கலைஞரின் மனசாட்சி முரசொலி மாறன் என்றால் கேபிளின் மனசாட்சி சுரேகா. சென்னை பதிவர் சந்திப்புகளின் ஆஸ்தான தொகுப்பாளர். 'கேட்டால் கிடைக்கும்' மூலம் நுகர்வோர் உரிமையை கேட்டுப்பெறுபவர். நள்ளிரவில் ரேஷன் கடைப்பக்கம் மழைக்கு ஆயா ஒதுங்கினால் கூட கண்கள் சிவந்து ரேஷன் கடைக்காரர் வீட்டு அட்ரசை கூகிள் மேப்பில் தேடிப்பிடித்து ஓடுவார். " "டேய்..உன் நெஞ்சுல ஈரம் வர்ற வரைக்கும் என் காரம் குறையாதுடா" என்று அவனை தரதரவென இழுத்து வந்து அரிசி, பாமாயில் வாங்கித்தரும் கர்ணர்.
...........................................................................
புதுகை அப்துல்லா: mmadbulla.com
முதலாம் பானிபட் போரின் நான்காம் நாளில் கடைசி பதிவு எழுதியவர். மாற்றான் பட ரீமேக்கில் நடிகர் அப்பாஸுடன் ஒட்டி நடிக்க செலக்ட் ஆகி இருப்பவர். வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்பட்டு, வெயிலுக்கு தெரியாமல் வளர்ந்தவர். வருடா வருடம் பதிவுலக நண்பர்களுக்கு ரம்ஜான் பிரியாணி போடுவது ஸ்பெஷல். சென்ற வாரம் நடந்த இந்நிகழ்வில் சில இளம் பதிவர்களை அழைக்காமல் விட்டதன் மூலம் கணிசமான வாக்கு வங்கியை இழந்துள்ளார். அடுத்த பதிவர் சந்திப்பை அமெரிக்காவில் நடத்த முழு செலவையும் ஏற்றுக்கொள்வதாக சொல்லி இருக்கும் தயாளர். பொதுவாழ்வில் கலப்பதற்காக கூகிள் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் எளிய ரெட் ஜெயன்ட்.
.............................................................................
பாலகணேஷ்: minnalvarigal.blogspot.com
புலவர் இராமாநுசம், சென்னையின் நம்பர் ஒன் பதிவர் மதுமதி இருக்கும் சபையில் கூட தெனாவட்டாக சட்டையின் மேல் பட்டனை கழற்றி விட்டு அமரும் பாட்சா(ஆதாரம்: மேலுள்ள படம்). லோகோ, பேனர் டிசைன் செய்யும் கலை இயக்குனர். 'லட்சுமி ஸ்டார்ட் ஆயிடு' ரஜினி போல தனது டூவிலரிடம் அடிக்கடி தனிமையில் பேசுவது வாடிக்கை. தலைவர் தம் அடிக்கையில் காதுகளில் இருந்து புகை வருவது அசத்தல். விரும்பி கேட்டால் ஸ்பெஷல் மேஜிக்கை செய்து காட்டுவார். அது என்னவெனில் ஒரு காதில் ஆர்ட்டினும், மறு காதில் அம்பும் புகைப்படலமாக வெளியேற, அந்த அம்பை அண்ணன் சுண்டிவிட்டால் ஆர்ட்டினுக்குள் புகுந்து எதிரில் நிற்பவரின் மூக்கினுள் சொருகிக்கொள்ளும். 'அது அந்தக்காலம். எட்டு வருடங்களாக புகைப்பதில்லை' என்று எழுதச்சொன்னார். எழுதி விட்டேன்.
.......................................................................
மதுமதி: madhumathi.com
"நாலு மணி நேரமா பேசி கொல்லுறீங்களே..ஒரே ஒரு மைசூர் போண்டா வாங்கி தந்தா என்ன?" என்று நான் கேட்ட ஒரே காரணத்திற்கு "நீ போண்டா திங்கறதுக்கு எல்லாம் பதிவர் சந்திப்பை மைசூர்ல நடத்த முடியாது. ஒழுங்கா வெளிய போயிடு" என்று சம்மந்தம் இல்லாமல் பேசி கொந்தளித்தவர்(ஆதாரம்: மேலுள்ள படம்). "அண்ணே ஒரு சைனா டீ" என்று அதன் பின் ஒரு மர்மக்குரல் ஒலித்து பரபரப்பை அதிகரித்தது. எப்போதெல்லாம் இவர் பேச ஆரம்பிக்கிறாரோ அப்போதெல்லாம் அனைவரும் வேறு கதை பேசும்போது ஹைவேஸில் சிக்கிய மான் போல முழிப்பார் பாவம். பதிவர் சந்திப்பு தொடர்பான பளுவை அதிகமாக சுமக்கும் சுமைதாங்கி. ஏழைகளின் தாகம் தீர்க்கும் தண்ணி டேங்கி.
.........................................................................
ஜெய்: pattikattaan.blogspot.in
பால கணேஷ் அண்ணனுக்கு அடுத்து புலவரை மதிக்காமல் கால் மேல் கால் போட்டு அமரும் நபர். பதிவர் சந்திப்பின் நிதியமைச்சர். நன்கொடை பணத்தில் இரண்டு ரூபாய் கள்ளநோட்டை அடியில் வைத்து தந்துவிட்டு ஊருக்கு திருட்டு ஷேர் ஆட்டோ ஏறிய சிராஜுதீனை அய்யனார் அருவாளுடன் ஜெமினி மேம்பாலத்தில் ஓடவிட்டு அடிக்க காத்திருப்பவர். o.bama@gmail.com பெயரில் இமெயில் போட்டு 'பதிவர் சந்திப்புக்கு நானும் வரலாமா?' என்று கேட்ட பெண் பதிவருக்கு obama@gmail.com என டைப் செய்து இவர் அளித்த பதில்: 'You are most wanted welcome'.
...............................................................................
ஆமினா: samayalexpress.blogspot.in
பதிவர் சந்திப்பின் உணவுக்கமிட்டி தலைவியாக நியமிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தவர். இவர் சமையலின் தரத்தை பரிசோதிக்க சுற்றுவட்டாரத்தில் விசாரித்தபோது அங்கிருக்கும் ஏழு மெட்ரிக் பள்ளிகளின் நோட் புக்குகளில் லேபில் ஒட்ட இவர் செய்த பொங்கலைத்தான் தாங்கள் பயன்படுத்துவதாகவும், இது பல்லாண்டு காண்ட்ராக்ட் என்பதால் நீங்கள் கிளம்புங்கள் என்று பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் நம் நிருபர் குழுவை அடித்து அனுப்பிவிட்டனர். மேடம் செய்த சாம்பார் சாதத்தின் ஒற்றை பருக்கையை ருசி பார்த்த பாலகனின் நிலை மேலுள்ள படத்தில்.
.....................................................................................
"தொட்டுக்க மாங்கா ஊறுகா போடலாமா? தேங்கா ஊறுகா போடலாமா? என்று சீரியசாக மதுமதி பேசிக்கொண்டிருக்க "என்னய்யா இவரு காது கிட்ட வந்து கொய்யி கொய்யின்னு கத்திக்கிட்டு" என்றவாறு வேறுபக்கம் முகத்தை திருப்பியவர்(ஆதாரம்: மேலுள்ள படம்). இரண்டு கைகளையும் சேர்த்து ஏறத்தாழ 42 தவக்களைகள் கொள்ளளவு கொண்ட ஆர்ம்ஸை வைத்திருக்கும் ஆஜானுபாகர். பொட்டு வெடி சைசில் இருந்த மசால் வடையை எடுக்க பல அட்டெம்ப்ட் செய்தும் 'இந்த வடைய எவன் தொட்டாலும் வளச்சி வளச்சி அடிப்பேன் ' என்று அஞ்சாசிங்கம் சொன்னதற்காக 48 மணிநேரம் தொடர்ந்து அழுத ஈர நெஞ்சக்காரர். 'நீங்கதான் தல என் மானசீக குரு' என்று ஒரே நாளில் ஆரூர் மூனா செந்திலை கவிழ்த்து 'அமைதிப்படை' சத்யராஜ் ஆகி இருப்பவர்.
..................................................................................