பால்கனில தனியா படம் பாக்குறவனையும் சுட்டுத்தள்ளுடா
அட்டகாசம்..நான் கடைசியாக தியேட்டரில் பார்த்த அஜித் படம். அதில் கருணாஸிடம் 'ஆட்டோ கண்ணாடியை இப்படி திருப்பு. வண்டி ஓடும்' என்று ஒரு காமடி செய்வாரே...அத்தோடு தியேட்டரை விட்டு வீட்டுக்கு ஓட்டம் பிடித்தேன். அதன் பின் இன்று பில்லா - 2 மூலமாக தலயை திரையில் பார்க்க வேண்டும் என்று விதி உச்சந்தலையில் ஏறி முக்காபுலா ஆடினால் என்ன செய்ய முடியும்? பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் இருவரும் வெள்ளியன்றே இந்த காவியத்தை பார்த்து இருப்பினும், மீண்டும் ரெண்டாவது தபா தெகிரியமாக பார்க்க வந்தனர். எங்களுடன் சிக்கிய பதிவர் 'நெல்லை நண்பன்' ராம்குமார்.
முதல் பத்து நிமிடங்களுக்கு தலயின் தளபதிகள் 'உய் உய்ய்' என்று பிகில் அடித்தாலும் அதன் பின் கதை(?) செல்லும் போக்கில் அவர்களே ஆப் ஆகி விட்டனர். SCAR FACE ஆங்கில படத்தின் அற்புதமான காப்பி என்று இப்படைப்பை சொல்லலாம். அதில் க்யூபா அகதி. இங்கே இலங்கை அகதி. அங்கே அம்மா, அல் பசினோ செய்யும் தொழிலைக்கண்டு கோபப்பட இங்கே அக்கா. அதில் ஹீரோவின் தங்கை போதைக்கு அடிமையாகி அவன் நண்பனை லவ்வுவாள். இங்கே தங்கைக்கு பதில் அக்கா மவ. எலேய் சக்ரி டொலெட்டி. நீ சரியான டக்கால்டி.
ஆரம்பத்தில் இலங்கை அகதியாக வந்து நெஞ்சைத்தொட பார்க்கிறார் ஹெட். ஏற்கனவே ஏழாம் அறிவில் சூர்யா பலப் வாங்கியது தெரிந்தும். இலங்கை தமிழர்களுக்காக திரையுலகம் சார்பாக நடந்த போராட்டத்திற்கு வர மனம் இன்றி கடைசியில் வேண்டா வெறுப்பாக ஹெட் கலந்து கொண்டது இன்னும் நெஞ்சில் நிற்கிறது. போராட்டம் முழுக்க முகத்தில் கடுகு வெடித்தவாறு சார் அமர்ந்து இருந்ததை மறக்க முடியாது. இப்போது இங்கே..? அடப்பாவிங்களா..வியாபாரம் செய்ய அரசியல்வாதி, சினிமாக்காரன் ரெண்டு பேருக்கும் அந்த மக்களோட சென்டிமென்ட்தான் கெடச்சதா? ராஸ்கல்ஸ்.
திங்கக்கிழமைல இருந்து டிக்கட் வாங்க க்யூல நாலு பேராவது நிப்பாங்களா??
படம் முழுக்க ஏகப்பட்ட கொலைகள். 'சார் போஸ்ட்' என்று ரெண்டு வார்த்தை பேச வரும் ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் புரியாத பாஷையில் பேசும் வில்லன்கள் வரை எல்லாரையும் மூட்டைப்பூச்சியை கொல்லும் நவீன மிஷினாக துவம்சம் செய்கிறார் தல. அந்த ஈரோயினி பேரு என்னப்பா? ஆ..பார்வதி ஓமனக்குட்டன்...வேணாம் விடுங்க. ஒரு சீன்ல நட்ட நடுராத்திரி. நம்ம ஹீரோ அப்ப கூட கூலிங் கிளாசை போட்டுட்டு சுடுறாருய்யா. எல்லா பயலும் அந்த கெரகம் புடிச்ச கண்ணாடிய போட்டுட்டே திரியறானுங்க. கேட்டா 'நிழல்' உலக தாதாக்கள்னு லாஜிக் சொல்றானுங்க.
யுவன்ஷங்கர் பாட்டு எல்லாம் மொக்கை ரகம். அமெரிக்க மாப்பிள்ளை அஜித் அவர்கள் என்டர் ஆகும்போதெல்லாம் 'டன் டன் டடட டட டன் டன்' பில்ட் அப் வேறு. போதை மருந்து, வைரம், டுப்பாக்கி கடத்துறது, கூட ஒரு கவர்ச்சி கன்னி,வெரைட்டி வெரைட்டியா கிருதா வைக்கும் வில்லன்கள். இதையெல்லாம் ஜெய் சங்கர் காலத்துல இருந்து எத்தன தடவைய்யா பாக்குறது? ஹெலிகாப்டர் சண்டைக்காட்சி மட்டும் கொஞ்சம் புருவத்தை உயர்த்த வைக்கிறது. இனியும் கோட் சூட், குளுகுளு கண்ணாடி போட்டுக்கிட்டு சனங்களை எத்தனை நாளைக்கு ஏமாற்ற முடியும் அஜித்? ரூட்டை மாத்துங்க. அதுக்கு முன்ன அந்த கோட்டை தயவு செஞ்சி மாத்துங்க.
"ஹீரோ ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும். கலக்சன் பிச்சிக்கும்" இந்த டயலாக்கை கொஞ்ச வருசத்துக்கு முன்ன ஒரு குடுகுடுப்பைக்காரன் போயஸ் கார்டன் பக்கம் சவுண்ட் விட்டு ரஜினிய உசுப்புனான். பாபாவுக்கு அப்பறம் அவரு உஷார் ஆகிட்டாரு. இப்ப கொஞ்ச காலமா அதே குடுகுடுப்பை ஆசாமி கோட் போட்டுட்டு திருவான்மியூர்ல அஜித் வீட்டு பக்கமா நடமாடுறானாம்...!!
"ஹீரோ ஸ்க்ரீன்ல வந்து நின்னாலே போதும். கலக்சன் பிச்சிக்கும்" இந்த டயலாக்கை கொஞ்ச வருசத்துக்கு முன்ன ஒரு குடுகுடுப்பைக்காரன் போயஸ் கார்டன் பக்கம் சவுண்ட் விட்டு ரஜினிய உசுப்புனான். பாபாவுக்கு அப்பறம் அவரு உஷார் ஆகிட்டாரு. இப்ப கொஞ்ச காலமா அதே குடுகுடுப்பை ஆசாமி கோட் போட்டுட்டு திருவான்மியூர்ல அஜித் வீட்டு பக்கமா நடமாடுறானாம்...!!
பில்லா 2 - ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம்..உள்ளே பார்த்தால் ஈரும் பேனுமாம்.
............................................................................
தியேட்டர் சிப்ஸ்:
பிரம்மாண்டமான தேவி/தேவிபாரடைஸில் சினிமா பார்ப்பது என்பது என்றும் ஸ்பெஷல்தான். இடைவேளைக்கு பிறகு ஏசியை பெரிதும் குறைத்து விட்டனர். கேண்டீன் தின்பண்டங்கள் விலை குறைவு என்றாலும், தரம் பெரிதாக இல்லை. ஒரு காலத்தில் சத்யம் தியேட்டரை விட புகழ் பெற்று இருந்த தேவி இன்று சில அடிகள் பின்னே நிற்பதற்கான காரணங்களை ஆராய்ந்து நிவர்த்தி செய்தால் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்கலாம்.
SCAR FACE ஆரம்ப காட்சியில் அல் பசினோ பேசும் வசனம் காணொளியில். அசால்ட் நடிப்பிற்கு அருமையான இலக்கணம். அஜித் இதே சீனில் பேசியதை ரீவைன்ட் செய்து பார்த்தால் கொட்டாவிதான் வருகிறது.
...........................................................................
..........................
13 comments:
////பிலாசபி பிரபாகரன், அஞ்சாசிங்கம் இருவரும் வெள்ளியன்றே இந்த காவியத்தை பார்த்து இருப்பினும், மீண்டும் ரெண்டாவது தபா தெகிரியமாக பார்க்க வந்தனர்./////
ரெண்டு பேருமே தலயோட அல்லக்கைஸ் ஆச்சே....? பீ கேர்புல்.....!
/////போதை மருந்து, வைரம், டுப்பாக்கி கடத்துறது, கூட ஒரு கவர்ச்சி கன்னி,வெரைட்டி வெரைட்டியா கிருதா வைக்கும் வில்லன்கள். இதையெல்லாம் ஜெய் சங்கர் காலத்துல இருந்து எத்தன தடவைய்யா பாக்குறது? //////
அப்புறம் அஜீத்தெல்லாம் கண்ண தூக்கி வெச்சிக்கிட்டு காசியைத்தேடி யாரு வருவார்னு பாடுனா நல்லாவா இருக்கும்?
ஒரு முறை பார்த்த உமக்கே இப்படி இருக்கே மீண்டும் ஒரு முறைப்பார்க்க உடன் வந்த பிரபாகரன் அன்ட் கோவை எல்லாம் வாழும் தெய்வங்கள் லிஸ்ட்ல தான் சேர்க்கணும் :-))
சரி அடுத்து துப்பாக்கினு பேருலவே கில்லர் இன்ஸ்டிங்ட் வச்சு இருக்க தளபதி எத்தனை பேரை சுட போறார்னு பார்ப்போம் :-))
தமிழ் சினிமாவை பவர் ஸ்டார் மட்டுமே தனி ஒரு நபரா காப்பாத்துவார் என்ற நம்பிக்கை இருக்கு "மூலக்கடை முருகன்" வரட்டும் , தல,தளபதி எல்லாம் ஃபீல்ட் அவுட் தான் :-))
படம் பாத்தோம் :))
நச் விமர்சனம் பாஸ்...
//ரூட்டை மாத்துங்க. அதுக்கு முன்ன அந்த கோட்டை தயவு செஞ்சி மாத்துங்க. // சேம் ப்ளட்.. இஸ் இட் ?? :))
விமர்சனம் மிகவும் அருமையாக இருந்தது நண்பரே.
கண்டிப்பாக படம் பார்கிறேன்.
சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க..
http://dohatalkies.blogspot.com/2012/07/2-doha-qatar.html
யப்பா என்னையும் தியேட்டர் போகவச்சி, நோகவச்சி விமர்சனம் எழுத வச்சிப்புட்டாயிங்க முடியல....இப்பவும் தலைவலியோடதான் இருக்கேன், இங்கே மணி பத்து ஆச்சு...!
தி.மு.க, , அ .தி.மு.க, அஜீத் என எல்லாரையும் கிண்டல் பன்றீங்கோ !
ஒரு வெற்றி இரண்டு பிளப்பு இதான் அஜித் ரூட்டே
//அடப்பாவிங்களா..வியாபாரம் செய்ய அரசியல்வாதி, சினிமாக்காரன் ரெண்டு பேருக்கும் அந்த மக்களோட சென்டிமென்ட்தான் கெடச்சதா? ராஸ்கல்ஸ். //
நெருப்பா இருக்கு பாஸ்
//பில்லா 2 - ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம்..உள்ளே பார்த்தால் ஈரும் பேனுமாம்.//
நல்லவேளை ... நேத்து தான் பில்லா படத்துக்கு போக ப்ளான் பண்ணி, விமர்சனங்களைப் பார்த்துட்டு அப்படியே ஸ்பைடர்-மேன் பக்கம் ரூட்டை மாத்தியாச்சு. நல்லவேளை ... காசு தப்பிச்சிட்டுது. :) :)
சிவாவை இன்னும் இரண்டு நாளைக்கு தொந்தரவு பண்ணக்கூடாது ரெஸ்ட் எடுக்கட்டும் எம்மாம் பெரிய ரிஸ்க் எடுத்திருக்காப்ல......
விமர்சனம் செம ஹாட் சிவா.
ஒரு வெற்றி இரண்டு பிளப்பு இதான் அஜித் ரூட்டே//
நான்கு வருடத்திற்கு ஒருமுறை ஒரு வெற்றி படம். இதுதான் அவர் வழி. ஏன் அஜீத்துக்கும், விஜய்க்கும் கதை ஞானமே இல்லைன்னு புரிய மாட்டேங்குது.
Post a Comment