ராஜபார்ட் ரங்கதுரை:
எங்கே மத்திய மற்றும் மாநில அரசுகளின் தடைகளால் டெசோ
நடக்காமல் போய் விடுமோ என்ற வருத்தம் கழக தலைமையை விட வீக்கெண்ட் பொழுதுபோக்கிற்கு
சினிமா டிக்கட், ஒலிம்பிக் இறுதி நாள் போட்டிகள் ஒளிபரப்பு என அனைத்தையும்
உடப்பில் போட்டுவிட்டு காத்திருந்த சாமான்யர்களின் மனதில் தேனை வார்த்தது நீதிமன்ற
தீர்ப்பு. சால்ட் அண்ட் பெப்பர் லுக் மீசையுடன் தொல்.திருமா அடித்த ஜால்ராவில்
செவுலு அவுலு விட்டுக்கொள்ள, ‘அண்ணே,அக்கா’ என்று வெளிநாட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட்
ஒரு பக்கம் இதயத்தை சொறிய....பலே பேஷ்.
தேவி பேரடைஸ் கப்பாகுட்டி அளவிற்கு பிரம்மாண்ட ஷோ காட்ட முடியாடிவினும், பேபி ஆல்பர்ட் பகல் காட்சி அளவில் கலைஞர் அரங்கிலாவது
டெ’ஷோ’ காட்ட உ.பி.க்கள் பட்ட பாடும் கொஞ்சமா நஞ்சமா? எப்படியோ மாநாடு நடந்தேறிவிட்டது. ஆனால் ஷோ முடிந்து
இவ்வளவு நேரமாகியும், இன்று மதியம் வரை ஈழம்
மலரவில்லை என்று அங்கலாய்க்க வேண்டாம் சகோதரர்களே. அ.தி.மு.க. ஆட்சியில்
உதயசூரியனுக்கு 15,000 மெகாவாட் மின்சாரம் தராமல் இருட்டடிப்பு
செய்துவிட்டதால் சூரிய ஒளியின் தாக்கம் வெகு குறைவாக உள்ளது. அதை கேட்க வேண்டியது
ஐ.நா. சபையின் பொறுப்பு. மாநாட்டின் மொத்த தொகுப்பும் சிரிப்பொலியில் மறுக்கா
ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை இந்நேரத்தில் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டு
இருக்கிறோம்.
..........................................................................
Julayi(Telugu) :
பலகோடி ரூபாய் பேங்க் பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலை அதிபுத்திசாலியான ‘ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அரவிந்த் எப்படி மடக்குகிறார் என்பதே ஒரே லைன்.
பல நாள் பட்டினி கிடந்ததுபோல் இலியானாவின் தோற்றம், ஒரே மூவ்மெண்டை படத்தில் பல்வேறு பாடல்களுக்கு தரும்
அல்லு, தேவி ஸ்ரீயின் வெகு சுமாரான இசை. எல்லாம் இம்சை.
ஒவ்வொருமுறையும் திருடி பிடிபடும் கேரக்டரில் பிரம்மானந்தம் பிரமாதம்.
வில்லன்களின் தவறுக்கு ஒரே சாட்சியான அல்லுவை வேறு ஊருக்கு போலீஸ் அனுப்பி
வைக்கையில் ‘துபாய் மாதிரி வேற நாட்டுக்கு
அனுப்புங்க சார் என்னை’ என அல்லு கூற அதற்கு’ துபாயா? நீ செல்லப்போவது ஹைதராபாத்’ என்கிறார் போலீஸ். “பக்கத்து ஊருக்கு அனுப்பறதுக்கு
விட்னஸ் ரீலோக்கேஷன் ப்ரோக்ராம்னு பெருசா பேரு வேறயா?” வசனம் கலகலப்பு. ஆரம்பத்தில் சுமாராக சென்ற படம், இடைவேளைக்கு பின் என்னை நித்திரைக்கு உட்படுத்த
ஆரம்பித்தது. புளித்து போன க்ளைமாக்சை பார்த்துவிட்டு ஒருவழியாக ரிலீஸ் ஆனேன்.
............................................................................
இந்தியன்:
காந்திக்கு பிறகு சிறந்த
பத்து இந்தியர்கள் பற்றிய சர்வேவை அவுட்லுக் ஆங்கில இதழ் தனது சுதந்திர தின கவர்
ஸ்டோரியில் வெளியிட்டு உள்ளது. காந்திக்கு பிறகு அம்பேத்கர்தான் என வாக்குகள்
விழுந்துள்ளன. டெண்டுல்கர் எட்டாவது இடத்தில். ஜெய் ஹோ!!
............................................................................
புது வசந்தம்:
புது வசந்தம்:
‘திடங்கொண்டு போராடு’ எனும் வலைப்பூவில் கடந்த
ஆறுமாதங்களாக எழுதி வருகிறார் சென்னையின் இளம் பதிவர் சீனு. இவர் எழுதியதில்
எனக்கு பிடித்த பதிவிற்கான லிங்க்: 'அக்கா கடை'.
...........................................................................
கர்ணன்:
சென்னை பதிவர் சந்திப்பில் வேடியப்பன் அவர்களின் புத்தக கண்காட்சியும் இடம்
பெறுகிறது. அனைத்து புத்தகங்களும் 90% தள்ளுபடியில் தரப்படும்
என்று அவர் அறிவித்து இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. வாசிப்போரை
ஊக்குவிக்க வேடியப்பனின் இத்தகு ஈர மனம் கொண்ட செயல்களால் இதயம் நெகிழ்ந்து, மனது
கொக்குகிறது.
..................................................................................
Gangs of Wasseypur - 2:
வாசெபூரில் நடக்கும் கொள்ளைகள், பழிவாங்கல்கள் போன்றவற்றை ஒரு
டாகுமெண்டரி போல தொடங்கி ஏகப்பட்ட பாடல்களுடன் முதல் பாகம் எடுக்கப்பட்டது. எண்ணற்ற
கிளைக்கதைகள் மற்றும் படத்தின் நீளம் அதிகமாக இருந்ததாலும் சற்று அயர்ச்சியை தந்தது
பாகம் ஒன்று.
......................................................................................
யுத்தம் செய்:
தங்கம் வெல்ல முடியாவிடினும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஆறு பதக்கங்களை ஒலிம்பிக்கில் வென்றுள்ளது இந்தியா. தங்கம் வெல்ல அருமையான வாய்ப்பு இருந்தும் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் உடல்நிலை ஒத்துழைக்காததால் வெள்ளியோடு திருப்தி அடைய வேண்டியதானது. இறுதிப்போட்டிக்கு முன்பு மூன்று முறை வாந்தி எடுத்து வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டார் சுஷில். இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
..........................................................................................
டி.எம்.எஸ்ஸின் குரலுக்காக 'மட்டுமே' இப்பாட்டை கேட்கத்தோன்றுகிறது.
............................................................................................
13 comments:
செம மீல்ஸ்பா...
டெஷோ.....அட புதுசா இருக்கே
//கர்ணன்://
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
புல் மீள்ஸ்......
பாஸ் எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா இல்ல நெஜமாவே 90% தள்ளுபடியா?
நேற்று சீனுவோடு தனியா பேசிக்கொண்டு இருக்கும்போதே மைல்டா ஒரு டவுட்டு இருந்துச்சு.... இன்னைக்கு கன்ஃபார்ம் ஆகிடுச்சு.... என்னவா? சீனுவை அறிமுகம் செய்ய எவ்வளவுய்யா கமிஷன் வாங்கினே?
வேடியப்பனை எப்படியும் கேடியப்பன் ஆக்காம விடமாட்டரு இந்தாளு... நடக்கட்டும்...நடக்கட்டும்
நல்ல சாப்பாடு! அருமை!
இன்று என் தளத்தில் தயக்கம் ஏன் தோழா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_13.html
செம மீல்ஸ் சிவா....
:-)
அனைத்து சுவைகளுடன் ருசித்தது உணவு.
// அனைத்து புத்தகங்களும் 90% தள்ளுபடியில் // அப்படியா சொன்னாரு ... என்னக்கு என்னவோ நீங்க சொல்ல வச்ச மாதிரில்லா இருந்துச்சு....
உங்கள் மீல்சில் என்னையும் சேர்த்துக் கொண்டதற்கு நன்றி சிவா (சார் சொல்லாம இருக்க முடியல சார் ஹி ஹி ஹி )... மதியமே பதிவைப் பார்த்துவிட்டேன் படிக்க நேரமில்லை... அலுவலகம் கிளம்பும் அவசரத்தில் இருந்தேன்.. வந்து பார்த்தால் மீல்சில் நானும் இருக்கிறேன்...இனிமையான இன்ப அதிர்ச்சி...
கடைசியில் தான் ஒன்றை புரிந்து கொண்டேன் நீங்கள் பரிமாறிய ஒவ்வொரு பாதார்த்ததிலும் ஒரு சினிமாவின் பெயர் இருப்பதை....
அண்ணே கஸாலி அண்ணே ஏன்னே ஏன் இப்புடி.....
லிஸ்ட்ல போட்ட எல்லா தமிழ் படங்களும் பாத்துட்டேன், அந்த தெலுங்கு+இந்திப் படம் பாக்கலை...:)
உளவுத்துறை ஒன்று உங்களை உத்துப்பார்த்துட்டே இருக்கு சிவா. #நண்பர் கசாலி. காதலியைக்கூட கவனமா கையாளுங்க. :))
சிவா எனக்கு 20 புத்தகங்கள் வேண்டும். இந்த புத்தக திருவிழாவில் தள்ளுபடியில் வாங்கி விடுவேன் என்று நினைக்கிறேன். தங்களின் அரிய தகவலுக்கு நன்றி
Post a Comment