எட்டிப்பார்க்கும் குட்டி பார்க்கே
'நான் ஈ' குறித்த ப்ரீ ரிலீஸ் செய்திகள் தேவையான அளவிற்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து உண்மைதான்.நாகார்ஜுனா நடித்த ரட்சகன் தமிழ்ப்படத்தை தெலுங்கு டப்பிங் என்றெண்ணி தியேட்டருக்கு போகாத ரசிகர்களைப்போல், இதில் கன்னட ஸ்டார் சுதீப் நடித்திருப்பதை அறிந்து போகலாமா வேண்டாமா எனும் குழப்பத்தில் வீட்டினுள் ஈ அடித்து யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில் கிட்டத்தட்ட எல்லா விமர்சனமும் பாசிடிவ்வாக இருக்க படம் ஓடிய ஸ்பாட்டுக்கு சென்றேன். நல்லவேளை நேரடி தமிழ்ப்படம்தான். சும்மா சொல்லக்கூடாது சுதீப் நல்லாத்தான் ஈயடிச்சி இருக்கார்.
நாயகியை காதலிக்கும் நாயகன் (அதிநவீனம்லே. அருமை) பெயர் நானி(நிஜப்பெயரும் அதே) ஒரு கட்டத்தில் தொழில் அதிபர் ஒருவரை பழிவாங்க அவதாரம் எடுப்பதே கதை. நானி வரும் காட்சிகளில் மட்டும் டப்பிங் பட வாசம் அதிகம். நல்லவேளை சீக்கிரமே தலைவரை பேக் அப் செய்கிறார்கள். சுதீப்..கன்னட ரகுவரன். அசல் நாயகம் கம் வில்லன் இவர்தான். பெண்களை வசியம் செய்யும் தொழிலதிபராக அட்டகாசமாய் பொருந்துகிறார். ஈயால் இம்சைக்கு ஆளாகும் போதெல்லாம் சுதீப் தரும் ரியாக்சன் நன்று. பிறமொழியில் நடிக்கும் முதல் படத்தில் ஹீரோக்கள் பெயர் வாங்குவது லேசுப்பட்ட காரியமல்ல என்பதை நாமறிவோம். சுதீப் லக்கி.
ஈ - வேட்டைக்கு தயாராகும்போது ஒலிக்கும் பாடல் மட்டும் விறுவிறுப்பு. கிராபிக்ஸ் காட்சிகள் நன்றாக கையாளப்பட்டு உள்ளன. ஈ படும் அவஸ்தைகள், ஈயால் மனிதர்கள் படும் பாடு போன்ற அனைத்தையும் நன்றாகவே காட்சிப்படுத்தி உள்ளனர். அமெச்சூர்தனமான காட்சிகளை பெருமளவு தவிர்த்து திரைக்கதை அமைத்து இருக்கும் ராஜமௌலியை பாராட்டலாம். ஈயைக்கண்டு தியேட்டரில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் உற்சாகமாக கைதட்டுவதில் இருந்தே தெரிகிறது..தயாரிப்பாளர் போட்ட முதலுக்கு மோசமில்லை என. அடுத்த வாரம் தல படம் வந்தாலும் இந்த ஈ அவர் மூக்கின் மேல் நின்று 'கொஞ்சம்' ஆட்டம் காட்டும் என்று தெரிகிறது. ரஜினி - சரத்பாபு வேலைக்காரன் படத்தின் ஈ காமடி, முழுநீள திரைப்படமாக உருமாறி இருப்பது போன்ற பீல் வராமல் இல்லை.
பென்சிலை சீவும் பெண் சிலையே
நான் ஈயில் ராணித்தேனீ சமந்தா. சமந்தா பெயரில் தனி இதழ் வந்தால் எத்தனை ரூவாய் ஆனாலும் சந்தா கட்டி படிக்கலாம். இந்த அற்புத, இனிய, அழகிய நாயகியை 'கடல்' படத்தில் கழற்றிவிட்ட மணிரத்னம், 'ஐ' படத்தில் பை சொன்ன ஷங்கர் இருவரும் மறுஜென்மத்தில் தெருத்தெருவாக ஈயாய் அலையக்கடவது. டபுள் ஸ்கூப் ஐஸ்க்ரீமில் ஒரு பக்கெட் தேன் ஊற்றியது போல அப்படி ஒரு அழகு. அனைத்து வகை எக்ஸ்ப்ரசன்களையும் சாம்பிளாக தந்துள்ளார். அழகும், நடிப்பும் சேர்ந்த அரிய நடிகைகளுள் ஒருவராக வலம் வர வாய்ப்புகள் அதிகம். கவிஞர் மதன் கார்க்கி உணர்ச்சிவசப்பட்டு 'பென்சிலை சீவும் பென்சிலையே' என்று பாடலொன்றில் பொங்கி வழிந்துள்ளார். மேலுள்ள முதல் படத்தில் 'எட்டிப்பார்க்கும் குட்டி பார்க்கே' வார்த்தைகளின் காப்பி ரைட்ஸ் எனதென்பதை எச்சரிக்கிறேன்.
இரண்டே காட்சிகள் வந்தாலும் சந்தானம் டாப் கிளாஸ். ஆளு ஸ்க்ரீனில் வந்தாலே கரவொலி காதை பிளக்கிறது. 'தட்சிணாமூர்த்தி' டயலாக் காமடி கலாட்டா. கிரேசி மோகன் வசனம் எழுதி உள்ளார். ஆனால் அவர் பாணியில் இருந்து மாறுபட்டு வித்யாசமாக தெரிகிறது இப்படம். நல்ல பொழுதுபோக்கு படைப்பை வெகுஜனங்களுக்கு பிடித்த வண்ணம் எடுத்துள்ளார் ராஜமௌலி. எனக்கு என்ன பயம்னா இந்த படம் ஓடிட்டா..நம்ம ராமநாராயணன் பார்முக்கு வந்துடுவாரோன்னு திகிலா இருக்கு. சும்மா இருக்குற சேவலை சீண்டி விடுவானேன். அது கொண்டைய ஆட்டிட்டு கொத்த வருவானேன்...மிஸ்டர் ராஜமௌலி!!
குறிப்பு: சமந்தா அழகில் மயங்கி கலக்கத்தில் இருப்பதால் முக்கிய கேரக்டர் சுதீப்பின் ஸ்டில்லை போட இயலவில்லை என்பதை ஆற்றொண்ணா துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.
நான் ஈ - ரெக்கை கட்டி பறக்குது
.............................................................................
.............................
My Other Site:
.............................
19 comments:
எல்லோருமே பாசிடிவ்வாத்தான் படத்தை பத்தி சொல்றாங்க! பார்த்துட வேண்டியதுதான்! அந்த கடைசி வரி! இராம நாராயண் பற்றி கலக்கல்!
சமந்தா ரசிகர் மன்ற தலைவர் அவர்களே !
வணக்கம் சிவா,சார்!நல்ல விமர்சனம்!ஆணாதிக்க வாதியாகிய உங்களை கண்டிக்கிறேன்!
ரைட்டு!
//ஈயைக்கண்டு தியேட்டரில் இருக்கும் குழந்தைகள் எல்லாம் உற்சாகமாக கைதட்டுவதில் இருந்தே தெரிகிறது..தயாரிப்பாளர் போட்ட முதலுக்கு மோசமில்லை என. //
சின்னப்பசங்களை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது, அவர்கள் புண்ணியத்தில் ஓடினால் உண்டு.
நீங்க கிறங்கினத பார்த்தா சமந்தாவுக்காவும் ஓடும் போல தெரியுதே :-))
லாஜிக் பார்க்காமல் பார்க்க வேண்டிய படம், கடசியில நீங்க சொன்ன ராமநாராயணன் மேட்டர் தான் கிலியா இருக்கு,ஏற்கனவே அவர் அனிமல் ஸ்பெஷலிஸ்ட்,இனிமே பூச்சிப்பக்கம் தாவிடுவாரோ :-))
கொசுவும் குட்டிப்பாப்பாவும்னு படம் வந்தாலும் வரும் :-))
அம்மணிக்கு ஸ்கின்னுல புண்ணு வந்ததால மேற்படி ரெண்டு இயக்குனர் படத்திலும் தானே கழண்டது தாங்களுக்கு தெரியவில்லையோ?
தொடர் வெற்றிகளைத் தந்தவரின் எதிர்பார்ப்புள்ள படமுங்க...
ஆனால் நான் இன்னும் பார்க்கல உங்கள் விமர்சனம் இன்னும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது
//எட்டிப்பார்க்கும் குட்டி பார்க்கே//
அர்த்தம் என்னவோ !
விமர்சனம் நன்று
நல்லாத்தான்யா எட்டிப்பாக்குது அந்த குட்டிப்பார்க்கு.....!
/////குறிப்பு: சமந்தா அழகில் மயங்கி கலக்கத்தில் இருப்பதால் முக்கிய கேரக்டர் சுதீப்பின் ஸ்டில்லை போட இயலவில்லை என்பதை ஆற்றொண்ணா துயரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.///////
அப்போ சமந்தா ஸ்டில்லாவது இன்னும் ரெண்டு போட்டிருக்கலாம்ல?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்லாத்தான்யா எட்டிப்பாக்குது அந்த குட்டிப்பார்க்கு.....!//////////////////////
நல்லா கண்ணை திறந்து பாருங்க அது ஒன்னும் குட்டிபார்க்கு இல்லை ....கொஞ்சம் பெரிய பார்க்குதான் ............
@ சுரேஷ்
ஆமாம் சுரேஷ். படம் பாருங்க.
@ மோகன் குமார்
நான் எப்பவுமே தொண்டன் தாங்க.
@ யோகா
ஹா..ஹா..உண்மைய சொன்னேன்.
நல்ல விமர்சனம் ! தொடர வாழ்த்துக்கள் ! நன்றி !
சரிய்யா படத்தை பார்த்துருவோம்.
அங்கே ஏ எட்டி பார்க்"கும் கிலி ச்சே கிளி அழகோ அழகு ஹி ஹி....!
:)
Nall Vimarsanam Thala...
But innum Doha vil intha movie release agala..
Post a Comment