CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, July 17, 2012

உணவும்,சாப்பாடும் - இட்லிக்கடைகள்


என்னது இட்லியா? அதுக்கு ஒரு பதிவா? என்று கேட்பவர்கள் இன்னும் இந்த பதிவுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் வடமேற்கு ஆசியா முதல் தென் குறுக்கு ஐரோப்பா வரை பல வெளிநாட்டினர் எனது பதிவை படிப்பதால் அவர்களுக்கு இட்லி எனும் வஸ்து என் மூலம் அறிமுகம் ஆவது மிகப்பெரிய ரிக்கார்ட் ப்ரேக் என்பதால் இப்பதிவு. 

ஆயாக்கடை இட்லி பற்றி தெரியாமல் ஒருவன் தமிழ்நாட்டில் இருக்கிறான் என்றால் அவனை போயா என்று சொல்லலாம். நான் ஆறுவயதில் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருமுனையில் ஒரு பாட்டி பல இட்லி, தோசைகள் விற்பார். அந்த வயதிலேயே ஒரே அட்டெம்ப்டில் நான்கு இட்லியை உள்ளே தள்ளும் அளவிற்கு வாய் அகன்று இருப்பினும், இட்லி எனும் சொல் மட்டும் வாயில் நுழையவே நுழையாது. "ஆயா..நாலு இக்கிலி குடு" என்றுதான் கேட்பேன். நான் இப்போது பெரியவன் ஆகி விட்டதால் பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அந்த கடையை ஆயா மூடி இருந்தால் இந்த பதிவின் நோக்கமே(!) சட்னி ஆகி இருக்கும். எனவே பல பற்பல ஆண்டுகள் கழித்து அந்த தெருவிற்கு சென்றேன்.  

                                                               
அட என்ன ஒரு ஆச்சர்யம்..ஆயா அங்கேயே இருந்தார். "என்ன ஆயா எப்படி இருக்கீங்க?" என்று பிளாஷ்பேக்கை ஆரம்பித்தேன். "கீறேன். கீறேன்" என்று கண்டுகொள்ளாமல் தோசை போட ஆரம்பித்தார். அர்ஜுனனுக்கு மரத்தில் இருக்கும் கிளியின் மூக்கு மட்டுமே தெரிவது போல எனக்கு தோசையில் ஊற்றப்பட்ட எண்ணை மட்டுமே தென்பட்டது. அதற்கு முன் நண்பர்களே, தோசைக்கு அர்த்தம் தெரியாமல் தலைமுறை தலைமுறையாக தின்று குவிக்கும் ஆட்களுக்கு இதோ எனது விழிப்புணர்வு டிப்ஸ்(?!): " தோ என்றால் ஹிந்தியில் இரண்டு. இருபக்கமும் தோசையை சுட வைக்கையில் சை சை என்று ரீங்காரங்கள் வருமல்லவா? அதனால்தான் அதை 'தோ'சை என்று இந்தியர்கள் அழைக்க ஆரம்பித்தோம். கைபர் கணவாயின் கல்வெட்டுகளில் இதற்கான ஆதாரங்கள் உண்டு. சரி இனி நிகழ்காலத்திற்கு வருவோம். என்னிடம் இருந்த கேமிராவில் ஆயாக்கடையை போட்டோ எடுக்க ஆரம்பித்தேன். மொத்தம் 45 போட்டோக்கள். கடைசியாக இட்லியை க்ளோசப்பில் எடுக்கும் ஆர்வத்தில் தெரியாமல் மாவு பக்கெட்டில் காலை விட்டு ஆயாவிடம் வசவு வாங்கினேன்.        

                     பச்சை இலையில் வெள்ளையாக நடுவில் உள்ளதே..அதுதான் இட்லி நண்பர்களே.

இட்லி...'சைவ'ர்கள் உணவு என்றொரு தவறான பிம்பம் இங்குண்டு. ஆனால் முதலியார், முசல்மான், முக்குலத்தோர் என அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவிது என்பதே உண்மையான உண்மை. தமிழகத்தில்  தலப்பாக்கட்டு மற்றும் புஹாரி ஹோட்டல்களில் கிடைக்கும் ஜில்லான இட்லிகள் செம பேமஸ். குறிப்பாக மதிய வேளைகளில் அங்கு வியாபாரம் அமோகமாக இருக்கும். அனைத்து வகை(!) இட்லியையும் உண்ட எனக்கு குஷ்பு இட்லி சாப்பிட மட்டும் சந்தர்ப்பம் அமையவில்லை. ஒருமுறை ஜாக்பாட் நிகழ்ச்சி ஜெயா டி.வி.யில் பார்த்துக்கொண்டு இருந்தபோது "குஷ்பு மேடம். உங்க பேர்ல இருக்குற இட்லியை எனக்கு பார்சல் அனுப்ப முடியுமா?" என்று நிறைய தரம் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஆனால் அவர் புறமுதுகு காட்டி தன் திமிரை வெளிப்படுத்தியது என்னை காயப்படுத்தியது.

சர்வருக்கு தந்தது போக மிச்ச டிப்ஸ் உங்களுக்காக:

இட்லிக்கு தொட்டுக்கொள்ள ஹோட்டல்களில் சட்னி,சாம்பார் தருவார்கள். ஆர்வத்தில் உடனே அவற்றை ருசிக்க பறக்கக்கூடாது. நீ பாதி நான் பாதி படத்தில் ஜனகராஜ் அடிக்கடி பர்சை தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போல உஷாராக இருந்து கொண்டே இட்லியை பிய்க்க வேண்டும் தோழர்களே. 'இட்லி தீந்து போச்சி' என்று சர்வர்கள் சொன்னால் மனம் நோக வேண்டாம். என்னிடம் தேவயானி நம்பர் உள்ளது. 'சூர்யவம்சம்' உப்மா ஆர்டரின் பேரில் செய்து தருவார்.

தமிழகத்தில் மொத்த ஹோட்டல்கள் 3,25,951. அதில் சுமாரான இட்லி போடும் ஹோட்டல்கள் மட்டும் சுமார் 2,94,312. அங்கு கிடைக்கும் ஒரே மாதிரியான வித விதமான இட்லிகள் குறித்து விரைவில் எழுதுகிறேன்.

இட்லி பற்றிய செம கன்னட குத்துப்பாட்டு.... என்ஜாய்.

'இட்லி, வட தின்னோதக்கே சட்னி,சாம்பார் ஏடு பேக்கு...'
  
...................................................................................              
22 comments:

முத்தரசு said...

இட்டிலி தோசை சரித்திரம் அறிந்தேன் - வரலாற்றை தெரிய படுத்தியமைக்கு நன்னி.

வெளங்காதவன்™ said...

//ஆனால் வடமேற்கு ஆசியா முதல் தென் குறுக்கு ஐரோப்பா வரை பல வெளிநாட்டினர் எனது பதிவை படிப்பதால் அவர்களுக்கு இட்லி எனும் வஸ்து என் மூலம் அறிமுகம் ஆவது மிகப்பெரிய ரிக்கார்ட் ப்ரேக் என்பதால் இப்பதிவு. ///

:-)

வெளங்காதவன்™ said...

அது என் பட்டக்ஸை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்து வந்த நேரம் "சேகர் செத்துருவான் ப்ரால்லயா... " என்று முகத்தை விரைப்பாக வைத்துக்கொண்டு சொன்னேன். - என்ற வரிகள் மின்னி மறைகின்றன மனதில்!

கருத்து உபயம்- mokkaiblog.blogspot.in/2012/07/06072012.html

அஞ்சா சிங்கம் said...

டிவைன்........டிவைன்................

சேலம் தேவா said...

உங்களது குறுக்கு நெடுக்கு வெளிநாட்டு ரசிகர்களுக்காக இதே வரிசையில் சேவையைப்பற்றியும் கூறி உங்கள் சேவையை தொடர வாழ்த்துகள்..!! :)

Unknown said...

இட்டிலிக்கு சட்டினி இல்லாவிட்டால் பட்டினி

ராம்குமார் - அமுதன் said...

இக்கிலி கூறித்த தமிழாகத்தின் சிரந்த பதிவு இது என்பேன்.. மிக எருமையாய் அழுதியிருக்கிறீர்கள்... பகிர்வுக்கு நாண்டி :))

உணவு உலகம் said...

அந்த இரண்டாவது படம் இட்லிக்காக மட்டும் எடுத்ததாகத்தெரியவில்லை!

உணவு உலகம் said...

தங்களின் குஷ்பு இட்லிக்கனவு விரைவில் நிறைவேறட்டும். வாழ்த்துக்கள்.

உணவு உலகம் said...

மாவு வைத்திருந்த பாத்திரத்தில் காலைவிட்டு, ருசியைக் கூட்டி வந்துள்ளீர்கள் போல! :)

...αηαη∂.... said...

எங்க ஜாக்கி அண்ணன ஓட்டுற மாதிரி தெரியுதே ??

நாய் நக்ஸ் said...

சிவா,,,
நிறைய மிஸ் ஆகி இருக்கு....

Unknown said...

அன்பின் நண்பர் சிவா அவர்களே இட்லியை பற்றி தெரிந்து கொண்டேன்....!நன்னி! வணக்கம்

Philosophy Prabhakaran said...

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா... ஆனா ரெண்டாவது மாங்காவுக்கு இது புரியாது என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்...

கோவை நேரம் said...

வெள்ளையா இருக்குமே அதுதானே...இட்லி...?

”தளிர் சுரேஷ்” said...

இட்லி பற்றிய அட்டகாச தகவல்கள் புல்லரிக்கவைத்தன!

ஃபாருக் said...

இட்லியை வைத்துக்கூட பதிவு எழுத முடியுமோ .நல்சுவை

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு இட்லி வரலாறு...

பகிர்வுக்கு நன்றி...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தக்காளி சட்னிய விட்டுட்டீங்களே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அனைத்து வகை(!) இட்லியையும் உண்ட எனக்கு குஷ்பு இட்லி சாப்பிட மட்டும் சந்தர்ப்பம் அமையவில்லை. /////

அச்சச்சோ என்ன இது ஆபாசம்....!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// பச்சை இலையில் வெள்ளையாக நடுவில் உள்ளதே..அதுதான் இட்லி நண்பர்களே.//////

இட்டிலியை உலகுக்கே அறிவித்த நீர் இனிமேல் இட்டிலி ராசா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD NELLAI said...
தங்களின் குஷ்பு இட்லிக்கனவு விரைவில் நிறைவேறட்டும். வாழ்த்துக்கள்./////

சுந்தர் சி.... ச்சீ.. தலிவர் கோச்சுக்காம இருந்தா சரி......!

Related Posts Plugin for WordPress, Blogger...