CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, July 23, 2012

Thattathin Marayathu


     
தட்டத்தின் மறையது...ஆங்கில விளக்கம் behind the veil. முதன் முறை தியேட்டரில் மலையாள படத்திற்கு ஆங்கில சப் டைட்டில் போட்டதால் பெருமூச்சு விட்டேன். பழம்பெரும் நடிகர் ஸ்ரீனிவாசனின் மகன் வினீத் இயக்கி இருக்கிறார். ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த நிவின் மற்றும் இஷா முன்னணி கேரக்டர்களாக. ஒவ்வொரு பத்திரிக்கையும் சுத்தம், சுமார், சூப்பர் என்று கலந்து கட்டி விமர்சனம் செய்திருப்பினும் நிறைவான வசூலை அள்ளிவிட்டது. 'இந்த பொண்ணு அநியாயத்துக்கு அழகா இருக்கே..நாமளும் ஞாயித்து கெளம சும்மாத்தான இருக்கோம். ஒரு எட்டு போயி பாத்துட்டு வருவோம்' என்று வண்டி கட்டினேன் கேரள நண்பருடன்.  

கதை இதே சேட்டா: மலபாரில் இருக்கும் தலசேரி நகரில் வசிப்பவன் வினோத் எனும் இந்து இளைஞன். அங்கு அப்சரஸ் எல்லோரும் நாலு ஸ்டெப் பின்னே நிற்கும் வண்ணம் பேரழகியாய்  இருக்கும் கல்லூரி மாணவிதான் ஆயிஷா. ஹீரோ சுமாரான குடும்பத்தை சேர்ந்தவன். அவளோ முஸ்லிம் இல்லத்து பணக்காரன் மகள்.  ஒரு பொய் கேஸ் போட்டு அவனை உள்ளே தள்ளுகிறார் நாயகியின் பெரியப்பா. அவன் கதை கேட்டு காதலுக்கு உதவி செய்கிறார் ஒரு சப் இன்ஸ்பெக்டர்(மனோஜ் கே. ஜெயன்). இப்படி ஒரு பழங்கதையை பெருமளவு சுவாரஸ்யமாக படமாக்கி உள்ளார் இயக்குனர்.

முதல் காட்சியில் ரு வாண்டுகள் பேசும் காட்சியில் இருந்து இறுதி வரை வசனங்கள் நகைச்சுவைக்கு உத்திரவாதம். "ஆயிஷா என்னிடம்   காதலை சொல்லுகையில் ஸ்ரீசாந்த் சைமண்ட்ஸின் விக்கெட்டை எடுத்த உற்சாகத்தை அடைந்தேன்" என்று வினோத்தும்,  "பிரியாணியை தேசிய உணவாக அறிவிக்க வேண்டிய சமயம் நெருங்கிவிட்டது" என்று போலீஸ்காரர் சொல்வதும் காமடி சரவெடி. இஸ்லாமிய பெண்ணாக இருப்பதால் ஏற்படும் சில இன்னல்களை பளிச் வசனங்கள் மூலம் சொல்லி இருக்கும் வினீத்தை பாராட்ட வேண்டும். 

வினோத்திடம் தன் காதலை வெளிப்படுத்தும் போது ஆயிஷா சொல்லும் வார்த்தைகள்: "என் சமூகத்தில் போடப்படும் கட்டுப்பாடுகளால் தன் உணர்வை சொல்ல இயலாது தவிக்கும் இளம்பெண்கள் ஏராளம். நான்   அவர்களைப்போல் இருக்க விரும்பவில்லை. உன்னை காதலிக்கிறேன்".   காதலிப்பதற்கான சரியான காரணங்களை அவள் சொல்வதும் யதார்த்தம்.  ஆயிஷாவின் சகோதரி "என்னுடைய திருமணம் நிச்சயம் ஆனதே உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சொல்லித்தான் தெரியும். நீ அப்படி இருக்க தேவை இல்லை" என்கிறாள். அதுபோல அவளது காதலை எதிர்க்கும் பெரியப்பாவிடம் தந்தையாகிய ஸ்ரீனிவாசன் "நம் பெண்கள் பர்தாவால் அங்கத்தை மறைப்பது பெண்மையின் புனிதம் காக்கவே அன்றி தனது கனவுகளை எல்லாம் மறைத்து வாழ்வதற்கல்ல" என்று கூறுமிடத்தில் ஏக கைதட்டல்கள்.

                                                                             
நிவின் மற்றும் ஆயிஷாவின் இயல்பான நடிப்பு படத்தின் பலம். அப்து எனும் நண்பனாக அஜு வர்கீஸ் செய்யும் குறும்புகள் சிரிக்க வைக்கின்றன.  நாயர், மேனன் என்று நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஓட்டுவதும் கலகலப்பு. தமிழ் படங்களில் இப்படி ஒரு காட்சி வைத்தால் 'அட்ரா அவன..வெட்ரா அவன..தேவையே இல்ல. அட சுத்துது சுத்துது தமிழகம் சுத்துது...என் சாதிக்காரன் உழைப்பினிலே' என்று சாதிக்கட்சி தலைவர்கள் சுமோவில் கிளம்பி தியேட்டர் வாசலுக்கு வந்திருப்பார்கள். கம்யூனிஸ தோழராக சில நிமிடங்களே வந்தாலும் வலுவான வசனங்கள் பேசி மனதில் நிற்கிறார்.  

பாடல்கள் அனைத்தும் ரொமாண்டிக் மெலடி. அனு, வினீத் மற்றும் சந்திரசேகரின் பாடல் வரிகளும், ஷானின் இசையும் 'ஒரு தரம் காதலித்து பார்ப்போமே' என்று எஞ்சி இருக்கும் காதல் உணர்வற்ற இதயங்களையும் உசுப்பி விடுமென்பது மிகையல்ல. ஆயிஷாவின் அழகை வினோத் வர்ணிக்கும் இடங்களில் எல்லாம் நமது நெஞ்சிலும் பட்டாம்பூச்சிகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஒளிப்பதிவாளருக்கான கிரெடிட்டில் பெரும்பங்கை இஷாவே தட்டி செல்கிறார். எந்த கோணத்தில் பதிவு செய்தாலும் அழகோவியமாக திகழும் பெண்ணிற்கு எதற்கு கேமரா ஜாலமும், ஒப்பனைகளும்? 

சென்சிடிவ் ஆன சப்ஜெக்டை நகைச்சுவை இழையோட அழகாய் சொல்லி இருக்கும் அதே நேரத்தில், ஆங்காங்கே இஸ்லாம் பெண்களின் மன உணர்வுகளையும் வெளிக்கொணர்ந்த வகையில் இயக்குனர் வினீத்திற்கு பாராட்டுகள். நாகரீக காதலை அனைவரும் ரசிக்கும் வண்ணம் எடுத்துள்ளனர். பெரிய தொய்வை சந்தித்து வரும் முந்தைய தலைமுறை நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மத்தியில் வினீத் போன்ற புதிய தலைமுறை ஆட்கள் களம் கண்டு வெற்றி அடைந்து வருவது மலையாள சினிமாவின் மறுமலர்ச்சிக்கு சாதகம்தான்.

தட்டத்தின் மறையது - ரவிவர்மன் ஓவியம்    
..................................................................................

இஷாவின் பேரழகை இக்காணொளிகளில் கண்டு ரோமியோக்கள் சொக்கி விழுந்தால் நான் பொறுப்பல்ல.... 
  ......................................................................

      
                                                                

15 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

படம் ரவிவர்மன் ஓவியமா இருக்குமா தெரியாது. ஆனா இஷா நிச்சயம் ஒரு ஒவியம் தான். என்னா அழகு!!!

இப்போ சமந்தாவா இஷாவா அதிகம் அழகு என யோசித்து தல வலிக்குது. இப்படி பண்ணிட்டிங்களே?

கேரளாக்காரன் said...

Sreenivaasan pazhamperum nadigara?

Appo rasini kamal ellaam ki mu vula vaazhntha magaankalaa?

Srinivaasan is much much younger thaan most of the Tamil heroes (vijaykkum avarukkum 13 years thaan difference)

and much much sharper than most of the (benchmark) Tamil directors:)

! சிவகுமார் ! said...

@ ஹாலிவுட் ரசிகன்

ஞான் எந்த செய்யும்? எல்லாம் மன்மதன் செய்யும் மாயமல்லோ!!

! சிவகுமார் ! said...

@ மண்டை மனோகர்

கேரள சினிமாவில் ஸ்ரீனிவாசன் மூத்த நடிகர்தான். அவரை எதுக்கு தமிழ் நடிகர்களுடன் கம்பேர் செய்ய வேண்டும் பாஸ். கப்பக்கிழங்குக்கு ரசத்தை தொட்டு சாப்புடறது போல..

sathishsangkavi.blogspot.com said...

இஷா இஷா இஷா இஷா........

CS. Mohan Kumar said...

ஓய் மலையாளம் படத்துக்கு எதுக்கு சப் டைட்டில்

நாமெல்லாம் எவ்ளோ "மலையாள படம்" பாத்து ஒரு புது மொழி கத்துக்கிட்டிருக்கோம்

இந்த படம் & ஹீரோயின் நல்லாருக்கும் போல. DVD கிடைச்சா பாக்கணும்

! சிவகுமார் ! said...

@ சங்கவி

இனி சங்கவியை ப்ளீச் ப்ளீச்னு சோடா அடிச்சி எழுப்பியும் பயனில்லை. கேட்டோ..!

! சிவகுமார் ! said...

@ மோகன்குமார்

இது சைவ மலையாள படம் சாரே.

Unknown said...

என்னமா மலையாள விமர்சனம்(!) பண்றாய்ங்கப்பா...ஸ்ஸ்ஸ்!

Unknown said...

என்னமா மலையாள விமர்சனம்(!) பண்றாய்ங்கப்பா...ஸ்ஸ்ஸ்!

! சிவகுமார் ! said...

@ விக்கியுலகம்

உங்கள படச்ச பிரம்மனுக்கே புரியாத லெவலுக்கு உள்குத்து எழுதுற உங்கள..ஸ்ஸ்!!

Doha Talkies said...

அருமையான விமர்சனம்.
சமயம் கிடைத்தால் இந்த தம்பியின் வலைப்பக்கதிற்கு வந்து செல்லவும்.
நன்றி.
http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

Unknown said...

எடா கோபி! சமயம் கிட்டினால் ஞான் இப்படத்தை கண்டு..!வல்லிய நன்னாயிட்டு விமர்சனம் உன்டு !நன்னே!

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php

அஞ்சா சிங்கம் said...

Boys said...

நண்பரே, நீங்கள் http://YahooAds.in இணையதளத்தில் சேர்ந்து பணம் சம்பாதிக்கலாம். தமிழ் இணையதளதிட்கும் விளம்பரங்கள் தருகிறார்கள் .

ஒரு முறை இணைந்து தான் பாருங்களேன்,
http://www.YahooAds.in/publisher_join.php......................../////////////

நல்லா கேட்டீங்க கேள்வி நாக்கை புடுங்கிக்கிற மாதிரி ..............

யோவ் சிவா இதுக்கு மொதல்ல நீ பதில் சொல்லுயா ................?

Related Posts Plugin for WordPress, Blogger...