CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, July 6, 2012

குஷ்பு-நமிதா முன்னேற்ற கழகம் வாழியவே!!


                                             சாச்சிபுட்டான் மச்சான்(அற (போதையில்) போராட்டம்!!)) 

'பஞ்சாயத்து பாலிடாயில் குடிச்சிட்டானாம்டா' லெவலுக்கு ஒரு வழியாக சிறை நிரப்பும் போராட்டத்தை சக்சஸ் என்று அவர்களே அறிவித்து விட்டார்கள். படம் ரிலீஸ் ஆன முதல் நாளே தினத்தந்தில 'உலகமெங்கும் வெற்றி நடைபோடுகிறது'ன்னு வெளம்பரம் குடுக்கற சினிமாக்காரன் செத்தான் போ. இதுக்கு அறப்போராட்டம்னு பேரு வச்ச மவராசு வாயில ஒரு கண்டெய்னர் சக்கறைய அள்ளி போட. 

கொஞ்ச நாளைக்கி முன்னதான் 1006 சோடிங்களுக்கு கண்ணாலம் பண்ணி வக்கிறேன்னு சொல்லி மேடம் ஒரு தமாசு பண்ணாங்க. கணக்கு காட்றதுக்காக கண்ணாலமாயி கைக்குழந்தையோட இருக்குற பொம்பளைங்க, மீசை மொளைக்காத விடலைங்கள எல்லாம் வளச்சி போட்டு 'மாங்கல்யம் தந்துனானே' வாசிச்சாங்க. அதுக்குள்ள அடுத்த டமாசு. ஏற்கனவே எதிர்க்கட்சி ஆளுங்க ஏகப்பட்ட பேரை உள்ள வச்சிருக்காங்க மேடம். 'அந்த போராளிங்களை பிரிஞ்ச துக்கம் தாங்காம மாசக்கணக்கா சோறு தண்ணி இல்லாம தவிச்ச உடன்பிரப்ஸ்களே. அவங்களை பாக்க உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் இதோ. சிறை ரொப்பும் போராட்டம்' அப்டின்னு அறிவிச்ச ஐயா வாழி. இதைப்பாரட்டி எழுதாம எங்கய்யா போனார் வாலி.

ஜெயிலுக்கு போகாதவங்க லிஸ்டுல மொத ஆளா நிக்கிறது கலைஞர்தான். ஏன் போகலைன்னு காரணம் கேட்டா கொமட்டையிலேயே குத்துவோம். அடுத்த எஸ்கேப் 'நம்ம' ராசா (நமது கலைஞர் தொலைக்காட்சி மாதிரி..). 'திகார் சிறைக்கதவை பகார் என உடைத்து ஜாமீனில் வந்த புனுகுப்பூனையே'...அண்ணன் ரிலீஸ் ஆனப்ப என்னமா குடுத்தாங்கய்யா வரவேற்பு. மறுக்கா ஜெயிலா எட்றா ஓட்டம்னு தகதகத்தாய கதிரவன் தப்பி ஓட்டம். தளபதி மறியல் செய்தபோது இருந்த கூட்ட எண்ணிக்கை ,கைதுப்படலம் தொடங்கியதும் பாதியாகிப்போனதாம். கனியக்காவை பார்க்க வந்த ராசாத்தி அவர்களிடம் 'மேடம் உங்களையும் அரெஸ்ட் பண்ணலாமா?' என்று போலீஸ் கேட்க அவங்களும் அங்க இருந்து எஸ்கேப். கோவை, திருச்சில ஏகப்பட்ட தொண்டர்கள் சிதறி ஓடிட்டாங்கன்னு பத்திரிகை செய்தி சொல்லுது. அஞ்சா நெஞ்சன், பவர் கட் ஆற்காட்டார், நெப்ஸ், கவிதாயினி கயல்விழி ஏரியா பக்கம் தலை வச்சி கூட படுக்கலையாம். இணையத்துல கட்சிக்காக தம் கட்டி பேசற ஒண்ணு ரெண்டு பேரு கூட வீட்டை விட்டு வெளியே வரலையாம்(இவங்கள போலீசும், கட்சியும் கணக்குலேயே எடுத்துக்கலைங்கறது வேற விஷயம்).

                                                            பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மென்ட் வீக்.       

'எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன. நான்தான் கட்சி. கட்சிதான் நானு'..அதாம்லே குசுப்பு. சட்டுன்னு ஜீப்ல ஏறி சிட்டா செயிலுக்கு போனாக. 'ஒரே வாரத்துல திராவிட வரலாற்று புக்குங்களை எல்லாம் கரைச்சி குடிச்சிட்டுதான் கட்சிலேயே சேந்தேன். எனக்கு வேற என்ன தகுதி வேணும்' அப்படின்னு கேட்ட குசுப்புதாய்யா புலியை மொறத்தால அடிச்சி வெரட்டுன குடும்ப இஸ்திரி. டி.வி.க்கு நமீதா. தீப்பொறி அரசியலுக்கு குசுப்பு. டி..எம்.கே.வை எவனாலயும் ஆட்ட முடியாது. இனிமே குசுப்பு, நமீதாவுக்கு மன்றம் ஆரம்பிச்சி பொழைக்கிற வழிய பாருங்க. இளைஞர் அணி போஸ்டிங் ஜென்மத்துக்கு காலி ஆகப்போறதில்ல. "மதுரை ஜெயில்ல மைதானம் அமைச்சி மல்யுத்தம் நடத்துவிங்க நாங்க. தமிழ்நாட்ல இருக்குற சப் ஜெயில்ல எல்லாம் என் சப்ஜெக்டைதான்யா பாடமா நடத்தறாங்க என் சிப்ஸு '' என்று உளவுத்துறை டி.ஐ.ஜி.யிடமே வசனம் பேசி ராமநாதபுரத்துல அரெஸ்ட் ஆன அண்ணன் ரித்தீசுக்கு இருக்குற தில்லு எவனுக்கு இருக்கு.    

                                                  ஜாண் பிள்ளைன்னாலும் ஆண் பிள்ளைடா    

டி.எம்.கே. தல ஈழம் பத்தி பேசுனா எதிர்க்குரல் தர்ரவனுங்க எல்லாம் 'போலி தமிழ் தேசியவாதிங்க'..இப்படி சொல்லிட்டு திரியுது ஒரு (ஒரு ஆள் மட்டும் இருக்குற) க்ரூப்பு. நீங்க என்ன போர் நடக்கறப்ப துப்பாக்கி தூக்கிட்டு போனீங்களான்னு கேள்வி வேற. அதான் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாம பொத்திக்கிட்டு இருந்த உங்க கட்சியையும், காங்குரஸ்ஸையும் தேர்தல்ல பஞ்சர் ஆக்கி படுக்க வச்சமே.. அது போதாதா.. அதுக்கப்புறமும் இந்த வாயி பேசுறது ஆகாது மாப்ளைஸ். 

ஆனாலும் நெக்குல அக்குள்ள வச்சிட்டுதாய்யா திரியறீங்க!!    
................................................................................

...............................
My other site:
agsivakumar.com
...............................

.................................................
சமீபத்தில் எழுதியது:

................................................


15 comments:

காப்பிகாரன் said...

supera soninga boss

வவ்வால் said...

//டி.எம்.கே. தல ஈழம் பத்தி பேசுனா எதிர்க்குரல் தர்ரவனுங்க எல்லாம் 'போலி தமிழ் தேசியவாதிங்க'..இப்படி சொல்லிட்டு திரியுது ஒரு (ஒரு ஆள் மட்டும் இருக்குற) க்ரூப்பு.//

அண்ணாத்த, ஊருல சொல்லுவாங்க ,அது சாமிக்கு நேந்துவிட்ட ஆடுன்னு, அதை சாமியாடுன்னு வேற மருவாதியா சொல்லுவாங்களா... ஆடு நெனச்சுக்கும் ஆஹா என்னா மருவாதி ...என்ன மருவாதின்னு ...ஆனா ஆட்டுக்கு தெரியாது ஒரு நாள் மாலை போட்டு , மஞ்ச தண்ணி ஊத்தி வெட்டி மசாலா போட்டு கொழம்பு சட்டில கொதிக்க போறோம்னு :-))

ஆனாலும் ஆடு ஊருக்குள்ள கெத்தா மே...மே மெம்மேனு கத்திக்கிட்டு தனியா கெத்தா தான் திரியும்லே :-))

நாய் நக்ஸ் said...

:)
:)
:)

வைகை said...

அதான் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாம பொத்திக்கிட்டு இருந்த உங்க கட்சியையும்,////

யோவ்.. சும்மாவா பொத்திகிட்டு இருந்தோம்? வெற்றிக்கொடிகட்டு படத்துல பார்த்திபன் வடிவேலுவா மெரட்டுன மாதுரி மெரட்டில பொத்திகிட்டு இருக்க சொன்னானுங்க அதனால இருந்தோம்? சும்மா அதையே நோண்டிகிட்டு இருந்தா என்னய்யா அர்த்தம்? சரி.. பொத்திகிட்டு இருந்தோம், நீ வந்து கால்ல விழுந்தியா? நீ கால்ல விளுந்துருந்தா இந்நேரம் நாங்க அவங்கள புளியங் குச்சிய வச்சாவது அடிச்சு தொரத்திட்டு ஈழம் வாங்கி கொடுத்துருப்போம்! தெரியும்ல? போங்க தம்பி..போங்க... போய் வரலாறு புவியியல் எல்லாம் படிச்சிட்டு வாங்க! :-))

சக்தி கல்வி மையம் said...

சிறை ரொப்பும் போராட்டம்' அப்டின்னு அறிவிச்ச ஐயா வாழி. இதைப்பாரட்டி எழுதாம எங்கய்யா போனார் வாலி.// இளம் கவிஞர் டி ஆர் சிவா வாழ்க..வாழ்க..

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!!!!செம!நாண்டுகிட்டு இன்னும் சாவாம இருக்கானுகளே?

Joe said...

செம நக்கல்... :-D

உலக சினிமா ரசிகன் said...

என்னய்யா இது...விடாம இப்படியா அடிக்கிறது...
தெளிய வச்சு அடிங்கப்பு...

Prabu Krishna said...

கலா ஸ்டைல்ல சொன்னா கிழி கிழி கிழி கிழின்னு கிழிச்சுட்டீங்க.

”தளிர் சுரேஷ்” said...

சூப்பரப்பு! நல்ல நையாண்டி!

Unknown said...

நல்ல நடுசென்டரான போராட்டத்தைப் பற்றிய கட்டுரை....!

நடுநிலைக்கு அதான் அர்த்தமாம் அவியிங்க சொல்றாய்ங்க......

MARI The Great said...

:D :D :D

Jayadev Das said...

முடிச்சவிக்கி மொள்ளமாரி பிக் பாக்கெட் பண்றவன் எல்லாம் ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்து நான் தியாகி, அறப் போராட்டம் செயதேன்கிறான். என்ன கொடுமை சார் இது..?

உணவு உலகம் said...

பட்டைய கிளப்புங்க சிவா.

முத்தரசு said...

அட்ரா அட்ரா...எ ஏ அப்படி போடு......நல்லாவே குத்துறீங்க

Related Posts Plugin for WordPress, Blogger...