CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, July 26, 2012

நட்ட நடு சென்டர்களும், க'றை' வேட்டிகளும்
   
பாவம் நம் இணைய உடன்பிறப்புகள். தி.மு.க.வை யார் எதிர்த்து பேசினாலும்  அவர்களை 'நட்ட நடு சென்டர்கள்என்று கூறி கேஸை க்ளோஸ் செய்ய படாத பாடு படுகின்றனர். எவ்வளவு முயன்றாலும் அந்த சீனில் அவர்களால் கச்சிதமாக பெர்பார்ம் செய்ய முடிவதில்லை. ஒவ்வொரு முறையும் பல ரீ டேக்குகள் வாங்குகின்றனர். இவங்க இம்ச தாங்கல...பட் இவங்கல்லாம் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்டா வருவாங்க. மேடமின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி 'இதையே கலைஞர் செஞ்சா மட்டும் கொந்தளிச்சீங்க. இப்ப மட்டும் வால்யூமை கம்மி பண்ணிட்டீங்களே. ப்ளடி நட்டு நடு சென்டர்ஸ்என எகிறுகின்றனர்.ஏன் வேப்பிலை அம்மனை விட பெருஞ்சூரியனின் செயல்களுக்கு அதிக விமர்சனம் செய்கிறார்கள் இந்த நட்டு நடு சென்டர்ஸ்வாங்க அடி மட்டம் வரைக்கும் போயி அலசுவோம்.

கூகிள் ப்ளஸ்ஸில் உ.பி.க்கள் தங்கள் தலைமை குறித்து சமீபத்தில் பெருமையாக பேசிக்கொண்ட விஷயம்: "திமுக ஆட்சி அமைந்து யாராவது அமைச்சர் ஆகிவிட்டால்கலைஞரே தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் எந்த அமைச்சரையும் நீக்கமுடியாது. கலைஞர் அவ்வாறாக கடைசியாக 2001ல் முல்லைவேந்தனுக்காக தண்ணீர் குடித்து வென்றதுதான் அவரது அதிகபட்ச சாதனை!" - சொன்னது யுவகிருஷ்ணா. ஆனால் 2001 ஆம் ஆண்டுக்கு பின் சிலரை(என்.கே.கே.பி. ராஜா, பூங்கோதை, ஆற்காட்டார்(89 இல்), துரைமுருகன்)  உதய சூர்யா கம்பேனி கழற்றி விட்டதை கழக ரத்தங்களே சுட்டிக்காட்டினர். படிக்க க்ளிக் செய்க: இணைய முரசு. இந்த மாதிரி அரைவேக்காடான தகவலை அவசர அவசரமாக தந்து பின்பு வாங்கி கட்டிக்கொள்ளும் ஆட்களின் எண்ணிக்கை மேடம் கட்சியினரை விட சூர்ய வம்சத்தில் அதிகம் இருப்பதால்தான்  நட்ட நடு சென்டர்கள் குஷ்பு கட்சியினரை பகடி செய்வதில் குஷி அடைகின்றனர்.  

அதாவது தி.மு.க.வில் அமைச்சர் பதவி என்பது ஐந்தாண்டுகளுக்கு நிரந்தரம். மேடம் காலத்தில் அடிமைகள் ஆக மட்டுமே இருக்க முடியும் என்பது அவர்களின் வாதம். கடந்த சில ஆண்டுகளில் கலைஞர் அதிகார எல்லையை மீறி சேட்டை செய்யும் அமைச்சர்களை கடிந்து கொள்ளாமல் இருந்ததற்கு/தீவிரமாக கண்காணிக்க முடியாமல் போனதற்கு காரணங்கள் ஒன்றா இரண்டா? குடும்ப பிரச்னை, எதிர்க்கட்சி ரகளை, குறுநில மன்னர்கள் (அமைச்சர்கள்) முகத்துக்கு நேராக தலைவரை எதிர்த்து பேசிய தீரம், வசனம் எழுதிய படங்கள் (வழக்கம்போல்) ஊத்தி மூடிக்கொண்டது....என்னதான் செய்வார் சொல்லுங்க? 

'சன்' டி.வி.யில் வருவது போல் வாரா வாரம் ஆரவார பிரச்னைகளை  சமாளிக்கவே தலைக்கு நேரம் போதவில்லை. இந்த வாரம் அண்ணன்- தம்பிகள் வாரம், அடுத்த வாரம் மனைவிகள் வாரம்..பாவம் மனுஷன். இந்த இடைப்பட்ட காலத்தில் செழித்தோங்கிய அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வது லேசுப்பட்ட காரியமா? ஒரு அமைச்சரை தூக்கும் முன்பு அவர் ப்ரேவ் ஹார்ட் அழகிரி ஆளா, 'வயதை தொலைத்தவன் யாரு?' ஸ்டாலின் ஆளா அல்லது  'நீயில்லாத (கோபாலபுர) மாளிகையை பார் மகளே பார்' கனிமொழி ஆளா?என்று தீபாவளி லட்சுமி வெடியை வெடிக்க பம்மி பதறும் சிறுவனைப்போல தலைவன் பட்டு பாடு புரியாம பேசுராய்ங்க பேச்சு.

'டாடி...டெல்லில ஹிந்தி பேசுற அதிகாரிங்க என்ன மதிக்காம ரவுசு விடறானுங்க. நான் லோக்கல் அரசியலுக்கே வந்துடறேன்' என்று விரல் சூப்பி அழும் அஞ்சா நெஞ்சன்(!), ஓ. பன்னீர் செல்வம் போல மாதக்கணக்கில் முதல் மந்திரி ஆகாவிடினும் அர்ஜுன் போல ஒரு நாளேனும் பதவியில் உட்கார காத்திருக்கும் தளபதி, 'தலைவா..அனேகமா நான் கரண்ட் கட் செய்றதாலயே நம்ம கட்சி 2011 தேர்தல்ல குப்புற விழுந்து மூக்கை ஒடச்சிக்கும்னு பயமா இருக்கு' என்று கச்சிதமாக கணித்த 'பவர் ஸ்டார்' ஆற்காட்டார், 'உன்னாட்டம் பொம்பள யாரடி. அட ஊரெல்லாம் உன் பேச்சு தானடி' குஷ்பு,  'அபி அப்பா, அப்துல்லா அண்ணன் நீ நல்லா இருந்தா, நான் ரொம்ப நல்லா இருக்குது' நமிதா...இத்தனை  வானவேடிக்கைகள் மேடம் கட்சியில் இல்லையே உடன்பிறப்புக்களே. நாங்க பொழுதுபோக்குக்கு வேற எங்க போவோம்? 
  
                           'பெருமாள்' பட விழாவில் நமிதாவிற்கு வழிகாட்டும் பவர் ஸ்டார் ஆற்காட்டார்.

'எங்கள் ஆட்சியில் இருந்த  மின்சார பற்றாக்குறை இப்போது மட்டும் இல்லையா? மீனவர் பிரச்னை பற்றி தலைவர் பிரதமருக்கு கடுதாசி போடும்போது நக்கல் விட்ட நட்ட நடு சென்டர்கள் இப்போது மம்மி கடுதாசி போடும்போது எங்கய்யா காணாம போனீங்க?' என்பது குட்டி சூரியன்களின் கேள்வி. 'ரெண்டு கட்சியுமே குட்டைல ஊருன  மட்டைங்கதான்' என்று காமராஜர் சொன்னதைத்தான் சொல்லறோம். 'கொடும கொடுமன்னு கோயிலுக்கு போனா அங்க ஒரு கொடும திங்கு திங்குன்னு ஆடிச்சாம்'. அது போல உங்க ரெண்டு கட்சிக்கும் ஓட்டை போட்டு உருப்படாம போனதுதான் மிச்சம். இப்ப ஆளுற கட்சி என்ன அராஜகம் செஞ்சாலும், உங்க ஆளுக செஞ்ச திருவிளையாடலை ஜென்மத்துக்கும் நட்ட நடு சென்டர்கள் ஆகிய பொதுமக்கள் மறந்துருவாங்கன்னு கெனா மட்டும் கண்டுராதீங்கப்பு!!

சரி..இவ்வளவு பேசறீங்களே? இணைய உடன்பிறப்புகள்ல ஒருத்தராவது உளியின் ஓசை படத்த முழுசா பாத்து இருக்கீங்களா? அப்படியே பாத்து இருந்தாலும் அதோட 'பாதிப்பே' இல்லாம ஒரு மாசமாவது நிம்மதியா தூங்கி இருக்கீங்களா? படம் ரிலீஸ் ஆன அன்னிக்கி 'நான் கோமாவுல கெடக்கேன், எங்க தாத்தாவோட மூணு சம்சாரம், ரெண்டு பொண்டாட்டி எல்லாரும் அடிபட்டு ஆஸ்பத்திரில கெடக்காங்க' அப்படின்னு சொல்லி தியேட்டர் பக்கம் போகாம சிதறி ஊரை விட்டு ஓடுனவங்க லிஸ்ட் எடுத்தா கிட்டத்தட்ட மொத்த கட்சி உறுப்பினர்களும் அதுல இருப்பீங்க. அது உங்க மனசாட்சிக்கே தெரியும். 

நெசமாவே நெஞ்சுல மஞ்சா சோறு இருந்தா மஞ்சா துண்டு தலைவர் பேரன் உதயநிதி வூட்டாண்ட போயி ''தம்பி..பெரிய பெரிய ஸ்டார்களை எல்லாம் வச்சி கோடிக்கணக்குல பட்ஜெட் போட்டு படம் எடுக்கறீங்களே. நம்ம புதுகை அப்துல்லா அண்ணனை ஹீரோவா, அபி அப்பாவை அப்து அண்ணன் அப்பாவா, யுவகிருஷ்ணாவை காமடியனா போட்டு கலைஞர் தாத்தா வசனத்துல ஒரு படம் ப்ரொட்யூஸ் பண்ணுங்க" அப்படின்னு இணைய உடன் பிறப்புங்க சொல்லிட்டு அப்பறம் வாங்க நெட்ல ஜிங் சாக் அடிக்க.


இவண்,
நட்ட நடு சென்டர் மானஸ்தர்களில் ஒருவன்.
......................................................................................... 
       
           

47 comments:

Prabu Krishna said...

:-)))))

முத்தரசு said...

நட்ட நடு சென்டர்கள் ஆகிய பொதுமக்கள் - ம் ம் என்னவோ போங்க

Unknown said...

நீங்க என்னதான் சொன்னாலும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னாலும், நடுசெண்டர், நடுநிலைவாதின்னு சொன்னாலும், திமுகவ தாக்கி எழுதற அளவுக்கு யாரும் அதிமுகவ தாக்கி எழுதறது தப்பு செஞ்சாலும் ..!

Unknown said...

எழுதறது தப்பு செஞ்சாலும் ..!// எழுதறது இல்லைன்னு வரணும் மிஸ்ஸாயிருச்சு :-)

sathishsangkavi.blogspot.com said...

போட்டுத்தாக்கு... போட்டுத்தாக்கு...

நாய் நக்ஸ் said...

:)))))))))))))

ஒன்னும் சொல்ல வரலை....
சிரிப்பானை தவிர....

! சிவகுமார் ! said...

@ பிரபு கிருஷ்ணா

வாங்க பிரபு.

! சிவகுமார் ! said...

@ மனசாட்சி

:)

! சிவகுமார் ! said...

@ இரவு வானம்

உண்மைத்தமிழன், கேபிள் பதிவுகள் படிக்கறது இல்லையா?

! சிவகுமார் ! said...

@ சங்கவி

:))

! சிவகுமார் ! said...

@ நாய் நக்ஸ்

நீங்க வழக்கமா செய்றதுதான..

Unknown said...

எலேலோ ஐலசா...ஏலேலோ!

Unknown said...

நான் சொன்னது ரேஷியோ விகிதம்தாம்

Jayadev Das said...

மக்கள் முட்டாள்களாக இருக்கும் தேசத்தில் மக்களாட்சி எடுபடாது பாஸ்.

MARI The Great said...

ரைட்டு!

! சிவகுமார் ! said...

@ விக்கி

ரொம்ப குஜாலா மாம்ஸ்?

! சிவகுமார் ! said...

@ இரவு வானம்

எனக்கென்னவோ 50:50 ன்னு தான் படுது சுரேஷ்!

MANO நாஞ்சில் மனோ said...

தப்பு செய்தால் அய்யாவா இருந்தா என்னா அம்மாவா இருந்தா என்ன தட்டி கேட்போம் நாங்கள் கண்டிப்பாக...!

சூரிய குஞ்சுகள் பொத்தி கொண்டு இருக்கவும்.....அடுத்த ஸ்பெக்ட்ரம் 10g க்காக...

! சிவகுமார் ! said...

@ ஜெயதேவ் தாஸ்

தங்கபாலு முதல்வர் ஆனால் கூடவா?

! சிவகுமார் ! said...

@ வரலாற்று சுவடுகள்

ரைட்டு. :)

! சிவகுமார் ! said...

@ நாஞ்சில் மனோ

சிங்கம் வந்துருச்சி டோய்!!

Jayadev Das said...

\\தங்கபாலு முதல்வர் ஆனால் கூடவா?\\ ஐயாய.......... போயும் போயும் இந்த ஜால்ராவை சொல்றீங்களே!! அரசியவாதியிலேயே இப்படி ஒரு ஈனம் மானம் இல்லாம சிங்கியடிக்கிற ஆளை நான் பார்த்ததில்லை.

! சிவகுமார் ! said...

ஹா..ஹா..அண்ணன் கோல்ட் பால் பேரைக்கேட்டால ஊரே பதறுதே. பாவம் 'கை'ப்புள்ள!!

வவ்வால் said...

ஏதேனும் பேசி வச்சுக்கிட்டு செய்யுறிங்களோ?

இல்லைனா ஒடம்பொறப்புகள் ஏகத்துக்கும் சவுண்டு விடும் , இங்கே மட்டும் அடக்கி வாசிக்குதே அதான் டவுட்டு :-))

ஆனாலும் நல்லாப்போட்டு தாக்கிட்டீங்க, அவுங்க எல்லாம் ஒரு இஞ்ச் எக்ஸ்ட்ராவா தடிச்ச தோலு உள்ளவங்க அசரமாட்டாங்க.

டெர்ரர் ஸ்டார் ரித்தீஷும் ,குபீர் டமிளச்சி குச்சுப்புவும் இருக்கும் வரை கழகத்தை யாரும் அசைச்சுக்க முடியாது சொல்லிட்டேன் :-))

வெளங்காதவன்™ said...

இருக்கட்டும் வோய்....

புளியங்கொம்புனு சொன்னவிங்கதானே?

ஆமா, அதப் புடிச்சு தொங்குனா ஒடஞ்சுராது?

#நான், புளியங்கொம்பைச் சொன்னேன்!!!

வெளங்காதவன்™ said...

//இரவு வானம் said...

நீங்க என்னதான் சொன்னாலும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னாலும், நடுசெண்டர், நடுநிலைவாதின்னு சொன்னாலும், திமுகவ தாக்கி எழுதற அளவுக்கு யாரும் அதிமுகவ தாக்கி எழுதறது தப்பு செஞ்சாலும் ..!////

பயபுள்ள உண்மையச் சொல்லியிருக்கு!!!

#ஆனாலும், கலீஞ்சற வையுரபோது வார சொகம், அம்மாவ வையும்போது வாரதில்ல பாத்துக்க!!!!

வவ்வால் said...

/ஐயாய.......... போயும் போயும் இந்த ஜால்ராவை சொல்றீங்களே!! அரசியவாதியிலேயே இப்படி ஒரு ஈனம் மானம் இல்லாம சிங்கியடிக்கிற ஆளை நான் பார்த்ததில்லை.

//

வெங்கப்பாலு அப்படிலாம் சூதனமா இருக்கப்போய் தான் ஒமார் ரோட்டில ஏகப்பட்ட இடம், ரெண்டு எஞ்சினியரிங் காலேஜ், ரெண்டு சம்சாராம் ,ஒரு மெகா டீ.வினு செட்டில் ஆகி இருக்கார் :-))

வெங்கப்பாலுவாச்சும் கட்சிக்காரர் போனியாவுக்கு ஜிங்சாங்க் போடுறார் ,ஆனால் மஞ்சத்துண்டு அவரையும் தாண்டியில்ல வாசிக்கிறார்,கட்சிக்காரனை விட மஞ்சத்துண்டு தான் அதிகமா போனியாவுக்கு பயப்படுறார், இவரோட பணிவைப்பார்த்துட்டு வெங்கப்பாலுவுக்கே வெட்கம் வருதாம் :_))

கேரளாக்காரன் said...

Antha comedian enakku tough fight kuduppar

CS. Mohan Kumar said...

சிவா: இரண்டு கழகங்களும் ஊழலில் ஒன்றுக்கொன்று போட்டி போடும் மட்டமான கட்சிகள் என்பதில் எந்த
சந்தேகமும் இல்லை

ஆனால் ஒரு விஷயம்: அ. தி.மு.க இப்போது ஆளும் கட்சி. துக்ளக்கை படித்தால் அ. தி.மு.க அரசை பத்தி எதுவுமே பேசாம, எதிர் கட்சியான தி.மு.கவை விமர்சித்தும் கிண்டல் பண்ணியும் மட்டுமே கட்டுரைகள் இருக்கும். துக்ளக் நிலைப்பாடு அப்படி

அது போல பதிவர்களில் சிலரும் அ.தி.மு.க ஆண்டால் கூட, எப்பவும் தி.மு.க வை திட்டி கொண்டே இருப்பது சரியல்ல என நினைக்கிறேன்

அம்மா ஆட்சியின் அராஜகங்களை பற்றி தான் இப்போது அதிகம் விமர்சிக்க வேண்டும் என்பது என் எண்ணம்

தி,மு.க சில விஷயங்களில் போடும் ரெட்டை வேடம் பற்றி நிச்சயம் எழுதலாம். ஆனால் அதை எழுதுமளவு வலிமையை, தமிழக தமிழனை வாட்டும் விலை வாசி உயர்வு பற்றியோ கரண்ட் கட் பற்றியோ நீங்களே (உங்களை உதாரணத்துக்கு தான் சொல்கிறேன்) எழுதி உள்ளீர்களா என வாசித்து பாருங்கள் !

Unknown said...

ஈரோட்டு கிங் பண்ணாத அட்டுழியம் கொஞ்சநஞ்சமில்ல...இதுக்கு கைத்தறி துறை அமைச்சரா இருந்த புண்ணியத்துல இன்னிக்கு கைத்தறியே ஈரோடுட்டுல இல்லை! கட்சியவிட்டு தூக்கினாங்க அப்புறம் தேர்ந்தல்ல சீட்டு கொடுத்தாங்க....முதுகெலும்பு இல்லாத நத்தை கூட அடிச்சா சுருண்டுக்கும்!

நம்ம செங்கோட்டை செஞ்ச யாருக்கும் கெடுதல் இல்லாத தனிப்பட்ட ஒரு கில்மா விசயத்துக்காக தூக்கியெறிஞ்ச அம்மாவுக்கு இருக்கிற துணிவு தலீவருக்கு இருக்கா? அப்படி துணிவு வரும்போது சொல்லுங்க ஒடன்பொறப்புகளே...! நடுசென்டர்களாகிய நாங்களே தலீவர கிணடல் பண்றவங்களை செருப்பால அடிப்போம்!அதுவரைக்கும் குசுப்பு....நமீதா பின்னாடி ஒளிஞ்சுக்கங்க..!

சிவா கிழிகிழின்னு கிழிச்சுட்டிங்க போங்க....

”தளிர் சுரேஷ்” said...

ஜெயாவின் துணிவு கலைஞருக்கு கிடையாது என்பதே உண்மை!

Unknown said...

//நம்ம செங்கோட்டை செஞ்ச யாருக்கும் கெடுதல் இல்லாத தனிப்பட்ட ஒரு கில்மா விசயத்துக்காக தூக்கியெறிஞ்ச அம்மாவுக்கு இருக்கிற துணிவு தலீவருக்கு இருக்கா? //

மாம்ஸ் அப்ப அந்த பி.ஏவோட பொண்டாட்டி இஷ்டப்பட்டுதான் செங்கோட்டைகூட போனாங்கன்னு சொல்ல வரீங்களா? அப்ப செங்கோட்டை செஞ்சது தப்பில்லைன்னு சொல்றீங்களா? இல்லை தப்புன்னா நீங்க எத்தனை பதிவு எழுதி செங்கோட்டையை கிழிச்சிருக்கீங்க?

Unknown said...

இரவு வானம் said...
யோவ்...!கண்ணதாசன் எப்படின்னு ஊருக்கே தெரியும் அதுக்காக அவரை கவிஞர் இல்லைன்னு சொல்ல முடியுமா..? யாரும் சந்தர்ப்பம் அமைந்தால் யோக்கியன் இல்லை!
நீ என்ன சொல்ல வர்ற....அதைச் சொல்லு...!

நாய் நக்ஸ் said...

ம்ம்ம்...சீக்கிரம் ஆரம்பிங்க....
சண்டைக்காக வெய்ட்டிங்.....

வவ்வால் said...

இரவு வானம் ,

வீடு சுரேஷுக்கு எல்லாம் விவரம் பத்தாது விடுங்க பாஸ் :-))

செங்க்ஸ் செய்ததால் யாருக்கும் எந்த தீங்கும் இல்லையாம், ஆனால் அந்த பி.ஏ கோடிக்கணக்கில சொத்து வச்சு இருக்காராம், கணபதி பேக்கரி டீல் போல என் பொண்டாட்டிய நீ வச்சுக்கோ நான் கமிஷன் வாங்கிக்கிறேன்னு ஏகமா சம்பாதிச்சான் அந்த பி.ஏ.

இன்னும் ஏகப்பட்ட கில்மாவுக்கு ஏற்பாடு வேற செய்து செங்ஸ் ஐ முழுக்கட்டுப்பாட்டில் வச்சு இருந்ததா புதுசா பத்திரிக்கை ஆரம்பிச்சவங்க வரைக்கும் கழுவி ஊத்திட்டாங்க.

அமைச்சர் பதவி மட்டும் இல்லாமல் கட்சி பதவியும் சேர்த்து பறிச்சது வச்சு பார்த்தால் செமை ஆட்டம் ஆடி இருப்பார் போலன்னு கட்சிக்காரங்களே சொல்றாங்க.

ஜெயா டீவி மட்டுமே சுரேஷ் பார்ப்பார் போல :-))

Unknown said...

வவ்வால் & இரவுவானம்

நல்ல ஒற்றுமைய்யா இரண்டு பேருக்கும் இரண்டு பேரும் ஒரு ஆளா..?!(நன்றி : வௌங்காதவன்)

Unknown said...

இரண்டு நைட் பாய்ஸ்க்கும் ஒரு கேள்வி?

நான் கேட்டது துணிவா முடிவு எடுப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதுதான்!

புதுகை.அப்துல்லா said...

பேசாம நீங்க ஒரு கட்சி ஆரமிச்சு முதல்வராயிருங்க. அதுதான் ஒரே தீர்வு! :)

புதுகை.அப்துல்லா said...

அவுங்க எல்லாம் ஒரு இஞ்ச் எக்ஸ்ட்ராவா தடிச்ச தோலு உள்ளவங்க அசரமாட்டாங்க.

//


ஆமாம்ணே. கேபிள் மானங்கெட்டத்தனமா திட்டினாலும் திரும்பத் திரும்ப அவர்கிட்ட போயி பேசிகிட்டு இருக்குற உங்களோட நண்பர்கள்தான நாங்க! உங்க தோல்ல பாதியாவது எங்களுக்கு இருக்காதா? :)

Anonymous said...

கலக்கல் !!!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

@ வீடு சுரேஸ்குமார் said...
வவ்வால் & இரவுவானம்

நல்ல ஒற்றுமைய்யா இரண்டு பேருக்கும் இரண்டு பேரும் ஒரு ஆளா..?!(நன்றி : வௌங்காதவன்)//

மாம்ஸ் நீங்க திமுகவா? அதிமுகவா? ஒரே குழப்பமா இருக்கே

Unknown said...

@ வெளங்காதவன்™ said...
//இரவு வானம் said...

நீங்க என்னதான் சொன்னாலும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு சொன்னாலும், நடுசெண்டர், நடுநிலைவாதின்னு சொன்னாலும், திமுகவ தாக்கி எழுதற அளவுக்கு யாரும் அதிமுகவ தாக்கி எழுதறது தப்பு செஞ்சாலும் ..!////

பயபுள்ள உண்மையச் சொல்லியிருக்கு!!!

#ஆனாலும், கலீஞ்சற வையுரபோது வார சொகம், அம்மாவ வையும்போது வாரதில்ல பாத்துக்க!!!!//

யோவ் இதுலயெல்லாமா சொகம் வருது, செங்கோட்டைக்கு அடுத்த பி.ஏ நீதான்யா

Unknown said...

@ வீடு சுரேஸ்குமார் said...
இரண்டு நைட் பாய்ஸ்க்கும் ஒரு கேள்வி?

நான் கேட்டது துணிவா முடிவு எடுப்பதில் யார் சிறந்தவர்கள் என்பதுதான்!//

ஹலோ மாம்ஸ் முடிவு எடுக்கறதுல சிறந்தவர் யாருங்கறத பத்தி நீங்க சொன்னதவிட செங்கோட்டையன் தப்பு பண்ணது சரிதாங்கற மாதிரி நீங்க போட்ட கமெண்ட பத்திதான் நான் கமெண்டு போட்டேன், அந்தாளு மானாவாரியா பொண்ணுகள வெச்சுக்குவாராம், ஒவ்வொரு பொண்ணு மேட்டர்ல சிக்குனதும் ஒவ்வொரு துறையா புடுங்குவாங்களாம், ஒரு பெண் முதலமைச்சரா இருக்கர மாநிலத்துல அமைச்சரோட யோக்கியதை இதுதானா? அதுக்கு நடவடிக்கை எடுத்ததே லேட்டு, இதுல துணிவா முடிவு எடுப்பதில் யார் சிறந்தவர்கள்னு கேள்வி வேற போங்க மாம்ஸ்

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமை அருமை ! அழகான எழுத்து நடை ..

வவ்வால் said...

//ஆமாம்ணே. கேபிள் மானங்கெட்டத்தனமா திட்டினாலும் திரும்பத் திரும்ப அவர்கிட்ட போயி பேசிகிட்டு இருக்குற உங்களோட நண்பர்கள்தான நாங்க! உங்க தோல்ல பாதியாவது எங்களுக்கு இருக்காதா? :)//

அப்துல்லா அண்ணே,

அவரோட இயலாமையால் அவர் திட்ட ஆரம்பிச்சுடுறார்,எனவே நான் பெருசா எடுத்துக்கலை, அவர் எப்படி " biased view" வில் பேசுறார் என்பதை நான் குறிப்பிட்டு கேட்பதால் பதில் சொல்லமுடியாம அப்படி செய்கிறார், பேட்மன் படத்தின் விமர்சனத்திற்கு நான் சொன்னதை தான் பலரும் வழி மொழிந்து இருந்தார்கள், எனவே இதற்கு வருத்தப்பட வேண்டியவன் நான் அல்ல அவரே.

நான் தனியா ஒரு பதிவுப்போட்டு ஒருத்தரை குறை சொன்னால் தான் தவறு ,அவர்கள் பதிவில் அவர்கள் கண்ணுக்கு தெரியும்ப்படி என் கருத்தை சொல்லும் போதே தெரிய வேண்டாமா?

தவறை தவறு என சொல்ல ஏன் தடித்த தோல் வேண்டும், செய்த தவறை இல்லை என பூசி மெழுக தான் அதெல்லாம் வேண்டும்ணே.

-------

வீடு சுரேஷ்,

இரவு நேரத்தில் வானத்தில் சிறகடிக்கும் வவ்வால் ,ஆனால் வானம் வேற ,வவ்வால் வேற தாண்ணே.

துணிச்சலோ ,முரட்டு தனமோ அம்மையார் யாரா இருந்தாலும் தூக்கியெறியும், ஆனால் அய்யா கொலைக்கேசில் உள்ள போனவங்களை கூட கட்சிய விட்டு தூக்க மாட்டார் :-))

செங்க்ஸ் பொண்டாட்டி,பசங்க கூட அவரோட பேசறது இல்லையாம்,அந்த அளவு விஷயம் முத்திப்போய்,அவர் குடும்பமே நேராப்போய் புகார் கொடுத்து, எச்சரித்து அப்பவும் கேட்காமல் தூக்கியதா எல்லா பத்திரிக்கைலயும் கழுவி ஊத்திட்டாங்கண்ணே, இன்னும் அவரு என்னா பண்ணார்னு கேட்டுக்கிட்டு இருங்க.

ஆனால் இன்னும் கொஞ்ச நாளு அம்மா முன்னாடி மண்டிப்போட்டு பவ்யம் காட்டினால் மீண்டும் வந்துறுவார் :-))

அம்மையாரைப்பொறுத்த வரை மாற்றம் ஒன்றே மாறாதது...எனவே செங்க்ஸின் தீவிர தொண்டரான உங்களுக்கு நல்ல செய்தி வரும் வெயிட் செய்யுங்க :-))

புதுகை.அப்துல்லா said...

@வவ்வால் அண்ணன்.

ஒரு நக்கல் கமென்ட்டுக்கு இவ்வளவு சீரியஸ் பதிலா?? அவ்வ்வ்வ்வ் ம்ம்முடியலை :)

Related Posts Plugin for WordPress, Blogger...