சிவா தாபா
விஜேந்திர
சிங்கை போல இளம் பாக்ஸிங் நட்சத்திரமாக வந்திருப்பவர்தான்
அஸ்ஸாமை சேர்ந்த சிவா தாபா. வயது 19. தனது மகன் 2016 ஒலிம்பிக்
போட்டிக்கு தகுதி பெற வேண்டும் என்பது தந்தையின் ஆசை. ஆனால் புலியின் பாய்ச்சல்
அதிகம் இருந்ததால் 2012 ஒலிம்பிக் போட்டிக்கே தகுதி பெற்று விட்டார் சிவா. உலக அளவில் பாக்ஸிங் என்றால் அங்கு க்யூபா வீரர்களின் ஆதிக்கம்தான். அவர்களை சமாளித்து பதக்கம் வெல்ல நமது படை கடுமையாக போராட வேண்டி இருக்கும்.
ஆடவர் ஹாக்கி அணி ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகளில் வென்று லண்டனுக்கு டிக்கட் எடுத்துள்ளது. ஆனால் வலிமை வாய்ந்த ஆஸி, ஜெர்மனி மற்றும் பாகிஸ்தானை வீழ்த்தி பதக்கம் வெல்வது சவால்தான். அவ்வளவு தூரம் ஏன். இந்திய அணி இருக்கும் B க்ரூப்பே வலிமையான அணிகளை கொண்டதுதான். ஜெர்மனி, கொரியா மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளை சமாளித்து அரையிறுதிக்கு செல்வதே மிகவும் கடினமான விஷயம். ஆரம்பத்தில் முன்னணியில் இருந்து விட்டு கடைசி சில நிமிடத்தில் கோல்களை வாங்கி கட்டிக்கொள்வதில் இந்திய அணி பிரபலம். என்னைப்பொறுத்தவரை இந்திய ஹாக்கி அணி அரை இறுதி செல்வதே உலக அதிசயம்தான். மிஞ்சிப்போனால் வெண்கலம் மட்டும் கிட்டும்.
துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கமகன் அபினவ் பிந்த்ரா, ககன் நரங் போன்ற கில்லிகள் இருப்பது நம்பிக்கையை தருகிறது. ககனுக்காக உலகளாவிய அங்கீகாரம் நீண்ட நாட்களாக தவறி வருகிறது. இம்முறை அதை தவற விட மாட்டார் என எதிர்பார்க்கலாம்.
ஒலிம்பிக் ஜோதியுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பால் கால்லிங் வுட்
ஒலிம்பிக் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யப்போவது ஈ.எஸ்.பி.என் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள். இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகளை ஈ.எஸ்.பி.என்னும், இதர போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸும் லைவ் அடிக்கும். தூர்தர்ஷன் காலை 7.30 மற்றும் 9.00 மணிக்கு விளையாட்டு தொகுப்புகளை வழங்க, டி.டி. ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. விளையாட்டு ரசிகர்கள் அடுத்த சனியன்று (28 ஜூலை) நள்ளிரவு ஒரு மணிக்கு துவக்க விழா நிகழ்ச்சிகளை டி .வி.யில் காணத்தவற வேண்டாம்.
................................................................................
தமிழக ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி...
சென்னையை சேர்ந்த ஸ்குவாஷ் விளையாட்டின் ஜான்சி ராணியான தீபிகா பல்லிகல் 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டுமே ஆட வாய்ப்பு உள்ளது. "இந்த விளையாட்டை இதுவரை ஒலிம்பிக்கில் சேர்க்கவில்லை. 2016 ஒலிம்பிக்கில் கால்ப் ஆட்டம் முதன் முறை இடம்பெறவுள்ளது. எனவே ஸ்குவாஷ் 2020 ஆம் ஆண்டில் மட்டுமே இடம் பெற சாத்தியம்" என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் தீபு. அதை நினைக்கையில்தான் மனசு கொக்குகிறது. தமிழ்ப்படங்களில் நடிக்க ஏகப்பட்ட வாய்ப்புகள் வந்தும் அவற்றை எல்லாம் நிராகரித்து விட்டார் தீபு. வாழ்க உங்கள் தங்கையின் கடமை உணர்ச்சி!!
...........................................................................................
ஒலிம்பிக் போட்டிக்கான பிரத்யேக காணொளி...Sport at Heart. அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது.
இன்னும் எட்டே நாட்கள்...உலகம் கொண்டாடும் தீபாவளிக்கு......
.......................................................................................
இன்னும் எட்டே நாட்கள்...உலகம் கொண்டாடும் தீபாவளிக்கு......
.......................................................................................
6 comments:
<>
என்னவொரு வில்லத்தனம்!
ஒவ்வொரு தங்கமும் தேவை மச்சான் ....
வாழ்த்துக்கள்
அண்ணே அந்த தீபு வெலாசம்.....?
@ வரலாற்று சுவடுகள்
நாங்க எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்டுங்கோ
@ ரியாஸ் அகமது
நமீதா மாதிரி பேசுது ரியாசு. நன்றி சொல்லுது நானு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அண்ணே அந்த தீபு வெலாசம்.....?//
விரைவில் விசாரிக்கப்படும். தங்கச்சி மேல என்னா பாசம்!!
Post a Comment