தெய்வத்திருமகள்:
வெங்காயம்:
சமீபத்தில் ராயப்பேட்டை சத்யம் தியேட்டர் காம்பளக்ஸில் இருக்கும் இட்லி-தோசா உணவகத்திற்கு நண்பர் மகேஷுடன் முதன் முறை விசிட் அடித்தேன். கிட்டத்தட்ட பிற ஹோட்டல்களில் உள்ள விலைதான். தோசை மட்டும் அதிக விலை (சாதா தோசை 60 ஓவாய்). ஒரு கிளாஸ் மோர் ரூ. 30. ஆனால் ருசி திவ்யம். ஆளுக்கொரு ஆப்பம் ஆர்டர். தொட்டுக்க உள்ளித்தீயல் எனும் வஸ்துவை தேர்ந்தெடுத்தார் நண்பர். கேரளா ஸ்பெஷலாம். ருசிபார்த்த மறுகணம் 'எங்கள் ஊர் உள்ளித்தீயல் ருசியில் 20% கூட இல்லை' என்று கொதித்தார். சர்வரை அழைத்து 'இது காரக்கொழம்பு. யார ஏமாத்தறீங்க?' என்றவரிடம் 'சார் எனக்கு இது பத்தி எதுவும் தெரியாது. இந்தாங்க பீட்பேக் பார்ம். இதுல எழுதுங்க' என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார் சர்வர். வாயில் நுழையாத பேரை ஆகாரத்திற்கு வைத்து என்னமா ஏமாத்தறாங்க. மற்றபடி சமையல் செய்யுமிடம் தனியே இன்றி கண்ணெதிரிலேயே இருப்பது நன்று. வெரைட்டி குறைவுதான். தரம் பேஷ்!!
............................................................................
ICE AGE - 4:
முந்தைய பாகங்களில் இருந்த ஈர்ப்பு இதில் இல்லையென்றே சொல்லலாம். அனிமேஷன் படங்களின் தீவிர ரசிகனான நான் முதன் முதலில் கொட்டாவி விட்டு பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். அற்புதமான கிராபிக்ஸ். தரமான த்ரீ டி எல்லாம் சரிதான். ஆனால் பெரிய பனிக்கட்டியில் பயணிக்கும் யானை, சிங்கம் போன்றவற்றை வில்லன் குரங்கு தனது படையுடன் பழிவாங்க முனைவதை காட்டியே சலிப்பேற்றினர். ஆவரேஜ் படம்தான்.
.....................................................................................
நாடோடிகள்:
சென்னையின் அடையாளமாக திகழும் குடிசைவாழ் மக்களில் பலரை பெருநகர வளர்ச்சிப்பணி எனும் காரணம் காட்டி புறநகருக்கு துரத்தியாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக அண்ணாசாலை ஒட்டியுள்ள கிரீம்ஸ் ரோடு மக்கிஸ் கார்டன் பகுதி ஏழை மக்களையும் நகரம் கடத்த திட்டம் நடக்கிறதென செய்திகள் வருகின்றன. அங்குள்ள அதிபிரபல மருத்துவமனை அரசாசியுடன் செவ்வாய் தோறும் குடிசைகளுக்கு தீ வைத்து பாட்டாளிகளை விரட்ட பார்க்கிறதாம். மேயர் சைதை துரைசாமியிடம் கேட்டதற்கு 'அவர்களை சுகாதாரமாக வாழ வைக்கவே புறநகருக்கு போகச்சொல்கிறோம்' என்று சொன்னாராம். ஏன் அம்மாம்பெரிய ஆஸ்பத்திரி அவர்கள் மேல் கரிசனம் கொண்டு மாநகராட்சியுடன் இணைந்து சேவை செய்தால் நோயற்ற வாழ்வை தர முடியுமே. டாக்டர் பட்டம் வாங்குன டொட்டடோய் தலைவர்கள் எல்லாம் எங்கய்யா போனீங்க?
.........................................................................................
தங்கப்பதுமை:
ஒலிம்பிக்கில் ஒரே ஒரு வெண்கலம் வெல்லவே பலர் முட்டி மோதிக்கொண்டு இருக்க, தொடர்ந்து ஐந்து ஒலிம்பிக்களில் பங்கேற்று அனைத்திலும் பதக்கங்கள் வென்றுள்ளார் அமெரிக்காவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை கிம்பெர்லி ரோட். 96 - தங்கம், 2000 - வெண்கலம், 2004 - தங்கம், 2008 - வெள்ளி. 2012 - தங்கம். அசாத்திய சாதனை!!
........................................................................................
காத்திருந்த கண்கள்:
'பதிவுங்கற பேருல கொசகொசன்னு எழுதி கொல்லுறானே மனுஷன். நேர்ல சிக்கட்டும். மண்டைய ஒடச்சி மாவிளக்கு ஏத்திட்டுதான் மறுவேளை' என்று மனக்குமுறலுடன் காத்திருக்கும் கெடா மீசைக்காரர்களே...நீங்கள் கொலைவெறியுடன் தேடிவரும் நபர்களில் சிலரை காண இதோ ஒரு அரிய வாய்ப்பு. ஆகஸ்ட் 26 ஆம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெறவுள்ளது. அருவாளை தீட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஜெய் ஜக்கம்மா!! மேலும் விவரங்களுக்கு madhumathi.com.
.........................................................................................
பிடிச்சிருக்கு:
ஆடி மாத விழா குறித்த செய்திகளையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்ட நண்பர் கவிதை வீதி சௌந்தரின் பதிவுதான் சமீபத்தில் நான் படித்ததில் பிடித்தது. ஊர்க்காவல் படையில் பணியாற்றுபவர் தோழர் சௌந்தர் என்பது சிறப்பு செய்தி. படிக்க கிளிக் செய்க: கவிதை வீதி சௌந்தர்.
.........................................................................................
சுயேட்சை எம்.எல்.ஏ:
நண்பர்களே காவிரி நீர், காஷ்மீர் பார்டர், கப்பக்கிழங்கு விலை உயர்வு போன்ற பல பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து நாடாளுமன்றத்தையே நடு நடுங்க வைக்கும் இந்த வலைப்பூ உகாண்டா, ரியல் மாட்ரிட், தெலுங்கானா ஆகிய அயல் நாட்டு மக்களிடமும் சென்று சேர இன்ட்லி மற்றும் யுடான்ஸ் திரட்டியில் ஓட்டு போடுங்கள். இதன் மூலம் சொர்க்கத்தில் தனி ஏசி ரூம், ரம்பா/மேனகை நடனம், ஒருவருட புஷ்பக விமான டிக்கட் ஆகிய காம்போ பேக் பரிசுகளை வெல்லுங்கள்.
நண்பர்களே இப்பதிவை யுடான்சில் இணைத்துவிட்டேன். ஆதாரம் கீழே:
நண்பர்களே இப்பதிவை யுடான்சில் இணைத்துவிட்டேன். ஆதாரம் மேலே. இது எனது 500 வது திரட்டி இணைப்பாகும். இதற்கான பாராட்டு விழா விரைவில் கத்திப்பாரா மேம்பாலத்தின் நடுவே கனஜோராக நடக்க உள்ளதென்பதை நினைக்கையில் உள்ளம் உய்யலாலா ஆடுகிறது.
..........................................................................................
பசி:
இதுவரை பார்க்காமல் தவறவிட்ட தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களின் லிஸ்டில் 'பசி'யை முதலில் கண்டேன் அண்மையில். சரிதா, சுஜாதா, சாரதா வரிசையில் மறக்க முடியாத பெயர் ஷோபா. சென்னையின் சேரிவாழ் மக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம். மெட்ராஸ் பாஷை பேசும் கேரக்டர்கள் எத்தனை படங்களில் வந்திருப்பினும் பசிதான் மாஸ்டர் பீஸ். விஜயன், டெல்லி கணேஷ், பசி சத்யா, தாம்பரம் லலிதா முதல் ஒவ்வொரு கேரக்டரும் சோக்கா பேசிக்கீறாங்க. இயக்குனர் துரைக்கு சபாஷ்கள் பல.
அடுத்து பார்க்க உள்ள படம் - பாலுமகேந்திராவின் 'வீடு'. சிறுவயதில் ஒரு முறை பார்த்த ஞாபகம். அப்போது பெரிதாக மனதில் பதியவில்லை. இம்முறை பார்க்கலாம்.
.............................................................................