CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, August 20, 2012

ஸ்பெஷல் மீல்ஸ் (08/20/12)


இணைந்த கைகள்:

                                            திரு.சென்னை பித்தன், தம்பி சீனு, இராமாநுசம் ஐயா

அன்பு இதயங்களுக்கு வணக்கம். வரும் ஞாயிறு 26 ஆம் தேதி  சென்னையில் நடக்கவுள்ள  பதிவர் சந்திப்பிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.  வயது, அந்தஸ்து, இனம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் ரீசைக்கிள்  பின்னில் போட்டுவிட்டு நல்லெண்ணம் கொண்ட மனங்கள் சங்கமிக்கும் நாளாக அமையட்டும். 
...................................................................................

வாழ்த்துகள்: 
இஸ்லாம் சகோதர, சகோதரிகளுக்கு இனிய ரமலான் வாழ்த்துகள்.  ஏழைகளுக்கு உதவிகள் புரியும் வாய்ப்பை தந்த இறைவனுக்கு நன்றி கூறி இன்பம் பொங்க இத்திருநாள் அமையட்டும்.
..................................................................................    

நான் அவன் இல்லை: 
ரத்தத்தின் ரத்தமே எனும் தலைப்பில் கல்கி வார இதழில் எம்.ஜி.ஆர் பற்றிய தொடர் ஒன்று வெளியாகி வருகிறது. இவ்வாரம் அவர் குறித்து எழுதி இருப்பவர் பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ். அதில் அவர் தந்த அரிய தகவல் ஒன்று: 'எம்.ஜி.ஆரை மலையாளி என்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி. அவருடைய மூதாதையர் கொங்கு நாட்டை சேர்ந்த மன்றாடியார் இனத்தில் வந்தவர்கள். பொள்ளாச்சிதான் பூர்வீகம். ஹைதர் அலி காலத்தில் மதம் மாற விரும்பாத பல இந்துக்குடும்பங்கள் இடம் பெயர்ந்து பாலக்காடு கணவாய் வழியாக கேரளப்பகுதி கிராமங்களில் குடியேறினர். அதில் எம்.ஜி.ஆர். குடும்பமும் ஒன்று. பொள்ளாச்சி மன்றாடியார்தான் மருவி மன்னாடியார் ஆனது'.  

தமிழகத்தை தமிழர் ஆள்வது எப்போது என்று டொட்டடொய் அரசியல் செய்யும் தலைகள் இப்போது என்ன பேசுவார்கள்?
...................................................................................

அட்டகத்தி: 
டெ'ஷோ'வை ஹிட் ஆக்க விடாமல் வைகோ, சீமான் உள்ளிட்ட பலர் செய்வினை வைக்கிறார்கள் என்று லைட் அவுசில் ஏறி கொக்கரக்கோ என்று கூவிய ரெட் அண்ட் ப்ளாக் கண்ணுகளே, அதற்கு முன்பாக இது குறித்து இலங்கை தமிழர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டீர்களா? லண்டனில் (ஒரிஜினல்) உண்ணாவிரதம் இருந்த சிவந்தன் கோபி எனும் இலங்கைத்தமிழர் ஆர்டிஸ்ட்டை (லைவ் வள்ளுவர்) கழுவி கழுவி ஊற்றி இருக்கிறார்.தெரிஞ்ச ஷோவை மட்டும் ஓட்டுங்கன்னு சொன்னா கேட்டாத்தான. கவுண்டமணி சொன்ன வசனம் ஒன்று இந்நேரத்தில் நினைவிருக்கு வருகிறது:  "கூட்டத்த பாத்தா அகநானூறு, புறநானூறுன்னு சொல்றானுங்க. கூட்டம் கலஞ்சதும் முன்னூறு,நானூறுன்னு கேக்கறானுங்க".
.............................................................................     
   
புரியாத புதிர்:  
இவ்வாரம் வெளியான புதிய தலைமுறை இதழின் தலையங்கத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் நிலை குறித்து எழுதி இருந்தனர். தனிநபர் பிரிவில் வெற்றிகளை பெற்ற இந்தியா குழுவாக(ஹாக்கி போன்றவை)  ஆடுகையில் தோற்பதற்கு ஒரு மொக்கையான காரணத்தை மேற்கோள் காட்டி உள்ளது அத்தலையங்கம். அது பின்வருமாறு: 'இது இந்தியர்களின் மனோபாவம்(?).இந்தியா அணியாக செயல்படுவதில்லை. நம் ஒவ்வொருவருடைய ஈகோவும் இமயத்தை விடப்பெரியது. அவற்றை சமன் படுத்துவது அத்தனை எளிதல்ல' என நீள்கிறது உதாரணம். 

புடலங்காய்த்தனமாக இருக்கிறது இந்த வரிகள். இதே இந்திய ஹாக்கி அணிதான் ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு நடந்த தகுதி சுற்று போட்டிகளில் அனைத்து தேசங்களையும் வீழ்த்தி வெற்றிக்கோப்பையை பெற்றது. இதுபோக கிரிக்கெட் உலகக்கோப்பையையும் வென்றது நமது தேசம்தான். பின்பு எதை வைத்து இப்படி ஒரு திராபையான உதாரணத்தை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. நாளை இன்னொரு ஹாக்கி போட்டியில் இந்தியா கோப்பை வென்றால் இந்தியர்கள் அனைவரிடமும் ஒற்றுமை பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டது என்று எழுதுவார்களோ? 
..............................................................................

மகிழ்ச்சி:    
வீடு திரும்பல் வலைப்பூவிற்காக மோகன்குமார் அவர்கள் இரவுப்பணி குறித்து கேட்ட கேள்விகளுக்கு நான் அளித்த பதில்கள் 'புதிய பார்வை' எனும் இதழில் வெளியாகி உள்ளது. இவ்விதழின் ஓனர் சின்ன மேடம் சசிகலாவின் துணைவர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது(!).  
............................................................................

வல்லவனுக்கு வல்லவன்: 
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை மேட்டரில் கத்தை கத்தையாக சொத்தை சேர்த்து 1.76 லட்ச கோடிகள் லபக்கிய சாதனையை இன்னும் சில நாட்கள் கொண்டாட விடவில்லை இன்னொரு செட் பெருச்சாளிகள். 1.86 லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி ஊழல் செய்து புதிய சாதனை படைத்துவிட்டனர். பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என வழக்கம்போல எதிர்க்கட்சிகள் கோஷமிட நம்ம ஆளு வி.ஜி.பி. கோல்டன் பீச்சில் நிற்பவர் போல அசராமல் கெடக்கிறார். ஜெய் ஹோ...!!
............................................................................

சர்வாதிகாரி: 
டி.ஆர்.பி.ரேட்டிங்கில் விறுவிறுவென முதல் இடத்தை பிடித்த புதிய தலைமுறை சேனலை சில நாட்களுக்கு முன்பு சட்டென கட் செய்து விட்டது எஸ்.சி.வி. அது போல பழைய பாடல்களை ஒளிரபரப்பி பாப்புலர் ஆகி வந்த முரசு சேனலுக்கு போட்டியாக சன் லைப் என்றொரு சேனலை திடீரென துவக்கி உள்ளது சன். போட்டிகளை ஆரோக்யமாக எதிர்கொண்டு தனது சேனலில் சிறந்த நிகழ்ச்சிகளை தயாரிக்காமல் அடுத்தவர் சேனலை ஆப் செய்வது அல்லது அங்கு ஹிட்டாகும் நிகழ்ச்சிகளை அப்படியே காப்பி அடிப்பது போன்றவை ரசிக்கும்படி இல்லை. இந்த லட்சணத்தில் தொழில் தர்மம் எனும் கெட்ட வார்த்தையை பேசி என்ன பிரயோஜனம்?
.............................................................................

உன்னால் முடியும் தம்பி:  
சென்னை பதிவர் சந்திப்பில் கவியரங்கம் இடம் பெறுவதால் நானும் சில கவிகள் பாட முடிவு செய்தே விட்டேன். அதற்கு முன்பு 'சோதனை' ஓட்டமாக இந்த படைப்பை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன். இதற்கு கிடைக்கப்போகும் வரவேற்பை பொறுத்து எனது கவிதைப்பயணம் தொடரும். இதோ அது:

ஒரு ஒரு மலர்களுமே கூறுகிறதே 
வாழ்க்கை என்பது அடித்து ஆடும் ஆடுகளமே.
ஒரு ஒரு காலையுமே கூறுகிறதே 
ராத்திரியானால் விடியல் ஒன்று வந்திடுமே.

தன்னம்பிக்கை என்பது வேண்டும் உங்கள் வாழ்வில் 
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஏதோ ஒரு நாளில்.
மனதே ஓ மனதே நீ மாறிவிடு.
பரங்கிமலையோ அது அண்டார்டிக் பனிமலையோ 
நீ மோதிவிடு.
.............................................................................. 
  
சென்னைக்காதல்: 
மெட்ராஸ் பட்டினத்தின் பிறந்த தினம் தலைநகரெங்கும் வழக்கம்போல் விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தி ஹிந்து நாளிதழ் மெட்ராஸ் நகரின் அரிய புகைப்பட கண்காட்சியை அபிராமி மாலில் நடத்தி வருகிறது. இது போக இன்னும் ஏராளமான நிகழ்ச்சிகள் நகரமெங்கும். அனுபவி ராஜா அனுபவி படத்தில் நகரத்தின் நிலையை நையாண்டி கலந்த வரிகளால் சொல்லி இருப்பார் கவியரசு கண்ணதாசன். தலைவர் டி.எம்.எஸ்ஸின் குரலில் தூள் கிளப்பும் அந்த பாடலுக்கு நாகேஷின் நடிப்பு மிகப்பிரமாதம்.

எனக்கு பிடித்த வரிகள்: 
'தேராட்டம் காரினிலே ரொம்ப திமிரோடு போறவரே. எங்க ஏரோட்டம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?'.ஹாப்பி பர்த்டே மை டியர் மெட்ராஸ்.     
...................................................................................

.................................................
சமீபத்தில் எழுதியது:
தேவுடு சேசின மனுஷிலு - விமர்சனம்
................................................ 
  


                                                                 

25 comments:

ராஜ் said...

// இந்தியர்கள் அனைவரிடமும் ஒற்றுமை பூத்து குலுங்க ஆரம்பித்து விட்டது என்று எழுதுவார்களோ? //
கண்டிப்பா அப்படி தான் எழுதுவாங்க பாஸ்..

பட்டிகாட்டான் Jey said...

கலக்கல் காக்டெய்ல்.

பால கணேஷ் said...

சென்னைப் பாடல் பிரமாதம். நாகேஷ் நடந்துவரும் டிராபிக் கம்மியான மவுண்ட் ரோடு... ஹுஊஊஊம்! தம்பி... நீங்க இவ்வளவு அழகா கவிதை(!) எழுதுவீங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல... பதிவர் சந்திப்புல பெரிய ஜனக்கூட்டம் வந்துட்டா நிச்சயம் உங்க கவிதைய அரங்கேத்திடலாம்.

Unknown said...

அடுத்த வைரமுத்துவே!
படுத்த பா.விசயே!
ஐ.டியில் பணிபுரியும் வாலியே!
சென்னையின் கீ போர்டு
தட்டும் கம்பனே!
உன் மவுசும் கவி பாடும்!
பாடு....ச்சுவா! பாடு...!
உன் பாடலை கேட்க ஓடோடி வரும்
நக்ஸ் மாமாவுக்காவது பாடு!

CS. Mohan Kumar said...

இந்த ஸ்டைலில் தான் சென்னைபித்தன் ஐயா , சீனு, ராமான்சம் ஐயா மூவருமுள்ள போட்டோ வேணும் என நீங்கள் செய்த டைரக்ஷனை ரசித்தேன்.

Admin said...

சிறப்பு..

கோவை நேரம் said...

கவிதைல அசத்துறீங்க..நாங்க தான் பாவம்...

நாய் நக்ஸ் said...

சிவா....எனக்கு பூனை படை பாதுகாப்பு
ரெடி பண்ணிட்டீங்களா?????

வரலாறு ரோம்ப முக்கியம்....
ஆமா....

சென்னை பித்தன் said...

மூன்றி இளைஞர்கள் ஃபோட்டோ 1காலைதான் ஒரு பூணல் கல்யாணத்தில் ஒரு பிடி பிடித்துவிட்டு வந்தேன்.இங்கு இன்னும் சுவையான ஐட்டங்கள்!
அஜீரணம்தான்!

Yoga.S. said...

ஸ்பெஷல் மீல்ஸ் சுல மட்டுமில்ல,கவிதையிலையும் கலக்குறீங்க,சிவா சார்!(என்ன,கொஞ்சம் புரிய மாட்டேங்குது!)

arasan said...

கலக்கல் மீல்ஸ் சிவா சார்...
கவிதை செம கலக்கல் ..
பிறந்த நாள் கொண்டாடும் சென்னைக்கு வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

We will meet
Will Meet
Meet

#Simma Narasimmaa

”தளிர் சுரேஷ்” said...

புல் மீல்ஸ் சூப்பர்! நன்றி!

இன்று என் தளத்தில்
அஞ்சு ரூபாய் சைக்கிள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_20.html

Unknown said...எங்களை வணங்க வைத்த சிவக்குமாருக்கு, வணக்கம் கணக்கில!

நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாம் நல்லாருக்குங்கோ....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////NAAI-NAKKS said...
சிவா....எனக்கு பூனை படை பாதுகாப்பு
ரெடி பண்ணிட்டீங்களா?????/////

என்னது நாய் நக்சுக்கு பூனைப்படையா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கவிதை ஜூப்பர், ஒரு ஆர்மோனிய பொட்டிய தூக்கிக்கிட்டு கவிதய பாடுனீங்கன்னா... வசூல் பிச்சிடும்....!

Easy (EZ) Editorial Calendar said...

ஸ்பெஷல் சாப்பாடு நல்ல இருக்கு

நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

சீனு said...

சென்ற முறையும் என் எழுத்துக்களையும் இம்முறை என்னையும் அறிமுகப்படுத்திய மெட்ராஸ் பவன் ஓனர் அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்.. இவன் விழாக் கமிட்டியார் (விழாக் கமிட்டியா அது எங்க இருக்குன்னு லா கேக்கக் கூடாது.)

வவ்வால் said...

சிவகுமார்,

அறுசுவை அல்லது நவரசம் அல்லது புளிரசம் எப்படின்னு சொல்ல முடியாத பழரசமா இருக்கு பதிவு :-))
(நல்லா இருக்குன்னு ஒரே வரியில எப்படி சொல்லுறது)

உங்க கவித பார்த்ததும் எனக்குள்ள தூங்கிட்டு இருக்க கவித மிருகம் ப்பிறாண்டுது :-))

--------

ஆரூர் தாசுக்கு இப்போ தான் மன்றாடியார், மன்னாடியார் எல்லாம் நியாபகம் வந்துச்சா?

எம்.ஜி.ஆரே எழுதின வாழ்க்கை வரலாற்றில்(நான் ஏன் பிறந்தேநா.வி என நினைக்கிறேன்) அவங்க அப்பா பேரு மருதூர் கோபாலமேனன் என்றும் கண்டியில் மாஜிஸ்ட்ரேட் ஆக வேலை செய்தார்னும் எழுதி இருப்பதை எதில் சேர்க்க ?

---------

புதிய தலைமுறை எல்லாம் படிக்கிறிங்களா, அப்போ பெரிய படிப்பாளியாத்தான் இருப்பீங்க.

தோத்தா ஏன் தோத்தாங்கன்னும், ஜெயிச்சா ஏன் ஜெயிச்சாங்கன்னும் காரணம் கண்டுப்பிடிக்க சொல்லியா கொடுக்கணும் :-))

வவ்வால் said...

டீம் கேமில் தோற்கும், போதெல்லாம் சொல்வது,

# கோச் சரியில்லை.

#சீனியர்கள் கொண்ட அணியாக இருந்தால், இளைஞர்கள் அணியில் இல்லை.

#இளைஞர்கள் கொன்ட அணி என்றால், சீனியர்களின் அனுபவம் இல்லை, அனுபவமற்ற இளம் அணி சொதப்பியது என்பார்கள்.

# சரினு இளைஞர்கள் ,சீனியர்கள் என கலந்து டீம் அமைத்து தோற்றால், ச்னீயர் ,ஜூனியர் இடையே ஒற்றுமை இல்லை, எனவே தோற்றார்கள் என்பார்கள்.

இன்னும் பந்து வெள்ளையா இருந்துச்சு,புல்லு பச்சையா இருந்துச்சு, குச்சி வளைந்து இருந்துச்சு என சொல்லாதது மட்டுமே மிச்சம் :-))

ஆமினா said...

//
தன்னம்பிக்கை என்பது வேண்டும் உங்கள் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஏதோ ஒரு நாளில்.
மனதே ஓ மனதே நீ மாறிவிடு.
பரங்கிமலையோ அது அண்டார்டிக் பனிமலையோ
நீ மோதிவிடு.//

நல்லவேள நான் சீக்கிரமே போனது! :-))))

savi_savi said...
This comment has been removed by the author.
savi_savi said...

////ஆரூர் தாசுக்கு இப்போ தான் மன்றாடியார், மன்னாடியார் எல்லாம் நியாபகம் வந்துச்சா?

எம்.ஜி.ஆரே எழுதின வாழ்க்கை வரலாற்றில்(நான் ஏன் பிறந்தேநா.வி என நினைக்கிறேன்) அவங்க அப்பா பேரு மருதூர் கோபாலமேனன் என்றும் கண்டியில் மாஜிஸ்ட்ரேட் ஆக வேலை செய்தார்னும் எழுதி இருப்பதை எதில் சேர்க்க ? ////

தென்கரை நாட்டுச் சங்கரண்டாம்பாளையம் வேணாடுடையாரோடு தொடர்புடையவர் அங்கராத்து சங்குண்ணி வலிய மன்னாடியார்-மேனக்கத் லட்சுமி அம்மா ஆகியோர்.அவர்கள் மகன் கோபாலமேனன்.கோபாலமேனன் மனைவி சத்தியபாமா. சத்தியபாமா வடவனூர் மருதூர் இல்லம் சார்ந்தவர்.வேளாளர் என்று ஆவணத்திலேயே பொறிக்கப்பட்டவர்.இத்தம்பதியர்க்கு 5 மக்கள்-கமலாட்சி,எம்.ஜி.சக்ரபாணி,சுபத்திரா,பாலகிருஷ்ணன்,எம்.ஜி.இராமச்சந்திரன் ஆகியோர் ஆவார்.ஆம்,தமிழக முன்னாள் முதல்வர் அமரர் எம்.ஜி.இராமச்சந்திரன் கொங்கு வேளாளர்களின் பெரிய குலத்துப்பிள்ளை

savi_savi said...

தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமாச்சந்திரன் அவர்களின் பூர்வீக முன்னோர் பற்றிய கள ஆய்வில் இந்நூல் உருவாகியுள்ளது. கொங்கு நாட்டுப் பட்டக்காரர்களில் பெரிய குல வேணாடுடையார் கால்வழிவந்த சிலர் சித்தூர்ப்பகுதியில் குடியேறி மன்றாடியார் எனப் பெயர் தரித்தோர், "மன்னாடியார்" ஆயினர். அவர்களில் பெரிய குளத்தார் நல்லே பள்ளி வலிய மன்னாடி என அழைக்கப்பட்டனர்.


palaghat is part kongu nadu still kongu vellala gounder(recently(2011) kongu vellala gounder are present over kerala re-classified From FC to BC ,in tamil nadu it is reclassified to FC to BC at 1975), present over palaghat and palaghat mannadiars are sub-caste of kongu vellala gounders, along with the kodaikanal குன்னுவ மன்னாடியார்கள் also sub caste of kongu vellala gounder.

mannadiars caste and Some of the Nair families in Palakkad also found to use the title Mannadiars and they are called "Mannadi Nairs", connoting some sort of connection with the Tamil aristocracy of the neighbouring (presently Pollachi) taluk.

A handbook of Kerala, Volume 2,P.601
http://books.google.co.in/books?ei=TBnFT6azLMSxrAfzruDNCQ&id=TjVuAAAAMAAJ&dq

even namboothris have record in kerala .cheraman perumals are from mulanur chera clan members.

Related Posts Plugin for WordPress, Blogger...