CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, July 21, 2012

The Dark Knight Rises


                                                                         
ஹார்ரி போட்டர், ஸ்பைடர்-சூப்பர்-பேட்மேன்கள் சீரிஸ் படங்களை பார்க்கும் எக்ஸ்க்ளுசிவ் ரசிகர்கள் க்ளப்பில் இல்லாத எனக்கு,  சமீபகாலமாக முந்தைய பாகங்கள் பற்றிய புரிதல் எதுவும் இன்றி இவ்வகையறா படங்களின் இறுதி பாகங்களை மட்டும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து வருகிறது. இம்முறை தி டார்க் நைட் ரைசெஸ். இதுவரை நான் பார்த்ததிலேயே சிறந்த ஆங்கிலப்படமாக  கருதும்  இன்சப்சனின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் படைப்பாக இந்த வவ்வால் மனிதன் இருந்ததால் எதிர்பார்ப்புடனேயே திரையரங்கினுள் நுழைந்தேன்/தோம். அமெரிக்காவில் பேட்மேன் ரிலீஸ் ஆன முதல் நாளே 'நாந்தான்டா பேட்மேனுக்கு வில்லன்' என்று கூவிக்கொண்டே ஒரு சைக்கோ 12 பேரை சுட்டுக்கொன்ற செய்தி வேறு வவுத்தை கலக்கியதால்..கண்களால் தியேட்டரை ஒருக்கா நன்றாக ஸ்கேன் செய்து விட்டு சீட்டில் அமரச்சொன்னது மனது. 

தி டார்க் நைட் ரைசெஸ் கதையை சுருக்கி சொல்லவேண்டுமெனில்...கோதம் எனும் நகரத்தில் பேன் எனும் முகமூடி வில்லன் தன் படையுடன் அட்டகாசம் செய்கிறான். ஆக்கபூர்வ அணுசக்திக்காக கண்டுபிடிக்கப்பட்ட நியூக்ளியர் வஸ்து ஒன்றை கைப்பற்றுகிறான். அதனை டைம் பாம் ஆக மாற்றி  முறையில் வண்டி ஒன்றில் ஏற்றி கோதமில் உலவ விட்டுக்கொண்டே இருக்கிறான். நகர மக்களை ரட்சிக்க அப்பகுதி ஒன்றின் முட்டுச் சந்தில் பர்கர் விற்கும் மூதாட்டி ஒருவர் புறப்பட்டு வருகிறார் என்றா சொல்ல வேண்டும்? நம்ம பேட்மேன் தான் களம் இறங்குகிறார். பேட்மேன் சீரிஸில் நாயகனை விட வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் தருவது இங்கும் தொடர்கிறது. முகமே காட்டாமல் அச்சுறுத்தும் வில்லனாக டாம்  ஹார்டி..பலே. திருட்டு (பெண்) பூனையாக வரும் ஆன் ஹாதவே இம்போர்டட் ஐஸ்க்ரீம். இளம் போலீஸ் அதிகாரியாக ஜோசப் நடிப்பும் நன்று.

முதல் பாதி பெரும்பாலும் வசனங்களால் நிரம்பி இருக்கிறது. என் போன்ற  சராசரி ரசிகர்கள் பொருத்தருள வேண்டிய கட்டாயம்.  அதற்கு சேர்த்து  வைத்து இடைவேளைக்கு பின்பு ஒவ்வொரு நிமிடத்திற்கும்  பொழுதுபோக்கின் உச்சத்திற்கு அழைத்து செல்கிறார் நோலன். பிரமாதமான பின்னணி இசை மற்றும் விசுவல் எபக்ட் காட்சிகளின் துணையுடன்.  மரண பயத்தில் உறைந்து கிடக்கும் மக்களை காப்பாற்ற தனது பிரத்யேக பைக் கம் பறக்கும் தட்டில் பேட்மேன் செய்யும் சாகசங்கள் விசிலடிக்க வைக்கின்றன. கொஞ்சூண்டு மிஞ்சி இருக்கும் பில்லா - 2 (கலக்சன்) பருக்கைகளை ஏற்கனவே (நான்) ஈ கவ்விக்கொண்டு போக, ஆழ்வார் கையில் இருக்கும் கடைசி சோற்றை வவ்வால் லாவுவதை மல்டிப்ளக்ஸ்களில் காண முடிந்தது.     

"நற்செயல் செய்யும் நாயகனான உன்  முகத்தை ஒரு முறை மக்களுக்கு வெளிப்படையாக காட்டு" என்று ஒருவர் கேட்பதற்கு பேட்மேன் சொல்லும் பதில் அசல் ஹீரோயிசம். அவ்வசனம்:

"நான் மட்டுமா ஹீரோ? குளிரில் நடுங்கும் சிறுவனுக்கு தன் கோட்டை போர்த்திவிட்டு நடந்து சொல்லும் முகம் தெரியா நபர் கூட ஹீரோதான்".  

வழக்கம்போல இதையும் த்ரீ- டி படமென்று சொல்லி காசை பிடுங்காமல் இருந்தது ஆறுதல். இம்மாதிரியான சிறந்த பொழுதுபோக்கு படத்தை பார்க்க சாலச்சிறந்த அரங்கம் சத்யம்தான். தெள்ளத்தெளிவான ரியல் டிஜிடல் திரை அதை ஊர்ஜிதம் செய்கிறது. என்ன...ஒரே ஒரு இம்சையை மட்டும் சகித்து கொள்ள வேண்டும். சின்னத்தம்பியில்  துணை நடிகர் ஒருவர்  திரையில் தோன்றும்போது நம்ம கவுண்டர் 'சூப்பரப்பு' என்று கை தட்ட 'இப்ப இவருக்கு எதுக்கு நீங்க கை தட்டுனீங்க?' என வினவுவார் ஷர்மிலி. அதற்கு தலைவர் 'இவர்தான் படத்துல முக்கியமான டர்னிங் பாய்ன்ட்' என்பார். அதுபோல ஆங்கில படங்கள் பார்க்கையில் ''ஹூ...ஹூ" என்று சாதா சீனுக்கெல்லாம் மேட்டுக்குடி இளசுகள் கூவுவது...என்ன கொடும சரவணன். நல்லவேளை இந்த ஆங்கில படத்திற்கு 'ஆங்கில' சப் டைட்டிலை போட்ட புண்ணியவான்கள் வாழ்க. தமிழ் டப்பிங்கில் ''டேய் கைத...அந்த வவ்வால் என்ன பெரிய அனுமார் வாலா? சொல்லி வை" என்று வில்லன் பேசுவதை காணும் அவஸ்தை இன்றி ஆங்கில சப் டைட்டிலுடன் பார்ப்பது எவ்வளவோ மேல்.       

தி டார்க் நைட் ரைசெஸ் - வாவ்..வால்!!
................................................................................   

................................
My other site:
...............................
  


11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம் ... நன்றி...

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பானவிமர்சனம்! பகிர்வுக்கு நன்றி!

! சிவகுமார் ! said...

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன் சார். நல்ல பின்னூட்டம். நன்றிகளும், வாழ்த்துகளும்.

! சிவகுமார் ! said...

உங்களுக்கும் என் வாழ்த்துகள் சுரேஷ் சார். நன்றிகள். பாராட்டுகள். அன்பால் இணைவோம். புதிய சமுதாயம் படைப்போம். மிக்க நன்றி.

Unknown said...

இது மொக்க படமா இல்லையா? சொல்லுங்க நான் பாக்கனும்.

வவ்வால் said...

சிவகுமார்,

படம் நல்லா இருக்குன்னு சொல்லுறிங்க, சிலருக்கு படமே புரியலையாம் , நீங்களாவது கதை சொல்லி இருக்கலாம்.

விமர்சனம் நல்லா இருக்கு , என்ன ஒரு குறைனா... ஹி...ஹி வவ்வால்னு வரும் இடத்தில் எல்லாம் "போல்டு ஆக்கி கலர் அடிச்சுக்காட்டி இருக்கலாம் :-))

எல்லாம் ஒரு வெளம்பரம்!

angusamy said...

வழக்கமான உங்க trade mark குசும்புகளுடன் கூடிய விமர்சனம் ஆமாம் first ரெண்டு பாகமும் பார்க்காமலேயே எல்லா சூப்பர் ஹீரோ படமும் பார்கறீங்கள? ஹா ஹா ஹா

christoper nolan படம் எல்லாம் அப்படிதாங்க நிறைய வசனங்கள் வரும்

அதே போல தமிழ் படத்தை விட ரொம்பா அதிக நேரம் ஓடும்

ஆமாம் கடைசி வரை யாரும் சுடுவாங்கலோனு நினைச்சிகிட்டு நிமதியா படம் பார்த்தீங்களா?

கோவை நேரம் said...

விமர்சனம் அருமை..சைக்கிள் கேப்புல பில்லாவ வாரிட்டீங்க ..

Unknown said...

சிவா இதன் முந்தைய பாகத்தில் ஜோக்கர் வில்லனாக வரும் Heath Ledger க்காக பலமுறை இந்தப் படம் பார்த்தேன்.....டவுன் லோடு செய்து பாருங்கள் அருமையான படம் இந்த பாகம் போர்ன்னாங்க.....இன்றைக்கு பார்ப்போம்!

ராஜ் said...

ரொம்பவே நல்ல விமர்சனம்.....
சுருக்கமா ஆனால் படத்துல வர எல்லாத்தையும் கவர் பண்ணி எழுதி இருக்கேங்க...
உங்களுக்கு காமெடி செமயா வருது....... உங்க ப்ளாக்கை இதுக்கு முன்னாடி கடந்து போய் இருக்கேன்...ஆனா எல்லா பதிவையும் படிச்சது இல்லை.... இப்ப தான் Follower ஆனேன்...இனி அடிக்கடி சந்திப்போம்... :)
நானும் இந்த படத்தை பத்தி எழுதி இருக்கேங்க..நேரம் இருக்கும் போது படிச்சு பாருங்க...
http://hollywoodraj.blogspot.in/2012/07/the-dark-knight-rises-2012-mind-blowing.html

simon anandhraj said...

Hi Siva,

I recommend you to the world of Nolan... am a great of his since his first film Memento(2000)(tamil Gajini endru solvargal aanal appadathin nuniyai kooda naam thodavillai enbathey nijam...)then Insomnia and the batman series, the prestige and Inception are few of his master piece to mean all his movies are master piece... u want to catchup a world class movie blindly u can watch his film...
though am bit bothered about the comments on the film... the hindu had ended the review like this...
Nolan a legend....

Related Posts Plugin for WordPress, Blogger...