CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, July 4, 2012

ஆகஸ்ட் - 5 டெசோ மாநாடாம்...வந்துருங்கப்பா


       
                                             சமீபத்திய பிறந்த நாள் விழாவில் எளியோர்களின் ஏந்தல் 

'களத்துல களை புடுங்க வக்கில்லை. நெட்ல நீலிக்கண்ணீர் வடிக்கிற பயக'...இது யாருக்கு கெடச்ச பட்டம்? வாழும் வள்ளுவர் ஈழம் பத்தி பேசும்போது கண்டுகொள்ளாமல் இருப்போருக்கும்,அவங்க கட்சி அமைச்சர்களே 'குடுத்த காசுக்கு மேல கூவுறாண்ட கொய்யா' என வாயடைத்து போகும் அளவிற்கு சொம்பு  அண்டா தூக்கும் இணைய உடன்பிறப்புகளை எதிர்கேள்வி கேட்டு  ஆப்படிக்கும் நபர்களுக்கும் கெடச்சதுதான் அந்த பட்டம். அதாவது இணைய உடன்பிரப்ஸ் எல்லாம் நித்தம் நாலு ஊருக்கு சமூக சேவை செஞ்சிட்டுதான் பல்லே வெளக்கறாங்களாம். கேக்கறவன் கேனப்பயலா இருந்தா ஹன்சிகா மொத்வானிக்கு நடிப்பு வந்துருச்சின்னு சொல்லுவாங்களாம். என்னங்கடா டேய்?

அண்ணா நூலகத்துல கல்யாணம் நடத்த அனுமதி தந்து ஹைகோர்ட் கிட்ட பூசை வாங்குனது மம்மி அரசுக்கு தேவைதான். ஆனா மம்மி கட்டுன நேரு உள்விளையாட்டு அரங்கத்துல போன வாரம் நடந்த விஜய் அவார்ட்ஸ், அதுக்கு முன்ன மானாட மயிலாட பைனல்ஸ், தாத்தாவுக்கு பாராட்டு விழா நடந்தப்ப எல்லாம் யாருமே பொங்கலியே? என்றா நாயம்? 'நூலகம் படிக்கிற எடம்..அங்க போயி கல்யாணமா?'.அது சரிதான். அதே மாதிரி 'நேரு உள்விளையாட்டு அரங்கம் இளம்வீரர்கள் ஆடற எடம்.. அங்க கச்சை கட்டிட்டு ஹீரோயினுங்க ஆடலாமா? இதை கேட்பார் யாரும் இல்லையா ?' சரி...ரெண்டு கழகங்களும் எப்படியே போய் தொலையட்டும்...மாநாட்டுக்கு வருவோம். 

அடுத்த மாசம் அஞ்சாந்தேதி விழுப்புரத்துல டெசோ மாநாடாம். மீட்டிங் முடிஞ்ச மறுநாள் காத்தால உலக மேப்பை குறுகுறுன்னு பாத்துனே இருக்கணும். இலங்கை இருக்குற எடத்துல ஈழம் மலர்ந்து பூப்பூத்து குலுங்கும். மண்ணை நோண்டி வேர்ல காது வச்சி கேட்டா 'வாழும் வள்ளுவர் வாழ்கவே' ன்னு மெலடி பாட்டு கேக்கும். 'விழுப்புரம் வந்தா எழுப்பறோம். நீங்க தூங்குங்க' அப்டின்னு ட்ரெயின்ல எவன் சொன்னாலும் நம்பாதே. அவன் ஏ.டி.எம்.கே. ஆளா இருப்பான். அஞ்சி நிமுசத்துக்கு ஒரு தபா டி.டி ஆர். கோட்டை புடிச்சி தொங்கிட்டே 'எப்ப வரும் விழுப்புரம்?' விடாம கேளு.

ஆசியாவுக்கு உள்ளே அறப்போராட்டம் பண்ணி அலுத்து போச்சி. அதால இன்னும் ஒரு நாலஞ்சி நாட்ல அடிமையா இருக்குற சனங்களுக்கு தனி நாடு வாங்கி தர்றதுன்னு லைவ் வள்ளுவர் முடிவு பண்ணிட்டாரு.  ஸ்பெயின், இத்தாலி மாதிரி நாட்டு மக்களை பார்த்து  'உங்களுக்காக தனி மாட்ரிட், தனி ரோம் மலர நான் உதவுகிறேன். ரெட் ஜெயண்ட், க்ளவுட் நயன் படத்துல கம்மியா காசு வாங்கி நடிக்கு உங்க ஊரு சூப்பர் ஸ்டாருங்க ரெடியா?' என்று கேட்டு ஜமூக சேவை செய்ய விமான யாத்திரை மேற்கொள்ளப்போகும் எங்கள் வாழும் வாஸ்கோடகாமாவே..உன் புகழ் வாழ்க!!

'திடீர் இணைய போராளிகளே' என்று ரவுசு கட்டும் இணைய(இணையா) உடன்பிரப்ஸ்களே....கைல கத்தி(ஆட்சி) இருக்குறப்ப போருக்கு போவாம வெங்காயம் வெட்டிட்டு இருந்த உங்க தலைவர் இப்ப அட்ட கத்திய வச்சிட்டு ஆட்டுத்தொடைய வெட்ட போறேன்னு சொல்றாரே...அவருக்கு பேரு வக்க மட்டும் ஒருத்தனும் வரக்காணுமே?? என்னா சேதி? 'குபீர் சேகுவாரா', 'ராசபக்சே ரத்தம் குடிக்க வந்த ராஜநாகமே' இந்தப்பேரு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?  

கலாக்கா ப்ரோக்ராம் பாத்தமா, மல்லாக்க படுத்தமான்னு இருக்காம அறப்போராட்டம், 'ஈழம் மலரும்' மாநாடு...கலர் கலரா ரீலா சுத்தறீங்க? எங்க கேப்டனோட அடுத்த படம் ஒண்ணு போதும். ரெண்டரை மணி நேரத்துல ஈழம் மலர. தில் இருந்தா பேரனை ப்ரொட்யூஸ் பண்ண சொல்லுங்க பாக்கலாம். அதுலயும் வசனம் நீங்க எழுதறதா இருந்தா பேரனுங்க பின்னங்கால் பொடரில தெறிக்கிற அளவுக்கு ஓட மாட்டாங்க? அவங்களுக்கே அப்படின்னா எங்க நெலம? 

குறிப்பு: யூரோ கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு கலைஞர் அனுப்பிய பாராட்டு மடல் கண்டு கேப்டன் கேசில்லஸ் பேருவகை கொண்டார். மேட்ரிட் மாவட்ட(!) செயலாளர் பதவியை தான் ஏற்பதாகவும் வாக்களித்து விட்டார். தலைவர் அனுப்பிய மஞ்சா துண்டு  'சாயம் வெளுத்து' போய் இருந்ததை கண்டு தம்மாதூண்டு வருத்தம் அடைந்ததாக கேசில்லஸ் கூறி உள்ளது கழக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பு உள்ளது.

                                                                       கழக கேடயம் கேசில்லஸ்ஸே  

.......................................................................................
   
                                                                    

24 comments:

அஞ்சா சிங்கம் said...

இவனுங்க இம்சை தாங்க முடியல ................
இவனுங்க இல்லாமலும் பொழுது போகல .....................

! சிவகுமார் ! said...

ha..ha..

CS. Mohan Kumar said...

//கேக்கறவன் கேனப்பயலா இருந்தா ஹன்சிகா மொத்வானிக்கு நடிப்பு வந்துருச்சின்னு சொல்லுவாங்களாம். //

I like this.

MARI The Great said...

//கேக்கறவன் கேனப்பயலா இருந்தா ஹன்சிகா மொத்வானிக்கு நடிப்பு வந்துருச்சின்னு சொல்லுவாங்களாம்.

I like this. //

ஹா ஹா ஹா :D

வெளங்காதவன்™ said...

//குபீர் சேகுவாரா', 'ராசபக்சே ரத்தம் குடிக்க வந்த ராஜநாகமே' இந்தப்பேரு போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? ///

சார்! சொம்பு அடிக்குறது தனிக் கலை சார்!! உனக்கெல்லாம் அது சரிப்பட்டு வராது சார்!! வேணும்னா உனக்கு ஒரு மாசம் ட்ரைனிங் அரேஞ் பண்ணுறேன். ட்ரைனரு பெரிய இணையப் போராளி!
சொம்பு அடிக்க லகலகன்னு சொல்லித்தருவாரு!

Unknown said...

தலீவரு நாட்டுல கச்சிய வளத்தது போதும்னு உபிக்களை இணையத்துல வளக்க சொல்டாராம்பா. அதான் புளியங்கொட்டைங்க கூவிக்கினு இருக்குங்க. பின்னாடி எதுனா போஸ்டிங் வாங்க வசதியா இருக்கும்ல.

rajamelaiyur said...

இன்று ஊருல உள்ளவனை எல்லாம் சிறைக்கு அனுப்பிட்டு இவர் ஹாயாக இருக்கிறார்

rajamelaiyur said...

இன்று
தனியார் பள்ளி ஆசிரியர் என்றால் மட்டமா ?

M.G.ரவிக்குமார்™..., said...

நச்!..

வவ்வால் said...

செவக்கொமாரு,
இன்னா மன்சன்பா நீ, ஒடம்பொறப்பை போய் குத்தம் சொல்லிகினு கீற,இம்புட்டு நாளும் தல்லிவரு கண்ண அசைக்கலையாம் ,அவரு மட்டும் கண்ணு அடிச்சாங்காட்டியும் வச்சுக்க அல்லா ஒடம்பொறப்பும் லங்கோடை உறுவாம்முடிச்சு போட்டு இய்த்து கட்டிக்கின்னு மெர்னாவுல கடல்லுல குச்சாங்கோ வய்யி த்ரூவா லங்கையில போய் தான் எந்த்திரிப்பாங்க தெரியுமா அக்காங்க்!

தல்லிவரு கண்ணு அடிக்க நாளு குறிச்சு கொடுக்க சோசியரு கிடைக்காம தான் இத்தினி நாளும் சொம்மா இருந்தாரு, இப்பத்தான் கேரளாவில இருந்து செங்கணாச்சேரி சோசியரு வந்து சோழி உருட்டிப்போட்டு பார்த்து ,ராச பக்ச சோலிய முடிக்க நல்ல நாள குறிச்சு கொடுத்துகீறார், அதாங்காட்டியும் வியுப்புரத்துல மாநாடு கூட்டிக்கிறாரு தல்லிவரு,அது பொறுக்காம நீம்பாட்டுக்கு கூவினு கீற... நீங்காட்டியும் பாரு வியுப்புறத்துல தல்லிவரு கண்ண அடிச்சதும் என்னா நடக்கப்போவுதுண்ணு, நாளு குறிச்சதுக்கே ராச பக்சே மெர்சலாயிட்டாரு தெரியும்ல :-))

எனுக்கு இப்ப கீற ஒர்ரே கவலை இன்னான்னா தலிவரு கருப்பு கண்ணாடி போட்டுக்கின்னு கண்ணு அடிச்சா ஒன்னியுமே தெரியாதே , அதுக்கு இன்னா பன்றதுன்னு தான், அண்ணாத்த உன்னாண்ட எதுனா அயிடியா கீதா ,கருப்பு கண்ணாடி போட்டுக்கிட்டு கண்ணு அடிச்சாலும் தெளுவா பாக்க :-))

ஹக்காங்க் நீ எங்க சொல்ல போற தலிவரு கண்ணு அட்ச்சாலும் குசுப்பு அக்காவ பார்த்து கண்ணு அடிச்சார்னு பொறணில பேசுவ ,உன்னாண்ட போய் கேட்டேன் பாரு!

M.G.ரவிக்குமார்™..., said...

செம!..

MANO நாஞ்சில் மனோ said...

என் மனசில உள்ளதை அப்பிடியே வெளியே கொண்டு வந்துட்டேய்யா......சரியான செருப்படியும் கூட......ஆமா இவனுகளுக்குதான் வெக்கமே கிடையாதே...!

Yaseen said...

தலைவா கலக்கிடிங்க....

Unknown said...

முகப்புத்தகத்தில் வாழும் வள்ளுவரின் அடிவிழுதுவின் வாந்திய நல்லா பினாயில் ஊத்தி கழுவிட்ட சிவக்குமாரு...! பயபுள்ளைய நேர்ல கண்டா ஒரு ரோட்டா பினாயில் குடுய்யா மன்சு கிளீன்னாவுட்டும்...!

Prabu Krishna said...

லைவ் வள்ளுவர்//ஜூப்பரு...

Unknown said...

என்னா கொலவெறி?

”தளிர் சுரேஷ்” said...

நல்லா நல்லாவே நக்கல் பண்ணியிருக்கீங்க? அதுவும் அந்த கடைசி மஞ்ச துண்டு விவகாரம் செம பஞ்ச்!

நாய் நக்ஸ் said...

நீ கலக்கு சிவா...

விடியலை நோக்கி....இணைய போராளிகள்....

தொடர்ந்து இனைதிருப்போம்....
நன்றி...

Jayadev Das said...

வட்டம், மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் இவனுங்க அடிச்சா கொள்ளையை திரும்பவும் நாட்டுக்கே கிடைக்கும் படி ஏதாவது செய்ய முடியாதா? -அப்படி முடிஞ்சா எப்படி இருக்கும்...!!!!!!! ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம்...........

Philosophy Prabhakaran said...

இணைய உ.பிக்கள் கையில் எடுத்திருக்கும் புது டெக்னிக் - போலி தமிழ் தேசியவாதிகள்...

மாற்றுக்கருத்தாளர்கள் யாரைப் பார்த்தாலும் "டேய் நீ போலி தமிழ் தேசியவாதி தானே... ஆண்டிப்பட்டியில ஃப்ளைட் லேன்ட் ஆகி அரைமணிநேரம் ஆகுது... இன்னும் ஏர்போர்ட்ல என்னடா பண்ற..." ன்னுற ரேஞ்சுக்கு குலைக்கிறாங்க...

Cable சங்கர் said...

ஆமா பிரபாகரன் தமிழ் தேசியவாத தீவிரவாதிதான்.

வைகை said...

ஏதாவது சொன்னா குபீர் ஆதரவாளன்.. வரலாறு தெரியலைன்னு சொல்லுவாங்க! ஆனா நாம தெரிஞ்சிகிட்ட வரலாறு வரைக்கும் ஒண்ணுமே புடுங்குனதா காணுமே? வேற எங்க போய் படிக்கணும்? :-))

Unknown said...

வைகை :))))

நிகழ்காலத்தில்... said...

//எங்க கேப்டனோட அடுத்த படம் ஒண்ணு போதும். ரெண்டரை மணி நேரத்துல ஈழம் மலர. தில் இருந்தா பேரனை ப்ரொட்யூஸ் பண்ண சொல்லுங்க பாக்கலாம். அதுலயும் வசனம் நீங்க எழுதறதா இருந்தா பேரனுங்க பின்னங்கால் பொடரில தெறிக்கிற அளவுக்கு ஓட மாட்டாங்க? அவங்களுக்கே அப்படின்னா எங்க நெலம? //


:)))))))))))))))

Related Posts Plugin for WordPress, Blogger...