CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, July 12, 2012

SCARFACE ஆங்கில படத்தின் காப்பி பில்லா - 2?


          
'தலயோட பில்லா - 2 டிக்கட் எடுத்துட்டீங்களா?' ..கடந்த சில நாட்களாக அதிகம் உச்சரிக்கப்பட்ட சுலோகம் இதுவாகத்தான் இருக்கும். கவுண்டரிடம் இந்த கேள்வியை கேட்டிருந்தால் ''ஏண்டா நாங்க மட்டும் முண்டமாவா அலையறோம்?. போடா மீன் முள்ளு தலையா " என்று ரவுசு விட்டிருப்பார். ஏற்கனவே முன்பதிவில் லம்பாக கல்லா கட்டிவிட்டது பில்லா டீம். அம்பத்தூர் தியேட்டர் ஒன்றில் இரண்டு வாரத்திற்கு டிக்கட் விற்றுவிட்டதாம். ஆனால் இந்த அரிய படைப்பு எங்கிருந்து சுடப்பட்டது என்கிற ஆராய்ச்சி உச்சத்தில் உள்ளது இப்போது. ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அல் பசினோ நடித்த Scarface(1983) படத்தின் உருவல்தான் பில்லா - 2 எனும் செய்தி தீயாய் பரவி உள்ளது.

அல் பசினோ நடித்த படத்தின் கதைச்சுருக்கம் இதுதான். க்யூபாவில் இருந்து அகதியாக அமெரிக்கா வந்து சேர்கிறான் டோனி. அங்கு ப்ரீடம் டவுன் எனும் முகாமில் அடைக்கப்படுகிறான். மான்னி உள்ளிட்ட ஒரு சிலர் அவனுக்கு நண்பர்கள் ஆகின்றனர். ப்ராங்க் எனும் போதை மருந்து வியாபாரியின் கட்டளைக்கு இணங்க அம்முகாமிற்கு வரும் க்யூபா அதிகாரியை கலவர நேரமொன்றில் கொள்கிறான் டோனி. சின்ன சின்ன போதை மருந்து வியாபாரிகளுடன் டீலிங், சண்டை என காலம் நகர்கிறது. ப்ராங்கின் தோழியை லவ் செய்கிறான் டோனி.டோனியின் தங்கை ஜினாவை(போதைக்கு அடிமையானவள்) மான்னி சைட் அடித்து, கல்யாணமும் செய்து கொள்கிறான். ஒரு கட்டத்தில் ப்ராங்கை கொன்று விடுகிறான் மான்னி. 

சோசா என்பவனுடன் வியாபாரத்தை தொடர்கிறான் டோனி. ப்ராங்கின் தோழியை கல்யாணம் செய்கிறான். டோனியின் தில்லுமுல்லுளை போலீஸ் மோப்பம் பிடித்து அவனை கைது செய்ய தயாராகிறது. அப்போது தனக்கு எதிராக செய்தி வெளியிட்ட பொலிவிய நாட்டு பத்திரிக்கையாளன் ஒருவனை கொன்றால் உன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறேன் என்கிறான் சோசா. பிறகென்ன..நண்பர்கள் சிலர் இறக்க..க்ளைமாக்சில் 'தல' அல் பசினோ 'அட டுமீலுதான்...டுமீலுதான்' என சண்டை போடுகிறார். அல் பசினோ நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கும் இந்த படத்தை யூ ட்யூப்பில் பார்க்க கிளிக் செய்க:

  
டோனியின் நண்பன் ஓமர் ஹெலிகாப்டரில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்படும் காட்சி பரபரப்பாக இருக்கிறது. :)

                                                           

                                                                   

                                                                    
  

இதுபோக கே.வி.ஆனந்த் இயக்கம் மாற்றான் படமும் அப்பட்டமான காப்பி என்பதை போஸ்டர்களே உணர்த்துகின்றன.  இன்று ஆனந்த விகடனில் இயக்குனர் அளித்த பேட்டி:

நிருபர்: "எப்படி சார் இந்த மாதிரி ஐடியா எல்லாம் பிடிக்கறீங்க?"

ஆனந்த்: "சிவாஜி சூட்டிங் நடந்தப்ப நேசனல் கியாக்ராபிக் புத்தகம் படிச்சேன். அதுல தாய்லாந்து நாட்டு ட்வின்ஸ் ஒட்டி பொறந்தாங்கன்னு ஒரு செய்தி. அதை டெவெலப் செய்து மாற்றானை உருவாக்கி உள்ளேன்".

அடங்கப்பா!! போதும் ரீலு அந்து போச்சி. Stuck on you ஆங்கில படத்தின் காப்பி இது என்பதை நிரூபிக்கிறது உண்மைத்தமிழன் அவர்களின் பதிவு:                                                                    

                                                             

பவர் ஸ்டார் போன்ற நடிகர்களையும், டி.ஆர். போன்ற இயக்குனர்களையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து பேட்டி எடுக்கும் மீடியா மேதாவிகளே...இதற்கு மட்டும் மவுனம் சாதிப்பது ஏன்? இதுவரை காப்பி அடித்த படங்கள் குறித்து அதில் நடித்த ஸ்டார்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரு கேள்வியாவது கேட்டது உண்டா?

அடுத்த ஆண்டு சிறந்த நடிகராக சூர்யா மற்றும் மக்களின் பேவரிட் நடிகராக அஜித் ஆகியோர் விஜய் அவார்ஸ் வெல்ல வாழ்த்துகள். அப்பயும் கோட் கோபிதான் காம்பியர் பண்ணுவார் போல. இட்டாலியன் ஜாப்(மங்காத்தா) , ஐ ஆம் சாம்(தெய்வ திருமகள்)  படங்களுக்கே அவார்ட் குடுத்த கூட்டமாச்சே!!    

போங்கய்யா நீங்களும் உங்க நடுநிலைமையும்.. 
................................................................... 

                                                           

12 comments:

MARI The Great said...

போட்டு தாங்குங்க ..!

நாய் நக்ஸ் said...

Nee kalakku...
Siththappu.....!!!!!!!

Unknown said...

எது ரீல் அந்து போச்சா!

வவ்வால் said...

//பவர் ஸ்டார் போன்ற நடிகர்களையும், டி.ஆர். போன்ற இயக்குனர்களையும் சகட்டு மேனிக்கு கிண்டல் செய்து பேட்டி எடுக்கும் மீடியா மேதாவிகளே...இதற்கு மட்டும் மவுனம் சாதிப்பது ஏன்? இதுவரை காப்பி அடித்த படங்கள் குறித்து அதில் நடித்த ஸ்டார்கள் மற்றும் படைப்பாளிகளை ஒரு கேள்வியாவது கேட்டது உண்டா?

அடுத்த ஆண்டு சிறந்த நடிகராக சூர்யா மற்றும் மக்களின் பேவரிட் நடிகராக அஜித் ஆகியோர் விஜய் அவார்ஸ் வெல்ல வாழ்த்துகள். அப்பயும் கோட் கோபிதான் காம்பியர் பண்ணுவார் போல. இட்டாலியன் ஜாப்(மங்காத்தா) , ஐ ஆம் சாம்(தெய்வ திருமகள்) படங்களுக்கே அவார்ட் குடுத்த கூட்டமாச்சே!!

போங்கய்யா நீங்களும் உங்க நடுநிலைமையும்.. //

சோல் கிச்சன் காப்பியாமேனு ஒரு பிரபல பதிவரை கேட்டா அதுக்கு இப்ப என்னாங்கிறேன்னு சொல்லி தொடைச்சுக்கிட்டு போறார் ,இதுல பல ஹிட் கொடுத்து உச்சத்தில இருக்கவங்களை கேட்டால் என்ன சொல்ல போறாங்க, அவங்களை பார்த்து பொறாமைனு சொல்ல மாட்டாங்க :-))

ஓசி பதிவுலயே நடு நிலைமை இல்லை , காசு போட்டு பத்திரிக்கை நடத்துறவங்கிட்டே கேட்டா இருக்குமா?

சென்னை பித்தன் said...

//அடுத்த ஆண்டு சிறந்த நடிகராக சூர்யா மற்றும் மக்களின் பேவரிட் நடிகராக அஜித் ஆகியோர் விஜய் அவார்ஸ் வெல்ல வாழ்த்துகள். அப்பயும் கோட் கோபிதான் காம்பியர் பண்ணுவார் போல. இட்டாலியன் ஜாப்(மங்காத்தா) , ஐ ஆம் சாம்(தெய்வ திருமகள்) படங்களுக்கே அவார்ட் குடுத்த கூட்டமாச்சே!! //
மரண அடி!

”தளிர் சுரேஷ்” said...

நாமதான் கோபப்படுறோம்! காப்பி அடித்து படம் எடுப்பவர்களும் நடிப்பவர்களும் வெட்கப்படுவது இல்லை! சரியான கேள்வி கேட்டீர்கள்!

கோவை நேரம் said...

படத்துக்கு முன்னரே காப்பி ன்னு தெரிந்து விட்டதா...?

Unknown said...

நடுநிலைமை என்று ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் உண்மை, அது ஒரு கற்பனாவாதம், எப்படியும் இவர்களை தடுக்க முடியாது, ஒரிஜினலாக படம் எடுப்பவர்களுக்காவது விருதுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்.

Doha Talkies said...

படம் இங்கே இன்று மாலை ரிலீஸ் ஆகிறது(கத்தார்-தோஹா).
பார்த்துவிட்டு பின்னூட்டம் இடுகிறேன்.

bandhu said...

மங்காத்தா இட்டாலியன் ஜாப் காப்பி இல்லை. வேறு படமாக இருக்கலாமோ?

Unknown said...

கொய்யால...எவன்லே எங்க சிபி சித்தப்ப காப்பி பேஸ்ட் அப்படின்னு சொல்றது...!இங்க ஒரு கூட்டமே காப்பி பேஸ்ட்தாம்ல.......

Hari Dx said...

விஜய் டிவி கொடுத்த அவர்ட் மகள் போட்ட ஓடுல குடுத்த அவர்ட்.அது ஒன்னும் தமிழ்நாடு அரசு கொடுத்ததோ இல்ல இந்தியன் அரசு கொடுத்ததோ இல்ல.

Related Posts Plugin for WordPress, Blogger...