிவகுமார் ! said...


//Philosophy Prabhakaran said...
மன்னிச்சூ... முந்தய பின்னூட்டத்தில் டு து ஆயிடுச்சு...//

முரசொலி படிச்சா இப்படித்தான் ஆகும் போல!!

! சிவகுமார் ! said...//மோகன் குமார் said...
கலிஞறு பேஸ்புக்கிலிருந்து ரெண்டே நாளில் வாபஸ் ஆகிட்டாராமே?//

முகமே புத்தகமாய் இருக்கும் தலைக்கு முகப்புத்தகம் எதற்கு!!

! சிவகுமார் ! said...

@ விக்கி

வாங்கோ மாம்சு

! சிவகுமார் ! said...


@ மதுரை சொக்கன்

மதுரை சொக்கரே...கவி மண்டபத்தில் இந்த தருமி பாட்டிசைக்க ஒரு பிட் பேப்பர் அருள்வீர்களா?? ஹரே ஓ சம்போ!!

! சிவகுமார் ! said...


//பால கணேஷ் said...
ஹய்யா.. சிவகுமார் பார்வையில படாம நான் தப்பிச்சுட்டேன். ஜாலிதான்!//

அடுத்து நீங்கதான் சார்.

! சிவகுமார் ! said...


//அரசன் சே said...
கலக்கல் சிவா சார் ..//

நன்றி அரசே. தனயன் ஆனேன். ஆமென்!!

! சிவகுமார் ! said...


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் சிவா என்னை அமெரிக்கால ஒபாம பதிவெழுத கூப்டாரு ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்ட்டாரு என் கிரகம் இந்த தமிழ் பதிவர்கள்கிட்ட அதுவும் இந்த டெரர் கும்மி பக்கிகளோட வந்து மாட்டிக்கிட்டேன்.//

பதிவாலே புத்தி சொன்னார். பதிவாலே பக்தி சொன்னார். பதிவுக்கு நீர் பாடு பட்டீர். அந்த பதிவுகள் பல விதம்தான்.

! சிவகுமார் ! said...

@ புதுகை அப்துல்லா

நன்றிங்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் எல்லோருக்கும் போட்டோ போட்டுட்டு எனக்கெங்கயா போட்டோ?

NAAI-NAKKS said...

வீடு சுரேஷ்-ஐ கெள்ரவிக்கவில்லை...என்று அவர் புக் பண்ண டிக்கெட்-ஐ
கான்சல் பண்ணிட்டாராம்....

ஒரு ஆளை நிப்பாட்டிடேயே....சிவா....

Philosophy Prabhakaran said...

நக்ஸ்... இரண்டு பாகம் தான் வந்திருக்கு... ஏன் அவசரப்படுத்துறீங்க...

Philosophy Prabhakaran said...

யாருய்யா மதுரை சொக்கன்... டபுள் ஆக்டிங்கா...

NAAI-NAKKS said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் எல்லோருக்கும் போட்டோ போட்டுட்டு எனக்கெங்கயா போட்டோ?//////

திருஷ்டி பூசணிக்காய் கடைசிலதான்..
உடைப்பாங்க...

NAAI-NAKKS said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
NAAI-NAKKS said...

அப்பாடா...
மாப்பிள்ளை வாரார்ன்னு போட்டுட்டியா,,,இனி....
பாரு கூட்டத்தை...

சும்மா அல்லும்....//

ங்கொய்யால அத்தனை பேர்கிட்டயும் கடன் வாங்கின வசூல் பண்ண வரத்தான் செய்வாங்க/////

நீங்க ஜெட்லியை சந்தடி கேப்புல இழுத்துவிடுறீங்க...

NAAI-NAKKS said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் சிவா என்னை அமெரிக்கால ஒபாம பதிவெழுத கூப்டாரு ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்ட்டாரு என் கிரகம் இந்த தமிழ் பதிவர்கள்கிட்ட அதுவும் இந்த டெரர் கும்மி பக்கிகளோட வந்து மாட்டிக்கிட்டேன்//////

ரமேஷ் ஒரு change-க்கு நாம சீனா ப்ளாக் எழுதுவோமா...???
இல்லாட்டி ஆப்பிரிக்கா,,நைஜீரியா,, ப்ளாக் ..???

உங்க பேர் சொன்னாலே change வருது பாருங்க...

வீடு சுரேஸ்குமார் said...

@NAAI-NAKKS said...
வீடு சுரேஷ்-ஐ கெள்ரவிக்கவில்லை...என்று அவர் புக் பண்ண டிக்கெட்-ஐ
கான்சல் பண்ணிட்டாராம்....

ஒரு ஆளை நிப்பாட்டிடேயே....சிவா....
/////////////////////////////
நக்ஸ்..மாமா....நக்ஸ் மாமா...!உனக்கு பயந்துட்டுத்தான் வரலை! கொய்யால..!

வீடு சுரேஸ்குமார் said...

ச்சுவ்கொமாரு....!செ.பி.ட்டிரையினை சுன்டுவிரல்ல நிறுத்தி சுளுக்கு என்றுதானே கேள்விப் பட்டேன்!

வீடு சுரேஸ்குமார் said...

சிராஜீதீன்...கடைபேருதான் இட்லிவடை ஆனா உள்ள கொத்துக்கறி...!பிரியாணி...!அவ்வ்வ்வ்வ்!

வீடு சுரேஸ்குமார் said...

உ.த. இப்ப இருந்தே பதிவு டைப்பிங்கில இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!

வீடு சுரேஸ்குமார் said...

விழா சிறக்க வாழத்துகள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் சிவா என்னை அமெரிக்கால ஒபாம பதிவெழுத கூப்டாரு ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்ட்டாரு என் கிரகம் இந்த தமிழ் பதிவர்கள்கிட்ட அதுவும் இந்த டெரர் கும்மி பக்கிகளோட வந்து மாட்டிக்கிட்டேன்//////

ரமேஷ் ஒரு change-க்கு நாம சீனா ப்ளாக் எழுதுவோமா...???
இல்லாட்டி ஆப்பிரிக்கா,,நைஜீரியா,, ப்ளாக் ..???

உங்க பேர் சொன்னாலே change வருது பாருங்க..//

நீங்க யாருயா ஆனந்த விகடன் நிருபர் கைல கால்ல விழுந்து என் விகடன்ல வந்த பிரபலம். நான் ஏதோ ஒரு ஓரத்துல பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறேன்

பட்டிகாட்டான் Jey said...


பதிவர்களை அறிமுகப்படித்திய விதம் அருமை. உங்கள் எழுத்தில் நவரசங்கள் நாட்டியமாடுகின்றன.

அண்ணன் உ.த. அவர்கள் போன ஆலோசனைக்கூட்டத்திற்கு வந்தபோது கொஞ்சம் சிகப்பாகத் தெரிந்தார், மேக்கப் போடாமல் இருக்கும்போது எடுத்தப் படத்தை போட்டுவிட்டீர்கள் என்று நினைக்கிறேன், இந்தமாதிரியான தவறுகளையும் வரும் பதிவுகளில் களையவும்.

சென்னை ஆணழகன் அருமைத் தம்பி சிரிப்புபோலீஸ் அவர்களின் புகைப்படம் போடாதது மிகவும் வருத்தமளிக்கிறது, அடுத்த பதிவில் சேர்த்துக்கொள்ளவும்.

அடுத்து ”அண்ணன்” சீனியர் அஜீத் சென்னை பித்தன் அவர்களின் புகைப்படம் மட்டுமே ஆறுதல் அளிப்பதாக உள்ளது. அண்ணன் கால் சீட் குடுக்க ஆரம்பித்தால் கோடம்பாக்கத்தில் ஒரு பெரிய ரவுண்ட் வரலாம் என்றே எண்ணுகிறேன்.

சிங்கம் சிராஜ் அவர்கள் அசந்து தூங்கும் போது எடுத்த புகைப்படத்தை போட்டது அவரின் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை...அவரது ரசிகர்கள் அர்த்த ராத்திரியில் உங்கள் வீட்டின் மேல் கல்லெறியக் கூடும் எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நலம்.

கடைசியாக தானைதலைவர் ஈழம் ஈந்த ஈகையாளர், முத்தமிழுக்கும் முதலாளி உலகத்தின் அத்துனை சாதனைகளையும் சாதித்த ஒலகின் ஒப்பற்ற தலைவர் அவர்கள் முகப் புத்தகத்தில் அக்கவுண்ட் ஓபின் பண்ணியத அறிந்து அளவிலா ஆனந்தம் அடந்த மானிடப் பிறவியில் அடியேனும் ஒருவன்.
அவர் யூ டியூபி-ல் அக்கவுண்ட் ஓபன் பண்ணியதை இங்கே குறிப்பிடாமல் விட்டு இருட்டடிப்பு செய்ததை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

என் விகடனில் பதிவு எழுதாதவர்களின் வலைத்தளத்தை முதலில் அறிமுகம் செய்வதாக பன்னிக்குட்டி ராமசாமி என்னிடம் சொன்னதாக நினைவு. அது போல் இல்லாமல் இங்கு தொடர்ந்து பதிவு எழுதுபவர்களை அறிமுகப்படுத்தவும்.

கடைசியாக உங்களுக்கு ஒரு டிப்ஸ் : நீங்க பார்ப்பதற்கு தளபதி படத்தில் வரும் அரவிந்தசாமி போல் அழகாக இருப்பதால் உங்களின் ஃபுல் சைஸ் புகைப்படம் ஒன்றை உங்கள் வலைத்தளத்தின் முகப்பில் வத்தால் உங்கள் பதிவு யாவாரம் பிச்சிகிட்டு போகும் என்பதையும் சொல்லி , இந்த கமெண்ட் அடிப்பதற்கே என் தாவு பாதி தீர்ந்து விட்டதால் இரண்டு நாள் ரெஸ்ட் எடுக்க செல்கிறேன். நன்றி. வணக்கம்.

பட்டிகாட்டான் Jey said...

நாய் நக்ஸ் புகைப்படத்தை கம்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் வயதாகக் காட்டி அவரை கடும் மனவுலைச்சலுக்கு ஆளாகிய மெட்ராஸ்பவன் சிவக்குமார் அவர்களுக்கு என் கண்டனங்களை இந்த தனி பின்னூட்டத்தின் வாயிலாக பதிவு செய்கிறேன்.

நாய்-நக்ஸ் அவர்கள் இருவது வயது இளங்காளை என்றுதான் என்னிடம் சொன்னார்கள். ஆனால் இங்கிருக்கும் புகைப்படம் , இவர் துரைமுருகனுக்கு அண்ணனோ என்று தோன்றும் விதமாக கிராபிக்ஸ் மற்றும் ஒட்டு வேலைகள் செய்து போடப்பட்டிருக்கிறது. நக்ஸ் அண்ணனிடம் சொல்லி உங்கள் வதளத்தினை கிழ்ழி கிழியென்று விகடன் குழுமத்தில் செய்தி வரவழைப்பதற்கு நீண்ட நேரம் ஆகாது இருந்தாலும் நக்ஸ் அண்ணனுக்கு மன்னிக்கும் மனப்பான்மை அதிகம் என்பதால் ஒன்றும் செல்லாமல் செல்கிறார் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

மீண்டும் நன்றி வணக்கம்.

NAAI-NAKKS said...

@ pattikattaan....

Nee
eppaya...
Panni kutty
password-i...
HACK...
panna.....??????

Illai....
Panni...
Unga...
Password-i
hack...
Pannittaara??????

! சிவகுமார் ! said...


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் எல்லோருக்கும் போட்டோ போட்டுட்டு எனக்கெங்கயா போட்டோ?//

தங்கள் வலைப்பூவில் தாங்களே புகைப்படத்தை நீக்கிவிட்டமையால் அதை வெளியிட தக்க தருணம் அமையவில்லை. இதற்காக நாளை காலை கடற்கரையோரம் இரண்டு ஏர்கூலர், ஒரு கர்ல் ஆன் மெத்தையுடன் இருபது நிமிட உண்ணா நோன்பு இருக்க வேண்டாமென மன்றாடி, முக்காபுலா ஆடி கேட்டுக்கொள்கிறேன் பெருந்தகையே!!

! சிவகுமார் ! said...


//Comment deleted
This comment has been removed by the author.//

ஆத்தர். தங்கள் வருகைக்கு நன்றி!!

! சிவகுமார் ! said...


//s suresh said...
நகைச்சுவையுடன் சிறப்பான தகவல்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாயில் 180 கிமீ செல்லும் ஸ்கூட்டர்
http://thalirssb.blogspot.in/2012/08/180.html
பொரியரிசி கல்யாணம் ! பாப்பா மலர்!

http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_18.html //

சரீங்..ணா.

! சிவகுமார் ! said...


//Philosophy Prabhakaran said...
யாருய்யா மதுரை சொக்கன்... டபுள் ஆக்டிங்கா...//

அவர் அய்யம்பேட்டை கலியபெருமாள் இந்திரன். இவர் சந்திரன்.

! சிவகுமார் ! said...


//வீடு சுரேஸ்குமார் said...
@NAAI-NAKKS said...
வீடு சுரேஷ்-ஐ கெள்ரவிக்கவில்லை...என்று அவர் புக் பண்ண டிக்கெட்-ஐ
கான்சல் பண்ணிட்டாராம்....

ஒரு ஆளை நிப்பாட்டிடேயே....சிவா....
/////////////////////////////
நக்ஸ்..மாமா....நக்ஸ் மாமா...!உனக்கு பயந்துட்டுத்தான் வரலை! கொய்யால..!//

வீடுக்கே வீடு கட்டி அடிக்கிற நக்ஸ் மாமா..எல்லைல கால் வைங்க. ஆப்பு ரெடி.

! சிவகுமார் ! said...


//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நீங்க யாருயா ஆனந்த விகடன் நிருபர் கைல கால்ல விழுந்து என் விகடன்ல வந்த பிரபலம். நான் ஏதோ ஒரு ஓரத்துல பதிவர்ன்னு சொல்லிக்கிட்டு திரியிறேன்//

அரியர்ஸ் மாணவ நிருபராக பணியாற்ற உள்ள நக்கீரன் மாமாவை பகடி செய்த ரமேஷே. என்ன ஒரு ஆணவ செருக்கு, இறுமாப்பு. ஜெய் ஜிகர்தண்டா. நக்ஸ் நவதானிய படையே பொங்கி எழு!!

! சிவகுமார் ! said...

@ பட்டிக்காட்டான்

பதிவுக்கு கீழ என்னைய்யா இது இன்னொரு உ.த. அண்ணாச்சி ஸ்டைல்ல ஒரு பதிவு.

- உ.த. அண்ணன் மேக் அப் மேட்டரை ஒடச்சி புட்டீரே.

! சிவகுமார் ! said...

// பட்டிக்காட்டான் said..

கடைசியாக உங்களுக்கு ஒரு டிப்ஸ் : நீங்க பார்ப்பதற்கு தளபதி படத்தில் வரும் அரவிந்தசாமி போல் அழகாக இருப்பதால்....//

போதும். இல்லை போதும்னு சொன்னேன்.

! சிவகுமார் ! said...

// பட்டிக்காட்டான் said..

உங்களின் ஃபுல் சைஸ் புகைப்படம் ஒன்றை உங்கள் வலைத்தளத்தின் முகப்பில் வத்தால் உங்கள் பதிவு யாவாரம் பிச்சிகிட்டு போகும் என்பதையும் சொல்லி...//

ஏற்கனவே யாவாரம் வயித்தால போவுது. இதுல புதுசா லேக்கியம் வேற விக்க ஐடியா. அமோகம்..!!!

! சிவகுமார் ! said...

//பட்டிகாட்டான் Jey said...
நாய்-நக்ஸ் அவர்கள் இருவது வயது இளங்காளை என்றுதான் என்னிடம் சொன்னார்கள். //

இன்னும் ஒன்றரை காளையை சேர்த்து கொள்க.

! சிவகுமார் ! said...

//பட்டிகாட்டான் Jey said...

ஆனால் இங்கிருக்கும் புகைப்படம் , இவர் துரைமுருகனுக்கு அண்ணனோ என்று தோன்றும் விதமாக //

ஹா.ஹா..பலே டிஸ்கவரி தலைவா.

! சிவகுமார் ! said...

//பட்டிகாட்டான் Jey said...

நக்ஸ் அண்ணனிடம் சொல்லி உங்கள் வதளத்தினை கிழ்ழி கிழியென்று விகடன் குழுமத்தில் செய்தி வரவழைப்பதற்கு நீண்ட நேரம் ஆகாது//

ஏழெட்டு விகடனை வாங்கி போட்டா கடிச்சி கொதறுவாரே..அதை சொல்றீங்களா??

செங்கோவி said...


கலக்கல் பதிவுய்யா..அதிலும் நக்கீரர்-பித்தன் ஐயா பகுதி படித்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்!

சீனு said...

ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுத்த அறிமுகம் ஆக அடடே பேஷ் பேஷ்...... அதிலும் தலிவர் பற்றிய அறிமுகம் பதிவுலகமெங்கும் ஒரே சிரிபொலி தான்

சீனு said...

// வலது கை குடுப்பது வலது கைக்கே தெரியாத அளவிற்கு தானம் தருவதில் தர்மர்// ஹா ஹா ஹா

FOOD NELLAI said...

சிவாவின் பாணியில் சிரிக்க வைத்த விமர்சங்கள். சிரிப்பு போலீஸ் படம் வேண்டுமென்றால் ராயல்டி அனுப்பவும். உடன் அனுப்பி வைக்கப்படும். ஆனா, அது அவர் சிரிக்க மறந்த தருணத்தில் எடுத்தது!

Easy (EZ) Editorial Calendar said...

பதிவர்கள் போட்டோ போடுவது நல்ல முயற்ச்சி

நல்ல இருக்குநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

! சிவகுமார் ! said...

@ செங்கோவி

நக்கீரன் பற்றிய ‘சிதம்பர ரகசியங்கள்’ இன்னும் உண்டு.

! சிவகுமார் ! said...

@ சீனு

வாங்க தோழா.

! சிவகுமார் ! said...

@ உணவு நெல்லை

உடனே அனுப்புங்க சார்.

FOOD NELLAI said...

ராயல்டி ப்ளீஸ்.

Related Posts Plugin for WordPress, Blogger...