யாமறிந்த கவிகளிலே..பட்டுக்கோட்டையார் போலொருவர் எங்கும் காணோம்.
மகாதேவி:
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா. இதயம் திருந்த மருந்து சொல்லடா.
இருக்கும் அறிவை மடமை மூடிய இருட்டு உலகமடா..
வாழ்வில் எந்த நேரமும் சண்டை ஓயாத முரட்டு உலகமடா.
விளையும் பயிரை வளரும் கொடியை வேருடன் அறுத்து விளையாடும்...
மனம் வெந்திடும் தோட்டக்காரனிடம்..மிரட்டல் வார்த்தைகள் ஆடும்.
பல வறட்டு கீதமும் பாடும். வித விதமான பொய்களை வைத்து புரட்டும் உலகமடா.
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா.....
அன்பு படர்ந்த கொம்பினிலே ஒரு அகந்தை குரங்கு தாவும்.
அதன் அழகை குலைக்க மேவும்.
கொம்பு ஒடிந்து, கொடியும் தொலைந்து குரங்கும் விழுந்து சாகும்.
சிலர் குணமும் இதுபோல் குறுகிப்போகும் கிறுக்கு உலகமடா.
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா. இதயம் திருந்த மருந்து சொல்லடா.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா..
இது கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா..
....................................................................................
ரயில் பயணமொன்றில் தான் கண்ட காட்சிகளை பாடலாக பதிவு செய்தார் பட்டுக்கோட்டையார்:
ஆரவல்லி:
சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா..
குன்னக்குடி போற வண்டியில் குடும்பம் பூரா ஏத்துனா..
குளிரடிக்கற குழந்த மேல துணிய போட்டு போத்துனா..
குவா குவான்னு கத்துனதால முதுகுல ரெண்டு சாத்துனா..
கிலுகிலுப்பைய கையில குடுத்து அழுத புள்ளைய தேத்துனா..
சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்தனா..
பன்னப்பட்டி கிராமத்துல பழைய சோறு தின்னுக்கிட்டா..
பங்காளி வூட்டு சிங்காரத்தோட பழைய கதையும் பேசிக்கிட்டா..
கன்னுக்குட்டிய மல்லுக்கட்டியே கயத்த போட்டு பிடிச்சிக்கிட்டா..
மண்ணுக்கட்டியால் மாங்காய் அடிச்சி வாயில போட்டு கடிச்சிக்கிட்டா.
சின்னக்குட்டி நாத்தனா சில்லறைய மாத்துனா..
.......................................................................
நாடோடி மன்னன்:
சும்மா கெடந்த நெலத்த கொத்தி சோம்பல் இல்லாம ஏர் நடத்தி..
கம்மா கரைய ஒசத்தி கட்டி.. கரும்பு கொல்லையில் வாய்க்கா வெட்டி..
சம்பா பயிர பறிச்சி நட்டு...தகுந்த முறையில் தண்ணீர் விட்டு..
நெல்லு வெளஞ்சிருக்கு..வரப்பும் உள்ள மறஞ்சிருக்கு.
அட காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்.
இப்போ காடு விளையுட்டும் பெண்ணே. நமக்கு காலம் இருக்குது பின்னே.
மண்ணைப்பொளந்து சொறங்கம் வச்சி, பொன்னை எடுக்க கரிகள் வெட்டி..
மதிலை வச்சி மாளிகை கட்டி கடலில் மூழ்கி முத்தை எடுக்கும்..
வழிகாட்டி மரமான தொழிலாளர் பட்ட துயர் மாறும்.
ரொம்ப கிட்ட நெருங்குது நேரம்.
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்.
காடு விளையட்டும் பெண்ணே. நமக்கு காலம் இருக்குது பின்னே.
மாடா உழைத்திடும் வாழ்க்கையிலே பசி வந்திட காரணம் என்ன மச்சான்?
அவன் தேடிய செல்வங்கள் வேற இடத்திலே சேர்வதனால் வரும் தொல்லையடி.
பஞ்ச பரம்பரை வாழ்வதற்கு இனி பண்ணவேண்டியது என்ன மச்சான்?
தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது.
சிந்திச்சு முன்னேற வேணுமடி.
வாடிக்கையாய் வரும் துன்பங்களை இனி நீடிக்க செய்வது மோசமன்றோ?
இருள் மூடிக்கிடந்த மனமும் வெளுத்தது.
இனி சேரிக்கும் இன்பம் திரும்புமடி.
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தான மிச்சம்.
அட நானே போடப்போறேன் சட்டம்.
பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம்.
நாடு நலம் பெரும் திட்டம்...
...............................................................................
உலக சினிமா ரசிகனின் பின்னூட்டம் காரணமாக காணொளிகள் இணைக்கப்பட்டு உள்ளன.
7 comments:
வலிய கருத்துக்களை,எளியவனுக்கும் புரிய வைப்பதில் இவருக்கு இணையாக இன்று வரை யாரும் இல்லை.
மார்க்சிய சித்தாந்தங்களை மாட்டுக்காரன்
மண்டைக்குள் சேர்த்த மகா பாட்டுக்கரன்.
நன்றியுடன், வேண்டுகோள்..
காணொளி கிடைத்தால் இணைக்கவும்...
சிவா...ப்ளீஸ்.
என்னா மாதிரி கவிஞர் இவர் ! ரொம்ப வருஷம் வாழ்ந்திருந்தா கண்ணதாசனுக்கு இணையான புகழ் இவருக்கு கிடைச்சிருக்கும் ! ரியல் ஜீனியஸ் ! மிக இளம் வயதில் இறந்தது பெரும் சோகம் !
நன்றி சிவா...
நாடோடி மன்னன் படப்பாடல் பல செய்திகளை சொல்லியது.
இப்படத்தின் இயக்குனர் எம்ஜியார்தான்.
முழுப்பாடலையும் குளோசப் ஷாட்களிலே எடுத்திருக்கிறார்.
இவ்வளவு நீள குளோஷப் ஷாட்டில் முகபாவம் காட்டி நடிப்பது எளிதல்ல.
நடிப்புக்கு இலக்கணம் வகுத்த பானுமதியோடு சரிக்கு சரியாக பெர்பாமன்ஸ் காட்டியிருக்கிறார்.
‘நானே போடப்போறேன் சட்டம்’ என்ற வரிக்கு..சின்னதாக ’பாஸ்ட்’ ஜூம் போட்டிருக்கிறார்.
எவ்வளவு தன்னம்பிகையோடு அந்த ஷாட் கன்ஸீவ் பண்ணியிருக்கிறார்.
கிரேட்.
உலகம் போற்றக்கூடிய கவிஞர்...
நல்ல திறமையாளர்கள் சீக்கிரமே உலகத்தை விட்டு போய்விடுகிறார்கள் ஆனாலும் அவர்களின் திறமைகள் காலத்தால் அழியாமல் இருக்கிறது...!!!
பட்டுகோட்டையாரின் பாடல்களோடு காணொளியும் அற்புதம்! சிறப்பான பகிர்வுக்கு நன்றி!
சிந்தனைக் கவி மூலம் சிந்திக்க வைத்தவன்....!
புரட்சி கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!
Post a Comment